முதல்பரிசு பெற்ற அ.மாதவையா பாடலும், இரண்டாம்பரிசு பெற்ற பாரதியார் பாடலும்.

நாட்டுப்பற்று பற்றிய பாடல் போட்டி ஒன்றில் மாதவையாவும் பாரதியாரும் போட்டியிட்டனர். அதில் முதலிடம் (ரானடே பரிசு) மாதவையா எழுதிய 51 பத்தி கொண்ட கும்மிப்பாட்டிற்குக் கிடைத்தது.16 இந்தியக்கும்மி என்னும் தலைப்பிட்ட இந்தப் படைப்பு முதலில் பொதுதர்மசத்கீத மஞ்சரியில் 1914 ஜூன் மாதம் வெளியானது. பின்னர் தேசிய கீதங்கள் என்ற தலைப்பில் 1925இல் வந்த தொகுப்பிலும் இடம்பெற்றது. இதில் பரிசு பெற்ற கும்மிப்பாட்டு முதலில் மஞ்சரி தொகுப்பில் வந்தது என்றும் அது ரானடே பரிசுபெற்றது என்ற குறிப்பும் இருந்தது.

அவரது முதல் பாடலான தாய்நாட்டு வணக்கம். அதன் முதல் வரி 'இந்திய மாதாவின் சுந்தர பாதங்கள் வணங்கிடுவோம் வாருமே'. அதிலிருந்து ஒரு கண்ணி...
                
 ''கொல்லர் தெருவில் ஊசிகூறி விலைகள்பேசி
                 

இல்லை திறமை சீ சீ என்றே நமையும் ஏசி
                 

மேட்டிமை இன்று விளம்பிடும் மேலையர்                 
                 

காட்டினராக அலைந்திரும் காலையில்
                 

வித்தைமுற்றி உலகத்தனைக்கும் உயர்
                 

புத்தியிற் பெரிய சத்குருவே என
                 

நாகரிங் களின் நாற்றங்காலென
                 

ஏகமதாய் இசை மேவிய தாய் எனும் ......"

இந்தப் பாட்டுப்போட்டி திருநெல்வேலியில் 1912 அல்லது 1913இல் நடத்தப்பட்டது. எந்தப் பாடலை யார் எழுதினார்கள் என நடுவர்கள் அறிந்திருக்கவில்லை. பாடலாசிரியர்களின் பெயர்கள் ஓர் உறையில் போடப்பட்டு, நடுவர்களால் முடிவு அறிவிக்கப்பட்ட பின்தான் திறக்கப்பட்டது. மாதவையாவின் பாட்டில் 11 கண்ணியில் மூன்றாம், நாலாம் வரிகள்
                 அன்னையும் முக்காடு போடலாச்சே
                
