மாாாா....ர்ச்..! எட்டு - வாழ்த்துகள்

Inter National Womens' day -2014,  wall poster by M.Mallika

சர்வதேசப் பெண்கள் தின வாழ்த்துகள்!
இத்துடன் 
என் துணைவியார் தனது தோழியர்க்காகத் தயாரித்த
சர்வதேசப் பெண்கள் தின வாழ்த்து அட்டையை 
நம் வலைப்பக்க சகோதரியர் அனைவர்க்கும் 
வழங்கி மகிழ்கிறேன்.. வாழ்த்துகள்... 

நம் பிள்ளைகளையும் சமூகத்தையும்
நல்ல வழியில் வளர்ப்போம்! வளர்வோம்!

“மங்கையராகப் பிறப்பதற்கே - நல்ல
மாதவம் செய்திட வேண்டுமம்மா“ - கவிமணி
“மாதர்தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்“ - பாரதி.

மேலும் பெண்ணுரிமைப் பாடல்களைப் படிக்க வருக!...

மார்ச்-8, உலகப் பெண்கள் தினத்தை ஒட்டி நான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் தவறாமல் பாடும் பாடல்கள் 

அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு
ஆகிய சொற்கள் வெறும் பசப்பு
இச்சைக் கிளியாய் போகப் பொருளாய்
இருப்பது தானா பெண் பொறுப்பு?
எத்தனை உரிமைகள் ஆணுக்கு!
அதில் ஏதுமில்லே இங்கு பெண்ணுக்கு!
ஆயிரம் வஞ்சனை பெண்ணுக்கு அது
தெரிவதில்லை நம்கண்ணுக்கு........................................ (அச்சம்.

தொட்டில் இறங்கி தவழ்கையிலே
தொடங்குது இந்த கொடுமைகளே
ஆணை பெண்ணை விளையாட்டினிலே
பிரித்துவைப்பார் மடமையிலே
குட்டிச் சிறுமி மட்டை எடுத்து ஆடமாட்டாளா?
ஸ்டெபிகிராபு சாய்னாபோல ஆகமாட்டாளா?
ஆடவேணும் பாடவேணும் நிகராய் ஆணும் பெண்ணும்
பிஞ்சு நெஞ்சிலே விதைக்க வேணும் சமத்துவத்தின் எண்ணம்... (அச்சம்...  

புகுந்தவீடு செல்பவளாம்...
புருஷனோடு வாழ்பவளாம்...
பெண்ணின்  கல்விச் செலவினிலே
கணக்குப் பார்ப்பார் வீட்டினிலே
பெண்ணும் படித்து உழைத்து பொருளை ஈட்டமாட்டாளா?
பெற்றவரைத்தான் பிற்காலத்தில் காக்க மாட்டாளா?
படிக்கவேணும்  சிறக்கவேணும் நிகராய் ஆணும் பெண்ணும்
பிஞ்சு நெஞ்சிலே விதைக்க வேணும் சமத்துவத்தின் எண்ணம்... (அச்சம்...

குடும்ப வாரிசும் ஆண்தானாம் 
குலப் பெருமை சொல்வதும் ஆண்தானாம்
பழங்கதை சாத்திரம் பலபேசி
தள்ளி வைக்கிறார் பெண்குலத்தை
பெண்ணும் இங்கே குலத்தின் பெருமை பேசமாட்டாளா?
முத்துலட்சுமி வள்ளியம்மைபோல் ஆகமாட்டாளா?
வாழவேணும் வெல்லவேணும் நிகராய் ஆணும் பெண்ணும்
பிஞ்சு நெஞ்சிலே விதைக்க வேணும் சமத்துவத்தின் எண்ணம்... (அச்சம்..

