ரொம்ப நாள் கழித்து குமுதம் வாங்கினேன்.
கமல் ஏமாற்றவில்லை.
அசத்தல் பதில்கள்.
வி.ஐ.பி.கேள்வி, உலகநாயகன் பதில்கள் -22-10-2014 குமுதம்
ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கேள்வியும், கமல் பதிலும்-
0 ''அக்ஷரா ஹாசனின் நடிப்பில் கமல்ஹாசன் தெரிகிறாரே? இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?''
00 ''கமல் ஹாசன் நடிப்பில் சிவாஜி, நாகேஷ், திரு.கே.பாலச்சந்தர் தெரியும்போது அக்ஷராவில் கொஞ்சம் கமல் தெரியாமல் போய்விடுவாரா?...
...கலையில் யாரும் சுயம்பு இல்லை. ஏன் யாருமே சுயம்புவல்ல, நாம் படைத்த கடவுளர் கதைகளில் அன்றி!''
எப்புடீ? ... பெரியவுங்க பெரியவுங்கதான்...
வெவ்வேறு துறைகளைச் சார்ந்த வெவ்வேறு அறிஞர்கள் கேள்வி கேட்க, ஒவ்வொரு கேள்விக்கான பதிலையும் கமல் சொல்லியிருக்கும் விதம் அவர் திரைக்கலைஞர் மட்டுமல்ல
பல்துறை அறிவுஜீவி என்பதை உறுதிப்படுத்தியது.
அதில் மேற்கண்டது ஒருபானைச் சோறு பதம்தான்...
வாழ்க கமல், வளர்க அவர்தம் பல்துறைப் பணி.
---------------------------------------------------------------------------
இரு சிறு பின் குறிப்பு-
(1) 22-10-2014 குமுதம் இதழ் அட்டை இணையத்தில் ஏற்றப்படவில்லை. எனவே இதற்கு முந்திய குமுதம் இதழை எடுத்துப் போட்டதற்கு என்னைமன்னிக்க வேண்டுகிறேன்
(2) இந்தியாவிலேயே கண்தானம் செய்த முதல் நடிகர், தனது
ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றி தாமே அதற்குத் தலைவராக இருந்து வழி நடத்தும் ஒரே இந்திய நடிகர்
நற்பணி இயக்கத்தில் உள்ள அனைவரையும் இரத்த தானம் செய்ய வைத்த ஒரே நடிகர் என்பதால் எனக்குக் கமல் என்னும் பல்துறைக்கலைஞனை மிகவும் பிடிக்கும். அதனாலும் இந்தப் பதிவு.
----------------------------------------------------------------------------
அய்யா, நல்ல பதிவு !நம் சம காலத்தில் வாழும் நல்ல கலைஞன்!
பதிலளிநீக்கு"கலைஞன் மட்டுமல்ல; பல்துறை அறிவுஜீவி"ன்ற தங்களின் மதிப்பீடு மிகச் சரி..!
நன்றியும் வாழ்த்துகளும்!
நன்றியும் வணக்கமும் நண்பர் மகா.!
நீக்குநிலவன் அண்ணா தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ....!
பதிலளிநீக்குஅன்புத்தங்கையின் அன்புக்கு நன்றியும் வாழ்த்துக்கு வணக்கமும். மற்றபடி நான் தீபாவளி கொண்டாடும் வழக்கமில்லை சகோதரி.
நீக்குஅன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குகமல் மீது எனக்கும் அலாதி காதல் உண்டு...
அவர் நடிப்பு பிடிக்கும்...
அவர் கொள்கை பிடிக்கும்
பகுத்தறிவில் அந்த அய்யனின்
பட்டறிவு எட்டியவரை ஜொலிக்கும்...
வாழ்த்துகள்.
நன்றி.
அதுதான், அதுவேதான் நண்பரே.
நீக்குதங்களின் வாழ்த்துக்கு நன்றியும் வணக்கமும்.
***ஒவ்வொரு கேள்விக்கான பதிலையும் கமல் சொல்லியிருக்கும் விதம் அவர் திரைக்கலைஞர் மட்டுமல்ல
பதிலளிநீக்குபல்துறை அறிவுஜீவி என்பதை உறுதிப்படுத்தியது.***
பல்துறை? என்ன என்ன துறைகள் சார்?
Let me guess..
* ஜெனெட்டிக்ஸ்
* கம்ப்யூட்டர் சயண்ஸ்
* வைராலஜி
* அஸ்ட்ரானமி
இதுபோல் துறைகளில் இருந்து வந்த மேதைகள் கேட்ட கேள்விகெல்லாம் டான் டான் னு பதில் சொன்னாராக்கும்..:)))
இந்த இபோலா வைரஸை எப்படி கொல்லலாம்னு யாரும் கேக்கலையா?! :))) நீஙகளாவது கேட்டுச் சொல்லுங்களேன் சார்.. கமல் னமனசு வச்சு சரியான பதில் சொல்லி காப்பாத்தினால்தான் எல்லாரும் வாழ முடியும்..:))
கமல் பிடிக்கும்னு சொல்லீட்டீங்க. அதனால அவர் சொல்றதெல்லாம் பிடிக்கிதுபோல உங்களுக்கு! :)
நான் இன்னும் கண் தானம், உடல் தானம் எல்லாம் பண்ணவில்லை.. அதனால நான் கொஞ்சம் கீழ்தரமான மனிதன்னு சொல்லுவீங்களோ?? அதாவது கமலோட கம்ப்பேர் பண்ணினால்?
