(தமிழகத்து ஔவை முதல் ஈழத்து அவ்வை வரை)
கவிதை எழுதும் ஆண், பெண் இருவரையும் குறிக்க, 'கவிஞர்' என்னும் பொதுவான ஒரு சொல் இருக்கும் போது, 'பெண்கவி' என்று தனியாகக் குறிக்க வேண்டுமா?' என்று நினைக்கலாம். 'எல்லாமே ஆண்களுக்காக' என்றாகிப்போன உலகில், 'பெண்'எனும் அடையாளத்தை, தற்காலிகமாகச் சேர்த்தே எழுதவேண்டியுள்ளது. எல்லாம் பொது என்றாகும் ஒரு பொற்காலம் வரும் வரை, தற்காலிகமான இந்தத் தனிஅடையாளம் தவறல்ல
நமது பழந்தமிழ் இலக்கியக் கருவூலமாம் சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற பெண்புலவர்கள் 30 பேர். இவர்களில், அதிகமான(59)பாடல்களை எழுதியவர் ஔவையார் என்பதில் ஒன்றும் பெருமையில்லை, ஔவையார் எழுதியவற்றிலும் அதிகமாக இடம்பெற்றது புறப்பொருளே என்பதுதான் வியப்பும் மகிழ்ச்சியும் ஊட்டுவதாகும்.அவர் எழுதிய புறநானூறு மட்டுமே 33! அவரே, அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் இடையே நிகழவிருந்த போரைத் தடுத்து நிறுத்துகின்ற அளவுக்கு சொல்வாக்கும், செல்வாக்கும் மிகுந்தவராய் இருந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதே. அந்த அளவுக்கு வெளிப்படையான அரசியல் ஈடுபாடு கொண்டிருந்த பிற்காலப் பெண் 'புலவர்'கள் யாரையும் காணமுடியவில்லை.
கவிஞர் இளம்பிறை |

கவிஞர் குட்டிரேவதி |

பக்தியிலும், காதலிலும் அழியாப்புகழ்பெற்ற பெண்கள் தமிழிலும் உண்டு. ஆயினும், அரசியலில் சனநாயகம் மலர்வதும், அரசியலில் பெண்கள் ஈடுபடுவதும் ஒன்றுக்கொன்று
தொடர்பு --டையதாக இருப்பதால், இவை
ஒன்றைஒன்று வளர்த்தெடுத்து இருபதாம் நூற்றாண்டில்தான் இரண்டுமே வளரமுடிந்தது.
ஔவையாரும் சரி, அதற்குப்பின் வந்த பெண்புலவர்களும் சரி, பெண்களுக்காகப் பாடியதில் முற்போக்குக்
கருத்துக்கள் மிகவும் குறைவே. இன்னும் சொன்னால் – இருபத்தோராம் நூற்றாண்டுவரையிலும்
- ஆண்புலவர்கள் பாடிய அளவுக்குக் கூட பெண்கள் பெண்ணுரிமைக் கருத்துகளைப்
பாடிவிடவில்லை
"தையல்சொல் கேளேல்" என்றவர் ஔவை! நல்லவேளையாக அந்தத் தையலின்
அந்தச் சொல்லைமட்டும் கேளாமல், அதற்கு
மாறாக "தையலை உயர்வு செய்" என்றவன் பாரதி!. ஆயினும், பல பத்து நூற்றாண்டாகப் படைக்கப்பட்டுவரும்
இலக்கியங்களைப்
படைத்தவர்கள் பெரும்பாலும்
ஆண்களே என்பதால்,
மனிதசமூகத்திற்குச்
சொல்வதாக அமைந்த பொதுவான நியாயங்கள் (Common justice to common gender) கூட பெரும்பாலும் ஆண்களுக்கான நியாயங்களாகவே
இருந்ததில் வியப்பில்லை – இதற்கு
வள்ளுவரும் விதிவிலக்கல்ல!