அந்த மாணவியின் கேள்விக்கு, அவர்கள் பதில் சொல்வார்களா?கடந்த 10-03-2015 அன்று, புதுகை மாவட்டம்  
ரெகுநாதபுரம் அக்ஸீலியம் கலைக்கல்லூரியில் 
நடந்த  “உலக மகளிர் தினவிழா”வில் 
கணினி அறிவியல் முதலாண்டு படிக்கும்,
 மகேஸ்வரி எனும் மாணவி,
முதல்பரிசுபெற்ற தன் கவிதையைப் படித்தார்.

கவிதையில் அவர் கேட்ட ஒரு கேள்வி,
எதிரில் இருந்த பார்வையாளர்களின்
நரம்பைச் சுண்டிச் 
சொடுக்கெடுத்து விட்டது!

அவர் கேட்ட கேள்வி இதுதான்-
"பேதைப்பெண்களின் ஆடைகள்தான்
பெரும்பாலான ஆண்களைப்
பாலியல் வன்முறைக்குத் தூண்டுவதாகப்
பேசுவோரே!
வனவாசத்தில் இருந்த
சீதாப் பிராட்டியை
வலுக்கட்டாயமாக
தூக்கிப் போனானே இராவணன்?
அதற்குக்கூட
அப்போது சீதை அணிந்திருந்த
ஆடைதான் காரணமா?????????"
எப்படி?
பொட்டில் அறை விழுந்தது போல இல்லை?
இதற்கு என்ன பதில் சொல்வார்கள், அப்படிச் சொன்னவர்கள்?

---------------------------- 

25 கருத்துகள்:

 1. “மறைக்கப்பட்ட அசுரர்கள் வரலாறு” என்ற புத்தகத்தில் சீதை இராவணின் மகள் என்று கூறப்பட்டுள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிராமத்தில் சொல்வார்களே... “சீதைக்கு ராமன் சித்தப்பனா?” என்றும் ஒரு கதை...? இராமாயணங்கள் இந்தியாவில் ஏராளம்.. அதில் ஒன்று..

   நீக்கு
 2. வணக்கம்
  ஐயா

  மற்ற உறவுகளின் பதிலை நான் எதிர்பார்க்கிறேன் பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம3
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. பதில் சொல்வது கடினம் மட்டுமல்ல, இல்லை 80ம் எமது கருத்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவர்கள் சொல்வதன்படி பார்த்தால் சீதையை இவர்களே கேவலப்படுத்தி விடுகிறார்கள் என்ற பொருள்தானே வரும்?

   நீக்கு
 4. சரியான கேள்வி!! சீதையையும் தீக்குளிக்க வைத்தவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதானே? நான் திகைத்துப் போய் விட்டேன் கிரேஸ.
   பின்னர் நான் பேசும்போது அந்தக் கவிதையை மீண்டும் சொல்லி அந்த மாணவியை பாராட்டி, எல்லாரையும் கைதட்டச்சொன்னேன்.. ஏதோ என்னால் முடிந்தது... நன்றிம்மா..

   நீக்கு
 5. இது ஆண் பெண் புரிதல் இல்லாததால் வரும் குழப்பம். நான் 'ஆண் மனசு' என்ற ஒரு தொடரை மனநல மருத்துவர்கள் துணையோடு எழுதினேன். அப்போதுதான் ஆணின் உலகம் வேறு, பெண்ணின் உலகம் வேறு என்பதை புரிந்து கொண்டேன். ஒரு ஆணால் பெண்ணின் உலகத்தை புரிந்துகொள்ளவே முடியாது. பெண்ணுக்கும் அப்படித்தான்.

  நாம் ஒத்துக்கொண்டாலும் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் பெண் ஒரு போகப் பொருள் என்றுதான் மருத்துவம் சொல்கிறது. மனிதன் மட்டுமல்ல. எல்லா உயிரினமும் அப்படித்தான்.

  உதாரணத்திற்கு ஒரு பெண் நாய் உறவுக்கு தயாராகிவிட்டால், பெண்ணுறுப்பில் திரவம் சுரக்கத் தொடங்கும். அதன் மணம் ஒரு கி.மீ. சுற்றளவுக்கு பரவும். அந்த வட்டத்திற்குள் இருக்கும் ஆண் நாய்களுக்கு மோகம் தலைக்கேறும். உடனே வாசனை வரும் திசையை நோக்கி நகரும். அடுத்த 10-வது நிமிடத்தில் எல்லா ஆண் நாய்களும் பெண்ணையே வலம் வரும். மற்ற நாய்களோடு சண்டையிட்டு வெற்றி கொள்ளும் ஆணுக்கு பெண் இடம் தரும். ஆண் நாய்கள் மோப்ப இன்ப வகையைச் சேர்ந்தவை.

  மனிதன் கதை வேறு. ஆணுக்கு பார்வை இன்பம், பெண்ணுக்கு கேட்டல் இன்பம். பெண்ணைப் பார்த்ததும் இனப்பெருக்கத்துக்கு தயாராக வேண்டும் என்பதுதான் இயற்கையின் கட்டளை. அதனால் ஆணுக்கு பார்வையில் இன்பத்தையும், பெண்ணுக்கு ஆண் பேசுவதை கேட்பதிலும் இன்பத்தை வைத்தான்.

  ஆணை ஈர்ப்பது அழகு மட்டும்தான் என்பது பெண்ணின் மரபணுவில் பதியப்பட்ட சங்கதி. அதனால்தான் எல்லாப் பெண்களும் தங்களை அழகாக காட்டிக்கொள்ளவே விரும்புகிறார்கள்.

  இதுஒரு கடல் போன்ற பெரிய சப்ஜெக்ட். நான் மேலோட்டமாக சொல்லியிருக்கிறேன். இதுவே இயற்கையின் பரிமாணத்தை ஓரளவு புரிய வைத்திருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் கருத்தை என்னால் ஏற்க இயலாமைக்கு மன்னியுங்கள் நண்பா. நாய்கள் போல மனிதர் இருக்க வேண்டியதில்லை. மனிதர் தம் ஆறாம் அறிவைப் பயன்படுத்தினால் சரிநிகராக வாழ முடியும் என்பதே என் கருத்து. எனினும் தங்கள் கருத்திற்கு என் நன்றி.

   நீக்கு
  2. பல விலங்குகள் பற்றிய விபரணச்சித்திரங்களைப் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேல் பார்க்கிறேன். ஆனாலும் எந்த விலங்கும் பலாத்காரம் செய்யவில்லை. தான் தயார் என்பதை தன் வழியில் அறிவிக்கிறது பெண், ஆண்கள் பின் தொடகின்றன. போட்டி போடுகின்றன, வென்ற ஆணுடன் கூடப் பெண் சம்மதிக்கிறது. கூடுகிறது.
   ஒரு நியதியுடன் தான் அவை அதைச் செய்கின்றன. ஆனால் மனிதன் அப்படியா? காலஓட்டத்தில் எவ்வளவோ மாறுதல்கள்.
   நான் தமிழகம் வந்த போது, மாட்டுக்கு சாப்பிட்ட வாழையிலையுடன் சோறு போட்ட போது, மாடு இலையை விட்டுவிட்டு சோறையுண்டது. எனக்குத் தலை சுற்றியது.
   ஏன் ? மனிதன் மாத்திரம் இப்புதிய யுகத்தில் , தொங்கப்போட்டுக் கொண்டு, தான் விரும்பாத பெண்னைப் புணர்வதில் இன்பம் காண்கிறான்.
   வேண்டாம், என்னை விட்டுவிடுங்கள் எனக் கதறக் கதற, அவள் கைகாலை இன்னும் நாலுபேர் பிடிக்க
   இது தன் விந்தை வெளியேற்றுதே, இதுவா? துய்த்தல்... சீ.தூ.
   காகம் புணர்வதை யாருமே பார்க்க விரும்பாதாம்! (கேள்விப்பட்டேன்) ...ஆனால் இந்தக் பிசாசுகள்.

