வலைப்பதிவர் வெங்கட் அவர்களே! வருக!வருக!


2009முதல் எழுதிவரும்
மூத்த தமிழ் வலைப்பதிவர் மட்டுமல்ல,
போகிற இடங்களைப் பற்றியெல்லாம்
சுவாரசியமாக எழுதும்
முன்னணித் தமிழ்ப்பதிவரும்கூட!
நீண்ட நாள்களாகத் தொடர்ந்து
தமிழ்மணத்தின் முன்னணிப் பதிவர்களில்
முதல் பத்துக்குள் இருப்பவர்!
புதுதில்லியில் பணியில் இருந்தாலும்
நமது அன்னைத் தமிழை மறவாமல் தொடர்ந்து எழுதுபவர்
திருமிகு வெங்கட் நாகராஜ் அவர்கள்
புதுக்கோட்டைக்கு வருகிறார்!
நமது கணினித் தமிழ்ச்சங்க நண்பர்களை
சந்திக்க ஆவலுடன் வருகிறார்!
புதுக்கோட்டை நண்பர்கள் மட்டுமின்றி,
தஞ்சை, திருச்சி முதலான அருகிலுள்ள 
பிறமாவட்ட  நண்பர்களையும் வருக வருக என
அன்புடன் அழைக்கிறோம்!
நண்பரின் துணைவியாரும்
தமிழ்வலைப்பதிவர் என்றே அறிகிறோம்!
எனவே,
வலைத் தம்பதியினரை
புதுக்கோட்டை வலைநண்பர்கள் குடும்பத்தினரின் சார்பாக
வருக வருக என அன்புடன் அழைக்கிறோம்!

19 கருத்துகள்:

  1. வணக்கம் அய்யா!
    வலைப்பதிவர் வெங்கட் அவர்களை அன்போடு வரவேற்கிறது புதுக்கோட்டை. சென்ற புதன் அன்று திருச்சி மங்கள் அண்ட் மங்கள் கடையில் இருவரும் எதேச்சையாக சந்தித்துக் கொண்டோம். முதலில் நான் தான் அடையாளம் கண்டேன் மறக்க முடியாத நிகழ்வு அய்யா வலைப்பதிவின் வீச்சு இது தான். வெங்கட் அவர்களின் மனைவி, குழந்தை இருவரும் வலைப்பதிவர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி. விழா சிறக்க வாழ்த்துகள் அய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பாண்டியன், நெடுநாள் கழித்து திருச்சி வந்த நீங்கள் அப்படியே இந்தப் பக்கம் வந்திருக்கலாம்ல? (இனிமே ஆல்ஃபி, வெங்கட் மாதிரி வரவேற்புத் தந்து தான் உங்களை வரவேற்கணும் போல.. எங்கிருந்தாலும் வா...ழ்க!) எழுதுவது குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள் அதுபோதும்!

      நீக்கு
  2. வலைத்தள குடும்பத்தை (குழந்தை ரோஷ்ணிக்கு ஒரு வலைத்தளம் இருந்தது...!) வாழ்த்தி வரவேற்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா.. குடும்பத்தோடு பதிவரானவரை வரவேற்க, புதுக்கோடடைக் கணினித் தமிழ்ச்சங்கக் குடும்ப உறுப்பினரான தாங்களும் வரலாம்ல..? வருக வருக!

      நீக்கு
  3. ஆஹா,,, வெங்கட் அண்ணா வர்றாரா?
    அருமையான பதிவர்... பயணக்கட்டுரைகள் எழுதுவதில் எல்லாரையும் கவர்ந்தவர்....

    அண்ணியாரும், பாப்பாவும் கூட பதிவர்களே...

    வாழ்த்துக்கள்...

    விழா சிறக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நண்பரே! வருகிறார்.. நீங்கள் இங்கு வரும்போது எங்களைச் சந்திக்க ஒரு நாள் சேர்த்து விடுப்பெடுத்து வரவேண்டும். இப்போதே முன்பதிவு செய்துவிட்டேன் ஆமா.. (இப்படிக் கேட்க எனக்குத் தகுதியில்லைதான் என்றாலும் ஆசைபற்றிக் கேட்கிறேன், உங்கள் சிறுகதைத் தொகுதி எப்போது வருகிறது நண்பரே? விரைவில் கொண்டு வாருங்கள்)

      நீக்கு
    2. வணக்கம் ஐயா...
      இந்த முறை கண்டிப்பாக தங்களைச் சந்திக்க வருவேன். மே மாதம் ஊருக்கு வருவேன் என்று நினைக்கிறேன்.

      நீங்க வான்னு சொன்னாலே போதும்... இதற்கு எதற்கு தகுதி என்றெல்லாம்... நீங்களெல்லாம் நான் மதிக்கும் ஆசான்கள்... மிகப் பெரியவர்கள்... இந்த வார்த்தை வேண்டாமே.

      முன்பதிவா... அதுசரி.... சென்ற முறை வரவேண்டும் என நினைத்து முடியாமல் போனது. இந்த முறை புதுக்கோட்டைக்கு பயணம் கண்டிப்பாக அமையும் ஐயா....

      சிறுகதைத் தொகுப்பு இன்னும் கிடப்பில்தான் இருக்கு... பார்க்கலாம் ஐயா....

      நன்றி.

      நீக்கு
  4. வெங்கட் அண்ணா, ஆதி மேடம் ரெண்டு பேரும் என் friends. அவங்க ரெண்டு பேரும் வந்தா இன்னும் சந்தோசம். எப்படியோ அண்ணா வராரே! வருக! வருக!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆல்ஃபி வரவேற்புக்கு நீ வரலயில்ல..? இப்ப கட்டாயம் வந்திருவேன்னு நம்புறேன்.. வரவேற்க வந்திருடா!

      நீக்கு
  5. அடடா.... பதிவாகவே எழுதி அசத்தி விட்டீர்களே.... மிக்க நன்றி. ஞாயிறன்று சந்திப்போம்.....

    பதிவில் கருத்துச் சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் நண்பர்களின் கருத்துகளைப் பார்த்தீங்களா நண்பரே? தங்கள் துணைவியாரோடும் மகளோடும் வரவேண்டும் என்னும் கருத்தை நானும் வழிமொழிகிறேன். வருக வருக

      நீக்கு
  6. வரவேற்பதில் மகிழ்கிறது புதுக்கோட்டை!

    பதிலளிநீக்கு
  7. வெங்கட் ஜிக்கு எமது வரவேற்பும்
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  8. சென்னை சந்திப்பில் இவருடன் பேச முடியவில்லை! அருமையான பதிவருடன் அளவளாவ சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது புதுகை நண்பர்களுக்கு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. சிறப்பு விருந்தினர் திரு.வெங்கட் நாகராஜ் அவர்களை உங்களோடு சேர்ந்து வரவேற்பதில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன்.புதுக்கோட்டை நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியும் வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
  10. நான் மிகவும் ரசித்து படிக்கும் வலைத்தளம் வெங்கட் தளம்! --அவர் சென்ற இடங்கள்--வட இந்தியாவில் பார்க்கவேண்டிய இடங்களை அவர் ஒரு புத்தகம் போடவேண்டும்---முக்கியமாக அங்கு கிடைக்கும் சாப்பாடு பற்றி!

    பதிலளிநீக்கு