நூல்வெளியீட்டுவிழா - நிகழ்ச்சிப் படத்தொகுப்பு


புதுக்கோட்டையில் நடந்த கவிஞர் நா.முத்துநிலவன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா - நிகழ்ச்சிப் படத்தொகுப்பு

வாசலில் வரவேற்புப்பூ
செல்வி லட்சியாநிலவன்,  திருமதி மல்லிகா நிலவன்
தமிழ்த்தாய் வாழ்த்து செல்வி சுபாஷினி சுந்தர்


மண்ணின் பாடல்களை வந்தோர் மனம்குளிரப் பாடிய நெல்லை கரிசல்குயில்
கிருஷ்ணசாமிக்கு நினைவுப்பரிசு வழங்குகிறர் சிறப்பு விருந்தினர் ஜி.ராமகிருஷ்ணன்
வரவேற்பு மற்றும் விழா ஒருங்கிணைப்பு
கவிஞர் தங்கம் மூர்த்தி
(“இந்த அரங்கில் சால்வைகள் தடைசெய்யப் படுகின்றன!”)

 நூல்கள்  வெளியீடு

வாழ்த்துரையை எழுச்சியுடன் தொடங்கிவைத்த கவிஞர் கவிவர்மன்

தமுஎகச மாநிலத் துணைத்தலைவர் கவிஞர் ஆர்.நீலா வாழ்த்துரை


 தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றப் பொதுச் செயலர்
பேராசிரியர் முனைவர் இரா.காமராசு வாழ்த்துரை


 மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் சமூக விமர்சகர்
மா.சின்னத்துரை நூல் அறிமுகவுரை


 மார்க்சிஸ்ட் கட்சியின் சடடமன்ற உறுப்பினரும்
கவிஞருமான திண்டுக்கல் க.பாலபாரதி நூல் அறிமுகவுரை


ஞானாலயா ஆய்வு நூலக நிறுவனர் பா.கிருஷணமூர்த்தி
“புதியமரபுகள்“ நூல் வெளியீட்டுரை

மதுக்கூர் இராமலிங்கம் “கம்பன் தமிழும் கணினித்தமிழும்“
நூல் வெளியீட்டுரை


தமுஎகச மாநிலத் துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா தலைமையுரை

பார்வையாளர் இடதுபக்கம்


கவிச்சுடர் இரா.சு.கவிதைப்பித்தன் மேனாள்எம்எல்ஏ
கம்பன் கழகச் செயலர் இரா.சம்பத்குமார்

தமிழாசிரியர் கழகத் தலைவர்கள் விலைதந்து
நூல்களைப் பெற்றுச்செல்கிறார்கள்


இராமநாதபுரம் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் விலைதந்து
நூல்களை வாங்கிச் செல்கிறார்கள்

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் விழா நிறைவுரை

 பார்வையாளர்கள் வலப்பக்கம்


 சிறப்பு விருந்தினர்க்கு நினைவுப்பரிசுளிக்கிறார் மல்லிகா நிலவன்

 உணவக உரிமையாளர் சங்கத்தலைவர் சண்முக பழனியப்பன் அவர்களுக்கு
நினைவுப் பரிசளிக்கிறார் பாரதிதாசன் பல்கலையின் தமிழ்த்துறைத் தலைவர்
பேரா.முனைவர் பா.மதிவாணன் அவர்கள் (வலைப்பதிவர்)


தமுஎகச மாவட்டப் பொருளர் சு.மதியழகனுக்கு
நினைவுப்பரிசளிக்கிறார் கவிஞர் மகா.சுந்தர் (வலைப்பதிவர்)


 கவிஞர் கவிவர்மனுக்கு நினைவுப் பரிசளிக்கிறார்
முனைவர் அய்யாவு அவர்கள்


நூலாசிரியரைப் பாராட்டுபவர்-
தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்  வெ.தமிழரசு அவர்கள்

 விழாக்குழு கவிஞர் மு.கீதாவுக்கு நினைவுப் பரிசளிக்கிறார்
சட்டமன்ற உறுப்பினரும் கவிஞருமான திண்டுக்கல் பாலபாரதி


 விழாத்தலைவர் நந்தலாலாவுக்குப் பரிசளிக்கிறார்
வலைப்பதிவரும் கவிஞருமான ஸ்டாலின் சரவணன்