   விலங்கினத்தில் சோடியைத் தேட ஆண்களுடனே தான் சண்டை, சீண்டல், அதன் பின் அவை இன்பத்தில் உச்சத்தைக் துய்க்கும் அழகோ தனி. அது யானையாக இருக்கலாம், பாம்பாக இருக்கலாம், மீனாக இருக்கலாம். யூருயூப்பில் - நசனல் யீயோக்கிறபி குழுவின் புண்ணியத்தில் கொட்டிக் கிடக்கிறது.பாருங்கள், படியுங்கள்...இனிமேல் இப்படிப்பட்ட மனநிலை பிசகிய,பிசாசுகளை; நான் நேசிக்கும் விலங்கினத்துடன் தயவு செய்து ஒப்பிட வேண்டாம்.
   நீக்கு
 6. நல்ல கேள்வி
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 7. அன்பின் அருந்தகையீர்!
  வணக்கம்!
  இன்றைய...
  வலைச் சரத்திற்கு,
  தங்களது தகுதி வாய்ந்த பதிவு
  சிறப்பு செய்துள்ளது!
  வருக!
  வலைச்சரத்தில் கருத்தினை தருக!
  http://blogintamil.blogspot.fr/
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 8. குத்தீட்டியான கேள்விதான். இதைப்போல புராண இதிகாசங்களில் கூறப்பட்டுள்ள ஆண் வக்கிரங்கள் பற்றி பெண்கள் கேள்வி கேட்க ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன,
  ஆனால் இராவண காவியத்தில் சீதையை இராவணன் நடத்திய தமிழ்மாண்பு பாராட்டத் தக்கதே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராவண காவிய அழகும் அர்த்தமும் வேறல்லவா?
   இது பொதுப்புத்தியை ஆதிக்க மனோபாவத்தை உடைக்கும் கேள்வி எனும் வகையில் பாராட்டப்பட வேண்டியது என்பதால் இந்தப் பதிவு வருகைக்கும் வார்த்தைக்கும் நன்றி அய்யா

   நீக்கு
 9. Raavan kidnapped Sita to take revenge over Rama. He never touched Sita.
  I am not supporting Raavan.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொட்டால் அழிவு என்னும வரமும் ஒரு காரணம் என்பதால்...
   நிற்க இந்த இடத்தில் இராவணன், சீதை இருவருமே குறியீடுகள் என்று புரிந்துகொண்டால் நல்லது நண்பரே. நன்றி

   நீக்கு
 10. யாரை பதில் சொல்லச் செய்வது

  பதிலளிநீக்கு
 11. இராமாயணத்தில் இராவணன் தன் தங்கையின் மூக்கறுத்த இராமனின் மனைவி சீதையை கவர்ந்து சென்றான். அவன் தான் சாகும் வரை சீதயைத் தொடவில்லை. சீதையின் மனமாற்றத்திற்காகக் காத்திருந்தான்.
  அன்றைய போர் முறையில் பெண்களை, பசுக்களைக் கவர்வது இருந்துள்ளது.
  மாற்றான் மனைவியைக் கவர்ந்த தவறைத் தவிர்த்து நோக்கின் , இராவணன் ஓர் உயர்ந்த மனிதன்.
  இந்த பிசாசுகளை இராவணனுடன் ஒப்பிடுவதே! தவறு.!

  பல காலம் வாழ்ந்தும், சீதையின் சிறப்பறியாது, தீக்குளிக்க வைத்த இராமனிலும்!
  சகல வல்லமையும் இருந்தும் சீதை மனம் மாறப் பொறுமை காத்த இராவணன். உயர்ந்தவன்.
  இது என் கருத்து.

  பதிலளிநீக்கு