பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா

'
“பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா! பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா!!“

இன்று சர்வதேசப் பெண்கள் தினம்.

வலையுலகச் சகோதரிகள் அனைவர்க்கும் 
என் இனிய நல்வாழ்த்துகள்..

தமிழின் நம்பிக்கையளிக்கும் பெண் படைப்பாளிகளில் ஒருவராக நான் மதிக்கும் என் தங்கை மைதிலி கஸ்தூரிரெங்கன், என்னையும் மதித்து, ஒரு தொடர்பதிவை இட்டிருக்கிறார். 
எனவேதான் இந்தப் பதிவு -
இன்று ஒருநாளை மட்டுமே பெண்கள் தினமாகவும், மற்றநாளெல்லாம் ஆண்களின் தினமாகவும் நினைக்கப்படுவதை நான் விரும்பவில்லை. எனினும் உலகம் போற்றும் நாளை நான் மறக்கவும் விரும்பவில்லை. எனவேதான், அவ்வப்போது நான் எழுதிவரும் கட்டுரை, கவிதைகளில் பெண்ணுரிமை தொடர்பான சில கட்டுரைகளை இங்கு நம் வாசகர்களின் பார்வைக்குக் கொண்டு வந்து தருகிறேன் –என் தங்கை மைதிலிக்காக...

முதலில் அவரது கட்டுரையைப் படித்துவிட வேண்டுகிறேன்-
பெண்மையை நான் மதிக்கிறேன் 

http://makizhnirai.blogspot.com/2015/03/i-respect-women.html


இனி, சர்வதேசப் பெண்கள் தின வரலாறு பற்றிய தங்கை கிரேஸ் பிரதிபா அவர்களின் கட்டுரையை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும் –

உலக மகளிர் தின வரலாறு

http://thaenmaduratamil.blogspot.com/2015/03/blog-post_7.html

(மேற்காணும் கட்டுரையைப் படித்தால்,
இந்த எனது பதிவின் எழுத்து வண்ணம் பற்றிப் புரியும்) 

மேற்கண்ட இரண்டு படைப்புகளையும் அவரவர் தளங்களிலும், வலைச்சரத்திலும் ஏற்கெனவே படித்தவர்கள், பெண்களைப் பற்றிய எனது படைப்புகளைப் பார்வையிட வேண்டுகிறேன் 

இவை ஒருசிலவே, எனது படைப்புகளில் அவ்வப்போது பெண்ணியக் கவலை வந்துகொண்டே இருக்கும், பெண்ணடிமை வரலாற்றை ஒரு 100கண்ணிகள் கொண்ட சிறு கவிதைத் தொடராக “ஒரு காதல் கடிதம்“ -1977இல்- எனது 21ஆம் வயதில் எழுதியவன் நான் அதை எனது வலையிலும் படித்திருக்கலாம்.

எனது சில பெண்ணியப் படைப்புகள்-

பெண்ணுரிமை என்பது ஆணுக்கு எதிரானதல்ல! சமமானது!http://valarumkavithai.blogspot.com/2014/07/blog-post.html              ---------------------------------

இன்றைய தமிழில் பெண்கவிகள்                            http://valarumkavithai.blogspot.com/2013/11/blog-post_30.html
---------------------------------

கண்ணகி பத்தினித் தெய்வம் ஆனதெப்படி?http://valarumkavithai.blogspot.com/2014/04/blog-post_27.html

-----------------------------------------
கற்பழிப்புக்குக் காரணம் பெண்களின் ஆடைகள்தானாம்! - பிரேசில் நாட்டுக் கண்டுபிடிப்பு!  அட முட்டாள்களே! http://valarumkavithai.blogspot.com/2014/03/blog-post_1219.html
------------------------------------------

'தமக்காகவும் பொதுக் கோரிக்கைகளுக்காகவும்               போராட பெண்கள் முன்வர வேண்டும்' http://valarumkavithai.blogspot.com/2014/03/blog-post.html 

------------------------------------------
நன்றி.

பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா – பாரதி.

11 கருத்துகள்:

  1. சிந்திக்க வேண்டிய நாளில்
    சிந்திக்க வைக்கும் பதிவுகள்

    பதிலளிநீக்கு
  2. இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள் - என்றும்...

    பதிலளிநீக்கு
  3. வாழ்க, வாழ்க. ஒரு பொருண்மை தொடர்பான பல அரிய செய்திகளையும், பதிவுகளையும் ஒட்டுமொத்தமாகப் பகிர்ந்தமைக்கு நன்றி. பல அரியனவற்றைத் தங்களது பதிவு மூலமாக அறியமுடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா. இந்துவில் அடுத்த படைப்பு எப்போது? உங்கள் விடாமுயற்சியிலும், அரியவற்றைத் தேடித்தருவதில் உ ங்கள் அசராத உழைப்பும் எனக்கு வாழ்க்கைக் கல்வியாகின்றன அய்யா

      நீக்கு
  4. அண்ணா , மனங்கனிந்த நன்றி -வாழ்த்துகளுக்கும், எழுத்து வண்ணத்திற்கும்.
    அன்புத் தோழி மைதிலியின் பதிவும் அருமை, அதனையும் என் பதிவையும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா .
    உங்கள் கட்டுரைகளைப் படித்திருப்பேன் என்று நினைக்கிறேன் , பிறகு மீண்டும் வருகிறேன் அண்ணா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிம்மா. இவ்வார வலைச்சர ஆசிரியர் பொறுப்பை மிகச் சிறப்பாக ஏற்றுச் செய்தமைக்கு வாழ்த்துகள் பா. இடையில் இந்த அண்ணனையும் நினைவில் வைத்து வந்தமைக்கும் நன்றி. உன் இலக்கியப் பயணங்களில் தொடர்வெற்றி பெற இனிய உலக மகளிர் தினத்தில் நெஞ்சார வாழ்த்துகிறேன்.

      நீக்கு
  5. மகளிர் தினத்திற்குப் பெருமை சேர்க்கும் பதிவு
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  6. இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள் நண்பரே
    தமிழ் மணம் அந்த 7 நாட்கள்

    பதிலளிநீக்கு
  7. அண்ணா சர்வதேச பெண்கள் தினத்திற்காக நானும் எழுதியிருக்கேன். நேரம் இருப்பின் வருகை தரவும். நேற்று வலைப்பக்கம் வரஇயலவில்லை ஆதலால் நேற்றே வருகை தர முடியவில்லை மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு