நான் பார்த்த எளிமையான மக்களவை பெண் வேட்பாளர்


கடந்த எட்டாம்தேதி, மார்ச்-8, 2014 அன்று,
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூரில்
உலக மகளிர் தினக் கருத்தரங்கத்தில்
பேச அழைத்திருந்தார்கள்  போயிருந்தேன்.
அதில் எனக்கு முன்னால் பேசுவோராக 
தஞ்சை மாவட்ட மாதர்சங்க மாவட்டச் செயலர் எஸ்.தமிழ்ச்செல்வி  தஞ்சாவூர் மாவட்ட எழுத்தாளர் சங்க மாவட்டச் செயலர் களப்பிரன்  முதலான சிலரும் பேசுவதாகப் போட்டிருந்தார்கள்.


நான் கூட்டம் நடக்கும் இடத்திற்குப் போகும்போது,
மற்ற எல்லாரும் பேசிவிட்ட நிலையில்,
தமிழ்ச்செல்வி பேசிக்கொண்டிருந்தார்.

மார்ச்-8இன் மகத்தான் வரலாற்றை 
எளிமையாக விளக்கி, இன்றைய பெண்களின் நிலைகுறித்தும்
ஆவேசமாகப் பேசி முடித்தார்.

உண்மையிலேயே விவரமாகப் பேசினார்.
“நன்றாகப் பேசுகிறாரே!” என்று நினைத்தேன் 
அவரிடமும் என் பாராட்டுகளைச் சொன்னேன்.
 ----------------------------- 

பேசிவிட்டு வந்து பத்துப் பதினைந்து நாளாயிற்று.
மக்களவைத் தேர்தல் சூடுபிடித்துவிட்டது.
இப்போது செய்தித்தாள்களைப் பார்த்தால்...

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
தஞ்சாவூர்த் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் தமிழ்ச்செல்வி”

என்று போட்டிருந்தது!
அதிர்ந்து போனேன்! 
ஏன்... நெகிழ்ந்தும் ...மகிழ்ந்தும்   போனேன்!

எவ்வளவு எளிமையாக இருந்தார்...!
அதிகமான செய்திகளும் செயல்வேகமும் உள்ள யாருமே  
இப்படித்தான் எளிமையாகிவிடுவார்கள் என்று
கேள்விப்பட்டிருந்தேன், உ்ண்மை என்று கண்டு கொண்டேன்.
“பணியுமாம் என்றும் பெருமை“ - குறள்

ஏற்கெனவே பூதலூரில் ஊராட்சித் தலைவராக 
மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டுப் பணியாற்றிய 
அரசியல் அனுபவமும் இருப்பதாக அறிந்தேன்.

இவரைப்போன்றவர்கள் 
மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்வு பெறவேண்டும்.
 நெஞ்சார வாழ்த்துகிறேன். 

வெற்றி பெற்று மக்கள் ப ணி தொடர
உளப்பூர்வமான வாழ்த்துகள் சகோதரீ!
 ----------------------   000000  ------------------------   

28 கருத்துகள்:

  1. வணக்கம் கவிஞரே!
    “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
    தஞ்சாவூர்த் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் தமிழ்ச்செல்வி”

    என்று போட்டிருந்தது!
    நான் அதிர்ந்து போனேன்!
    ஏன்... நெகிழ்ந்தும் ...மகிழ்ந்தும் போனேன்!
    இவரைப்போன்றவர்கள்
    மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்வு பெறவேண்டும்.
    என நெஞ்சார வாழ்த்துகிறேன்.

    மற்றவர்கள் வளர்ச்சியில் பொறாமை கொண்டு தூற்றும் இவ்வுலகில்
    போற்றும் உள்ளம் கண்டு நெகிழ்ந்து தான் போனேன்.
    மகத்தான எண்ணங்கள் மனதோடு வாழ
    மண்ணும் பொன்னாகும் மாண்புற வழி செய்யும் !
    வாழ்த்துக்கள் சகோதரரே!
    தமிழ்செல்விக்கும் கிட்டட்டும் வெற்றிகள் தொடர்ந்து ! என மனமார வாழ்த்துகிறேன்...!

    பதிலளிநீக்கு
  2. மிகவும் உண்மை ஐயா! ஆற்றல் பெற்றவர்கள் அமைதியை இருக்கிறார்கள். அல்லாதோர்தான் அரசியலில் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். மக்கள் அதிரடி ஆர்பாட்டத்திற்கு மயங்கிக் கிடப்பது என்று மாறுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்வு நிரந்தரமாகாது!
      விளக்கில்லாமல் ஏற்றிய ஒளியால் வெளிச்சம் கிடைக்காது!-நம் கவியரசு முன்னமே சொல்லியிரு்ககிறான், பார்க்கலாம். நன்றி முரளி அய்யா.

      நீக்கு
  3. தமிழ்ச்செல்வி அவர்கள் வெற்றி பெற்று, மக்களுக்கு சேவை செய்ய வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வலைச்சித்தரே! தங்கள் பக்கமும் எளிமையான நலலவர் எவரேனும் இருக்கிறார்களா என்று கவனித்து வாருங்கள்.

      நீக்கு
  4. தமிழ்ச்செல்வி அவர்களுக்கு வெற்றி கிடைக்க எனது வாழ்த்துகளும்....

