செம்மொழி மாநாட்டுப் போட்டியில் -பரிசுபெறாத- எனது கவிதைகள்



                                  சங்கத் தமிழ் அனைத்தும் தா!  
                                                   (புதுக்கவிதை)

விண்ணப்பம் பற்றி ஒரு விண்ணப்பம்



பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் முடிந்தவுடனே அடுத்து என்ன என்று யோசிக்கும் இளைஞர் - பெற்றோர்களுக்கு எந்த மேற்படிப்பாக இருந்தாலும் முதல் அச்சம் தருவது, விண்ணப்பக் கட்டணம்தான். அதிலும், இந்தப் படிப்பு - இந்தக் கல்லூரியில் - கிடைக்கிறதோ இல்லையோ எனும் அச்சத்தில் நடுவாந்தரமாக அதாவது, 60 முதல் 80 விழுக்காடு வரை - மதிப்பெண் பெற்ற - மற்றும் பெறக்கூடிய மாணவர்களின் விண்ணப்பச் செலவே சில ஆயிரம் ஆவதும் உண்டு.

 
சில லட்சம் குடும்பங்களின் இந்தச் சில ஆயிரத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால் சில பல கோடிகள் நமது அப்பாவி இந்தியக் குடிமக்களுக்குத்தான் விரயம். இதுபற்றிக் கவலைப்பட வேண்டிய நேரம் இதுதான்.


ஒரு சிறுகதை - ஓர் ஆய்வு

சாகித்திய அகாதெமி விருதுபெற்ற
எழுத்தாளர்
மேலாண்மை பொன்னுச்சாமி
அறிவியலின்படி வேண்டுமானால் ஆலமரம் விழுதுவிடலாம் ஆனால்,தமிழ்ச் சிறுகதை உலகில் ‘அரசமரம்’தான் ஏராளமான விழுதுகளோடும்
புதிய புதிய விதைகளோடும் இன்றும் விரிவடைந்து வருகிறது!

1917–20களில் உலக அளவில் நடந்த மிகப் பெரிய நிகழ்ச்சி சோவியத்துப் புரட்சி.  இந்திய அளவில் எல்லோரையும் கவனிக்கச் செய்தது.  காந்திஜியின் இந்தியவரவு எனில் தமிழக அளவில் - இலக்கியவாதிகள் அனைவரையும் நிமிர்ந்து பார்க்கச் செய்தது – வ.வே.சு. ஐயரின் முதல் தமிழ்ச்சிறுகதைப்  படைப்புத்தான்.  வ.வே.சு. இறந்த பிறகு (1927இல்) வெளிவந்த அவரது எட்டுச் சிறுகதைகள் அடங்கிய “மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள்” தொகுதி தான் தமிழின் முதல் சிறுகதைத் தொகுதியாக அறியக் கிடைக்கிறது.

அம்மா உணவகத்தை “மோட்டல்”களில் தொடங்கலாமே?



அது என்ன “மோட்டல்”?     
தனீ  நாடா? 

இதை யாரும் கேட்க மாட்டார்களா? 
காஃபியிலிருந்து, காரச்சட்னி வரை...தனீ ரேட்!

அரைத்தூக்கத்தில் எழுப்புவதிலிருந்து... 
அவசரத்துக்கு ஒதுங்குவது  வரை... அராஜகம்!

ஓட்டுநர் நடத்துநர்களுக்கு மட்டும்
தனீ அறையில்
ஓசியில் அனைத்தும்  சப்ளை...!

இந்த ஓசி-க்காக 
அனைத்துப் பயணியரையும் 
ஓட்டுநர்-நடத்துநர்கள்,
அந்தத் தீவில் 
“அடகு” வைக்கும் கேவலம்? 

ஆமா...
அம்மா உணவகத்தில் நல்ல உணவு, நல்லவிதமான பரிமாறுதல் என்கிறார்களே?

அம்மா உணவகக் கிளைகளை
அனைத்து மோட்டல்இடங்களிலும்
ஆரம்பிக்கலாமே?