இனி ஆண்மையும் உண்டோ வெறும் பேச்சே.
-------------------------------------------------------------------------
இதைக் கண்டு சொன்ன என் மகன் அ.மு.நெருடாவிற்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும். முழுப்பாடலும் கிடைக்க முயற்சியைத் தொடர்வோம்.
-------------------------------------------------
இரண்டாம்பரிசு பெற்ற 
மகாகவி 
சுப்ரமணிய பாரதியின் 
பாடல்
எந்த நாட்டிலிருந்தும், ஆறாம் வகுப்புப் படிக்கும் தமிழ்க் குழந்தை கூட சொல்லிவிடக்கூடிய அளவிற்குப் புகழ்பெற்ற பாடல் –
செந்தமிழ் நாடென்னும் 
   போதினிலே இன்பத்
      தேன்வந்து பாயுது காதினிலே எங்கள் 
தந்தையர் நாடென்ற 
   பேச்சினிலே ஒரு
       சக்திபிறக்குது மூச்சினிலே!
இந்தப் பாடலைப் புரிந்துகொள்ள
எந்தக் கோனார் நோட்சும் தேவைப்படாது!
அதேபோல இந்தப் பாடலின் இனிமையான இசை பலராலும்  பலவித ராகங்களில் பாடப்பட்டதும் பலர் அறிந்ததுதான். எம்எஸ் முதல், நித்யஸ்ரீ வரை...
அதில் என்னைக் கவர்ந்த காயத்திரி வெங்கட்ராமன் அவர்கள் பாடிய இசைமழையில் நனையச் சொடுக்குக...
பாட்டைக் கேட்டாச்சா...?
சரி. இப்ப இந்தப் பாட்டுக்கு ஏன் முதல்பரிசு தரலை தெரியுமோ...?
பாடலின் வரிகளில் “பாயுது”, “பிறக்குதுஎன்னும் “கொச்சை“ சொற்கள் இடம்பெற்று செய்யுள் மரபைச் சிதைத்துவிட்டதல்லவா..? அதனால் இருக்கலாம்...
ஒருவேளை, காதில் தேன்பாய்ந்தால் எப்படி இனிக்கும், எறும்புதானே கடிக்கும் என்று ஆழ்ந்து யோசித்து பரிசை மறுத்திருக்கலாம்...
ஆனால் ---
தமிழின் இன்று கிடைக்கும் முதற்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியத்தின் பாயிரப் பாடலே “வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி..“த்தான் இலக்கணம் செய்திருக்கிறது! வழக்குச் சொல் மரபுக்கவிதையில் வரக்கூடாதென்று எந்தக் கொம்பனும் சொன்னதில்லை!
நாவில் தேன்பாய்ந்தால் அது இனிப்புச் சுவை! அதன் இனிப்பு மனத்துக்குச் சென்று சேர்ப்பது இனிமை உணர்வு! அது காது வழியாகவும் வரும்! இந்த வித்தியாசம் நமக்கே புரிகிறது! அந்த நடுவர்களுக்குப் புரியாமல் போனதிலும் வியப்பில்லை! இன்றும் நல்ல திறன்காட்டும் குழந்தைகளுக்குப் பரிசை மறுத்துவிட்டு, “இது கலெக்டர் டாட்டர்ங்க“, “இது எஸ்பி.தங்கச்சி மகன்ங்க“ “சார் இது நம்ம மாவட்டம் பேரனுங்கஎன்னும் சிபாரிகளுக்குப் பரிசுதரும் நடுவர்களை நாம் இன்றும் பார்க்கத்தானே செய்கிறோம்?...

பரிசுபெறாத –திறன்சார்ந்த- நம் ஏழைப் பிள்ளைகளிடம் உரக்கச் சொல்லுங்கள்... “பாரதிக்கே இரண்டாம் பரிசுதந்த நடுவர்கள் நம்நாட்டில் இருந்திருக்கிறார்கள்! முதல்பரிசு பெற்ற பாட்டைத் தேடித் தேடியும் காண முடியவில்லை... ஆனால், முதற்பரிசை இழந்த பாடலைத்தான் உலகமே பாடுகிறது என்று!

14 கருத்துகள்:

 1. தேன்வந்து பாய்கிற பாட்டிற்கு இரண்டாம் பரிசு...

  இது குறித்து பாரதி விவாதமும் அருமையாய் இருக்கும்... முடிந்தால் அதையும் பதிவிடுங்கள்..

  ஆதாரத்துடன் தந்ததற்கு நன்றிகள் பல

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாரதி இதுபற்றி ஏதும் சொன்னதாகத் தெரியவில்லை! நண்பர்களின் வற்புறுத்தலுக்காக எழுதியதே தவிர போட்டிக்காக பாரதி எழுதவில்லை என்பது மட்டும் தெரிகிறது! நன்றி நண்பா

   நீக்கு
 2. அன்பு நண்பரே தங்கள் தேடல் வழியாக நானும் அறிந்துகொண்டேன்.
  இதைக் கண்டு சொன்ன அ.மு.நெருடாவிற்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  போட்டி என்றால் வெற்றியும் தோல்வியும் இயல்புதான் இருந்தாலும், கவிதை உலகில் மகாகவியாக விளங்கும் பாரதியின் கவிதையைவிட சிறந்ததா அ.மாதவையாவின் கவிதை? என்ற கேள்வியே இந்த தேடலை இன்னும் உயிரூட்டுவதாக உள்ளது.

  முழுப்பாடலும் கிடைக்க முயற்சியைத் தொடர்வோம் நன்றி.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் அய்யா.
  தங்கள் தேடலின் மூலமே முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்ற பாடலை அறிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி. சகோதரர் திரு.அ.மு.நெருடா அவர்களுக்கு எனது அன்பான நன்றிகள். ”செந்தமிழ் நாடேனும்” பாரதியின் பாடலைக் கேட்கும் போதே நாட்டுப்பற்று உணர்வு நம்முள் தலைதூக்கி விடும். நடுவர்களுக்கு வராமல் போனது வேடிக்கை தான். முழுப்பாடலையும் தேடும் முயற்சியில் தொடர்வோம். தங்கள் இலக்கிய தேடல் மூலம் நல்லதொரு செய்தியை தெரிந்த கொண்ட மகிழ்ச்சியோடு தங்களுக்கு எனது அன்பான நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 4. ஆய்வாளர் அ.சீனிவாசனின் கவிதைக்கும்
  புரட்சிக்கவி பாரதிதாசனின் நாடகத்துக்கும்
  கவிஞர் கண்ணதாசனின் நாவலுக்கும்,
  கவிஞர் வைரமுத்துவின் தண்ணீர்தேசத்திற்கும் விருதுகொடுத்ததல்லவா சாகித்திய அகாதெமி! அப்படித்தான்!
  விருதின் தரமும், விருதாளரின் தகுதியும் அறிந்து கொடுப்பது எங்கே நடக்கிறது? அப்துல் ரகுமானுக்கு மட்டும்தான் அது நடந்தது. அப்போது நான் தினமணியில் எழுதிய சிறப்பு வாசகர் கடிதத் தலைப்பு- “சாகிததிய அகாதெமி எழுதிய முதல்கவிதை!” நன்றி.

  பதிலளிநீக்கு
 5. அரிய செய்தி தந்தமைக்கு நன்றி அய்யா.

  பதிலளிநீக்கு
 6. அய்யாவுக்கு வணக்கம். கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற பிரபலமான வரிகள் பற்றிய குறிப்பை மாணவர்களிடம் சொன்னது உண்டு. அப்போது, முதல் பரிசு பெற்றவர் யார்? அந்தக் கவிதை யாது? என்ற வினாக்களை மாணவர்கள் கேட்கும் போது தயக்கம் வந்ததுண்டு. இப்போது அந்த வினாவுக்கு விடை உங்கள் மூலம் கிடைத்து விட்டது.
  புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்பதை உங்களின் மகனார் நிரூபித்துவிட்டார். அவருக்கு என் வாழ்த்துகள். தகவலை வலைப்பூ வழி கணினி வாசல் சேர்த்த உங்களுக்கு நன்றிகள் பற்பல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேடல் இன்னும் முடியவில்லை கோபி தொடர்வோம்- முழுப்பாடலையும் கண்டு, பிறகு இரண்டு பாடல்களையும் ஒப்பிட்டு ஒரு கட்டுரை எழுத ஆசை. நன்றி கோபி. (தங்கள் தளம் அருமையாக உள்ளது, பின்னூட்டங்களுக்கும் பதில் எழுத நேரம் ஒதுக்குங்கள்... பல பயன் அதில் உண்டு)

   நீக்கு
  2. என் மகன் கணினி படித்தவன், இப்போது அரபுநாடொன்றில் இருக்கிறான். வாழ்க்கைப் பிரச்சினைகளில் இலக்கியத்தை மறந்துவிட்டான் என்றிருந்தேன்... இல்லை என்று சொல்லியிருக்கிறான்... பார்க்கலாம் இரண்டையும் தொடர்வது கடினம்தான் என்பதை வாழ்க்கை-இலக்கியம் இரண்டுமே கற்றுக்கொடுக்கும்தானே? அவனும் அவனது இலக்கிய-வாழ்வுத் தேடலும் வளர்க. தங்களின் வாழ்ததுக்கும் நன்றி

   நீக்கு
 7. இரண்டாம் பரிசு பெற்றாலும் இன்றளவும் நிலைத்து நிற்பது இந்தப் பாடல்தான்! 1914இல் பாரதியை யார்
  அறிந்திருக்கப் போகிறார்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பரிசுகள் பலநேரம் நியாயம் வழங்குவதில்லை என்பதற்குப் பாரதியும் விதிவிலக்கல்ல என்பதை இதன்வழியும் அறிகிறோம். தங்கள் வருகை, கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 8. பாரதியாரின் கவிதை வரிகளில் இருப்பது போலான கருத்துப் பொதிவோ , சந்தங்களோ. உந்தல்களோ முதல் பரிசு பெற்ற மாதவய்யா அவர்களின் கவிதை வரிகளில் பெரும்பாலும் இல்லாதது தெரிகிறது. ஆனாலும் .... அன்றும் தேர்வுக்குழுவில் ஒரு சார்புத் தன்மை இருந்திருப்பது மட்டும் புரிகிறது.

  பதிலளிநீக்கு