நல்ல
கவிதைகளைப் படைக்க விரும்புவோர்,
எடுத்துப்
படிக்கவேண்டிய
சிலநல்ல கவிஞர்களின்
சில
நல்ல கவிதைகள் -ஒருசோற்றுப் பதம்
எனது
முந்திய பதிவு பார்த்த பலரும் கேட்டதற்கிணங்க ஒருசிலவற்றை இணையத்தில்
தேடித்தருகிறேன். நானே மீன்பிடித்துத் தரக்கூடாது என்பதால், (நன்றி விஜய்(?)) நான்பிடித்த மீன்களுடன், மீன்பிடித்த வலையை உங்களிடம் தருகிறேன் நீங்களே
வீசிப்பாருங்கள்
---------------------------------------------------------------------------
சிறுமியும்
தேவதையும் - வைரமுத்து
திடீரென்று...
மேகங்கள் கூடிப்
புதைத்தன வானை
ஒரே திசையில் வீசலாயிற்று
உலகக் காற்று
பூனையுருட்டிய கண்ணாடிக்குடமாய்
உருண்டது பூமி
மருண்டது மானுடம்
அப்போதுதான்
அதுவும் நிகழ்ந்தது
வான்வெளியில் ஒரு
வைரக்கோடு
கோடு வளர்ந்து
வெளிச்சமானது
வெளிச்சம் விரிந்து
சிறகு முளைத்த தேவதையானது
சிறகு நடுங்க
தேவதை சொன்னது:
''48 மணி நேரத்தில்
உலகப்பந்து கிழியப் போகிறது
ஏறுவோர் ஏறுக என்சிறகில்
இன்னொரு கிரகம் எடுத்தேகுவேன்
இரண்டே இரண்டு
நிபந்தனைகள்:
எழுவர் மட்டுமே ஏறலாம்
உமக்குப் பிடித்த ஒரு பொருள் மட்டும்
உடன்கொண்டு வரலாம்''
* * * * *
புஜவலியுள்ள இளைஞன் ஒருவன்
சிறகு நொறுங்க ஏறினான்
அவன் கையில்
இறந்த காதலியின்
உடைந்த வளையல்
முதல் முத்தத்து ஞாபகத்துண்டு
* * * * *
'இன்னொரு கிரகம் கொண்டான்
என்றென்றும் வாழ்க'
கொட்டிமுழங்கும் கோஷத்தோடு
சிறகேறினார் அரசியல்வாதி
தங்கக் கடிகாரம் கழற்றியெறித்து
களிம்பேறிய கடிகாரம் கட்டிக்கொண்டார்
உள்ளே துடித்தது -
சுவிஸ் வங்கியின்
ரகசியக் கணக்கு.
* * * * *
இறந்துவிடவில்லையென்ற சோகத்தை
இருமி இருமியே
மெய்ப்பித்துக் கொண்டிருக்கும்
நோயாளி ஒருவர்
ஜனத்திரள் பிதுக்கியதில்
சிறகொதுங்கினார்
அவர் கையில் மருந்து புட்டி
அதன் அடிவாரத்தில்
அவரின்
அரை அவுன்ஸ் ஆயுள்
* * * * *
அனுதாப அலையில்
ஒரு கவிஞனும் சிறகு தொற்றினான்
ஜோல்னாப் பையில் -
அச்சுப் பிழையோடு வெளிவந்த
முதல் கவிதை
* * * * *
தன் மெல்லிய ஸ்பரிசங்களால்
கூட்டம் குழப்பி வழிசெய்து
குதித்தாள் ஒரு சீமாட்டி
கலைந்த ஆடை சரிசெய்ய மறந்து
கலைந்த கூந்தல் சரிசெய்தாள்
கைப்பையில்
அமெரிக்க வங்கிக் கடன் அட்டை
* * * * *
கசங்காத காக்கிச் சட்டையில்
கசங்கிப்போன ஒரு போலீஸ்காரி
லத்தியால் கூட்டம் கிழித்துப்
பொத்தென்று சிறகில் குதித்தாள்
லத்தியை வீசியெறிந்தாள் - ஒரு
புல்லாங்குழல் வாங்கிக் கொண்டாள்
* * * * *
'ஒருவர்
இன்னும் ஒரே ஒருவர்'
என்றது தேவதை
கூட்டத்தில்
சிற்றாடை சிக்கிய சிறுமியருத்தி
பூவில் ரத்தஓட்டம்
புகுந்தது போன்றவள்
செல்ல நாய்க்குட்டியோடு
சிறகில் விழுந்தாள்
'நாய்க்குட்டியென்பது
பொருள் அல்ல - உயிர்
இறக்கிவிடு'
என்றது தேவதை
'நாய் இருக்கட்டும்
நானிறங்கிக் கொள்கிறேன்'
என்றனள் சிறுமி
சிறகு சிலிர்த்தது தேவதைக்கு
சிலிர்த்த வேகத்தில்
சிதறிவிழந்தனர் சிறகேறிகள்
வான் பறந்தது தேவதை
சிறுமியோடும் செல்ல நாயோடும்.