இனிய தீவாளி வாழ்த்துக்கள் சொல்லத்தா வந்தேன். நீங்க தீவாளிலாம் கொண்டாடமாட்டீங்கணுதான்.. உங்களுக்கு ரொம்பப் பிடித்த கமல் பத்தி மறக்கவே முடியாத அளவுக்கு பேசிட்டுப் போலாம்னுதான்..:)
தாங்கள் ஒரு ஜூனியஸ் என்று வலையுலகமே அறியும்.
நீக்கு(இப்போது நான் அகப்பட்டேனா நண்பரே?)
தங்களின் கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்த பதில்கள் -
(1) ”பல்துறை? என்ன என்ன துறைகள் சார்?”
இடது பல், வலது பல், கீழ்ப்பல் மற்றும் மேல்தாடைப் பல்.
(2) ”கமல் பிடிக்கும்னு சொல்லீட்டீங்க. அதனால அவர்
சொல்றதெல்லாம் பிடிக்கிதுபோல உங்களுக்கு!”
ஓ! நீங். “அந்த ரசிகர் மன்றம்“ங்ளாண்ணா? வாங்கண்ணா...
நாங் அப்படி இல்லிங்ணா! கமலின் திரைக்கலை
பிடிப்பதால் அவர் செய்வதையெல்லாம் பிடிக்கும்
அளவுக்கான ரசனை வளர்ச்சி நமக்குக் கிடையாதுங்ணா..
(3) நான் இன்னும் கண் தானம், உடல் தானம் எல்லாம் பண்ணவில்லை.. அதனால நான் கொஞ்சம் கீழ்தரமான மனிதன்னு சொல்லுவீங்களோ??
ச்சே..சே்..அப்படிச் சொல்வனுங்களா? இதையெல்லாம்
கிண்டல் பண்ற அளவுக்கு நீங்க என்னென்ன பெருந்தானம்
செய்திருக்கீங்கனு தெரியாம பேசிட்டங்ணா.. சாரிங்ணா.
(4) இனிய தீவாளி வாழ்த்துக்கள் சொல்லத்தா வந்தேன். நீங்க தீவாளிலாம் கொண்டாடமாட்டீங்கணுதான்.. உங்களுக்கு ரொம்பப் பிடித்த கமல் பத்தி மறக்கவே முடியாத அளவுக்கு பேசிட்டுப் போலாம்னுதான்..:
பரவாயில்லிங்ணா.. ஒரு விஷயத்துல மூக்க நுழைக்கும்போது எல்லாமும் தெரிஞ்சுக்கிட்டு வர்ர உங்க டீல் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குங்ணா.. மறக்கவே முடியாத அளவுக்கு என்ன சொன்னீங்கன்னுதா்ன் தெரிலிங்ணா. நமக்கு அவ்ளோ அறிவெல்லாம் கிடையாதுங்ணா.. இருந்தாலும் நன்றி வருண்
என்ன சார் வம்பாப் போச்சு! நீங்க பட்டிமன்றத்திலெல்லாம் பேசுறவராச்சே, இப்படி ஒரு எதிர் கருத்துக்கூட இல்லாமல், விவாதமே இல்லாமல் ஒரு பக்கம் பேசுறவாளா..கமல் அபிமானிகளா ஒண்ணுசேர்ந்து, "ஆமா ஆமா" னு கருத்துச் சொல்லிக்கொண்டு இருந்தால் உங்களுக்கே திருப்தி இருக்காதேனுதான்..நாக்குமேலே பல்லுப்போட்டு நாலு வார்த்தை பேசிப்புட்டேன்.. எல்லாம் உங்களுக்காகத்தான் :)))
நீக்கு****ஒரு விஷயத்துல மூக்க நுழைக்கும்போது எல்லாமும் தெரிஞ்சுக்கிட்டு வர்ர உங்க டீல் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குங்ணா.***
உண்மைதான்...எதையுமே கவனிக்காமல், எதையுமே வாசிக்காமல், "சரியாச் சொன்னீங்க! நீங்க செல்றதைப் போலதான் எல்லாமே இருக்கு! த ம 5"னு ஒரு "பொதுப் பின்னூட்டம்" எனக்கு இட தெரியாதுதான் சார். :) என் இயலாமையை மன்னித்தருளணும்னு தாழ்மையுடன் கேட்டுக்கிறேன், சார். :))
மீண்டும் சந்திப்போம் இன்னொரு விவாதத்தில் இன்னொரு பட்டிமன்றத்தில்- மாற்று அல்லது வேற்றுக் கருத்துடன்! சரியா சார்? :)
ரொம்பச் சரி.
நீக்குநன்றி வருண்!
மை.வா-அது சரி..இது பாராட்டா திட்டானு தெரியலயே!? ஞய்ய்ய்்்்?????!!!!!!!!???????? என்னமோ போங்க இந்த வலைப்பக்கத்துல என்னத்த புரியிது?
Nethi adi sir
பதிலளிநீக்குகமல்ஹாசனின் கேள்வி பதில்களை குமுதத்தில் படித்தேன். ஒவ்வொன்றும் அருமையாக இருந்தது. கமல்ஹாசன் பல்லாண்டு வாழ மதுரையையும், தமிழையும் வேண்டுகிறேன்.
பதிலளிநீக்கு- சித்திரவீதிக்காரன்
http://maduraivaasagan.wordpress.com/