 மகிழ்வும் நெகிழ்வுமான ஏற்புரை


நினைவுப்பரிசாகத் தமிழாசிரியர்கழக நிர்வாகிகளின் அன்போவியம்


 நன்றியுரை - மல்லிகா நிலவன்



நன்றிக்கு நன்றி பாலபாரதி
-------------------------------------------------------------------------------
வெளியூரிலிருந்தும் வந்திருந்த வலைப்பதிவர்கள்..
இவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது?
திருச்சியிலிருந்து  திரு.தி.தமிழ்இளங்கோ
தஞ்சையிலிருந்து திரு கரந்தை ஜெயக்குமார்
(நடுவில் என் தங்கை மைதிலியும் குட்டீஸ் மகி-நிறையும்)
பெங்களுரிலிருந்து வந்திருந்த
தேன்மதுரத்தமிழ் கிரேசும் அவரது துணைவர் திரு வினோத்தும்..


புதுக்கோட்டை எழுத்தாளர் பட்டாளத்தின் ஒரு பகுதி..
கவிவர்மன், நா.மு, ஆர்.நீலா, மு.கீதா,மைதிலி, கஸ்தூரியுடன்
திருச்சியிலிருந்து வந்து அனைவரையும் சுட்டுத் தள்ளிக்கொண்டே இருந்த 
சகோதரர் தி.தமிழ்இளஙகோ...
இவரிடமிருந்து அய்யா மதிவாணன் அவர்களும், 
நண்பர் விஜூவும் எப்படித் தப்பினார்கள் என்று  
26-10-2014 அன்று மதுரையில் கேட்கவேண்டும்
அதுக்குத் தனீ  விளம்பரப் பதாகை வச்சிருந்தோம்ல..?
அந்தப்படத்துடன்,
விழாவின் ஒலி-ஒளிக் காட்சித் தொகுப்பு
 நாளை வெளியிடப்படும்...டும்..டும்..டும்..
----------------------------------------------------------------------------------------

வலைச்சரத்திலேயே அறிமுகப்படுத்தி வரவேற்று
விழாத்தொகுப்பையும் பதிவிட்ட சகோதரி மு.கீதா-

படங்களோடு பதிவுசெய்த சகோதரர் மணவை ஜேம்ஸ்-

விழாவின் செய்திப்படங்களை வெளியிட்டிருக்கும்
திருச்சி சகோதரர் தமிழ் இளங்கோ -

வலைப்பதிவர்களின் “மினி“ சந்திப்பு பற்றி 
எழுதியிருக்கும் தங்கை மைதிலி -
வலைப்பதிவர்களின் “குடும்ப விழா“ என்றே எழுதிவிட்ட
அருமைச் சகோ.மது கஸ்தூரிரெங்கன் - http://www.malartharu.org/2014/10/muthunilavans-book-release.html 


வந்து சிறப்பித்த அனைவர்க்கும்...நன்றிங்க.. 
நம் பயணம்  தொடரும்.
வேறென்ன சொல்ல?
------------------------------------------------------------------------------------ 
பி.கு. மூன்று நூல்களின் மொத்த விலை ரூ.330 எனினும் விழாவில் ரூ.250க்குக் கிடைக்கும் என்று அகரம் ப திப்பகம் அறிவித்ததை யொட்டி விழா அன்று மட்டும் சுமார் 300செட் (அதாவது 300X3ஆக 900நூல்கள் ரூ.75,000க்கு) விற்பனையாகியுள்ளதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறேன். நிறைய விற்பனையாவதெல்லாம் நல்ல நூல் என்று சொல்ல முடியாதுதான், நீங்கள் படித்துவிட்டுச் சொல்ல வேண்டுகிறேன்... 
வலைப்பதிவர் திருவிழா மதுரைச்சந்திப்பில் விழாக்குழுவினர் அனுமதி தந்தால் அங்கேயும் இதே விலைக்கு நூல்களை விற்பனைக்கு வைக்கலாம் என்று நினைத்திருக்கிறேன், அகரம் பதிப்பகத்தாரிடம் கேட்க வேண்டும். நன்றி.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 

42 கருத்துகள்:

  1. பாரட்டுக்கள் & வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. எப்ப சார் அமெரிக்காவில் நூல் வெளியிடப் போறீங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் அங்கே வரவிருக்கும் தங்கை -தேன்மதுரத் தமிழ் கிரேஸ் வெளியிட்டபின், எனது நூல்களை அங்கே அனுப்புவேன்... உங்கள் முகவரி தருக -muthunilavanpdk@gmail.com

      நீக்கு
    2. கண்டிப்பாக எடுத்துச் சென்று அனுப்பிவிடுகிறேன் அண்ணா..

