மோடி மஸ்தான் பராக்...! எல்லாரும் ஜோரா கைதட்டுங்கோ...!

என்னைத் தேர்ந்தெடுத்த குஜராத் எக்கேடோ கெடட்டும்...

நம்ம ஊடகங்கள் அங்க உள்ள கோளாறையெல்லாம் மறைச்சு,


பாலாறும் தேனாறும் ஓடுதுன்னு சொல்றதையே
இன்னும் கொஞ்சம் விரிவா -விளம்பரம் மாதிரி தெரியாம- சொல்லத் தெரிஞ்சிக்கணும்!

குஜராத்தை விட்டு வரமாட்டேன்னு சொன்னா அந்தக் கிழவனுங்க கேட்டாத்தானே?

ச்ச்சும்மா அந்த அத்துவானிக் கெழவன் வாய அடைக்க நான் செஞ்ச வித்தைங்கோ அது...
அப்படித்தான் சொன்னேன்..
.2077வரைக்கும் சாரி 2017வரைக்கும் நான் குஜராத்தின் முதல்வராக இருப்பதற்காகவே என்னை மக்கள் முதல்வராகத் தேர்வுசெய்தார்கள்னு சொன்னேன்...
அதுக்கு என்னவா? இப்ப அங்க வேறொரு மஸ்தான இன்சார்ஜா போட்டாப் போச்சு.

முந்தி இப்படித்தான் “இநதியாதான் இந்திரா, இந்திராதான் இந்தியா”ன்னு சொன்னது இப்பஉள்ள பசங்களுக்குத் தெரிஞ்சிருக்க ஞாயமில்லதான்.
அதனால “நரேந்திராதான் இந்தியா இந்தியாதான் நரேந்திரா“ன்னு ஒரு புது கோஷம் தயார்ப் பண்ணியிருக்காங்க நம்ம பசங்க... நரேந்திரன் கிறது –இப்ப 150ஆவது ஆண்டு கொண்டாடுற விவேகானந்தரோட அசல் பேருங்கிற ரகசியம் தெரியுமா உங்களுக்கு? அவருதான் இப்ப நம்ப பேருல வந்து இறங்கியிருக்காருங்கோ.... எங்க எல்லாரும் ஜோரா ஒரு தடவ கைதட்டுங்கோ...

டீக்கடை பெஞ்சிலிருந்து நேரா டெல்லி செங்கோட்டை வுடு ஜூட்....
ஆமா... வர்ர தேர்தல்ல
குண்டக்க மண்டக்க ஏதாவது நடந்து
டெல்லி கொஞ்சம் தள்ளிப் போயி...
உள்ள குஜராத்தும் போச்சுன்னா...
“ஆகா...வட போச்சே!”  
அட மாப்பூ!
உள்குத்துல வச்சிட்டாங்கெடா
ஆப்பு ங்க வேண்டியதுதான்...!

சரி... இது என்ன? பழைய வழியில்லயா புதுவழி...?
பழைய வழி.. அயோத்தி தானே?
நோ நோ...
அது போன தேர்தல் வழி... அயோத்திவழி!
இது இந்த தேர்தல்... வழி கோத்ரா...வழி.
வா சகோத்ரா சாரி சகோதரா!
அமெரிக்கா போக முடியாத கடுப்புல 
ஈரோடு போயி்டாதே, திருச்சி வந்துடு!
திருச்சி அழைக்கிறது...! திரும்பிப்பாக்காம வா...!
---------------------------------------------------------------
சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் மாதவராஜ் எழுதிய பின் வரும் படைப்பு இப்பவும் எவ்வளவு பொருத்தமா இருக்குனு எனக்கு இன்னும் ஆச்சரியமா இருக்கு... அவரு எழுதினதைப் படிச்சுப் பாருங்க... இதோ-
“கொட்டு அடித்து ஊரைக் கூட்டினான் மோடி மஸ்தான். இதோ பாருங்க, இங்கே பாருங்க..என்று எல்லோர் முன்பும்தான்   அந்தக் காரியத்தை செய்தான்.  கையிலிருந்து கூரான வாளை இன்னொரு மனிதனின் கழுத்தில் வைத்தான்.  ”ஜெய்..என உரக்கக் கூவி அறுத்தான்.   வதைபடுபவனின் கை கால்கள் துடிதுடித்தன. எந்தச் சலனமுமற்ற மோடிமஸ்தானின் முகமெங்கும் மனித ரத்தம் தெறித்து வழிந்தோடியது.  வெட்டப்பட்ட தலையை கையில் தூக்கி எல்லோருக்கும்  காட்டினான்.  முகம் பொத்தியும், பதைபதைத்தும் நின்றது கூட்டம்.