    பதிலளிநீக்கு
  5. தமிழ்ச் செல்வி வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் தொகுதிதான் அய்யா. நீங்கள், நேரிலேயே பார்த்து, வாழத்தும் அளிக்கலாம், வாக்கும் அளிக்கலாம். நன்றி

      நீக்கு
  6. தோழரே தமிழ்ச்செல்வி வெற்றி பெருவார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவர்கள் வெற்றிபெற வேண்டும் என்று நல்லவர்கள் மட்டும நினைத்தால் போதாது நண்பரே! “எல்லாரும்“ நினைக்கணும்.

      நீக்கு
  7. தமிழ்ச் செல்வி வெற்றி பெற வாழ்த்துகிறேன்! என்றாலும் ,கட்சிக் கட்டுப்பாடு என்று சொல்லி ,அதன் காரணமாக நேர்மைக்குக்கூட , குரல்
    கொடுக்க இயலவில்லையே! நன்றி ! முத்து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமைப்பு என்று வந்துவிட்டால், இந்தச்சிக்கல் எல்லா இடத்திலும் உண்டுதான் அய்யா. தனி நபராய் நிற்பதைவிட, இயக்கமாகச் செய்யும்போது பலமும் கூடும், சில கட்டுப்பாடும் இருக்கத்தானே செய்யும். கட்டற்ற சுதந்திரம் என்று ஒன்று எங்குமே இல்லையே? தங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. வணக்கம்.

      நீக்கு
  8. வணக்கம் ஐயா
    நல்லதொரு மனிதரை அடையாளப்படுத்தும் விதமாக அமைந்த அழகான பதிவு. உண்மையில் நிறைகுடம் அமைதியாக தான் இருக்கும். சின்னதொரு செயலுக்கே சாதனைகள் செய்தது போல் விளம்பரப்படுத்திக் கொள்ளும் இவ்வுலகில் சகோதரி தமிழ்ச்செல்வி அவர்களின் பண்புகள் மிகவும் போற்றத்தக்கது. இவர்கள் போன்றோரின் கைகளில் வெற்றிகள் குவியட்டும். அரசியல் அப்பழுக்கற்றதாக மாறட்டும். நல்லவர்கள் மற்றும் திறமையாளர்கள் எங்கிருந்தாலும் வலியச்சென்று பாராட்டும் தங்கள் நற்குணத்திற்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஐயா. உண்மையில் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. பகிர்வுக்கு நன்றிகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “இவர்கள் போன்றோரின் கைகளில் வெற்றிகள் குவியட்டும்“ தங்கள் பகுதியிலும் தொகுதியிலும் இவர்களைப் போன்றோர் இருக்கிறார்களா எ்னறு தேடுங்கள் பாண்டியன். இந்த “அன்னத்தின்“ தேடல் போலும் சின்னத்தின் தேடல் எல்லாருக்கும் வந்துவிட்டால், என்ன பிரச்சினை இனி?

      நீக்கு
  9. தமிழ்ச்செல்வி அவர்களின் எளிமையையும் முந்தைய செயல் திறனையும் உணர்ந்து மக்கள் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
    அவரது வெற்றிக்கு நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே, தங்கள் பகுதியிலும் தொகுதியிலும் இவர்களைப் போன்றோர் இருக்கிறார்களா எ்னறு தேடுங்கள்

      நீக்கு
  10. இவர்களை போன்றவர்கள் வெற்றிபெற வேண்டும்! மனதார வாழ்த்துகிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சுரேஷ், தங்கள் பகுதியிலும் தொகுதியிலும் இவர்களைப் போன்றோர் இருக்கிறார்களா எ்னறு தேடுங்கள்

      நீக்கு
  11. ஐயா,வணக்கம், நல்லவர்கள் வெற்றிபெறவேண்டும், நாடகம் போடுவோர்
    நசுக்கப்படவேண்டும்.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “உலகமே ஒரு நாடக மேடை நாமெல்லாம் நடிகர்கள்“ அய்யோ சகோதரீ, நான சொல்லல.. நம்ம ஷேக்ஸ்பியரு சொன்னது. என்ன சிக்கல், வில்லன் யார், கதாநாயகன் யாருன்னு கடைசியிலதான் தெரியுது... அதுக்குள்ள நம்ம கதையே முடிஞ்சுபோயிருது!

      நீக்கு
  12. பொதுவுடைமைக் கட்சியின் அடிநாதமே, எளிமையான வாழ்வுதானே! தமிழ்ச்செல்விக்கு வாய்த்திருக்கும் வாய்ப்பு, ஒரு துன்பமான இன்பமே. இரண்டு முரட்டு விலங்குகளுக்கு இடையே அகப்பட்ட புள்ளிமானாக இன்றைய அரசியல் களத்தில் அவர் தோன்றுகிறார். அவர் வெற்றியடைய வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புறாக்களெல்லாம் ஒன்று சேர்ந்தால், வலைகூட பிடுங்கப்படலாம். “காலம் புரண்டு படுக்கும், நம் கண்ணீர்த் துளியைத் துடைக்கும்“ கவிஞர் வைரமுத்து சொன்னது அய்யா, நன்றி. வணக்கம்.

      நீக்கு
  13. தமிழ் செல்வி அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா உங்க ஊருதான், ஞாபகமா வாழ்த்துகளை வழங்கியது போல வாக்குகளையும் வழங்கலாம்.

      நீக்கு
  14. தங்களின் சிறந்த பகிர்வை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு