வியாழன், 1 அக்டோபர், 2015

நமது மின்-இலக்கியப் போட்டிகளுக்குப் படைப்புகள் அனுப்புவதற்கான இறுதிநாளை இரண்டுநாள் நீட்டித்திருக்கிறோம்.

அதாவது போட்டிப் படைப்புகளை அனுப்ப இறுதிநாள்                 30-09-2015 என அறிவித்திருந்தோம்.  
02-10-2015 இரவு வரை அனுப்பலாம்.

தமிழ்-இணையக் கல்விக்கழக நண்பர்கள் மற்றும் நம் விழாக்குழு சார் நண்பர்களின் கருத்தின்படியும் நடுவர்களின் கருத்தைக் கேட்டும் இந்த நீட்டிப்பு தெரிவிக்கப்படுகிறது.

எனில், நடுவர்கள் தமது மதிப்பீட்டை 06-10-2015ஆம் தேதிக்குள் தரவும் முடிவுகளை 07-10-2015ஆம் தேதிக்குள் நமது தளத்தில் அறிவிக்கவும் விழாக்குழு முடிவுசெய்துள்ளது.

நடுவர்களின் ஒத்துழைப்பை மிகவும் எதிர்பார்க்கிறோம். முடிவுகளை அறிவிக்கும்போதே நடுவர்கள் விவரமும் அறிவிக்கப்படும். அதுவரை நண்பர்கள் பொறுமை காக்க!

பொதுவான கருத்து
படைப்புகள், குறிப்பாகக் கட்டுரைகள் இன்னும் அதிக எண்ணிக்கையில் வர வேண்டுமென விழாக்குழு மற்றும் த.இ.க. நண்பர்கள் எதிர்பார்க்கிறார்கள். படைப்பாளர்கள் இந்தக் குறிப்பைக் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

அதோடு, ஏற்கெனவே வலைப்பக்கம் தொடங்காமலே வேர்டுகோப்பாக படைப்புகளை அனுப்பியிருக்கிறார்கள். அவர்கள் இந்த இரண்டு நாளுக்குள் வலைப்பக்கம் தொடங்கி அதில் தமது படைப்புகளை இட்டபின் அந்த இணைப்பை அனுப்ப இந்த நாள்நீட்டிப்பு உதவுமென நம்புகிறோம்.

பக்கஅளவு, உறுதிச்சான்றுமொழிகளை அவரவர் வலைப் பக்கப்படைப்பின் இறுதியிலேயே இட்டு அந்த இணைப்பை மட்டும் நமது மின்னஞ்சலுக்கு அனுப்பினால் போதுமெனும் போட்டி விதிமுறைகளை பங்கேற்பாளர்க்குக் கவனப்படுத்துகிறோம்.

எண்ணிக்கை பெரிதல்ல, தரம்தான் முக்கியம். என்றாலும் சிலநேரம் எண்ணிக்கைதானே பெரிய மாற்றங்களுக்குக் காரணமாகிவிடுகிறது?! இது படைப்பின் வரியளவு, பக்க அளவு, படைப்புகளின் வரத்தளவு எல்லாவற்றின் மீதும் தாக்கம் செலுத்துகிறதல்லவா? படைப்பாளிகளே கவனியுங்கள்!

அளவு மாற்றம், குணமாற்றத்தை ஏற்படுத்திவிடும் 
என்பது உலக உண்மை.

தரமான, கூடுதலான படைப்புகளுக்கான
எமது காத்திருப்பு தொடர்கிறது -

மேலும் இரண்டுநாள்களுக்கு!

--விழாக்குழு,
--மின்னஞ்சலுக்கு - bloggersmeet2015@gmail.com

6 கருத்துகள்:

 1. மிக்க நன்றி அண்ணா! இது பலருக்கும் நல்வாய்ப்பாய் அமையும்!!

  பதிலளிநீக்கு
 2. இன்னும் பல ஆக்கபூர்வமான கருத்துக்கள் வரட்டும்,,,,,
  நன்றிகள் ஐயா.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் அய்யா
  கால நீட்டிப்பு என்பது நிச்சயமாக பதிவர்களுக்கு நல்ல வாய்ப்பு. தற்போது நானும் ஒரு கட்டுரை எழுதி குழுவிற்கு அனுப்பி விட்டுத் தான் வருகிறேன். கால நீட்டிப்பால் தான் இது சாத்தியமாயிற்று. நன்றிகள் ஆயிரம் அய்யா.

  பதிலளிநீக்கு
 4. இன்னும் பல படைப்புகள் வந்து தேர்வு செய்வது மேலும் கடினமாகட்டும்!
  நல்ல முடிவு

  பதிலளிநீக்கு

Blog Archive

படைப்புகளைப் பயன்படுத்த விரும்புவோர் ஆசிரியரிடம் முன்அனுமதி பெறவேண்டும். Blogger இயக்குவது.

பக்கப் பார்வைகள்

மின்னஞ்சலில் புதிய பதிவுகளைப் பெற :

My E.Books - http://valarumkavithai.blogspot.com/2017/04/blog-post_6.html

நட்பு வட்டம்

உலகத்தின் பார்வையில்

உலகத்தின் பார்வையில் இந்த வலை

Popular Posts

Google+ Followers

நட்பு வலைகள்

Our Facebook Page

எனது நூல்களில் சில...