சாதனை படைத்த இவரது பிரச்சினை என்ன தெரியுமா?

“குடும்பத்துல என்னோட பிரச்சினைகளைப் புரிஞ்சிக்கல..அப்பறம் நானே வீட்ட விட்டு வெளியில வந்து “என்னோட கம்யூனிட்டி“யோட சேர்ந்து என்னோட லைஃப நா தேடிக்கிட்டேன்“ என்று சொல்லும் இவர் யார்? 

இவர் அண்மையில் இந்தியாவிலேயே முதலாவதாக............வந்திருப்பவர் என்று சொன்னால் ஒருவேளை உங்களுக்குத் தெரியலாம் –நீங்கள் தொடர்நது செய்தித்தாள் படிப்பவராக, செய்தி ஆர்வலராக இருந்தால்...

இதோ அவரே சொல்வதைக் கவனியுங்கள்..
அது என்ன பிரச்சினை?
அது என்ன கம்யூனிட்டி?
தொடர்ந்து படியுங்கள்!
காணொளியைப் பாருங்கள்!
முதலில் அதிர்ந்தும் பிறகு மகிழ்ந்தும் போவீர்கள்..

காணொளி மற்றும் செய்திகளுக்கு இந்த இணைப்பில் செல்லவும்- நன்றி விகடன்

பார்த்தபின் படித்தபின் தொடருங்கள்...

வழக்குகளில் உதவிசெய்த பவானி சுப்புராயன் – வழக்குரைஞர் பாராட்டுக்குரியவர். அவர்கூட “திரு பிரித்திகா யாஷினி“ என்றே இயல்பாகக் குறிப்பிடுவதைப் பாருங்கள். 

திரு என்று சொல்லப்படுவதைத் திருநங்கையர் யாரும் விரும்புவதில்லை –தன்னை ஒரு பெண்ணாகவே கருதுவதால் என்பது இவ்விடம் கவனிக்கத் தக்கது. என்னுடன் கடந்த ஜூன்மாதம் சென்னை எஸ.பி.ஐ.ஓ.ஏ பள்ளியின் 3நாள் கல்விக்கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்திருந்த சகோதரி பிரியா பாபு சொன்ன செய்தியிது

கடைசியாக “என்னோட திருநங்கைகள் கம்யூனிட்டிக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்வேன்“ – என்று சொல்லும்போது தான் அவர் சொன்னது புரிந்தது!

'தான் ஒரு திருநங்கை' என்று தெரிந்து மிகவும் பரிவு காட்டிய யாஷினி என்ற பெண்மணியின் நினைவாக தன் பெயரோடு யாஷினியை சேர்த்துக் கொண்டார் பிரித்திகா என்பது நெகிழ்ச்சியூட்டுகிறது!

பிரித்திகா யாஷினியின விடா முயற்சிக்கும்
தற்போது அவர் பெற்றிருக்கும் வெற்றிக்கும் நம் வாழ்த்துகள்!

வாழ்த்துக்குரியவர் 3வகையினர் -
(1)இந்த யாஷினிக்கு உதவி செய்த அந்த யாஷினி!
(2)யாஷினியின் வழக்கை எடுத்து நடத்திய பவானி,
(3)நல்ல தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள்

இந்தியாவின் முதல் திருநங்கை காவல்துறை ஆய்வர், தனது விடா முயற்சியால் அவர் ஆசைப்படுவதுபோல “இந்தியாவின் முதல் ஐபிஎஸ் அதிகாரியாக வர” வாழ்த்துவோம்! விடா முயற்சி வெற்றிதரும்!

வரலாறுபடைத்த பிரித்திகா யாஷினி!

வாழ்த்துகள் சகோதரி!
--------------------------------- 
திருநங்கையரின் வாழ்க்கை அவலத்தை நமது சமூகமும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை, தமிழ்த்
திரையுலகமும் அதற்கு முயற்சிசெய்யவும் இல்லை.
சமீபத்திய சங்கர் படமான “ஐ“ இதற்கொரு சான்று.
அப்படத்தால் காயம்பட்ட திருநங்கை ஒருவரின்
கோபாவேசத்தை நான் ஏற்கெனவே எழுதினேன்.
பார்க்க -http://valarumkavithai.blogspot.com/2015/01/blog-post_18.html

14 கருத்துகள்:

  1. வாழ்த்துவோம் அவருக்கும் ஒர் மனம் உண்டு என்பதை இந்த சமூகம் உணர வேண்டும் நம் வீட்டில் இப்படி ஒருவர் பிறந்து விட்டால் ??? என்று நினைத்துப் பார்த்தால் நல்ல தீர்வு கிடைக்கும்

    பதிலளிநீக்கு
  2. பிரித்திகா யாஷினியைப் பாராட்டுவோம்
    “இந்தியாவின் முதல் ஐபிஎஸ் அதிகாரியாக வர” வாழ்த்துவோம்!
    நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள்!!

    ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியாக பரிமளிக்க.

    கோ

    பதிலளிநீக்கு
  4. குடும்பத்தால், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒவ்வொரு திருநங்கைக்கும் இத்தகு தன்முனைப்பும் முயற்சியும் வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. சாதனையாளருக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. 3 வகையினருக்கும் பாராட்டுகள்..

    பிரித்திகா யாஷினி அவர்களின் எண்ணம் விரைவில் நிறைவேறும் - விடா முயற்சி என்றும் வெற்றியே தரும்...

    பதிலளிநீக்கு
  7. ப்ரிதிகா எங்க ஊர் தான் என்பதால் சற்று கர்வமாகவும் உள்ளது...
    தகவலை முதன்முதலில் வெளியிட்ட NDTV reporter சாம், சேலத்தில் என் சிறுவயது நண்பர்.

    பதிலளிநீக்கு
  8. அவர்களின் மனக் காயம் மிக அதிகம். நான்கு திருநங்கைகளை பேட்டி எடுத்து கட்டுரை ஆக்கியவன் என்ற முறையில் அதை உணர்ந்திருக்கிறேன். யாஷினியின் விடாமுயற்சி பாராட்டத்தக்கது.
    அருமையான பகிர்வுக்கு நன்றி!
    த ம 5

    பதிலளிநீக்கு
  9. அன்புள்ள அய்யா,

    திரு பிரித்திகா யாஷினி சந்தித்த போராட்டங்களையும்... சாதித்த சாதனைகளும் மிகுந்த பாராட்டுக்குரியன. இவரின் பெற்றோர் இவருக்கு ஆதரவுக் கரம் நீட்டாதது வேதனைக்குரியது. பதவி வந்த பிறகு பெற்றோர்கள் அவருடன் பேசுவது மகிழ்ச்சியைச் கொடுத்தாலும் ‘திருநங்கை’களைக் அவர்களது குடும்பம் ஒதுக்காமல் இருப்பது நல்லது.
    ஏனெனில் திருநங்கைகள் செய்த தவறேதும் இல்லையென்பதை உணர்ந்து... அவர்களை அரவணைக்கின்ற பெரும் பொறுப்பு குடும்பத்தாருக்கு உண்டு. ‘பீமாராவ் இராம்ஜி’ தனக்கு உதவி செய்த ‘அம்பேத்கர்’அவர்களின் பெயரைத் தன் பெயரோடு இணைத்துக் கொண்டதைப் போல இவருக்கு உதவி செய்த அந்த ‘யாஷினி’ அவர்களை நெஞ்சில் நிறுத்தி தனது பெயருடன் இணைத்துக் கொண்டது நன்றியைக் காட்டும் நல்ல செயல் பாராட்டுக்குரியது.

    பிரித்திகா யாஷினி மேலும் மேலும் உயர்ந்து சிறந்து விளங்க மனதார வாழ்த்துகள்.

    நன்றி.

    த.ம.6

    பதிலளிநீக்கு
  10. ரயில்நிலையங்களிலும் பஸ் நிலையங்களிலும் யாசிப்பவர்களாகவும், சபலமானவர்கள் தடம் மாறுவதற்குத் துணைபோகின்றவர்களாகவும் மட்டுமே பெரும்பாலான மூன்றாம் பாலினத்தாரை த தமிழகத்தில் பார்க்க முடிகிறது. மும்பை, டில்லி போன்ற நகரங்களில் அவர்கள் கௌரவத்தோடு நடத்தப்படுகிறார்கள். வீட்டில் ஆண் குழந்தை பிறந்தால் அதை மூன்றாம் பாலினத்தவர் கையில் கொடுத்து வாங்கினால் குழந்தைக்கு ஆயுள் வளரும் என்பது அவர்கள் நம்பிக்கை. அதற்காக ஆயிரக்கணக்கில் பணம்பெறுகிறார்கள் திருநங்கையர். இங்கு அந்நிலை ஏற்படுமா என்று தெரியவில்லை. எனவே, யாசிநியைப் போன்றவர்கள் தங்கள் சுய முயற்சியால் அடித்துப்பிடித்து முன்னுக்கு வரும்போது, நம் அனைவரின் வாழ்த்தும் அவர்களுக்குச சென்று சேரவேண்டும். பணம் அல்லது பதவி அல்லது இரண்டுமே இருந்தால் அவர்கள் மதிக்கப்படும் விதமே தனிதான். அந்த நல்வாழ்வு ஒவ்வொரு திருநங்கைக்கும் ஏற்படட்டும்! - இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
  11. பிரித்திகா யாஷினி அவர்களுக்கு வாழ்த்துகள்.

    அவரது IPS கனவு நிறைவேறட்டும்.

    பதிலளிநீக்கு
  12. திருநங்கைகள் மீதான பார்வைகள் மாறத் தொடங்கி யுள்ளது வரவேற்கத் தக்கது. யாஷினியின் வெற்றி ஒரு நல்ல துவக்க மாக அமையட்டும். வாழ்த்துக்கள்
    திருநங்கைகள் பற்றி நான் எழுதிய கவிதை ஒன்றை படித்த திருநங்கை மன நிலையில் உள்ள கல்லூரி மாணவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தேன்.
    நீயா?நானா?திருநங்கைகளும் பொதுமக்களும்

    பதிலளிநீக்கு