(இந்தியக் கிரிக்கெட் அணி வீரர்(?)கள்) |
22முட்டாள்கள் ஆட,
22லட்சம் முட்டாள்கள் பார்க்க..
இப்படிச் சொன்னவன் நானல்லன், பெர்னாட் ஷா எனும்
பேரறிஞன். வெய்யிலில் காய ஆசைப்படும் மேலைநாட்டவர், பெரும்பாலும் ஒருவரை ஒருவர்
தொட்டுவிடாமல், நெடுநேரம் வெய்யிலில் நிற்க விரும்பிக் கண்டுபிடித்த
விளையாட்டுத்தான் கிரிக்கெட். ( 100ஓவர், ஐந்துநாள் மேட்ச் எல்லாம்
இப்ப பழங்கதையாகிப் போனது) இருபது ஓவர் அவசர மேட்ச் காலமிது.
விளையாடட்டும்... நம் அரசுகளும், பன்னாட்டு
மூலதனக் கம்பெனிகள் இதைப் பயன்படுத்தி –ஸ்பான்சர்- வழங்க, இவர்கள் ஆடுவதும், மிகப்
பெரிய போர் போலவே இளைஞர் பலரும் இதில் தன் நேரத்தையே கழிப்பதும்.. இந்தியா போலும்
வளரும்(?) நாடுகளுக்கு நல்லதல்ல..
உழைப்பை நம்பி உருப்படப் பார்க்கும்
சிங்கப்பூர், ஜப்பான் முதலான முதலாளித்துவ நாடுகளிலோ, உழைத்தாலன்றி முன்னேற
முடியாது என்று சொல்லும் சீனா, சோவியத்து, கியூபா, வடகொரியா முதலான பொதுவுடைமை
நாடுகளிலோ இந்தக் கிரிக்கெட் சனியனுக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது என்பதைக்
கவனியுங்கள்..
இந்த விளையாட்டுக்குத் தரப்படும் முக்கியத்துவம், மற்ற இந்திய விளையாட்டுகள் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டதையும் இந்த விளையாட்டில் உள்ள அனைவரும் வெகுவிரைவில் பெரிய கோடீஸ்வரர் ஆகிவிடுவதையும் நினைத்தால்... இதன் வணிகப் பின்னணி புரியும். சச்சின் டெண்டுல்கர் மிகவும் திறமையான, பாராட்டத் தகுந்த கிரிக்கெட்டர்தான் அதிலொன்றும் சந்தேகமில்லை. அண்மையில் அவருக்கு பாரத ரத்னா விருது வரை பேசப்பட்ட பெருமை கிடைத்தது. ஆனால், அவருக்கு இந்த விளையாட்டாலும் இந்த விளையாட்டு தந்த விளம்பரத்தினால் இவர் செய்த விளம்பர வணிகத்தாலும் எத்தனை கோடி பணம் கிடைத்தது என்பதை சேர்த்து யோசித்தால்...? இவ்விளம்பரங்கள் பெரும்பாலும் பன்னாட்டு மூலதனக் குழுமங்களே என்பதற்கு... பாரத ரத்னா? என்ன ஒரு முரண்பாடு...!
தோனி, உலக
விளையாட்டு வீர்ர்களில் அதிக விளம்பர வருவாய் உள்ள வீர்ர் என்பது... நம்
இளைஞர்களின் நாயக பிம்பம் வேறு! (நா டோனி மாதிரி ஆகணும் என்று விளம்பரமும்
வருமளவிற்கு..)
தோற்றால் கூட ஒரு பந்து போடவோ, அடிக்கவோ இவர்களின் வருமானம் ஒருபந்திற்கு சுமார் 5000ரூபாய் என்றொரு கணக்குச் சொல்கிறது!.. அதாவது சராசரியாக ரூ.50,000 ஒரு ஆட்டத்திற்கு! வெற்றிபெற்றால் பலலட்சம் தோற்றால் சிலலட்சம் சம்பளம் எனில் இதில் தேசப்பற்று எங்கே வந்தது?
யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன்னாம்! இதில் ராஜமரியாதை வேறு!
யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன்னாம்! இதில் ராஜமரியாதை வேறு!
அவர்களின்
தனிப்பட்ட “மேட்ச் ஃபிக்சிங்“ ஆட்டங்கள் கிளப்புகளில் பெண்களுடன் ஆடும்
ஆட்டங்கள்... முகநூல்களில் சந்திசிரிக்கும் செய்திகள்...
இவையெல்லாம்
ஒருபுறமிருக்க,
கடந்த பல
ஆண்டுகளாக, இந்திய அளவில் 10,12ஆம் வகுப்பு அரசுத் தேர்வுகள் நடக்கும்போதுதான் இந்தப்
போட்டிகள் நடக்கின்றன.. என்ன கொடுமையிது!
அறிஞர் பெர்னார்டு ஷா |
என்வருத்தமெல்லாம், வயிறு புடைக்கத் தின்றுவிட்டு அது செரிப்பதற்காக அவர்களுக்கு இதமான வெயிலில் உட்கார்ந்து பாரத்து, ஆரவாரிக்கும் மேலை நாட்டவரின் இந்த வெய்யில் விளையாட்டை, பசியோடு இருக்கும் இளைஞர்கள் காசுகொடுத்து, வெயிலில் காய்ந்து, வீணாவதுதான்.
எனவேதான் அறிஞர் பெர்னாட்ஷா சொன்னார்...
மீண்டும் அன்பு கூர்ந்து தலைப்பைப் பார்க்க....
-----------------------------
George Bernard Shaw once said,
பி.கு(1)-ஒரு சிறிய திருத்தம் அவர் 1000 என்றதை நான் லட்சம் என்று மாற்றியிருக்கிறேன்.. அவர் சொன்னபின் நூறாண்டு போனதால்...“Cricket is a game played by 22 fools and watched by 22,000 fools”--http://www.srajaram.com/2006/12/cricket-is-stupid-game-waste-of-time.html --------------------------------------------
பி.கு.(2)-சரியாகச் சொன்னால் அவர்கள் முட்டாள்கள் அல்ல, இதை விளையாட்டு என்று பார்ப்பவர்களை முட்டாள்களாக மாற்றும் பெரீய்ய்ய்ய்ய “அறிவாலி“கள் என்பதனால், இவர்களை முட்டாள்கள் பட்டியலில்தான் சேர்க்கவேண்டும் எனவே, முட்டாள்கள் என்றேன். இதுவும் பெர்னாட்ஷாவிடம் கடன்வாங்கிய சிந்தனைதான். ஆகவே, திட்டுவதானால் என்னோடு, ஷாவையும் சேர்த்துத் திட்டலாம்.
-----------------------------------------------------------
சமூக சிந்தனைக்குறிய நல்ல விடயத்தை பதிவாக்கியமைக்கு முதற்க்கண் நன்றி இதற்க்கு தமிழ் மணம் இரண்டு போட விருப்பம் ஆனா முடியலை ஆகவே ஒண்ணு.
பதிலளிநீக்குஅடேயப்பா... என்ன வேகம்? பதிவைப் போட்டுவிட்டுத் தமிழ்மணத்தில் இணைக்கும் முன் உங்கள் பின்னூட்டம்...
நீக்குநன்றி நண்பா.. இரண்டு வாக்குப் போடணும்னா.. திருமங்கலம், ஸ்ரீரங்கம் ஃபார்முலாதான்.. உங்களுக்குப் பயிற்சி போதாது.. இப்படிப் பச்சப் புள்ளயா இருக்கீங்களேய்யா.. ம்..எப்படித்தான் பிழைக்கப்போறீங்களோ.போங்க. உண்டால் அம்ம இவ்வுலகம்
மிக நல்ல பகிர்வு ஐயா...
பதிலளிநீக்குதமிழ் மணம் வாக்கும் போட்டாச்சு....
இருப்பினும் கிரிக்கெட் பைத்தியம் பிடித்த முட்டாள்களில் நானும் ஓருவனே...
நானும் பார்ப்பேன் தான்... ஆனால் வெறிபிடித்தது போல அல்ல, அதோடு அவர்கள் வரும் விளம்பரங்களில் கோபம் எகிறும். (சச்சின், திராவிட், கங்குலி, டோனி, கோலி தவிர மற்றவர்களை இதுயார் இதுயார் என்று கேட்டு என் மகளிடம் திட்டு வாங்குவதும் எனக்குப் பிடிக்கும்..)