ஆயிரக்கணக்கான பேருந்துகளில் 
தினந்தோறும் சென்று-வரும்
இலட்சக்கணக்கான வாக்காளர் மக்கள்
மன்னிக்கவும் பொதுமக்கள்
அம்மாவை வயிறாரவும் வாயாரவும்
 வாழ்த்துவார்கள் அல்லவா?

-சின்னச் சின்னச் சிந்தனைகள்...3

குடியரசுநாள், சுதந்திரநாள் - என்ன வித்தியாசம்?

இன்று 26-01-2014 குடியரசு நாள். 
ஆமா... நம்ம சுதந்திரநாளுக்கும், 
குடியரசு நாளுக்கும் என்ன வித்தியாசம்?

இன்றைய செய்தித்தாள் ஒன்றின் முதல்பக்கத்தில் அரைப்பக்க விளம்பரம் -மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட விளம்பரம்- ஒன்றில்
“நாடு 65வது சுதந்திரதினத்தை ஏன் கொண்டாடுகிறது? என்று கொட்டைஎழுத்தில் வந்திருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.  இந்த என் அதிர்ச்சி புதிதல்ல... கொடியேற்ற வரும் அரசியல் புள்ளிகள் சிலபேர் 
குடியரசுதின விழா, 
சுதந்திரதின விழா 
இரண்டிற்கும் வித்தியாசமில்லை, 
என்பதுபோலவே பேசியதைப் பலமுறை நான் கேட்டிருக்கிறேன்.
அதே செய்தித்தாளின் ஐந்தாம் பக்கத்தில், இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த கால்பக்க விளம்பரத்தில் 65ஆவது குடியரசுநாள் வாழ்த்துகள் தெரிவிக்கப் பட்டிருந்த்து, ஆறுதலாக இருந்த்து. 

அப்போதுதான் குடியரசுதினம் – சுதந்திரதினம் இரண்டுக்குமான வித்தியாசத்தை இன்றைய பதிவாக எழுதினால் என்ன என்று நினைத்தேன். நான் பதிவு எழுதுமுன், அதுபற்றிய தகவல் வேறுஏதும் இருக்கிறதா என்று பார்ப்பது வழக்கம். அதன்படி வலையில் தட்டியபோது இந்தக் கட்டுரை கிடைத்தது. நான் எழுத நினைத்த்தைவிடவும் விரிவாக இக்கட்டுரையே இருப்பதால் அதை அப்படியே தந்திருக்கிறேன்.  நல்ல தகவல்களை யாரோ தந்திருக்கிறார்கள். அவர்களின் கட்டுரையை அப்படியே தருவதுதான் நியாயம் என்று தந்திருக்கிறேன். பார்க்க வேண்டுகிறேன்.

மாநில முதல்மதிப்பெண் வாங்கிய மாணவி கொலைகாரியானாள்!

கல்வி என்ன செய்தது?

முதல்மதிப்பெண் வாங்கணும், நல்ல கல்லூரியில நல்லஉயர்படிப்புப் படிக்கணும் என்று தன் பிள்ளைகளைப் பாடாய்ப்படுத்தும் பெற்றோர்களுக்கு இந்தச் செய்தி ஒரு எச்சரிக்கை...

முதல்மதிப்பெண் வாங்கினால்தான் நல்லவாழ்க்கை வாழ முடியும் என்று மக்களை நம்ப வைத்திருக்கும் கல்வித் துறைக்கு இந்தச் செய்தி ஒரு கன்னத்தில் அறையும் மறுப்பு...

முதல்மதிப்பெண் வாங்கினால் தான் தன் கல்விவணிகம் சிறப்பாக நடக்கும் என்று புரிந்தே பிள்ளைகள் வெறும் மனப்பாடப் பிண்டங்களாக வளர்ந்தால் போதும் என்று ஆலாய்ப் பறக்கும் கல்விநிறுவனத் தலைவர்களுக்கு இந்தச் செய்தி ஒரு சாதாரணம்...

முதல்மதிப்பெண்ணை நோக்கியே தன் பிள்ளைகளை வழிநடத்தும் ஆசிரியர்களுக்கு இச்செய்தி ஒர் அதிர்ச்சி...

