புதுக்கோட்டையை
அடுத்த ராமச்சந்திரபுரத்தில் “திருமகள்“ பத்திரிகையில் சேர்ந்தபோது, அவனுக்கு வயது
பதினேழு!
அங்கு
அவனது பெயரைக் கேட்டபோது, சட்டென்று தோன்றிய ஒரு கற்பனையான புனைபெயரைச் சொல்லி
வைத்தான். பின்னாளில் தமிழ்த்திரைப்படப் பாடல்உலகில் முப்பதாண்டுக் காலம்
முதலிடத்தில் இருக்கப் போவது இந்தப் பெயர்தான் என்பது அந்த முத்தையாவுக்குத்
தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனெனில் அது நடந்தது 1944ஆம் ஆண்டில்!