நீக்குமிகவும் அவசியமான, அருமையான பதிவு ஐயா! அறிவும், புத்தியும் இருக்கின்றவரும்/வனும், யதார்த்தவாதியும் இந்த மதி மயக்கும் விளையாட்டிலிருந்து தப்பித்துக் கொள்வான்!/வார்! வேறு என்ன சொல்ல....இந்த சமூகமே வியாபாரத்தையும், பணம் ஈட்டுவது எப்படி என்றும்தானே சிந்திக்கின்றது! ம்ம்ம் அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும், பெற்றோரும் இந்தச் சமூகத்தின் அங்கத்தினரே! அவர்கள் எவ்வழி அவ்வழிதான் குழந்தைகளும்!
பதிலளிநீக்குஆ..ங்..அதூ... சரியாகச் சொன்னீர்கள் அய்யா. “இந்த சமூகமே வியாபாரத்தையும், பணம் ஈட்டுவது எப்படி என்றும்தானே சிந்திக்கின்றது!“ விளையாட்டுத்தான் ஆனா விளையாட்டல்ல!
நீக்குதேர்வு நல்லா வெளங்கிடும்...
பதிலளிநீக்குநல்லாப் படிக்கும் மாணவர்களின் மனஓசையை நான் கேட்டிருக்கிறேன் நண்பரே! அதுதான்.. இந்தப் பிரதிபலிப்பும்..நன்றி
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
சபாஷ் சரியாக சொன்னீர்கள் ஐயா.. எல்லோரும் இந்த பதிவை படிப்பார்கள் என்றால்.. திருந்த வாய்ப்பு அதிகம் தலைப்பு அட்டகாசம்...த.ம6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தலைப்புப் பாராட்டு நம் தாத்தன் பெர்னார்டு ஷாவைத்தான் சேரும். அவரது பல கருத்துகள் பலருக்கும் வயிற்றில் புளியைக் கரைக்கும்... ஆமாம்.. தொலைக்காட்சி பற்றிய அவரது கருத்து - “இடியட் பாக்ஸ்“! பைபிளைப்பற்றிய அவரது கருத்து -“ எ பண்டில் ஆஃப் லைஸ்” அப்பறம் வேற நிறைய இருக்கு! அதையெல்லாம் சொல்லி எல்லாரையும் எதிரியாக்க நான் விரும்பவில்லை... உண்மையை உரைத்துச் சொன்னவர்!
நீக்குஅனைவரும் படிக்கவேண்டிய பதிவு. இதற்கான மனித சக்தி, நேரம் போன்றவற்றை சமூக நலனுக்காகப் பயன்படுத்தினால் மிகவும் பயனாக இருக்கும். படித்தபின் சிலராவது திருந்தட்டும்.
பதிலளிநீக்குபிரம்மாண்டமான தொலைக்காட்சி ஊடகங்களில் புயலாக வீசும் இவர்களை, பாலைவனத்தில் சிறு தூறல் போல விழும் நமது கட்டுரைகளா திருத்திவிடும்? எனக்கு அப்படியெல்லாம் எதிர்பார்ப்பு இல்லை அய்யா. எனினும் எழுதவேண்டிய செய்தி . அவ்வளவுதான். ஊடகம் இந்தச் சமூக அமைப்பின் பிரதிநிதி.. வலைப்பக்கம் இதில் ஜனநாயக அடையாளம் நன்றி அய்யா
நீக்குஇன்று எல்லாமே வணிகமயம் (COMMERCIAL) ஆகிவிட்டது.
பதிலளிநீக்குத.ம.8
ஆமாம் நண்பரே! விளையாட்டுக்குக் கூட இனிமேல் விளைாட முடியாது போல... நன்றி கள்
நீக்குகிரிக்கெட் விளையாட்டு என்று யார் சொன்னது? அது பெரிய வியாபாரம். கிரிக்கெட் பற்றிய பதிவு என்பதால் நன்றாக அடித்து அடியிருக்கிறீர்கள். பின் குறிப்புதான் சிக்ஸர்.
பதிலளிநீக்குஇந்திய அணி ஜெயிக்கிறது என்றாலும் இந்தியா ஆல்அவுட் ஆகித் தோற்கிறதே என்பதுதான் நகை முரண். நன்றி வரது.
நீக்குகிரிக்கெட் வியாபாரம் ஆகிவிட்ட சூழலில் நல்லதொரு பதிவு! நன்றி!
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குகிரிக்கெட் விளையாட்டு என்று யார் சொன்னது? அது பெரிய சூதாட்டம்! இதுதான் என் அழுத்தமான கருத்து!.
பதிலளிநீக்குஅய்யா வணக்கம். நலம்தானா? நம்ம பிள்ளைகளுக்கு இது தெரிந்தும் தெரியாத மாதிரி இருக்கிறார்களே அய்யா... அதுதான் சிக்கல். தங்கள் கருத்திற்கு நன்றி அய்யா.
நீக்குஎது எப்படியோ?யார் யாரோ சம்பாதிக்க, ஏழையின் வயிறு எப்போதும் போல் காய்ந்து கொண்டே இருக்கிறது.
பதிலளிநீக்குஆமாம் சகோதரி. எல்லாவற்றிலும் பாதிக்கப்படுவது அந்தக் கடைக்கோடிக் கதாநாயகர்கள் தான். அதுதான் என் கவலை
நீக்குகடந்த பல ஆண்டுகளாக, இந்தியாவில் 10,12ஆம் வகுப்பு அரசுத் தேர்வு நடக்கும்போதே இந்தப் போட்டிகள் நடக்கின்றன..
பதிலளிநீக்குகொடுமை ஐயா கொடுமை
உலகில் 194 நாடுகள் இருக்கின்றன என எண்ணுகின்றேன்.
பத்துப் பன்னிரெண்டு நாடுகள் மட்டுமே
கிரிக்கெட் போட்டியில் பங்கு பெறுகின்றன
ஆனால் பெயர் மட்டும் உலகக் கோப்பை
தம +1
இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் இருப்பதாகச் சொல்கிறார்கள் அய்யா. மொழிவாரியாக நீங்கள் சொல்லும் இன மக்கள் இருக்கிறார்கள்.. ஒரு சதவீத மக்கள் கூட இதில் பங்கேற்பதில்லை ஆனால் வியாபாரிகளின் ஊடக வியாபாரத்தால் சுமார் 10சதவீத மக்கள் பார்க்கிறார்களே! அதுதான் அவர்களின் வெற்றி. அதுதான் நம் கவலை. நன்றி
நீக்குஹன்சி குரேனியே வும், ஜடேஜாவும் match fixing ல மாட்டுறதுக்கு முன்னால ரொம்ப ஆர்வமா அந்த முட்டாள் வரிசையில் இருந்தேன். இப்போ கொஞ்சம்கொஞ்சமா ஆர்வம் இல்லாம போச்சு அண்ணா:)) முன்னெல்லாம் ஈழத்தமிழர் பிரச்சனை உச்சத்தில் இருக்கும்போது match நடத்துவாங்க. இப்போ இப்படி கிளம்பிருக்காங்க....ஹ்ம்ம்
பதிலளிநீக்குதொடர்புடையவர்கள் தப்பித்து, தலைவர்களாவதும், தொடர்புடையவர்களுடன் தொடர்பில்லாதவர்கள் மாட்டுவதும் அனைத்திலும் இருக்கிறது.. நம் பிள்ளைகளையாவது இவர்களிட மிருந்து காப்பாற்ற முயற்சி எடுக்க வேண்டும் பா. அதுதான் எழுதிவைப்போம்என்று...நன்றிடா
நீக்குஅப்ஜக்சன் யுவர் ஆனார் (நான் ஆனர் ன்னுதான் அடிச்சேன் ஆனாலும் ஆனர் எதுக்கோ ஆசைப்பட்டு ஆனார் ஆகிட்டார் புரியலையா? கொஞ்சம் நாள் பொறுங்க சாமி.) புரியும். \|/
பதிலளிநீக்குஎன்ன? வக்கீலுக்குப்ப டிக்கிறீங்களோ? அலலது வக்கீலைப் புடிக்கிறீங்களா - கிரிக்கெட் வழக்கு எதுவும் நிலுவையா? நன்றி (ஒன்றும் புரியலல்ல.. எனக்கும்தான்..)