என்னதான் அந்தச் செய்தி? இதோ நீங்களே படியுங்கள்-

சகோதரி மாமியாரை கொலைசெய்த கல்லூரி மாணவி... 


இதில் என்ன அதிர்ச்சி என்கிறீர்களா? 

செய்தியின் கடைசிவரிகளைப் பாருங்கள்... 

http://www.dinamani.com/edition_madurai/madurai/2014/01/24/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86/article2016945.ece 

நன்றி தினமணி
என்ன படித்துவிட்டீர்களா? 
இது தொடர்பாக நான் எழுதி நமது பதிவில் இருக்கும் கடிதத்தைப் படிக்க--- 

நிகழ்ச்சி அமைப்பாளர்கள் நின்றுகொண்டே இருக்கிறார்களே, ஏன்?


 உழைத்து,  நிகழ்ச்சியை நடத்துகிறவர்கள், நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும்போது பெரும்பாலும் நின்றுகொண்டே இருக்கிறார்களே, ஏன்?
-சின்னச் சின்னச் சிந்தனைகள்...2

குமுதம்,விகடன் “படிக்கவும்”, சினிமா “பாக்கவும்” நாம்தான் சொல்லிக் கொடுக்கணும்...


பாடத்திட்டத்தில் ஊடகம் 
=நா. முத்து நிலவன் =
இன்றைய மாணவர்கள் எந்தப் பயிற்றுமொழியில் படிக்கிறார்கள் என்பது முக்கியம்தான். தாய்மொழிவழிக் கல்விதான் தலைசிறந்தது. ஆனால், பயிற்றுமொழி பற்றிய விவாதத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை பாடத்திட்டத்திற்கும் தருவது முக்கியமில்லையா? ஆனால், பயிற்றுமொழி பற்றி விவாதம் நடக்கும் அளவிற்குக் கூட பாடத்திட்டம் பற்றி நடப்பதில்லையே அது ஏன்? அரசியல் வாதிகள் பேசுவதில்லை, சரி. ஆசிரியர் இயக்கங்களும், கல்வியாளர்களும் பேசாவிடில் மற்றவர்களா பேசுவார்கள்!

லீனாமணிமேகலைக்கு என்ன பிரச்சினை?

திரைப்பட இயக்குநர் லீனாமணிமேகலை


கவிஞராக அறிமுகமாகி, ஆவணப்படங்கள் எடுத்து, பின்னர் திரைத்துறையில் நுழைந்த
பெண் இயக்குநர் லீனாமணிமேகலை பற்றிய சர்ச்சை வலைதளங்களில் இப்போது வலம் வருகிறது.

புதியமாதவியின் கவிதைத் தொகுப்புக்கு நான் எழுதிய அணிந்துரை

மும்பாய் கவிஞர் புதியமாதவி
அரசியல் பாடும் குடும்ப விளக்கு !

நமது பழந்தமிழ் இலக்கியக் கருவூலமாம் சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற பெண்புலவர்கள் 30 பேர். அவர்களிலும் அதிகமான 
பாடல்களை-59-எழுதியவர் ஔவையார்தான் என்பதில்
ஆச்சரியம் இருக்கமுடியாது. ஔவையார் எழுதியவற்றிலும் அதிகமாக இடம்பெற்றது புறப்பொருளே என்பதுதான் ஆச்சரியமானது மட்டுமல்ல, மகிழ்ச்சியானதும்கூட.

தினமணியில் வெளிவந்த எனது கட்டுரை

இருமுனைத் தவறுகள் 
(தினமணி தலையங்கப்பக்கக் கட்டுரை

நான் எழுதிய நான்காம் சிறுகதை - நா.மு.

