ஒருசுங்கச் சாவடிக்குக் கடத்தல் பற்றித் தகவல் வந்துச்சாம். வந்தவண்டிகளை யெல்லாம் நிறுத்தி நிறுத்திச் சோதனை செஞ்சும் ஒன்னும் கிடைக்கலியாம். கடைசியில பாத்தா.. கடத்தப்பட்டதே அந்த வண்டிகள்தானாம்! அதுமாதிரி... கணினிப் பயிற்சி பற்றியே எல்லாம் பேசுறீங்களே? கவிதைப் பயிற்சி தரவேணாமா? எனும் கேள்விக்கு இந்தப்பதிவு சமர்ப்பணம் - நா.மு.
சிவகங்கை மன்னர்துரைசிங்கம் அரசுக் கலைக்கல்லூரியின் தமிழாய்வுத் துறையின் சார்பாக பாரதி விழா கொண்டாடப் பட்டது. காலை 10.00 மணி யளவில் மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழாவிற்குக் கல்லூரி முதல்வர் முனைவர் மெ. பன்னீர் செல்வம் அவர்கள் தலைமை தாங்கினார்.
திருமதி தமிழரசி அவர்கள் வரவேற்புரையாற்றினார். தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி புகழ் திரு தேவகோட்டை ராமநாதன் அவர்கள் பாரதியின் படைப்புகள் குறித்துப் பேசினார். திருமதி மலர்க்கொடி அவர்கள் நன்றியுரையாற்ற காலை நிகழ்வு நிறைவுபெற்றது.
மதியம் தமிழாய்வுத் துறையின் இரண்டாம் சுழற்சி மாணவர்கள் பங்குபெற இரண்டாம் நிகழ்ச்சி தொடங்கியது. முனைவர் அ.பாண்டி அவர்கள் வரவேற்புரையாற்ற மீளவும் திரு தேவகோட்டை இராமநாதன் அவர்கள் பாரதியும் மற்ற கவிஞர்கள் குறித்தும் அவர்களைப் பாரதியோடு ஒப்பிட்டும் பேசினார்.
கவிதைப் பயிலரங்கம்
கவிதைப் பயிலரங்கம் திரு புதுக்கோட்டை நா.முத்துநிலவன் அவர்களால் தமிழாய்வுத் துறையில் நடத்தப் பெற்றது. இதற்குப் பேராசிரியர் சிதம்பரம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
காலை 11 மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சியில் கவிஞர் முத்துநிலவன் கவிதைகள் குறித்தும், எவை கவிதையாகும், எவை ஆகாது என்பது குறித்தும் பேசினார்.
இதன்பின்
சில தலைப்புகள் -
(1)மழை,
(2)பெண்பாடும்-பண்பாடும்,
(3)ஏழாம் அறிவு
இதனுள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டுச் சிறப்புடன் கவிதை வரைந்தனர். அக்கவிதைகளில் சில பின்வருமாறு....







