“நக்குற நாய்க்கு செக்கு என்ன? சிவலிங்கம் என்ன?“

கற்பழிப்புக்குக் காரணம் பெண்களின் ஆடைகள்தானாம்! - பிரேசில் நாட்டுக் கண்டுபிடிப்பு!  
அட முட்டாள்களே!
ஒரு வலைப்பக்கதில் இந்தச் செய்தி பார்த்து, சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் தலையில் அடித்துக் கொண்டேன்.

இவருக்கு வாக்களியுங்கள்

“இந்தியருக்கு இப்போது
வாயெல்லாம் பல்
பல்லெல்லாம் சொத்தை”
ஆகிவிடாமல்
பார்த்துக்கொள்ள வேண்டும்.
(நன்றி கவிஞர் கந்தர்வன்)

“21-இ,சுடலை மாடன் தெரு,திருநெல்வேலி டவுன்”

(தி.க.சி. - 30 மார்ச் 1925 - 25 மார்ச் 2014)  
நமது 
இலக்கியத் திசைகாட்டி ,
தி.க.சி.  
காலமானார்! 

பேரும்புகழும் பெற்ற பெரும் எழுத்தாளாராயினும் சரி, “இன்றுதான் எழுதத் தொடங்கியிருக்கிறேன், எனது முதல் கவிதை இந்த இதழில் பிரசுமாகியிருக்கிறது அய்யா, உங்கள் கருத்தை எழுத வேண்டுகிறேன்“ என்று கடிதம் எழுதும் இளைய எழுத்தாளராக இருந்தாலும் சரி...  அடுத்த நாளே 
அவருக்கு ஒரு விமர்சனக் கடிதம் வரும்... 
அவர்தான் 
அஞ்சல் அட்டையில் 
தமிழ் வளர்த்த நம் தி.க.சி.

மரபுக்கவிதை எனும் மகாநதி வற்றிவிட்டதா?

பாரதிதாசன் 
மாறுவது மரபு
இல்லையேல்-
மாற்றுவது மரபு
-என்பது ஒரு பொதுவிதி. ஒன்றிலிருந்து இன்னொன்று, அதிலிருந்து அடுத்தொன்று என்பது உலக வளர்ச்சியின் அத்தனை துறை வகையிலுமே  பொருந்தக் கூடியதுதான்.
வானொலியின் பேரன்தானே வண்ணத் கொலைக்காட்சி? தொலைபேசியின் தொடர்ச்சிதானே தொலை-காண்பேசி?
இவை ஒவ்வொன்றின் உச்சப்பயன்  இருக்கும்போதே இடைப்பயனுக்கும்“ தேவை இருக்கத்தானே செய்கிறது?

தஞ்சைப் பெரிய கோவிலில் கட்டுமானப் பொறியியல் இல்லையா?


பொள்ளாச்சி PAP-தொழில் நுட்பக்கல்லூரி ஆண்டுவிழாவில் இளைய தலைமுறையிடம் நான் கேட்ட கேள்வி இது.. (தொடர்ந்து படிக்க)

சமூக முன்னேற்றத்திற்கான ஆய்வுகள்தான் தேவை


முனைவர் சு.மாதவனுக்குப் பாராட்டு. த.மு.எ.ச. கிளை நிர்வாகிகள் இளங்கோ, சுவாதி, மாவட்டச் செயலர் ரமா,  முனைவர் விமலாமாதவன்,செம்மொழி, செங்கதிர், செந்நிலா.

புதுக்கோட்டைமார்ச் 24-
                    எந்தத் துறைக்கான ஆய்வாக இருந்தாலும் அது சமூகத்திற்கான தேவையை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்றார் கவிஞர் நா.முத்துநிலவன்.

நான் பார்த்த எளிமையான மக்களவை பெண் வேட்பாளர்


கடந்த எட்டாம்தேதி, மார்ச்-8, 2014 அன்று,
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூரில்
உலக மகளிர் தினக் கருத்தரங்கத்தில்
பேச அழைத்திருந்தார்கள்  போயிருந்தேன்.
அதில் எனக்கு முன்னால் பேசுவோராக 
தஞ்சை மாவட்ட மாதர்சங்க மாவட்டச் செயலர் எஸ்.தமிழ்ச்செல்வி  தஞ்சாவூர் மாவட்ட எழுத்தாளர் சங்க மாவட்டச் செயலர் களப்பிரன்  முதலான சிலரும் பேசுவதாகப் போட்டிருந்தார்கள்.

ஓட்டுப் போடப் போறீங்களா? ஒரு நிமிடம்!

வசனம் உள்ளே இருக்கு... நன்றி அமிதாப்ஜி.
(தினமணி  நாளிதழ் –தலையங்கப் பக்கத்தில் வெளிவந்த எனது கட்டுரை
தலைவரகள் எது செய்தாலும் உடனடியாகத் தட்டிக் கேட்க முடியாத மக்கள் அது தவறா சரியா என்பதை உணர்த்தும் ஒரே வழி தேர்தல்தான்! இதை, நன்குணர்ந்தவன் நமது பாமர இந்தியன்.

கம்பனும் காரல்மார்க்சும் - நா.முத்துநிலவன்



காரல் மார்க்ஸ் – 
உலக அரசியல் வரலாற்றில் மறுக்க முடியாத மாமேதை! 
கம்பன் – 
தமிழ் இலக்கிய வரலாற்றில் மறைக்க முடியாத மாகவி!

உலகூட்டும் ஒரு மாகடலும்
உள்ளங் குளிர்விக்கும் ஒரு மகாநதியும் 
சந்திக்கும்  முகத்துவாரத்தில் 
முளைத் திருக்கும் சிறுநாணல்
இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கச் 
சிந்திக்கும் முயற்சிதான் இந்தச் சிறு கட்டுரை.


அம்மா கொடுத்த இலவச கிரைண்டருக்கு அநியாய லக்கேஜ் கட்டணம்!


பொள்ளாச்சி, கூடலூர் நிகழ்ச்சிகள் முடித்து, திருப்பூர் வழி,   காரைக்குடி அரசுப் பேருந்தில்  நேற்றிரவு புதுக்கோட்டை வந்தேன், ஒருவழியாகி.


திருப்பூரில் ஏறிய ஓர் இளைஞன் என் காலடியில் ஒரு சிறு மூட்டையைத் தள்ளிவிட்டான். அருகில் அமர்ந்த அவன், தன் காலுக் கடியிலும் துணி, வேறுசில வீட்டுப் பயன்பாட்டுக்கான பொருள் கொண்ட ஒரு மூட்டையை வைத்துக்கொண்டான்.  தினக்கூலித் தொழிலாளி போலத் தெரிந்தது.  உடனே தூங்கியும் விட்டான்.  என்தோள் வலித்தது. பாவம்.. தாங்கிக்கொண்டேன்.  தமிழ்ச்செல்வன்  கட்டுரை நினைவில் வந்தது. அவன் உடல் உழைப்பாளி, என் தூக்கத்தை அவனுக்காகத் தவணைகளில் வைத்துக்கொண்டேன்.. தோள்வலியும், இரண்டு இரவுகளாய்த் தூங்காத என் கண் எரிச்சலும் குறைந்தது போலிருந்தது!

ஆபிரகாம் லிங்கன் தன் மகனையும் சமூகத்தையும் சமமாக நேசித்தவர்... அவரது கடிதம் கேளுங்கள்.




பெரியவுங்க
எப்பவும்
பெரியவுங்கதான்!

நான் என் மகளுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அது பெரும்பாலும் அவளது கல்வியைப் பற்றியதாக இருந்தது.

பள்ளி, கல்லூரியைத் தாண்டியும் கல்வி எப்படி விரிந்து கிடக்கிறது என்று பிரமாதமாக எழுதிவிட்டதாக நினைத்தேன்.

பசுவிடம் பால்குடிக்கும் குழந்தை - புகைப்படக் கவிதை


சில கவிதைகள் மனசில் நிற்க, 
கருத்தை விஞ்சிய 
அதன் சொல்லழகே காரணமாக இருக்கும்.

சொல்லே இல்லாமல் கவிதை இருக்குமா?

இருக்குமே  என்கிறார் 
இந்தப் புகைப்படக் கலைஞர்.

புகைப்படம் எடுத்தவரைத் தெரியவில்லை.
நம் “செம்புலப்பெயல்நீரார்” போல
அவரது படைப்பால் நிற்கிறார்.

எடுத்த இடத்தை மட்டும் இட்டிருக்கிறேன்
பார்த்து மகிழ்ந்து
கருத்துரைப்பதுடன்,
இந்த 
நண்பர்களையும்
தொடரச் சொல்லுங்கள்



அய்யோ யாரும் கிட்ட வராதிங்க
என் குழந்தை பால்குடிக்குது!

மாடா இருந்தா என்ன
மனுஷியா இருந்தா என்ன
தாயி தாயிதான்.
---------------------------------------------------------- 

கம்பனிடம் ஸ்ரீராமன் கேள்வி

1)            கம்பா! கவியரசே!  என்
                                    கதையெழுதித் தந்தவனே!
உன்பாடு தேவலப்பா! - இப்ப
                                    என்பாடு திண்டாட்டம்!