      நீக்கு
  3. அருமையான புகைப்பட தொகுப்பு....

    விழாவினை முழுமையாக அறிந்து கொள்ள உதவியது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமது “மதுரையில் நடைபெறும் வலைப்பதிவர் திருவிழா“ பற்றிய விளம்பரப் பதாகை ஒன்றையும் விழா அரங்க வாயிலில் வைத்திருந்தோம். அந்தப் பதாகையை மதுரைக்கும் கொண்டு வருவோம்..புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் சார்பாக...

      நீக்கு
    2. நமது மதுரை வலைப்பதிவர் விழாவிற்கு ஒரு விளம்பரப் பதாகையை (ஃப்ளெக்ஸ் போர்டு) எனது நூல்வெளியீட்டு விழாவில் வைத்து, தங்களின் மற்றும் சீனா அய்யா, டிடியின் தொடர்பு ஐடிகளையும் தந்திருந்தேன். நன்றி.

      நீக்கு
  4. வாழ்த்துக்கள் ஐயா.
    தங்களின் இந்த புகைப்படத்தொகுப்பை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
    உண்மையில் நீங்கள் நூல் வெளியீட்டு விழா என்று அறிவித்திருந்தாலும் இது மதுரை பதிவர் விழாவிற்கான ஒரு முன்னோடியாகத்தான் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே, எங்கள் -புதுக்கோட்டை- மாவட்டப் பதிவர்கள் சுமார் 20பேர் வந்திருந்தனர், அவர்களோடு வெளிமாவட்ட வலைப்பதிவர் 7,8பேர் வந்திருந்ததால் அரட்டைக்குப் பஞ்சமி்ல்லை...(திருச்சியிலிருந்து தி.தமிழ்இளங்கோ, முனைவர் பா.மதிவாணன், ஊமைக்கனவுகள் விஜூ, தஞ்சையிலிருந்து கரந்தையார், களப்பிரன், பெங்களுர் கிரேஸ், இராமநாதபுரத்திலிருந்து சுந்தா எனப பற்பலர்...

      நீக்கு
  5. அருமையான விழா ஐயா
    நேரில் கண்டு மகிழும் ஓர் வாய்ப்பு எனக்குக் கிட்டியதை எண்ணி மகிழ்கின்றேன்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  6. நிகழ்ச்சி தொகுப்பு புகைப்படங்கள் அனைத்தும் அருமை... நமது மதுரை விழாவில் மறக்காமல் அனைத்து நூல்களையும் கொண்டு வாருங்கள் ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தமாதம் வெளியிடப்பட்ட எனது நூல்களை மதுரைப் பதிவர் திருவிழாவில் அறிமுகப்படுத்த, விற்பனைக்கு வைக்க இயலுமா டிடி அய்யா? இயலுமெனில் கொண்டுவருகிறேன்.தங்களின் இனிய வாழ்த்துக்கு நன்றி

      நீக்கு
  7. புகைப் படங்கள் பார்த்தத்தில் நிகழ்ச்சி எவ்வளவு சிறப்பாக நடந்திருகிறது என்று புரியக்கூடியதாக உள்ளது. மிகவும் சந்தோஷமாக இருந்தது நிலவன் அண்ணா வரமுடியவில்லை என்று கவலையாகவும் இருந்தது.
    தங்கள் விருப்பம் நிறைவேறியதையிட்டு மகிழ்ச்சியே. மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  8. அருமையான புகைப்படத்தொகுப்பு. விழாவை நேரில் பார்த்த பரவசம் தொற்றிக்கொண்டது. வாழ்த்துகள் தோழர் முத்து நிலவன்...