       (பாடல் - பிரளயன்    இசை - 'கரிசல்' கிருஷ்ணசாமி – தமுஎச கலைஞர்கள்)
----------------------------------------------------------------------------------------------------------
கடந்த 08-03-2013 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி சுந்தரவல்லி இஆப அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெண்அலுவலர்களுக்காக, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர்கள் திரு.முருகன்,  திரு இளங்கோ, திரு ராம்குமார் ஏற்பாட்டில் நடந்த கருத்தரங்கிலும் பாடினேன்
------------------------------------------------------------------------------------------------------------------------------

புதுக்குரல் 

     தானா னானா தனனனா         தானா னானா தனனனா 
     தானா னானா தனனனா         தானா னானா தனனனா

கேட்குது கேட்குது புதுக்குரல் பெண்ணின் உரிமைப் போர்க்குரல்
நாடும் வீடும் குடும்பமும் நலமாய் ஆக்கிட எழும் குரல்          (தானா னா

கேட்குது கேட்குது புதுக்குரல் விண்ணையும் மீறிடும் பெண்குரல்
பெண்ணைச் சிறையில் பூட்டிய கரங்களை எரிக்கும் தீக்குரல்     (தானா...

கால காலமாய் அடிமையாய் கணவன் சொல்வதே வேதமாய்
புதைந்து கிடந்தது பெண்குரல் புயலாய் எழுகுது புதுக்குரல் (தானா...

பெண்ணை அடிமை ஆக்கிய பழைய சமூகம் மாறுது
ஆணும் பெண்ணும் சமமெனும் அழகிய குரலிங்கு ஒலிக்குது     (தானா...

ஓவ்வொரு குரலாய் எழுகுது ஒன்றாய்ச் சேர்ந்தே முழங்குது
புதிய யுகத்தைப் படைத்திட புதுக்குரல் உங்களை அழைக்குது (தானா..
------------------------------------------------------------------------------------------------------------------------
( நன்றி திருமதி ஷீலாராணி சுங்கத் இ.ஆ.ப. ஆணையர்-த.நா.அரசு தாய்சேய் நலம் 'நம் நலமறியகலைப்பயணம் - பயிற்சி முகாம் – நாள் -09-09-1999- 

பாடல்- : பிரளயன்ஆறுமுகம்நா.முத்துநிலவன், வெ.பா.ஆத்ரேயா கூட்டணி 

33 கருத்துகள்:

  1. ஆயிரம் வஞ்சனை பெண்ணுக்கு அது
    தெரிவதில்லை நம்கண்ணுக்கு

    ஆண்கள் குலப் பெருமை எப்படி பேச முடியும். பெண் குலப் பெருமையை பெற்றெடுக்காமல்.
    நல்ல பதிவு நன்றி ! வாழ்த்துக்கள்....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பெருமையை கவிஞரும் நாடகவியலாளருமான நண்பர் பிரளயனுக்கு சமர்ப்பிக்கிறேன். நன்றி.

      நீக்கு
  2. நல்ல பாடல்கள் .வாழ்த்து அட்டை நல்ல விசயம்,வாழ்த்துக்கள் தோழர் ,தோழி மல்லிகா அவர்களுக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமது பெண்களுக்கான கூட்டங்களில் நான் எப்போதும் பாடுவதுதான்... என் துணைவியார் கடந்த ஆண்டு “சோ(சா)தனைப் பெண்கள்“ எனும் சிறு வெளியீட்டை மார்ச் எட்டு அன்று கொண்டுவந்து அனைவருக்கும் வழங்கினார். இந்த ஆண்டு வாழ்த்து அட்டை...நன்றி தோழரே! (தோழி என்பதில் கூட எனக்கு உடன்பாடில்லை, தோழமையில் என்ன ஆண்பால் பெண்பால்? எனவேதான் தோழர்!)