வெறி பிடித்தவனாய் சுற்றிச் சுற்றி வந்தவன் மெல்ல அடங்கினான். மீண்டும் கொட்டு அடித்து  “இதோ பாருங்க, இங்கே பாருங்கஎன்று உரக்கக் கத்திவிட்டு, தன் முகத்தை ஒரு வெள்ளைத் துண்டால் மூடி அப்படியே உட்கார்ந்தான். மயான அமைதியோடு வெறித்துப் பார்த்தது கூட்டம்.  துண்டை விலக்கியபோது  அவன் முகத்தில் ரத்தக் கறைகள் இல்லை.  சாந்தமாய் புன்னகைத்தான். ஜெய்...என ஓங்காரக் கூரலிட்டு எழுந்து கைகளை பரிசுத்தமானவனாய் விரித்தான்.  வித்தையை மெச்சி சிலர் கைதட்டினார்கள்.

கீழே ஒரு தலையும், முண்டமும் தனித்தனியாகத் தரையில்  கிடந்தன. கைதட்டியவர்களின் உள்ளங்கைகளில் ரத்தம் அப்பியிருந்தது
--------------------------------------------------------------
இதற்கு அப்போதே பின்னூட்டமிட்டிருந்த
எழுத்தாளர் எஸ.வி.வேணுகோபாலன் சொன்னது இது -

அருமை மாதவ்..
வேறு வார்த்தைகள் இல்லை...

வேண்டுமானால் இப்படி சேர்த்துக் கொள்ளலாம்..

அவர்கள் கைதட்டிக் கொண்டிருந்த போது மஸ்தான்
மேலும் பேசலானான்:

வெட்டுண்டவனின் வலியையோ, அவனது தீனக் குரலையோ
நான் கேட்கவில்லை என்று எப்படி அவர்கள் சொல்ல முடியும்...
அவரவர்களுக்கான நீதி வழங்கப்படவேண்டும் என்பதை நான் இப்போதும் உரக்க முழங்குகிறேன்.. சொல்லப் போனால், இம்மாதிரி சமயங்களில், நீதியை எனது
கொலைக் கருவிகள் மூலமே நான் வழங்குவது வழக்கம்..

இப்போது, கை தட்டியவர்கள் அப்படியே உணர்ச்சிப் பெருக்கால்
கதறி அழுது கொண்டே குரல் எழுப்பினார்கள்: மஸ்தானை பிரதம ஸ்தானத்தில் ஏற்றி வை, சீக்கிரம்..

எஸ் வி வேணுகோபாலன்
-----------------------------------------------------------
ஞானிகள் மட்டுமல்ல
சிலநேரம் சமூக விஞ்ஞானிகளும் கூட
பின்னர் நடப்பதை முன்னதாகவே
முன்கூட்டியே சொல்லிவிடுகிறார்கள்.

நமக்கு இரண்டு வேண்டுகோள்கள்-
1.எழுத்தாளர் மாதவராஜ் தன் மௌனம் கலைந்து 
மீண்டும் எழுதத் தொடங்க வேண்டும்!
2.எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபால் 
ஒரு வலைப்பக்கம் தொடங்கி
தன் எழுத்துகள் அனைத்தையும் 
எல்லாரும் தொடர்ந்து படிக்கத் தரவேண்டும்
-----------------------------------  

9 கருத்துகள்:

  1. மாதவராஜ் அண்ணன் மீண்டும் எழுத வேண்டும் என்பதே எனது ஆசையும் ஐயா...

    பதிலளிநீக்கு
  2. அப்பிடியே காங்கிரசோட இந்த பத்துவருஷ மெகா ஊழல் பட்டியலையும், நாட்டைச்சுரண்டிய கதையையும் பத்தி திரு.மாதவராஜ் எதாவது எழுதியிருக்காரான்னு பாத்துச்சொல்லுங்க சார்... கூடவே இந்திராகாந்தி மரணத்தின்போது சீக்கியர்களை கழுத்தறுத்து கொன்று குவித்த காங்கிரஸ் மஸ்தான் வித்தையைப்பத்தியும் எதாவது இருந்தா சொல்லுங்க... இந்திராதான் இந்தியா... இந்தியாதான் இந்திரான்னு சொன்ன காலமெல்லாம் இப்போ உள்ள பசங்களுக்குத்தெரியாதுன்றது ரொம்ப தப்பு சார்... இந்திராகாந்தி, மகாத்மாகாந்தி மட்டுமில்லாம பிரிட்டிஷ்காரனுக்கு முன்னாடி கதையிலிருந்தே எல்லா வரலாற்றையும் தெரிஞ்சிதான் வச்சிருக்கிறாங்க இன்றைய இளைய சமுதாயம்...