மாமா  கையில குப்பை - சிறுகதை
                            
     மாமாமாமாவ்…”
     பள்ளிக்கூடத்திலிருந்து வந்த வாக்கில் புத்தக மூட்டையைக் கடாசிவிட்டு மாமனைத் தேடினாள் பத்து.
     என்னடீ! நான் இங்கிருக்கேன்..
     ம்.. வந்துமாமா பொங்கல்னு சொல்லேன்.
     ஓகோ! இன்னிக்குப் பள்ளிக்கூடத்திலேர்ந்து புது விளையாட்டு கத்துக்கிட்டு வந்திருக்கியாக்கும்..ம்..சரி பொங்கல்.
     உங்க வாயில செங்கல்ஹய்யா மாமா வாயில செங்கல்…” குதித்துக் குதித்துச் சந்தோஷப்பட்டுக்கொண்டே கொல்லைப் பக்கம் ஓடினாள் பத்துக்குட்டி.

திருவள்ளுவர் சொல்லாமல் சொன்னதென்ன?

நா.முத்து நிலவன்-

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் முன்னுரையில் ராஜாஜி எழுதுவார் : 'பொன்னியின் செல்வன் நாவலுக்கு எனது முன்னுரை எதற்காக? சூரியனின் வெளிச்சத்திற்கு எண்ணெயும் திரியும் எதற்காக?'-என்று. அதேபோலத்தான், திருக்குறளின் பெருமையைச் சொல்ல இனியும் ஒரு கட்டுரை தேவையில்லைதான். எனினும், கடந்த தலைமுறையைப்போல இலக்கியங்களைப் ‘படிக்கும்’ ஆர்வம் குறைந்து, இன்றைய தலைமுறையிடம் வெறும் தொ.கா. ‘பார்க்கும்’ ஆர்வமே வளர்ந்துவரும் சூழலில், பண்பாட்டுத் தேவைக்கு 'நம் கையிருப்பை'க் காட்ட, திருக்குறள்தான் சரியான கருவூலம்.
அதிலும், வள்ளுவர் வெளிப்படையாகச் சொல்லியவற்றைக் காட்டிலும் சொல்லாமல் உணர்த்தியிருக்கும் உண்மைகள் சிந்தனையைத் தூண்டுவதாகப் படுகிறது.
அதுதான் இந்தக் கட்டுரை.

விஜய் டிவிக்கு ஏன் இந்த வெட்கங்கெட்ட வேலை?



விஜய் டிவி “சிவ.கார்த்திகேயன்-எங்கவீட்டுப் பிள்ளை”        14-01-2014 பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி பார்த்தீர்களா?

அவர்தான் விஜய் டிவியில்-விஜய் டிவியால்-விஜய் டிவிக்காக “அது-இது-எது?”நிகழ்ச்சியில் வளர்ந்தவராயிற்றே?

பிறகு சூர்யாவின் கோடீஸ்வரன் நிகழ்ச்சியிலும் தனி முக்கியத்துவம் தரப்பட்டு, அண்மையில் நடந்த “நீயா-நானா விஜய் அவார்ட்ஸ்” நிகழ்ச்சியிலும் அவரது வ.ப.வா.ச.குழுவோடு வந்து, “சிறந்த எண்டர்டெயினர்-2013” விருதுடன் பெரிய பாராட்டையும் பெற்றவராயிற்றே?

முன்னர் நடந்த இவை எல்லாமே ஒரு “செட்-அப்”போ என்னும் சந்தேகம் இப்போது வருகிறது. 
ஒருவரை ஒருவர் வளர்ப்பதாக நினைத்து அசிங்கப்பட்டு, அசிங்கப்படுத்தியும் விட்டார்கள்...

பொங்கல் அன்று காலை உங்கள் வீட்டுக்கு வர்ரேன்...


அன்பின் இனியவர் அனைவர்க்கும் வணக்கம்.
நீண்ட இடைவெளிக்குப் பின் 
நாளை -14-01-2014 பொங்கல் அன்று
காலை 9மணிக்கு 
உங்கள் வீட்டுக்கு வரும் வாய்ப்பு வந்திருக்கிறது.

அனேகமா நான் 9.15மணிக்கு 
 முதல் ஆளா வந்து சேர்வேன்னு நினைக்கிறேன்....
வரலாம்ல...?

அதிர்ச்சியூட்டிய முகநூல் நண்பர்கள் !

இன்று -12-01-2014 ஞாயிறு மாலை ஆலங்குடியில் கூடிய 
“முகநூல் நண்பர்கள் சந்திப்பு நிகழ்வு” 
எல்லாருக்குமே அதிர்ச்சியாக இருந்தது!

சாதாரணமாக ஒரு புதிய அமைப்புக் கூட்டம் என்றால், 
முதல் கூட்டம் பற்றி நிறைய விசாரிப்புகள் வரும்.
ஆனால் கூட்டம் குறைவாகவே வரும்.

ஆனால், நாங்கள் புதுக்கோட்டையிலிருந்து போகும்போதே ஏற்பாடு செய்த (கல்லாலங்குடி சுபபாரதி மெட்ரிக் பள்ளி) வகுப்பறையிலிருந்து பெஞ்சுகளை எடுத்து 
வெளியே போட்டுக்கொண்டிருந்தார்கள். 
என்ன ஆச்சு என்று விசாரித்தால்...

சின்னச் சின்ன சிந்தனைகள்...(1) அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் மக்களில்லையா?

அரசு ஊழியர்கள் எல்லாம் அரசின் அடிமைகள் என்னும் கருத்து, ஆங்கிலேயர் ஆட்சியில் -அவர்களுக்கு- சரிதான்.

சுதந்திர இந்தியாவில் மக்களுக்காகப் பணியாற்றும் (?) அரசியல் வாதிகளைவிட அரசுஊழியர்-ஆசிரியர்கள் தேசப்பற்று இல்லாதவர்களைப் போல நினைக்கவேண்டிய அவசியம் என்ன வந்தது?

அவர்களுக்கான நடத்தை விதிகள் அனைத்தும் ஆங்கில அரசு இயற்றியதை அப்படியே -அறுபது ஆண்டுக் கழித்தும்- வைத்திருப்பதில் யாருக்கு நன்மை?

அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்
மக்களில்லையா?

இதுபற்றிய
நண்பர்களின்
கருத்துகளை வரவேற்கிறேன்.

உதாரணத்திற்கு - தன் உடல்நிலை சரியில்லையென்று மருத்துவ விடுப்பு போடுவதென்றால், மருத்துவரிடம் “ஆமா இவருக்கு உடம்பு சரியில்லை” என்று சான்று வாங்கி வரவேண்டும். அதற்கு ரூ.ஐம்பது முதல் நூறுவரை அவருக்குத் தரவேண்டும். அவர் சொன்னால் மட்டும் நம்புவார்களாம் (ஐம்பது ரூபாயை யார் தருவார்கள்?)
 சரி விடுப்பு முடிந்துவிட்டது, அப்போது யார் சான்றளித்தாலும் கிடையாதாம். அப்படியெனில், ஊழியரை நம்பாத அரசு மருத்துவரை மட்டும் நம்புவது சரிதானா? தற்செயல் விடுப்பு போல்  விடவேண்டியதுதானே? ஏன் இப்படி? மக்களைப் போலவே அவர்களிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள், ஆனால் இந்த முறை சரிதானா? இதை மாற்றலாம்தானே?
----------------------------------------------------------------

முகநூல் நண்பர்கள் சந்திப்பு


ஆலங்குடி - புதுக்கோட்டை மாவட்டம் 


          நான் முகநூலில் தொடர்ந்து எழுதுவதில்லை. என்றாலும், என் வலைப்பக்கத்தில் எழுதுவதை முகநூல் நண்பர்களின் பார்வைக்கு வைப்பேன். முகநூலில் மட்டுமே எழுதுவோரில் சீரியசாகஎழுதுவோர் மிகவும் குறைவு (தமிழறிஞர் பொ.வேல்சாமி முகநூலில் மட்டுமே ஆழமான இலக்கியச் செய்திகளை எழுதிவருகிறார்- இவர்போலும் எழுதுவோர் மிக மிகவும் குறைவானோர்) 
        என்றாலும் புதுக்கோட்டை அருகிலிருக்கும் ஆலங்குடியை மையப்படுத்தி எழுத்தாளர்கள் நிறையப் பேர் உள்ளனர். பத்திரிகையாளர்கள், இலக்கிய இதழ்களில் எழுதுவோர் பலர் வலைப்பக்கம் தொடங்காமல் முகநூலிலேயே எழுதி வருகின்றனர். அவர்கள் ஒரு நட்புச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர். நண்பர் ரமா ராமநாதன் அழைத்தார். ஏற்பாட்டாளர்களை எனக்குத் தெரியவில்லை. சந்திப்பில் என்ன பேசப்போகிறார்கள் என்றும் தெரியவில்லை.
            ஒருங்கிணைப்பாளர் திரு செந்தில் குமாரும் பேசினார். புதுக்கோட்டை,அறந்தாங்கி, சுற்றுவட்டாரத்தில் இருக்கும் நம் வலை நண்பர்கள் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.
        அழைப்பிதழ் மேலுள்ளது.
        திரு ரமா. ராமநாதன் அலைபேசி எண்-9865566151
        திரு செந்தில்குமார் அலைபேசி எண்- 8973070044
 ----------------------------------------------------------------------------------