மாாாா....ர்ச்..! எட்டு - வாழ்த்துகள்

Inter National Womens' day -2014,  wall poster by M.Mallika

சர்வதேசப் பெண்கள் தின வாழ்த்துகள்!
இத்துடன் 
என் துணைவியார் தனது தோழியர்க்காகத் தயாரித்த
சர்வதேசப் பெண்கள் தின வாழ்த்து அட்டையை 
நம் வலைப்பக்க சகோதரியர் அனைவர்க்கும் 
வழங்கி மகிழ்கிறேன்.. வாழ்த்துகள்... 

நம் பிள்ளைகளையும் சமூகத்தையும்
நல்ல வழியில் வளர்ப்போம்! வளர்வோம்!

“மங்கையராகப் பிறப்பதற்கே - நல்ல
மாதவம் செய்திட வேண்டுமம்மா“ - கவிமணி
“மாதர்தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்“ - பாரதி.

மேலும் பெண்ணுரிமைப் பாடல்களைப் படிக்க வருக!...

நடிகையின் நிர்வாணத் தேர்தல் விளம்பரம் - சகோதரிகள் மன்னிக்க


காதலர்தினத்தைக் கலாச்சாரக் கேடு என்றவர்கள்-இப்போது செய்துவரும் இந்த      யூ-ட்யூப் விளம்பரத்தைப் பாருங்கள்... (சகோதரிகள் மன்னிக்க வேண்டும். இந்தப் படம் ஒன்றுதான் நம் வலைப் பக்கத்தில் போடுமளவுக்கு “நாகரிகமா” இருக்கு) மற்ற படங்கள் இணைப்பில் உள்ள யூ-ட்யூபில்...

நாங்களும் தேர்தல் பிரச்சாரம் பண்ணுவம்ல?


தும்பைவிட்டு வாலைப் பிடிக்கலாமா?
தேர்தல் பாடல் நா.முத்து நிலவன்
------------------------------- 
தும்பைவிட்டு வாலைப் பிடிக்கலாமா? -ஏ மாமா
ஓட்டுப்போட நீங்க மறக்கலாமா?

நாம ஓட்டுப் போட்டுத் தானா
நாடு திருந்தப் போகுது?ன்னு
அலட்சியமா நீங்க இருக்கக் கூடாது மாமா!  ஆட்சி
அமைவதிலே உரிமையத்தான் விட்டுக் குடுக்க லாமா?
                              (தும்பை விட்டு)

என் தோல் வெள்ளையாக இருந்திருந்தால்…


பிரபல  கால்பந்துவீரர் ஒருவரின் ஆதங்கம்!
 மார்ட்டின் லூதர் கிங், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, பரக் ஒபாமா ஆகியோர்க்கு சமர்ப்பணம் செய்து செய்தியை அப்படியே கீழே தந்திருக்கிறேன்.

உமாமகேஸ்வரி ஏன் கொலைசெய்யப் பட்டார்?


பொறியாளர் உமா மகேஸ்வரி



சிதைந்து 
நாறிக்கிடந்தது    
உமாஎனும் பெண்ணல்ல,  
அழுகிப்போன 
நம் சமூகம்தான்! 

சேலம், ஆத்தூர் ஜோதி நகர் வரதராஜ புரம் பாலசுப்பிரமணி, ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் மகள் உமாமகேஸ்வரி(23)

'தமக்காகவும் பொதுக்கோரிக்கை களுக்காகவும் போராட பெண்கள் முன்வர வேண்டும்'

   பெண் ஊழியர்கள் பேரவையில்
   கவிஞர் நா.முத்துநிலவன் பேச்சு
மேடையில் (இடமிருந்து) அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர்கள்
மா.ஜோஷி, கி.ஜெயபாலன், சி.கோவிந்தசாமியுடன்
மாவட்ட சமூக நல அலுவலர் வி.லலிதா எம்.வேலுமணி
மற்றும் பெண்ஊழியர் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்கள் உள்ளனர்.

----------------------------------------------------

பெண்களுக்கான உரிமைகள் தானாக வந்து சேராது அவர்கள். தடைகளை உடைத்தெறிந்து  போராடுவதால் மட்டுமே  தமக்கான கோரிக்கைகளை மட்டுமல்ல சமூகத்தின் பொதுவான கோரிக்கைகளையும்  வென்றெடுக்க முடியும் என்றார் கவிஞர் நா.முத்துநிலவன்.