அன்புடன் இரண்டு அழைப்புகள்

(1)            இலக்கியச் சந்திப்புக்கு முதல் அழைப்பு
நமது வலை நண்பர் –தற்போது நியூயார்க்கில் பணியாற்றி வரும் – மதுரையைச் சேர்ந்த திரு ஆல்ஃபிரட் தியாகராஜன் (எ) ஆல்ஃபி அவர்கள், வரும் 13-01-2016 அன்று புதன் (மாலை5 –7மணி) புதுக்கோட்டை வருகிறார்.  

நாம் வழக்கமாக “வீதி“ கலை-இலக்கிய நிகழ்வில் மாதந்தோறும் சந்திக்கக் கூடிய –பேருந்துநிலைய மாடி– “ஆக்ஸ்ஃபோர்டு சமையற்கலைக் கல்லூரி” 

புதுக்கோட்டை நண்பர்கள் மட்டுமின்றி, திருச்சி, தஞ்சை, காரைக்குடி நண்பர்கள் அனைவரும் வருக வருக என அன்புடன் அழைக்கிறோம்.

அவரைப் பற்றிய கூடுதல் விவரம் – 
நமது வலைப்பதிவர் திருவிழா மிக நன்றாக நடக்க முதற்காரணமாய் விளங்கிய திரு விசுஆசம் அவர்களின் இனிய நண்பர், வலைப்பதிவர் விழாவுக்கு அங்கிருந்தே கையேட்டு விளம்பர நிதி வழங்கியவர்.

 இனியவரைப் பற்றிய முழுவிவரம்
 அவரது வலைப்பக்கத்திலிருந்து....

ஆல்ஃபிரட் தியாகராஜன் என்கிற ஆல்ஃபி.
திண்டுக்கல்லில் பிறந்துஆரம்பக்கல்வியை தேவதானப்பட்டியில் பயின்று, மேல்நிலைக்கல்வியை காந்திகிராமத்தில் முயன்று, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து மரை கழன்று, அப்படியும் பசிதீராமல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஸியல் சயின்ஸ்-ல் எம்.ஏ. சமூகவியல் படித்தவன்.  
 
சொந்த பூமியை சோகத்தில் ஆழ்த்திவிட்டு, 2000 த்திலிருந்து நியூயார்க் வாசி. அதாவது கோட் அணிந்த பரதேசி’. நியூயார்க் வந்த பிறகும் ஆன்மீகப்ப்பசி ஆட்டிப்படைத்ததால் 2006-ல் நியூயார்க் தியாலஜிக்கல் செமினரியில் இறையியல் மேற்படிப்பு முடித்தேன்.மான்ஹாட்டனில் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராக பணியாற்றிவருகிறேன்.
 
இருப்பது அமெரிக்காவில் என்றாலும் இறைவனின் நல்லாசியுடன் ரூத் எலிஸபெத் என்கிற ஒரே ஒரு மனைவியுடனும்,[ வேற ஒண்ணும் அமையலங்க] அனிஷா [19] அபிஷா[17] என்கிற இரு அழகிய ராட்சஸ மகள்களுடனும் வாழ்ந்து வருகிறேன்.
என் இளம் வயதில் குட்வில் ஃபவுண்டேஷன்என்ற அமைப்பைத்துவங்கிwww.goodwillcdp.orgசமூகப்பணியில் எப்போதும் தீராத ஆர்வத்தோடு பணியாற்றி வருகிறேன்.
 
இவ்வளவையும் படிச்சிட்டு என்னை ரொம்ப சீரியஸான ஆள்ன்னு நெனச்சீராதீங்க. நமக்கும் வடிவேலு மாதிரியே பில்ட்-அப் மட்டும் தான் ஸ்ட்ராங்க். மத்தபடி பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்தான்.
அவரது வலைப்பக்கம் -

      இது அவரது G+
Paradesi Alfy
Worked at Openwave Computing LLC
Lives in New York, NY, United States
109 followers|709,076 views

(2)    அடுத்த செய்தி –
விருதுவழங்கும் விழா எனது அன்பான அழைப்பு!
நமது “கம்பன் தமிழும் கணினித் தமிழும்நூலுக்கு, தமிழிலக்கிய வாதிகளிடையே புகழ்பெற்ற திருப்பூர் தமிழ்ச்சங்க விருது கிடைத்த மகிழ்ச்சியான செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்-
விருது வழங்கும் விழா எதிர்வரும் 04-02-2016 
மாலை 6மணிக்கு, திருப்பூர் புத்தகவிழா மேடையில் நிகழவுள்ளது.
நண்பர்களை அன்புடன் விருது வழங்கும் விழாவுக்கு அழைக்கிறேன்.