    பதிலளிநீக்கு
  9. கடந்த சில ஆண்டுகளில் புதுக்கோட்டையில் நடந்த விழாக்களில் சிறப்பான விழாவாக அமைந்திருந்தது தங்களின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா. அரசியல், இயக்க, கொள்கை மாச்சரியங்கள் கடந்த பார்வையாளர்களால் அரங்கு நிரம்பி வழிந்தது பெருமைக்குரியது.
    ஒளிப்படத் தொகுப்பு நல்ல முறையில் ஆவணமாக்கப்பட்டதில் மகிழ்ச்சி. ஏனோ தங்களையும் பார்வையாளரையும் இசையால் கிரங்க வைத்த கரிசல்குயில் கிருஷ்ணசாமி அவர்களின் ஒளிப்படம் இத்தொகுப்பில் இடம் பெறவில்லை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா. அது ஒரு தனி -சோகம் நிறைந்த- கதை அய்யா, தங்களிடம் தனியே சொல்கிறேன். தங்களின் அன்பான வருகை மற்றும் வாழ்த்து மிகுந்த மகிழச்சியளிக்கிறது நன்றி அய்யா.

      நீக்கு
  10. நூல் வெளியீட்டு விழா சம்பந்தமான உங்கள் வண்ணப்படத் தொகுப்பானது ஒரு விழா எப்படி அமைய வேண்டும் என்பதைச் சொல்லியது. நான் படம் எடுத்து பதிவினில் தந்த போது சிலருடைய பெயர்கள் விடுபட்டு போயின.. உங்கள் பதிவின் மூலம் சரி செய்து கொண்டேன். அடுத்த டும் ... டும் ... டும்மை .. ஆவலோடு எதிர்பார்க்கிறேன்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இடையில் எனது துணைவியார் பொறுப்பில் உள்ள தொலைத்தொடர்பு ஊழியர் சங்க மாநில மாநாட்டுக்குச் சில உதவிகளைச் செய்ய வேண்டியிருப்பதால் இன்னும் இரண்டுநாளில் வெளியிடுவேன் அய்யா. தங்களின் வருகைக்கும் சுறுசுறுப்பான படத்தொகுப்பிற்கும் தொடரும் தங்களின் அன்பான வாழ்த்துக்கும் மிகுந்த நன்றிஅய்யா

      நீக்கு
  11. பாராட்டுக்கள், வழ்த்துக்கள்! ஐயா! இன்னும் பல நூல்கள் தாங்கள் வெளியிட வாழ்த்துக்கள்!

    புகைப்படத் தொகுப்பு அருமை, சகோதரி மைதிலி, தோழர் கஸ்தூரியையும் குடும்பத்தையும் பார்த்ததில் மகிழ்ச்சி! விஜு ஆசான் தப்பியதால் பார்க்க முடியாமல் போனதில் கொஞ்சம் வருத்தம்! குடும்பவிழா?!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசானே!
      என்ன இது எங்கு பார்த்தாலும் என்னைத் தேடிக்கொண்டிருக்கிறீர்கள்!
      திடீரென்று உங்கள் பள்ளிக்கு வந்து உங்கள் முன் நிற்கப்போகிறேனா இல்லையா பாருங்கள்.

      நீக்கு
    2. அய்யா,
      இதெல்லாம் அன்பால் தானாகச் சேர்ந்த கூட்டம் என்பதை நானும் அக் கூட்டத்தில் ஒருவனாயிருந்து அறிய முடிந்தது.
      மீண்டும் அவ்வையின் குரல்தான்,

      “மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
      விரைந்தழைப்பார் யாவரும் இங்கில்லை“

      திருச்சியலிருந்து வந்த நாங்கள் மூவரும் அழைப்பில்லாமல் வந்தவர்கள்.
      அழைக்க வேண்டிய அவசியமும் இல்லாமல் அங்கே வந்திருந்தவர்கள் பலரைக் கண்டதால்தான் இதை மேற்கோள் காட்டினேன்.
      நிறைய விற்பனையாகும் நல்ல நூல்களும் உண்டு.
      உங்களின் மூன்று நூல்களுமே அத்தரம் வாய்ந்தவைதான்.
      வாசித்தவன் சொல்லலாம் தானே?
      நன்றி.