    பதிலளிநீக்கு
  3. 14 ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சி வரும் மோடிக்கு இளைஞர்களின் மத்தியில் எழுச்சி இருப்பது உண்மை தான். அது மோடியின் சாதனைக்கானது மட்டுமல்ல. மாறாக ஆளும் காங்கிரசின் மீது இளைஞர்கள் கொண்ட கோபமே மோடிக்கு ஆதரவாகத் திசைத் திரும்பியுள்ளது. இதனைச் சரியான வழியில் பயன்படுத்தி நாட்டிற்கு நல்லது செய்தால் மகிழ்ச்சி.. ------------------------------------ //ஞானிகள் மட்டுமல்ல சிலநேரம் சமூக விஞ்ஞானிகளும் கூட பின்னர் நடப்பதை முன்னதாகவே முன்கூட்டியே சொல்லிவிடுகிறார்கள்// மிக உண்மையான வரிகள் அய்யா.எழுத்தாளர்கள் மாதவராஜ் அய்யா, எஸ்.வி.வேணுகோபாலன் அய்யா அவர்களுக்கானத் தங்களின் வேண்டுகோள் அனைவரின் விருப்பம். நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  4. மாதவராஜ் மீண்டும் எழுதவேண்டும் என்னும் எனது ஆசையைப் பிரதிபலித்த நண்பரகள் சே.குமார், அ.பாண்டியன் ஆகியோர்க்கு நன்றிகள்.
    சாய்ரோஸ் அவர்களே, நமக்கு மோடியின் மீதும் அவரது கட்சியின் மீதும் எவ்வளவு விமர்சனம் உண்டோ அந்த அளவிற்கும் மேலேயே திருமதி சோனியா மீதும், அவரது கட்சியின் மீதும் இருக்கிறது என்பதையும் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். உரிய நேரத்தில் அதையும் எழுதுவேன். இப்போது மோடி திருச்சி வருவதைப் போட்டிபோட்டுக்கொண்டு ஊடகமும், பாதுகாப்புத் துறையும் செய்யும் விளம்பரங்களைப் பார்த்து வந்த எரிச்சலுணர்வே இநத எனது படைப்பின் வெளிப்பாடு. நன்றி.
    “விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்வு நிரந்தரமாகாது”-கவியரசு.
    திண்டுக்கல் தனபாலன் அய்யாவுக்கும் எனது நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா அவர்களைகன்டால் உங்களுக்கு எரிச்சல்தான் வருது இவர்களை கன்டால் எங்களுக்கு எரிக்கனும் போல இருக்கு யேக்கியனு நினைத்து இத்தனை முறை ஓட்டு போட்டோம் இப்ப உங்க விதிப்படி அயேக்கியனு தெருஞ்சே ஓட்டு போடுவோம் ஏன்னா இடிஅமின தான்டியும் உகன்டா இருக்கியா

      நீக்கு
  5. கட் அவுட்.... மேடை அமைப்பு.... செய்த செலவு... பாத்தீங்களா அய்யா? இதில் எத்தனை ஏழைகள் வாழ்வை மாற்றி அமைத்து இருக்க முடியும்? எத்தனை பேருக்கு மருத்துவ உதவி செய்திருக்கலாம்?.கல்வி கொடுத்துருக்கலாம்.? ஆக்கப்பணிகள் எவ்வளவோ இருக்க நம் ஆட்களும் சேர்ந்து அழிவுப்பாதை நோக்கிப் போகிறார்களே...? இது தான் வயித்தெரிச்சலா இருக்குய்யா...? எதோ உங்க blog பாக்குறவங்களாவது link கொடுத்து முடிந்தவரை விழிப்புண்ர்வு ஏற்படுத்தட்டும்.....

    பதிலளிநீக்கு
  6. பதவி, பொறுப்பில் இல்லாத ஒரு இயல்பான சாதரண முஸ்லீம்கூட தன் மதத்தை இஸ்லாத்தை விட்டுக்கொடுப்பதும் இல்லை. பழிப்பதும் இல்லை. ஆனால் சொந்த மதத்தை எப்படி வேண்டுமானால் கிழித்து துவைத்து தொங்கவிடுவது இந்துவாய் பிறந்த எவருக்கும் சாத்தியம். மதமும் அதை அனுமதிக்கிறது. சாதரணனுக்கும் சாத்தியம். மிகப் பிரபலங்களுக்கும் சாத்தியம்.

    நான் மட்டும் ஏன் இந்து மதத்தை விட்டுக்கொடுக்க வேண்டும்?. இங்கே இஸ்லாத்திற்கு எதிராக எதுவும் சொல்லப்படவில்லை. இஸ்லாத்தின் பெயரால் இயங்கும் தவறானவர்கள் அடக்கப்பட வேண்டும் என்பதே நமது விருப்பம். சொத்தை காங்கிரஸ் இருக்கும்வரை அது சாத்தியமில்லை. இந்நிலை மாற அல்லது மோடி வந்தால் இந்த கேடுகெட்ட காங்கிரசை விட நிச்சயம் ஒரு படியாவது நன்றாக இருக்கும்.

    ஆக மதம் சார்ந்த ஆதரவை மோடிக்கு உரக்கத் தெரிவிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. ரொம்ப நன்றி, தோழர்.
    எழுதத் தூண்டும் பதிவு.

    பதிலளிநீக்கு