அந்த நூலுடன் வெளியிடப்பட்ட “முதல்மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!நூல் ஒரே ஆண்டில் 3விருதுகளைப் பெற்றுவிட்டது.
சென்னை–கவிதை உறவு இதழ்  முதற்பரிசு,
கம்பம்–பாரதிதாசன் பேரவை  முதற்பரிசு,
ஈரோடு–சிகரம் இதழ்  முதற்பரிசு.

எனது புதிய மரபுகள்  கவிதை நூல் கடந்த 15ஆண்டுக் காலமாக மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் எம்.ஏ.தமிழ் வகுப்புக்குப் பாடநூலானதோடு, 1993ஆம் ஆண்டின் தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றத்தின் சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருதினைப் பெற்று,
தற்போது இரண்டாம் பதிப்பும் கண்டுள்ளது.

ஆனால், எனது உழைப்பைக் கடுமையாகப் பெற்ற “கம்பன் தமிழும் கணினித் தமிழும்”விமர்சன நூலை யாரும் கண்டுகொள்ள வில்லை என்று வருந்திய என் வருத்தம் போக்கும் வகையில் பிரபலவிமர்சகர் எழுத்தாளர் பேரா.அருணன், நூலை வெகுவாகப் பாராட்டி,  “சன்செய்திகள்நூல்விமர்சனம் பகுதியில் பேசினார். இப்போது, இந்த விருதுச் செய்தி!
திருப்பூர் தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கும் நூலை விருதுக்குத் தேர்வுசெய்த நடுவர்களுக்கும் நன்றி!

இதோடு, இந்த 2016ஆம் ஆண்டின் முதல்நாளில் 
நமது நண்பரும் கவிஞருமான மீரா.செல்வக்குமார் தனது வலைப்பக்கத்தில் இந்த நூலை அறிமுகப் படுத்தி எழுதிய கவிதை என்னை நெகிழ வைத்தது -பார்க்க -    http://naanselva.blogspot.com/
-----------------------------------
வலை நண்பர்களின் உற்சாக உரைகளால் வளரும்நான், 
மேலும் வளர நண்பர்களின் அன்பே அடிப்படை என்பதால் 
இந்த நன்றி கலந்த அழைப்புகள்.
------------------------------------

10 கருத்துகள்:

 1. நம்மூர் வருகை சந்தோசம்... திருப்பூர் தமிழ்ச் சங்க விருது கிடைத்தமைக்கு மிகவும் சந்தோசம் ஐயா... வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 2. விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் கவிஞரே...
  நண்பர் ஆல்பர்ட் அவர்களுக்கும் வாழ்த்துகள்
  தமிழ் மணம் 2

  பதிலளிநீக்கு
 3. மனம் நிறைந்த வாழ்த்துகள் அண்ணா...பரதேசி சாரை வரவேற்கிறேன்....அவசியம் சந்திப்போம்..

  பதிலளிநீக்கு
 4. அய்யா..இது உங்களின் தன்னடக்கம்...இன்னும் பல நூல்களை எதிர்பார்க்கிறோம்..உங்கள் சக்தி உங்களுக்கே தெரியவில்லையா..அல்லது ஏதெனும் கோபத்தில் இருக்கின்றீர்களா தெரியவில்லை...கொண்ட அறிவு யாவையும் எழுத்தில் கொட்டுங்கள்..
  உங்கள் லட்சிய எழுத்தை இன்னும் நீங்கள் படைக்கவில்லை...அது வருமாயின் ...அது உங்கள் விஸ்வரூபமாய் இருக்கும்..அது சரி. எல்லாரையும் எழுதத்தூண்டும் உங்களை என்ன செய்து எழுதத்தூண்ட..?இந்த பரிசுகள் சின்ன பிள்ளைகளின் விளையாட்டு பொம்மைகளே..உண்மையான பரிசு உங்களுக்கு காத்திருக்கிறது..அந்த நாளிலும் வாழ்த்துவோம்..இன்னும் இன்னுமாய் ...உங்கள் படைப்புகளுக்காகவும்,,,நீங்கள் பெறப்போகும் பரிசுகளுக்காகவும்...
  காத்திருப்போர் வரிசையில் நான் முதலாவதாய்...

  பதிலளிநீக்கு
 5. மிக மிக மகிழ்கிறேன் அண்ணா . இனிய வாழ்த்துகள் :-))

  பதிலளிநீக்கு
 6. நண்பர் வருகையறிந்து மகிழ்ச்சி. வாய்ப்பிருப்பின் சந்திப்போம். விருது பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. விருது பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
 8. விருது பெறுவதற்குப் பாராட்டுக்கள் அண்ணா! ஒரே ஆண்டில் மூன்று விருதுகள் என்பது பெரிய சாதனை! இன்னும் பல சாதனைகளைத் தாங்கள் நடத்த வாழ்த்துகிறேன்!

  பதிலளிநீக்கு
 9. மனமார்ந்த வாழ்த்துகள்! மகிழ்வு!

  பதிலளிநீக்கு