(நமது 21பக்கக் கட்டுரை வந்துள்ளது) |
IAS, IPS. GROUP-1, 2, 2A, 4 மற்றும் பேராசிரியர், ஆசிரியர்களுக்கான TRB தேர்வுகள், தமிழ்இலக்கியம், எம்ஏ., பி.ஏ., தேர்வுகள் எழுதுவோர்க்குப் பயன்படும் வகையில்
தமிழ்த் தேர்வுகளுக்கான பகுதியை
இந்த ஆண்டு
நான் எழுதியிருக்கிறேன்.
“தமிழ் இலக்கியமும் வரலாறும்”
(21பக்கம்)
பழங்கால-இடைக்கால-இக்காலத்
தமிழ்இலக்கியங்கள் பற்றிய
முக்கியமான குறிப்புகளுடன்,
தமிழ்நாட்டு வரலாறு தொடர்பான குறிப்புகளும்
இதில்
வருகின்றன.
-------------------------------------
21பக்கக் கட்டுரை)
-----------------------------
சிறு தலைப்புகள்-
தொல்பழங்காலம்
தொல்லியல் சான்றுகள்
தமிழின் தொன்மை
பிராமி-தமிழி,
வட்டெழுத்து, கிரந்த எழுத்துகள்
தமிழ்ச் சங்கங்கள்
சங்க இலக்கியம்
பத்துப் பாட்டு நூல்களும் அவற்றின் ஆசிரியர்களும்
எட்டுத் தொகை நூல்கள்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
திருக்குறள்
“செம்மொழி” நூல்கள்
தமிழ்- செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள்
தமிழ் இலக்கணம்
களப்பிரர்
பல்லவர்
முற்கால, பிற்காலச் சோழர்கள்
ஐம்பெருங்காப்பியங்கள்
ஐஞ்சிறுகாப்பியங்கள்
சைவ, வைணவ - இலக்கியங்கள்
சிற்றிலக்கியங்கள்
சித்தர்கள்
தமிழ்ப்பண்பாடு
புகழ்பெற்ற வரிகள் – எழுதியவர்
பௌத்தம் வளர்த்த தமிழ்
சமணம் வளர்த்த தமிழ்
இஸ்லாம் வளர்த்த தமிழ்
கிறித்தவம் வளர்த்த தமிழ்
தற்காலத் தமிழ்
பொதுவான இலக்கியச் செய்திகள், இதழ்கள்
தமிழ் இலக்கிய விருதுகள், பெற்ற
எழுத்தாளர்கள்
நாவல்
சிறுகதைகள்
மரபுக்கவிதை
புதுக்கவிதை, வரிகளை எழுதியவர்
அய்க்கூ
சிறார் இலக்கியம், சூழலியல் நூல்கள்
திறனாய்வு மற்றும் நூல் –நூலாசிரியர்
இசைத்தமிழ், நாடகத் தமிழ்
ஆக 38 தலைப்புகளில் 21பக்கங்கள்!
------------------------
சிறுதலைப்புகளின் கீழ்,
படிக்கவும் புரிந்துகொள்ளவும் எளிதாக,
குறிப்புகளாகவே (புல்லட் பாயிண்ட்ஸ்) தரப்பட்டுள்ளது.
தலைப்பில் வரும் குறிப்புகளை இணைத்தால்
கட்டுரையாக எழுதிக்கொள்ளவும்
ஏற்றபடி அமைந்துள்ளது.
----------------------
முன் அட்டையில் உள்ளபடி
சிறப்புக் கட்டுரையாளர்கள்-
டாக்டர் கு.கணேசன், த.வி.வெங்கடேஸ்வரன், ஜி.கோபாலகிருஷ்ணன், நாராயணி சுப்ரமணியன்,
நா.முத்துநிலவன்.
மற்றும்
துறை வகையான அறிஞர் பலரும்
முக்கியமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள்.
------------------
பக்கங்கள் -800 விலை ரூ.275
தற்போது சென்னையில்
புத்தக விழா “இந்துதமிழ்”
அரங்க எண்கள்-56,57 / 540,541 ஆகியவற்றிலும்
அந்தந்த ஊர்களின் புத்தகக் கடைகளிலும்
விற்பனைக்கு வந்துள்ளது.
புதுக்கோட்டை மேலராஜ வீதியில் கிடைக்குமிடம்
மேல ராஜ வீதி - சக்சஸ் புத்தகக் கடை
தொடர்புக்கு திரு அஜ்மீர் - 98420 18544
------------------
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும்
மாணவர் மட்டுமின்றி,
பொது அறிவுத் தாகம் உள்ளவர்களும்,
தமிழ்ஆர்வம் உள்ளவர்களும் என அனைவரும்
வாங்கிப் படித்துப் பாதுகாக்க வேண்டிய நூல்.
-------------------
இப்படியான
கட்டுரையை எழுத அழைத்த
“இந்து
தமிழ் இயர்புக்-2024“ தொகுப்பாளர்களுக்கு,
குறிப்பாக, தோழர் ஆதி வள்ளியப்பன் அவர்களுக்கு
எனது நெஞ்சார்ந்த நன்றி.
-----------------------
ஏற்கெனவே,
“விகடன் இயர்புக்-2021”இல்
வந்த
“இணையத் தமிழுக்கு 25வயது”
கட்டுரையைப் படிக்க விரும்பும்
நண்பர்கள்
பின் வரும் இணைப்பைச் சொடுக்குக
https://valarumkavithai.blogspot.com/2021/01/blog-post.html
--------------------------------
வாங்கிப் படித்தோர்
தங்கள் கருத்துகளை எழுதினால் மகிழ்வேன்.
நன்றி நன்றி நன்றி
--------------
(இப்பதிவு, வலையேற்றப் பட்ட விவரம்-
07-01-2024 மாலை 7-15)
நன்றி ஐயா, தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமிகவும் அருமை... போட்டித் தேர்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்....🙏🙏
பதிலளிநீக்கு