வைக்கம்-100 தமுஎகச கருத்தரங்கு
உரைவீச்சு - நா.முத்துநிலவன்
(காணொலிப் பதிவுக்கு நன்றி
- தீக்கதிர் வலைக்காட்சி)
கடந்த 06-4-2023 அன்று திருப்பூர்
மாவட்ட தமுஎகச நடத்திய
வைக்கம்-100
கருத்தரங்கில் நா.முத்துநிலவன் உரை
பதிவு செய்து தனது வலைக்காட்சியில் ஏற்றிய
தீக்கதிருக்கு நன்றி
அழைப்பிதழ்
நிகழ்ச்சிப் படங்கள்
செய்தி வெளியீடு
உரையின் காணொலி இணைப்பு –
நன்றி - தீக்கதிர் நாளிதழ் முகநூல்
நிகழ்ச்சி ஏற்பாடு செய்த மாநிலச் செயற்குழுத் தோழர் ஈஸ்வரன், மாவட்டச் செயலர் தோழர் குமார் உள்ளிட்ட திருப்பூர் தமுஎகச மாவட்டக்குழுத் தோழர்கள்
பார்த்து, கேட்டு கருத்திட வேண்டுகிறேன்
வணக்கம்.
பின் குறிப்பு -
மன்னிக்க வேண்டும்-
எனது உரையில் பழ.அதியமான் அவர்களின் புத்தகம் பற்றிக் குறிப்பிடும்
போது, சின்னப் புத்தகம் என்று சொல்லிவிட்டேன். உண்மையில், ஜோசப் இடமருகு அவர்கள் எழுதிய “நாராயண குரு”
என்னும் நூல்தான் சிறிய 102-பக்க நூல்.
பழ.அதியமான் அவர்களின் “வைக்கம் போராட்டம்” 600-பக்கங்களுக்கு மேலான அரிய நூல். நாப்பிழைக்கு மன்னிக்கவும்.
---------------------------------------------------
உரை தயாரிப்பில் உதவிய நூல், கட்டுரைகள்
(1) முனைவர் வா.நேரு (தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) அவர்கள் எழுதிய கட்டுரை (திராவிடப் பொழில்-அக்-டிச-2021) “வைக்கம்-இந்தியச் சமூகவிடுதலைப்போராட்டத்தின் முன்னோடி”
(2) “இவர்தான் நாராயண குரு”
- ஜோசப் இடமருகு (தலைவர் இந்தியப் பகுத்தறிவாளர் சங்கம்)
(3) பழ.அதியமான் அவர்கள் எழுதிய “வைக்கம் போராட்டம்” காலச்சுவடு வெளியீடு, நாகர்கோவில் -
மற்றும்
பழ.அதியமான் இந்து -தமிழ் நாளிதழ்(30-3-2023 கட்டுரை
யு.கே.சிவஞானம் தீக்கதிர் நாளிதழ் -30-3-2023 கட்டுரை
ஆசிரியர் கி.வீரமணி -விடுதலைக் கட்டுரை
கி.தளபதிராஜ், விடுதலை ஞாயிறுமலர்-26-3-2023
---------------------------------
இன்றைக்கும் மக்கள் பிரச்சனைகளுக்காக பொதுமக்கள் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் பிரச்சனைகள் தீர்வதாக இல்லை. போராட்டம் என்றால் இப்படித்தான் நடத்த வேண்டும் என்று நமக்கு சொல்லிக் கொடுத்தவர் தந்தை பெரியார். அவர்களிடத்திய போராட்ட வடிவங்களை மக்களிடத்தில் கொண்டு சென்று சேர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு எல்லாம் இருக்கிறது. அதை மிகச் சிறப்பாக செய்திருக்கிறீர்கள் ஐயா. மிகச் சிறப்பாக இருக்கிறது ஐயா. தாங்கள் சொல்லி இருப்பதைப் போல பல எழுத்தாளர்களே போராட்ட வரலாறுகளை மாற்ற பார்க்கிறார்கள். அவற்றை அனுமதிக்க கூடாது. மக்களிடத்தில் கொண்டு சென்று சேர்ப்போம் ஐயா. மிக சிறப்பான காணொளி. சிறந்தது ஒரு வரலாற்று பதிவு.
பதிலளிநீக்குஅரசியல் ஆன்ம விடுதலைகளைக் காட்டிலும் சமூக விடுதலை காலம் தோறும் தேவைப்பட்டுக் கொண்டு தான் உள்ளது. பெரியார் இதனை எங்கும் எதற்காகவும் தன்னைச் சமாதானம் செய்து கொள்ளாமல் செய்து காட்டினார். அவரைத் தொடர்ந்து வாழ்வது மூலமும் சிந்திப்பது மூலமே அவரை வாழ வைக்க முடியும். அதனைத் தங்கள் வாழ்வில் மெய்ப்பித்து உள்ளீர்கள் அய்யா.மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குமிகச் சிறந்த உரை சார். வைக்கம் குறித்த முக்கியமான தகவல்கள் அதோடு கலந்த சமகால பார்வை ..பாத்திரமான உரை. வாழ்த்துகள் சார். ஃ,💐🙏 புதிய மாதவி, மும்பை
பதிலளிநீக்கு