(காப்பீட்டு மசோதாவை எதிர்த்து நாடுமுழுவதும் ஊழியர் போராட்டம்) |
பொழுதெலாம் எங்கள்செல்வம்
கொள்ளை
கொண்டு போகவோ? – நாங்கள் – சாகவோ?
அழுதுகொண்டு இருப்போமோ
ஆண்பிள்ளைகள்
அல்லமோ? – உயிர் – வெல்லமோ?
--என்று பாரதி பாடியது எதற்காக? இந்திய மக்களின் சொத்தை
இங்கிலாந்து கொண்டு சென்றதை எதிர்த்துத்தானே? அதையே இந்திய முதலாளிகளுடன் சேர்ந்து, கார்ப்பரேட் பெருமுதலாளிகள் அள்ளிவிழுங்க அனுமதித்தால் அதற்குப் பெயர் சுதந்திரமா?
இதே காப்பீட்டு மசோதாவை காங்கிரஸ் அரசு கொண்டுவந்த போது, எதிர்த்த சுதேசி பா.ஜ.க.,
இப்போது அவர்களே கொண்டுவருகிறார்கள்!
இவர்களின் தேசபக்தி வெளுத்து விட்டதே!
--------------------------
(1)
இந்திய
ஆயுள் காப்பீட்டுத் துறையில் அந்நியரை தாராளமாக அனுமதிக்கும் சட்டத்திருத்த மசோதா
ஏற்கெனவே மாநிலங்களவையில் நிலுவையில் இருக்கும் சூழலில், நாடாளுமன்றத்தின் அனைத்து விதிகளையும் காலில் போட்டு
மிதித்துவிட்டு, நரேந்திர மோடி தலைமையிலான
பாஜகஅரசு செவ்வாயன்று அதே மசோ தாவை மக்களவையில் அறிமுகம்செய்தது.
---------------------------------------------------------------
(2)
கார்ப்பரேட் நிறுவனமாக மாறினால் துறைமுகங்களின் உடமையும், கட்டுப்பாடும் அந்நிய நிறுவனங்களின்
கைகளுக்குச் சென்றுவிடும்; துறைமுகங்களில் குவிந்துள்ள பல்லாயிரம் கோடி உபரி நிதியும், துறைமுகங்களுக்குச் சொந்தமான பல லட்சம்
கோடி மதிப்பிலான 2.64 லட்சம் ஏக்கர் நிலங்களும் தனியார் கட்டுப்பாட்டில் சென்றுவிடும்; நாட்டின் பாதுகாப்பில் முக்கியப் பங்கு
வகிக்கும் துறைமுகங்கள் அந்நியர்களின் கைகளுக்குச் செல்வதால் நாட்டின் பாதுகாப்பு
பலவீனப்படும்; துறைமுகங்களில்
பெருமளவில் ஆட்குறைப்பும், ஓய்வூதியர்கள் பென்சனும் பறிக்கப்படவும் நேரிடும்.
---------------------------------------------------------------
பாரதி பாட்டுத்தான் மீண்டும்-
மகா பாரதக் கதையில் நாட்டை வைத்து சூதாடிய
தருமனை (தர்மராஜன், தருமத்திற்கே அரசன்?)
இந்தத் திட்டுத் திட்டுகிறான். எதற்கு?
தான் காக்க வேண்டிய நாட்டை சூதாட்டத்தில்
வைத்துவிட்டானே என்று!
அப்படியானால் –
இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களான காப்பீட்டுத் துறை மற்றும் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றும் துறைமுகங்களை தனியார் மயமாக்கி அந்நியருக்கு விற்பது என்னநியாயம்?
“தருமன் வேலை“ யை நரேந்திர மோடி செய்தால்?
அதே பாட்டுத்தான்! பாரதி தீர்க்க தரிசிதான்!
“கோயில்
பூசை செய்வோன் – சிலையைக்
கொண்டு விற்றல் போலும்,
வாயில்
காத்து நிற்போன் – வீட்டை
வைத்து இழத்தல் போலும்,
ஆயி
ரங்க ளான – நீதி
அவை உணர்ந்த தருமன்
தேயம்
வைத்து இழந்தான் – சீச்சீ
சிறியர் செய்கை செய்தான்“
-----------------------------------------------------
காங்கிரஸ் கொள்கைகளை அப்படியேதான் கடைபிடிக்கிறது.சொன்னது ஒன்று செய்வது ஒன்று.
பதிலளிநீக்குஅணுக்கொள்கையில் அப்போது காங்கிரசை எதிர்த்தவர்கள், இப்போது நடைபாவாடை விரிக்கவும் செய்கிறார்கள்! இதைத்தான், பாரதி “நடிப்புச் சுதேசிகள்“ என்றானோ?
நீக்குபாரதீக்கு அன்றே தெரிந்து இருக்கிறது நண்பரே மோ(ச)டி பேர்வழிகள் ஆள்வார்கள் 80
பதிலளிநீக்குதமிழ் மணம் 3
கொள்கைகளைச் சொல்லி வாக்குக் கேட்பதும், அதற்கு மாறாக, கொள்ளைகளை வளர்த்து ஆட்சி நடத்துவதும் எப்போது மாறுமோ? நன்றி ஜி!
நீக்குஇவங்க ஆளாத்தான் வந்தாங்களா என்ன?? நாளும் இவர்கள் நாட்டை அடகுவைக்கும் கேவலம் பார்த்தால், நம் நாடு மிக பெரிய ஜனநாயக நாடு என பாடம் நடத்தவே மனம் வரவில்லை அண்ணா:((((
பதிலளிநீக்குயாராவது வந்து காப்பாற்ற மாட்டார்களா என்று மாறி மாறி வாக்களித்து, ஒவ்வொரு முறையும் ஏமாந்து நிற்கும் நமது பாவப்பட்ட மக்களை நினைத்தால்தான் பரிதாபமாக இருககும்மா
நீக்குஇந்த ஒன்று மட்டுமா ஐயா? இன்னும் இன்னும் இது போல் பற்பல நாட்டு இரண்டகங்களை இழைத்து வருகிறது பா.ச.க. எல்லாவற்றுக்கும் முடிவு என ஒன்று வந்தே தீரும்! அதுவரை ஆடட்டும் சூதாட்டம்!
பதிலளிநீக்கு'நமது பாவப்பட்ட மக்களை நினைத்தால்தான் பரிதாபமாக இருககு.'
பதிலளிநீக்குமக்களைப்பார்த்து பரிதாபப்படுவதை விடுங்கள் அய்யா.
அவர்களை (மக்கள்) அறியாதவர்கள் எனும் மமதையிலே
அறிந்தே தவறு செய்(த)வ(ர்)றுகள்
பவர் இருக்கும் தைரியத்தில் தவறு செய்பவ(ர்)ருகள் தண்டிக்கப்படுவார்கள். டெல்லி மக்கள் தந்த பாடத்தை
பார்த்த பின்னும் மக்களை மாக்களென்றும் மக்குகளென்றும் நினைத்து ஆளாத்துணிபவர்கள் இன்னும் இருக்கிறார்கள்தான்., அதனால் ஓடி (வெல்ல) வேண்டிய குதிரைகளை உற்சாகமூட்டுவோம்.
அணுக்கொள்கையில் அப்போது காங்கிரசை(யே) எதிர்த்தவர்கள்?
பதிலளிநீக்குஇப்போது மாறுபடுவது.
அது அப்ப அவைங்க ப(அ)டிக்கிறப்ப அவங்க சொத்தா தெரிஞ்சுது
இப்ப இவைங்க ப(அ)டிக்கிறப்ப அவங்க சொத்தா தெரியுது.
நீங்க படிச்சா உங்கள் சொத்து
நாங்க படிச்சா எங்கள் சொத்து.
அண்ணா என்மாணவன் ஒருவன்(4ம்வகுப்பு)அவன்தமிழ்பாடப்புத்தகத்தில்
பதிலளிநீக்குஉன்னுடைய ஆசிரியர் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது கேள்வி
அதற்கு அவன் எழுதி இருந்தது 1நாங்கள்விரும்பும்பாடத்தைதான்நடத்தவேண்டும்,
2.குப்பைகளைபொறுக்கச்சொல்லக்கூடாது.
3,எப்பொழுதும் வகுப்பறையை மகிழ்ச்சியாக. வைத்துக்கொள்ளவேண்டும்.
4ஒவ்வொரு நாளும் நாங்கள் விளையாடனும்
நான் அவனிடம் கூறியது (மணவர்களைகரஒலிஎழுப்பிப்பாரட்டச்சொல்லிவிட்டு)
வடாவா உன்னமாதிறி ஆளுதான் எங்களுக்குவேனுண்டா,
என்றுமேலும் சிலகருத்துக்கள் கூறி உற்சாகப்படுத்தி பாராட்டினேன்
எப்படிப்பட்டவுங்களும் அந்த இடத்துக்குப்போன்பின் மாறிவிடுகின்றனரே.
விதை பழுதா? மண் பழுதா? தொட்டுத் தொடரும் சூழல் பழுதா என்பதை காலம்தான் கண்டறியும் தங்கையே
நீக்குஎன்ன ஒரு ஒப்பீடு...? எப்படி ஐயா...? வணக்கம்...
பதிலளிநீக்குஅது அப்டியே ... பொங்கி வரும்ல.. (பாரதி கற்றுக்கொடுத்ததுதான்)
நீக்குபாரதி அன்றே உணர்ந்திருக்கிறார்
பதிலளிநீக்குஎந்த ஒரு தார்மீக நெறிமுறையும் இல்லாத ஒரு அரசு
பதிலளிநீக்குஇதற்கு தீர்வே இல்லையா அண்ணா....நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டாம் தீமை செய்யாமல் இருக்க மாட்டார்களா....
பதிலளிநீக்கு