திரைப்படங்களில்
சிறந்தகருத்துகளை
சொல்வதற்குத் தேவை-
சொல்வதற்குத் தேவை-
சிரிப்பா? சிந்தனையா?
நடுவர் –
நகைச்சுவைத் தென்றல் திண்டுக்கல்
ஐ.லியோனி
பேச்சாளர்கள் –
சிந்தனையே-
புதுக்கோட்டை முத்துநிலவன்,
கவிஞர் இனியவன்
புதுக்கோட்டை முத்துநிலவன்,
கவிஞர் இனியவன்
சிரிப்பே –
மதுக்கூர் இராமலிங்கம்,
பேரா.விஜயகுமார்.
------------- நன்றி – கலைஞர் தொலைக்காட்சி
கேட்டும் பார்த்தும் மகிழ -
அய்யாவிற்கு வணக்கம்.
பதிலளிநீக்குபட்டிமன்றம் அன்றைக்கே பார்த்தேன் இருப்பினும் என்றைக்கும் பார்க்கும் விதமாக அமைந்த அருமையான பட்டிமன்றம். அனைவரும் அசத்தி விட்டீர்கள். தங்களின் பேச்சை மீண்டும் கேட்டுவிட்டே கருத்திடுகிறேன். சரியாக 14.22 - 22.27 = 8.05. சரியாக எட்டு நிமிடம் ஐந்து விநாடிகள் தலைப்பிற்கு என்ன தேவையோ அதை ரத்தின சுருக்கமாக பேசி முடித்தது மிக அருமை. இருப்பினும் இன்னும் நேரம் இருந்திருக்க கூடாதா தங்கள் பேச்சு நீண்டிருக்க கூடாதா எனும் ஏக்கம் எனக்கு வந்தது. ரசித்து கேட்டேன். பகிர்வுக்கு நன்றி அய்யா.
நன்றி பாண்டியன், அது வேற கதை அய்யா.
நீக்குநாங்க எல்லாருமா -நடுவர்,பேச்சாளர் நால்வர்-சேர்ந்து மொத்தம் சுமார் 3மணிநேரம் பேசுவோம். எப்படியும் பேச்சாளர் ஒருவருக்கு 20-30மணித்துளிகள் பேசுவோம். பிறகு... தொகுப்பின்போது(எடிட்ஆகி)6-7மணித்துளிகள் தான் வரும். இரண்டு காரணம் ஒன்று ஒளிபரப்பாவது ஒன்றரை மணிநேரம்தான். அதில் பாதி விளம்பரம்! இதில் சுவையான முரண் என்னவெனில் பட்டிமன்றம் எந்த அளவிற்கு விறுவிறுப்பாக இருக்கிறதோ அந்த அளவிற்கு விளம்பரம் வரும். விளம்பரம் கூடுதலாக வரவர நம்பேச்சு வெட்டுப்பட்டுக்கொண்டே வரும்... புரிகிறதா? இதற்குள் நல்ல பகுதிகளை விட்டுவைப்பது தொகுப்பாளரின் ரசனை கலந்த பெருந்தன்மை! பார்த்து ரசித்தைமைக்கும் கருத்துத் தெரிவித்தமைக்கும் நன்றி பாண்டியன். வணக்கம்.
பேச்சைக் கேட்டேன்
பதிலளிநீக்குரசித்தேன்
மகிழ்ந்தேன்
நன்றி ஐயா
நன்றி அய்யா. நமது கணினித் தமிழ்ப்பயிலரங்கின் போதும், அதன் பின்னரும் கற்றுக்கொண்டவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகச் செயற்படுத்திப் பார்க்கிறேன். இப்போதுதான் விடியோ படத்தை ஏற்றக் கற்றுக்கொண்டேன். இனி நான் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளை (யூட்யுபின் வழியாக) அடிக்கடி நீங்கள் பார்க்கலாம்... நன்றி
பதிலளிநீக்குகண்டிப்பாக பார்க்கிறேன் ஐயா...
பதிலளிநீக்குவணக்கம் ஐயா!...
பதிலளிநீக்குஉங்கள் பேச்சினைப் பட்டிமன்றத்தில் கேட்கும்
நல்ல வாய்ப்பினைத் தந்தீர்கள்!
பொதுவாகவே பட்டிமன்றத்தை நான் விரும்பிப் பார்ப்பேன்.
இங்கு உங்கள் பேச்சு நகைச்சுவையுடன் மிக அருமையாக ரசிக்கும்படி இருந்தது.
நீங்கள் பாடியதுங்கூட மிகச் சிறப்பே!
ரொம்பவும் ரசித்தேன். மிகக் குறுகிய நேரமாக இருந்ததுதான் வருத்தம்.
பகிர்விற்கு நன்றி. வாழ்த்துக்கள் ஐயா!
சிறந்த பட்டிமன்றம்; தங்கள் youtube இணைப்பில் பார்த்தேன்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு மிக்கநன்றி.