கடந்த கல்வியாண்டில் பத்தாம்வகுப்புத் தேர்வில் நம் பிள்ளைகள் மதிப்பெண்களை வாரிக்குவித்து “தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி” என்பதை நிலை நாட்டியிருக்கிறார்கள்.
மாநில முதல்மதிப்பெண் 500க்கு 499 என்பதும்,
அதையும் 19பேர் பகிர்ந்திருப்பதும், அடுத்த 498ஐ 125பேரும்,
497ஐ 321பேரும் பெற்றிருக்கிறார்கள் என்பதும் மகிழ்வான செய்திதான்
இதுவரை
இல்லாத அளவில்கடந்த கல்வியாண்டில் மாணவ-மாணவியர் மதிப்பெண்களை வாரிக் குவித்திருந்தாலும்,
பல்லாயிரம்பேர் கணித-அறிவியல் பாடங்களில் 100 விழுக்காடு பெற்றிருந்தாலும், தமிழ்ப்பாடத்தில்
மதிப்பெண்கள் குறைவாகவே இருப்பதும், 10முதல் 15விழுக்காட்டினர் தோல்வியடைவதும்
தொடர்கிறதே ஏன்? அதிலும் தேர்வெழுதிய சுமார் 11லட்சம் மாணவர்களில் 63,000பேர்
தமிழில் தோல்வியடைந்திருக்கிறார்களே ஏன்? என்பது ஒரு முக்கியமான கேள்வி.










