விஜய் டிவியின் “மகா கேவலமான நிகழ்ச்சி”

தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் மிகச்சிறந்த நிகழ்ச்சிகளோடு, மிகமிகக் கேவலமான நிகழ்ச்சிகளையும் தருவது விஜய் தொலைக்காட்சிதான் என்று நினைக்கிறேன். ஒரே நேரத்தில் எப்படி இப்படி?
நீயா-நானா, மகாபாரதம் போலும் நல்ல சில நிகழ்ச்சிகளை நடத்திவரும் விஜய் டிவியில் இப்போது (அக்டோபர்-2014) ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர்-4 கிட்டத்தட்டக் கேவலத்தின் உச்சத்தை நோக்கிப் போய்விட்டதைக் கேட்பாரில்லையா?
அப்பாவும் மகளும் காதல்பாட்டுடன் நடனமாடும் காட்சி!?!
வேறு எந்த்த் தொலைக்காட்சியிலாவது கண்டதுண்டா?
யாராவது பொதுநல வழக்குப்போட மாட்டார்களா?
நல்ல நிகழ்ச்சி, குழந்தைகளின் இசைத்திறனை உலகறியச் செய்யும் உற்சாக நிகழ்ச்சி என்று பேரெடுத்துவிட்ட “சூப்பர் சிங்கர்-4“ இப்போது கேவலத்தின் உச்சத்தை நோக்கிப் போய்விட்டது.
இதைப்பார்த்தவர்கள் நிச்சயம் கோவப்பட்டிருப்பீர்கள். 
“அன்று வந்ததும் அதே நிலா“ பாட்டுக்கு எம்ஜிஆர் போல அப்பாவும், சரோஜாதேவி(?)போல மகள் ஜர்திகாவும் ஆடிப்பாடும் காட்சியை பார்க்காதவர்கள் பார்த்து நாசமாய்ப்போக –
https://www.youtube.com/watch?v=5XpB2lTidjo 

ஜர்த்திகா ஜூட் என்னும் (14வயது?) பெண்ணும் இவரது தந்தையும் வெளிநாட்டிலிருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே வந்தார்களாம்.
நல்லா வந்தாங்கப்பா...
அவுங்களக் குத்தம் சொல்றதா?
ஆடவுட்ட விஜய் தொலைக்காட்சியைச் சொல்றதா?
----------------------------------
ஆனால், பிறகு 10-10-14அன்று ஒளிபரப்பான பின்வரும் நிகழ்ச்சியைப் பார்த்துப் பிரமித்துப் போனதும் உண்மை.
சீனியர் யாழினி மற்றும் ஜூனியர் அரிப்ரியா பங்குபெறும்
(வஞ்சிக்கோட்டை வாலிபன் படப் போட்டிநடனப் பாடல்)

https://www.youtube.com/watch?v=dh91Zbxx9qg  

நாட்டியத்தில் புகழ்பெற்ற பத்மினியும் வைஜயந்தி மாலாவும் பாடிக்கொண்டே ஆடவில்லை, இந்தக் குழந்தைகள் -மூச்சிறைக்காமல் இருப்பதற்காக- நடனத்தை அளவோடு ஆடிக்கொண்டே அற்புதமாகப் பாடியதை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். குழந்தைகளின் திறமையை வெளிக்கொண்டுவர நினைப்பவர்கள் இப்படித்தான் யோசிக்க வேண்டும் அதற்காக அப்பனையும் மகளையும் ஆடவிடுவது கேவலமில்லை?

சரி...
இப்ப, விஜய் டிவியைப் பாராட்டுவதா? திட்டுவதா?

“கேவலம்“ எனும் தமிழ்ச்சொல்லுக்குப் பழந்தமிழில் –
“மிகச் சிறப்பு“ என்று பொருள் 
(சந்தேகப் பிராணிகள் அகரமுதலி காண்க)
இன்றைய தமிழில் “மிக மோசமானஎன்பது எல்லாருக்கும் தெரியும்.

ஆக,
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி
விஜய் டிவியின் “மகா கேவலமான நிகழ்ச்சி என்று 
இரண்டு பொருள்பட- “பாராட்டுவதுதான் சரி. 
ன்ன சரிதானுங்களே?!?

9 கருத்துகள்:

 1. தந்தையும் மகளும் காதல்பாட்டிற்கு நடனமா?
  கேவலம்தான் ஐயா

  பதிலளிநீக்கு
 2. சன் டி.வி.குட்டீஸ் சுட்டீஸ் நிகழ்ச்சில இப்பதான் இரண்டு பொண்ண கட்டிக்கிறேன்னு ஒரு 4 வயது சிறுவன் சொல்றான்..இத கேட்டு எல்லாரும் கைதட்டி சிரிப்பு வேற ..குழந்தைகளை பெரியவர்களைப்போல பேசவிட்டு ரசிக்கின்றார்கள்...இந்தக் கொடுமைய என்னன்னு சொல்ல..

  பதிலளிநீக்கு
 3. இந்த நிகழ்ச்சியை பார்த்த நானும் மனம் வெதும்பியிருந்தேன்.இதை கண்டித்து யாராவது எழுதுவார்களா என்று காத்திருந்த எனக்கு உங்களின் ஆக்கம் கண்டு நிம்மதி அடைந்தேன்.இப்படியான தரம் கெட்ட நிகழ்ச்சியினை கண்டிக்க தங்களை போன்றோர் இருப்பது ஆறுதல் அளிக்கிறது.வாழ்த்துக்கள் ஐயா.இதில் பங்களித்த பெற்றோர்களை எதால் அடிப்பது?

  பதிலளிநீக்கு
 4. How to share this in my facebook page?

  பதிலளிநீக்கு
 5. கலாச்சாரத்தை சீரழிப்பதில் ஊடகங்கள் முன்னிற்கின்றன. விஜய் டி.வியும் இதற்கு விதி விலக்கல்ல

  பதிலளிநீக்கு
 6. சன் டிவி குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியில அண்ணாச்சின்னு ஒருத்தரு வந்து குழந்தைகளிடம் கேட்க கூடாத கேள்விகள் கேட்கிறார், அவரையும் கொஞ்சம் கவனியுங்க..

  பதிலளிநீக்கு
 7. ஏற்கனவே பல பதிவுகளில் நீங்கள் விவாதித்ததுதான் ?
  விக்கும் சரக்கை விற்கிறான் வியாபாரி ...
  அவ்வளவே...
  சமூகமாவது சீர்கேடாவது

  பதிலளிநீக்கு
 8. அன்புள்ள அய்யா,

  விஜய் டி.வி.யில் அப்பாவும் மகளும் காதல்பாட்டுடன் நடனமாடும் நிகழ்ச்சியைப் பார்த்து நெஞ்சக்குமுறலைக் கொட்டியிருந்தீர்கள்.

  ’இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
  கெடுப்பா டிலானுங் கெடும்’
  -சுட்டிக்காட்டியது...இடித்துரைக்க வேண்டியதுதான்.

  அதோடு விட்டுவிட்டால் சமூக அக்கரையுள்ளவர்...!ஆனால் அதற்கும் மேலே சென்று சீனியர் யாழினி மற்றும் ஜூனியர் அரிப்ரியா பங்குபெறும் நிகழ்ச்சி அருமையென்று பாராட்டும் போதுதான் கவிஞர் முத்துநிலவன் ஜொலிக்கிறார்.
  நன்றி.
  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.
  manavaijamestamilpandit.blogspot.in

  பதிலளிநீக்கு
 9. அந்த நிகழ்ச்சி எனக்கும் நெருடலாகத் தான் இருந்தது. பெற்றோருக்கு எங்கே புத்தி போயிற்று . வித்தியாசம் என்ற பெயரில் தரம் தாழ்ந்து போவது நிறுத்தப் படவேண்டும். நிச்சயம் எதிர்ப்பு தெரிவிக்கப் படவேண்டிய ஒன்றுதான்.ஐயா

  பதிலளிநீக்கு