காதல் - நட்பு - காமம்


கோவை பூ.சா.கோ. பொறியியற் கல்லூரியில்
(PSG Engineering College Coimbatore) 
என்னைப் பேச அழைத்திருந்தார்கள். 

அது, தமிழகத்தின் 7 பொறியியற் கல்லூரிகள் 

இணைந்து நடத்தும் கலைவிழா!
அனைத்துப் பொறியியல் கல்லூரிகளின் பேச்சுப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு வந்த
6 மாணவ-மாணவியர் பேசும் பட்டிமன்றம் !

நான் நடுவராகத் தீர்ப்பு வழங்குவதோடு,
அந்த 6 பேரில் பரிசுக்குரிய முதல் மூவரை வரிசைப்படுத்தித் தரவும் வேண்டும்!


பட்டிமன்றத் தலைப்பு என்ன தெரியுமோ?
"கல்லூரிக் காதல் –
 கலக்கலா? கண்ணீரா?"...!



தொலைக்காட்சியில் பேசுகிறேன் - பார்த்துக் கருத்துக் கூற வேண்டுகிறேன்


என்று நீங்கள் கேட்பது புரிகிறது. 
அது ஒன்றும்  பெரிய சாதனையே அல்ல.
        நான் 1997 -இந்திய சுதந்திரப் பொன்விழா நிகழ்ச்சியாக- பொதிகைத் தொலைக்காட்சியில் பேசியதிலிருந்து 15ஆண்டுக்கும் மேலாக - தமிழ்த் தொலைக் காட்சிகளில் சுமார் 200முறைகளுக்கும் மேலாகப் பேசியாயிற்று. பொதிகை, சன், விஜய், கலைஞர், ஜெயா, ராஜ் என்று அனைத்துத் தமிழ்த் தொலைக்காட்சிகளிலும் பட்டிமன்றம், நேர்காணல் எனப் பற்பல முறை பேசியாயிற்று.
திண்டுக்கல் திரு ஐ.லியோனி அவர்களின் தலைமையில் தமிழகததின் பலநூறு ஊர்கள் உட்பட  இந்த 15ஆண்டுகளில் பல ஆயிரம் பட்டிமனறங்கள் பேசியாயிற்று. 
 2000 முதல் 2005 வரை ஆண்டொன்றுக்கு  200க்கு  மேற்பட்ட நிகழ்ச்சிகள்... 2004இல் ஒரே நேரத்தில் விஜய், ராஜ், கலைஞர், மற்றும் சேலம், திருச்சி நகரம் உள்ளிட்ட  உள்ளுர்த் தொலைக்காட்சிகள், என  ஒரே நாளில் 5 அலைவரிசையில் எம் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகியிருக்கின்றன!
 பல உள்ளுர் தொலைக்காட்சி அலை வரிசைகளிலும், 
பேருந்துப் பயணங்களின் போதும் பார்த்திருக்கலாம்...
கலைஞர் தொலைக்காட்சியின் முதல்நாள் ஒளிபரப்பிலேயே எங்கள் பட்டிமன்றம் இடம்பெற்றது...

              ஆனால், என்றைக்கும் என் பேச்சில்  
            எனக்கு நிறைவு ஏற்பட்டதே இல்லை.