நீக்குநல்லாச்சொன்னீங்க நல்லதையே சொன்னீங்கபடிப்பு போயி
பதிலளிநீக்குபொழெக்கிறவ பொழப்பு போகுது செரிக்க செரிக்கப்
பார்ப்பவர்களோடு நம்மவர்கள் பசிக்கப்பசிக்கப்பார்க்கிறர்களே
அண்ணா.
“மையில நனைச்சி பேப்பரில் அடிச்சா மறுத்துப் பேச ஆளில்லே“ என்றது போக, இப்ப தொலைக்காட்சியின் உச்ச விளைவு இது..
நீக்குஎந்த விளையாட்டிலும் வியாபாரம் நுழைவதைத் தடுக்க முடியாது. சூதாட்டம் நுழைவதையும் தடுக்க முடியாது. இது கிரிக்கட்டுக்கு மட்டும் உள்ள "தனித்துவம்" கெடையாது. கால்பந்து, அமெரிக்க கால்பந்து, டென்னிஸ் எல்லாவற்றிலும் வியாபாரம் மற்றும் சூதாட்டம் இருக்கிறது.
பதிலளிநீக்குநான் ஒரு கிரிக்கெட் விசிறி அல்ல!
காலபந்து ஆடுறவன் எல்லாம் ஜீனியஸாக்கும்???. கால்பந்து பார்க்கிறவன் எல்லாம் பெரிய மேதைகளா??பெர்னாட்ஷாவுக்கு மட்டையைப் பிடிக்கத் தெரியாதோ என்னவோ பாவம், தன் இயலாமையை இப்படி தீர்த்துக்கிட்டான் மனுஷன்! :))
வாங்க வருண். நலம்தானா நண்பா? எந்தப் பந்தும் விளையாடலாம் மக்களையே பந்தாக்கி உதைப்பதுதான் எல்லாவிளையாட்டிலும் நடக்கிறது. அதைத்தான் ஷா(ர்)...நன்றி
நீக்குஎன்னண்ணாஇப்படிசொல்லீட்டீங்க நீங்கள்லாம்
பதிலளிநீக்கு(ர் ஐ நீக்கிவிட்டேன்)
என்னைத்திருத்திடுவீங்கங்க அப்டீன்னு நம்பிதான்
நான்வலைத்தளத்திற்கே வந்திருக்கேன் தவறுகளை
நீங்கசொல்லாம வேருயார் சொல்வது ’பருவக்கோளாறு
என்றுபோட்டிருக்கலாம் இந்தகத்துக்குட்டிக்குதெரியலியேண்ணா
குறைகளைச்சுட்டிக்காட்டுவது தங்களின் கடமை, இனிமேகுறை
கூறாமல் இருந்திருவீங்க
உங்கள் பதிவில் வெளியிட வேண்டாம் என்று அனுப்பினால், பதிலை இங்கு வெளியிடும்படி எழுதலாமாம்மா...
நீக்குசரி வெளியிட்டுவிட்டேன்..இதிலொன்றும் ரகசியமிலலையே?
ஐயா! இப்படி கிரிக்கெட்டை ஒரேயடியாக வெறுத்து ஒதுக்கத் தேவை இல்லை.இந்தியாவில் மற்ற விளையாட்டுக்களை பின் தள்ளி கிரிக்கெட் மட்டும் பிரபலமாக இருப்பது ஏன்? இதற்கு பல காரணங்கள்.இன்றைய ஊடகங்கள் அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பது உண்மைதான்.தொலைக்காட்சி பிரபலமாகாத காலத்திலும் கிரிக்கெட் மோகம் இருக்கத் தான் செய்தது என்றே கூறுகிறார்கள். கிர்க்கெட் பார்க்க சோற்று மூட்டை கட்டிக்கொண்டு போவார்கள் என்று என்று தந்தை கூறுவதுண்டு . கிரிக்கெட் மீதான மக்கள் மோகமே வியாபாரமாக மாறிப் போனதற்கான காரணம் .
பதிலளிநீக்குஒரு பதிவிற்கான தலைப்பை கொடுத்து விட்டீர்கள். என் கருத்துக்களை விரைவில் எழுத முயற்சிக்கிறேன்.