எங்க ஊருக்கு வயசு 10,000 தெரியுமா?

இது தென்புறம் இருக்கும் ஓவியப்பாறை.
பின்பக்கம் போய் முன்பக்கமாகச் சாய்ந்து ஆய்வு செய்பவர்
முனைவர் நா.அருள்முருகன்  அவர்கள் எங்கள் CEO
கடந்த கால வரலாற்றை  அறியாதவர்கள்,
மீண்டும் அதில் வாழ சபிக்கப்படுவாரகள் என்பது எங்கோ நான் படித்தது நினைவில் இருக்கிறது.

நம் நாட்டு வரலாற்றில் ஒரு புதிய கண்டுபிடிப்பு...
அதுவும் நம் ஊரிலேயே என்றால் யாருக்குத்தான் ஆர்வம் வராது...?

அப்படி எங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பொறுப்பேற்றது முதல் முனைவர் திரு அருள்முருகன் அவர்கள், மாவட்டம் முழுவதும் இருக்கும் பழமையான கோவில்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டினார்கள்...

சரி எல்லா அலுவலர்களையும் போல கோவில்களைப் பார்க்க விரும்புகிறாரோ என்று நான் இதில் முதலில் ஆர்வம் காட்டவில்லை...

பிறகுதான்,
இவர் சாமிகளைப் பார்க்க ஆர்வம் காட்டவில்லை - நமது 
சரித்திரத்தைப் பார்க்க ஆர்வம் காட்டுகிறார் 
என்று புரிந்து அவர்மேல் எனக்கும் ஆர்வம் பிறந்தது..

இப்படித்தான், கடந்த தீபாவளி அன்றைக்கு முதல் நாளும், தீபாவளி அன்றும் அடுத்த நாளும் என்னையும், மகா.சுந்தர், கும.திருப்பதி, மணிகண்டன் ஆகிய நண்பர்களையும் அழைத்துக் கொண்டு திருமயம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் பழங்காலச் சுவடுகள் உள்ள காடு, மலை, புதர், குன்றுகளில் திரிந்து -மதியச் சாப்பாட்டுக்கும் வராமல், வெறும் டீ பன்னுடன் முடித்து- மாலையில் வீடு திரும்பியது தனிக்கதை...

அதற்கு நல்ல பலன் - இதோ எங்கள் மாவட்டப் பழைய வரலாற்றை சற்றேறக்குறைய 3,000 முதல்10,000 ஆண்டுகள் முன்னே கொண்டு போகும் சான்று- ஓவியங்களைக் கண்டு சொல்லியிருக்கிறார் எங்கள் முதன்மைக் கல்வி அலுவலரும், நல்ல தமிழறிஞருமான முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்.

வடபுறம் உள்ள ஓவியப்பாறையின் தெற்குப் பக்கமாக உள்ள ஓவியங்களில் ஒன்று            வேட்டைக்குப் பின் -தொல்காப்பியம் சொல்லும் “உண்டாட்டு” நிகழ்வாக இருக்கலாம்              கண்டவர் - முனைவர் நா.அருள்முருகன் CEO
பார்க்க இணைப்பு -
அவரது வலைப்பக்கம்      
நண்பர்கள் தொடர்வோர் பட்டியலில் இணைந்து,
அவரது நல்ல தமிழ் ஆய்வுகளைத் தொடர்க...

திருமயத்தில் தொல்பழங்காலப் பாறை ஓவியங்கள். மேலும் சிலவற்றை
இணைப்பில் சென்று பார்க்க -http://nadainamathu.blogspot.in/2013/11/blog-post_24

நன்றி -
இச்செய்திகளை விரிவாக வண்ணப்படங்களுடன்  23-11-2013 அன்று வெளியிட்ட தி இந்து ஆங்கிலம், இந்து-தமிழ், தினமலர், தினத்தந்தி, தினமணி,தினகரன், மற்றும்  24-11-2013தீக்கதிர் ஆகிய நாளிதழ்களுக்கு நன்றி

11 கருத்துகள்:

  1. புதுகை வரலாற்றில் முக்கியத்திருப்பம்.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. சரித்திரத்தை பார்க்கவில்லை அவர் திருத்தம் செய்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    அருமையான வரலாற்றுப்பதிவு தொடருங்கள்.... எனது வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. செய்தித் தாள்களின் வழியாகவும், நடைநமது வலைப் பூ வழியாகவும் கண்டுபிடிப்புப் பற்றிய தகவல்கள் அறிந்து மகிழ்ந்தேன் ஐயா.
    மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் பணி மகத்தான பணி.
    புதியன மேலும் காண போற்றுவோம். பாராட்டுவோம்

    பதிலளிநீக்கு
  5. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் ஆர்வம் மேலும் தொடர்ந்து, அவரது இந்தப் பணி சிறப்பாக அமையட்டும்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் அய்யா.
    நமது முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் தொல்பழங்காலத்து ஓவியக்கண்டுபிடிப்பு இந்திய தொல்லியல் தொல்லியல் துறையை உசுப்பி விட்டு இன்னும் நமது மாவட்ட பழமைகளை வெளிக்கொணர வாய்ப்புகள் தந்துள்ளது அவருக்கு எனது நன்றிகள். ஆய்விற்கு தாங்களும் சென்று வந்துள்ளதைப் படிக்கும் போது கூடுதல் மகிழ்ச்சி பிறக்கிறது. பாறைகளில் புதைந்து கிடந்த வரலாற்றை அடையாளப்படுத்திருக்கும் அய்யாவின் தேடுதல் இன்னும் இன்னும் பெருகி உச்சத்தைத் தொட வேண்டும் அவர்கள் மூலம் இன்னும் எண்ணற்ற பழமை வரலாற்று அடையாளங்களைக் கண்டு புதுவரலாறு படைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அவர் அலுவலர் என்பதையும் கடந்து நண்பராகப் பயணிக்கும் தங்களுக்கு நானும் நண்பர் என்பதில் பெருமகிழ்ச்சி அய்யா. பகிர்ந்த தங்களுக்கு எனது அன்பார்ந்த நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  7. புதுகை சரித்திரத்தின் பாதையில் மற்றுமொரு மயில் கல் .கலக்கல் அண்ணா !

    பதிலளிநீக்கு
  8. கல்வித்துறையில் உரிய பதவியில் இருந்தால் இம்மாதிரி வாய்ப்புகள் வரும். ஆனால் அருள்முருகனைப் போல் அவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு நல்ல துணைவர்களோடு ஆய்வில் இறங்கிடும் மனம் வெகுசிலருக்கே வரும். அருள்முருகனுக்கு நமது வாழ்த்துக்கள். - கவிஞர் இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
  9. புதுக்கோட்டை வரலாற்றின் புதிய பகுதி... அருமை ஐயா....

    பதிலளிநீக்கு
  10. "இவர் சாமிகளைப் பார்க்க ஆர்வம் காட்டவில்லை - நமது
    சரித்திரத்தைப் பார்க்க ஆர்வம் காட்டுகிறார்
    என்று புரிந்து அவர்மேல் எனக்கும் ஆர்வம் பிறந்தது." போல
    சரித்திரத்தை வெளிப்படுத்துபவர்கள் தானே
    தமிழை வெளிப்படுத்த முடியும்!

    பதிலளிநீக்கு
  11. நல்ல பதிவு...

    மகிழ்வான சாதனை

    பதிலளிநீக்கு