      நீக்கு
  3. மங்கயர்மலரின் ஒரு கார்ட்டூன் பெண்ணொருத்தி ராகெட்டில் விண்வெளி செல்கிறாள் ,இதில் என்ன வியப்பு என்கிறீர்களா?
    அப்போ கூட முதுகில் தன் குழந்தையை பழங்குடியின பெண் போல் சுமந்து செல்கிறாள். ஆகா எவ்வளோ முக்கியமான பனி என்றாலும் ,சந்திரனுக்கே சென்றாலும் அவள் சமலறை முதற்கொண்டு அவள் சுமந்து செல்லத்தான் வேண்டும் !!!! அது போன்ற பதிவுகள் தான் கொதிக்கும் உள்ளத்தை குளிர்விக்கின்றன !! அண்ணி வடிவமைத்த வாழ்த்து அட்டை அட்டகாசம் அண்ணா ! அண்ணியிடம் என் மகிழ்ச்சியை தெரிவுங்கள்,வாழ்த்தையும் !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிவியல் வளர வளர முற்போக்கு சிந்தனை வளராமல் போன அதிசயத்தைத் தனியே ஆய்வு செய்யணும்பா.. தொலைக்காட்சி போலும் அறிவியல் அதிசயத்தில் கூட அனைத்துவகை அடிமைத்தனத்தையும் வளர்க்கும் ஆதிக்கசூழ்ச்சியைத் தனியே ஆய்வு செய்ய வேண்டுமடா!.. “அண்ணியிடம் என் மகிழ்ச்சியை தெரிவுங்கள்,வாழ்த்தையும் !!“ அவசியம் தெரிவிப்பேன் பா.

      நீக்கு
  4. நல்ல பாடல்கள்...

    வாழ்த்து அட்டை அருமை...

    அருமையான மகளிர்தின வாழ்த்து...

    பதிலளிநீக்கு
  5. அருமை ஐயா...

    சர்வதேச மகளின் தின நல்வாழ்த்துக்கள் - என்றும்...

    பதிலளிநீக்கு
  6. ஐயா!வாழ்த்து அட்டை அருமை.மிக சிறப்பான விழிப்புணர்வுப் பாடல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி முரளி அய்யா. என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்? அப்பப்ப வந்து எழுத்துமுகத்தக் காட்டுங்க சாமிகளே!

      நீக்கு
  7. மாதவம் செய்தவரே - மங்கையராய் பிறப்பர்!..
    அனைவர்க்கும் சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
  8. மிக்க நன்றி ஐயா! அருமையான பாடல்கள்.

    பதிலளிநீக்கு
  9. ஆழமான கருத்துடன் கூடிய
    அற்புதமான கவிதைகளை
    மகளிர் தின சிறப்புப் பதிவாகக் கொடுத்தது
    மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. ஐயா வணக்கம்!
    வாழ்த்து அட்டையில் இருக்கும் கவிதை உட்பட பாடல்கள் அனைத்தும் தானா தானா போட வைக்கிறது. மார்ச் எட்டு வெற்றி நடைபோடும் நமது சகோதரிகள் அனைவருக்கும் தங்கள் வலைத்தளம் மூலமாக சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அழகான பகிர்வுக்கு நன்றீங்க ஐயா..

    பதிலளிநீக்கு
  11. அருமையான பாடல்கள்......

    அனைவருக்கும் மனம் நிறைந்த மகளிர் தின நல்வாழ்த்துகள்.....

    பதிலளிநீக்கு
  12. தங்கள் பதிவின் மூலமாக பல பெண்ணுரிமைப் பாடல்களை அறிந்தேன். அருமையான பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா நன்றி. இன்னும் என் பாடல்கள் சில இருக்கின்றன. அப்பப்ப போடுவோம் என்றிருக்கிறேன்.

      நீக்கு
  13. ஐயா,மிக,மிக மிக...அருமை மனதைத்தொடும் வரிகள் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. தங்கள்
    பெண்ணுரிமைப் பாடல்களை
    வரவேற்கிறேன்
    சிறந்த பகிர்வு

    பதிலளிநீக்கு
  15. ஐயா,மிக மிக அருமை நன்றி

    பதிலளிநீக்கு
  16. அருமையான கவிதை ஐயா!!!! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  17. மிகவும் அருமையான பாடல்கள்! திரு பிரளயனுக்கு எங்கள் தலை தாழ்ந்த வணக்கங்கள்!

    தாங்கள் இதை இங்கு பகிர்ந்ததற்கும் மிக்க நன்றி! நாஅங்கள் என்ன ஷொல்ல் வேண்டும் என்று நினைத்தோமோ அதை சகோதரி மைதிலி கஸ்தூரிரங்கன் சொல்லிவிட்டார்!

    நன்றி! ஐயா!

    பதிலளிநீக்கு