      நீக்கு
    3. அய்யா, “அழைப்பில்லாமல் வந்தவர்கள்“ என்று சொல்லி என்னைத் துன்புறுத்தாதீர்கள். அஞ்சலில் இட்டது என் தவறு, நேரில் வந்து தந்திருக்க வேண்டும். இயலவில்லை. மன்னியுங்க்ள் எனினும் தங்களின் பெருந்தன்மையான வருகைக்கு எனது பணிவான நன்றியும் வணக்கமும்.

      நீக்கு
  12. அண்ணா!
    பதிவுலகில் எந்த பக்கம் திரும்பினாலும் நம்ம குடும்ப விழா தான் களைக்கட்டுது:)) அதிசயத்திலும் அதிசயமாக கஸ்தூரி இந்த முறை கேமராவிற்கு அதிகம் வேலைகொடுக்கவில்லை. விழா நேரம் போனதே தெரியவில்லை. கட்டுண்டு போனோம். படங்களை கூட இளங்கோ அண்ணனிடம் தான் பெற்றேன். இங்கே இத்தனை படங்களை பார்ப்பது மலரும் நினைவாக இருக்கிறது !!! மிக்க மகிழ்ச்சி அண்ணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கை கிரேசுடன் உன் நேரத்தைப் பகிர்ந்துகொண்டு, என் பழியைத் துடைத்தாய், மிக்க நன்றிப்பா.. நீயும் கஸ்தூரியும் போனபிறகு நண்பர் விஜூ வந்திருப்பார் போல.. (அவருக்கு அழைப்புக் கிடைக்க விலலையாம். எனக்கும் வருததமாக இருந்தது) எனினும் உன் பதிவில் என் புத்தகம் பற்றிய உன கருத்தை அழகாக எழுதிவிட்டாய். 26-10 மதுரைக்குப் போக நம் நண்பர்களை அழைக்க வேண்டும்....

      நீக்கு
    2. ஆமாம், மைதிலி சொல்வது போல சிறப்பாக நடைபெற்ற குடும்ப விழா இணையத்திலும் இதயத்திலும் இனிமையாய் நிலைத்துவிட்டது. :))
      அண்ணா, நீங்களும் எவ்வளவு நேரம் எங்களுடன் இருந்தீர்கள்..அதுவும் விழா நாயகன் நீங்கள்...பழியெல்லாம் வர வழியே இல்லையண்ணா :)
      படங்களைச் சேமித்து வைத்துக்கொண்டு அவ்வப்பொழுது பார்க்கப்போகிறேன்..அமேரிக்கா செல்லும் முன் உங்களனைவரையும் கண்டது மிகவும் மகிழ்ச்சி!

      நீக்கு
  13. விழா சிறப்பாக அமைந்ததை படங்களின் தொகுப்பு சொல்கிறது ஐயா...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. படங்களின் தொகுப்புக்கு நன்றி சார் . வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. சிறப்பான நூல் வெளியீட்டு விழா. கலந்து கொள்ள முடிய வில்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்தி விட்டது
    வாழ்த்துக்கள் ஐயா!
    மதுரையில் சந்திப்போம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா தங்களுக்காவது அழைப்புக் கிடைத்ததா? (அஞ்சல் துறை ஏன் அழிந்து வருகிறது என்பதை இந்த என் விழா எனக்கு நன்கு உணர்த்திவிட்டது) வாழ்த்துக்கு நன்றி, மதுரையில் சந்திப்போம்.

      நீக்கு
  16. அய்யா,

    விடுமுறைக்கு பின்னர் இன்றுதான் தங்கள் தளம் வருகிறேன்... தங்களின் நூல் வெளியீட்டு விழா சிறப்புகளை சக வலைப்பூ அன்பர்கள் மூலம் அறிந்த போது நம்மால் அங்கிருக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் ! மேலும் உங்கள் விழாவுக்கு சில வாரங்கள் முன்பு வரையிலும் காரைக்காலில்தான் இருந்தேன் என்று நினைக்கும்போதெல்லாம் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத வருத்தம்...

    தங்களை வாழ்த்தும் வயதும் அனுபவமும் இலாதவன் என்பதால் வணங்குகிறேன்.

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
  17. இப்பதான் கற்றுக்கொள்கிறேன் தளம் பார்த்து எழுத. விழா அற்புதமாக நடந்தது. நிழற்படங்கள் அனைத்தும் நிஜங்கள். வாழ்த்துக்கள் அய்யா.

    பதிலளிநீக்கு