மேகங்கள் கூடிப்
புதைத்தன வானை
ஒரே திசையில் வீசலாயிற்று
உலகக் காற்று
பூனையுருட்டிய கண்ணாடிக்குடமாய்
உருண்டது பூமி
மருண்டது மானுடம்
அப்போதுதான்
அதுவும் நிகழ்ந்தது
வான்வெளியில் ஒரு
வைரக்கோடு
கோடு வளர்ந்து
வெளிச்சமானது
வெளிச்சம் விரிந்து
சிறகு முளைத்த தேவதையானது
சிறகு நடுங்க
தேவதை சொன்னது:
''48 மணி நேரத்தில்
உலகப்பந்து கிழியப் போகிறது
ஏறுவோர் ஏறுக என்சிறகில்
இன்னொரு கிரகம் எடுத்தேகுவேன்
இரண்டே இரண்டு
நிபந்தனைகள்:
எழுவர் மட்டுமே ஏறலாம்
உமக்குப் பிடித்த ஒரு பொருள் மட்டும்
உடன்கொண்டு வரலாம்''
* * * * *
புஜவலியுள்ள இளைஞன் ஒருவன்
சிறகு நொறுங்க ஏறினான்
அவன் கையில்
இறந்த காதலியின்
உடைந்த வளையல்
முதல் முத்தத்து ஞாபகத்துண்டு
* * * * *
'இன்னொரு கிரகம் கொண்டான்
என்றென்றும் வாழ்க'
கொட்டிமுழங்கும் கோஷத்தோடு
சிறகேறினார் அரசியல்வாதி
தங்கக் கடிகாரம் கழற்றியெறித்து
களிம்பேறிய கடிகாரம் கட்டிக்கொண்டார்
உள்ளே துடித்தது -
சுவிஸ் வங்கியின்
ரகசியக் கணக்கு.
* * * * *
இறந்துவிடவில்லையென்ற சோகத்தை
இருமி இருமியே
மெய்ப்பித்துக் கொண்டிருக்கும்
நோயாளி ஒருவர்
ஜனத்திரள் பிதுக்கியதில்
சிறகொதுங்கினார்
அவர் கையில் மருந்து புட்டி
அதன் அடிவாரத்தில்
அவரின்
அரை அவுன்ஸ் ஆயுள்
* * * * *
அனுதாப அலையில்
ஒரு கவிஞனும் சிறகு தொற்றினான்
ஜோல்னாப் பையில் -
அச்சுப் பிழையோடு வெளிவந்த
முதல் கவிதை
* * * * *
தன் மெல்லிய ஸ்பரிசங்களால்
கூட்டம் குழப்பி வழிசெய்து
குதித்தாள் ஒரு சீமாட்டி
கலைந்த ஆடை சரிசெய்ய மறந்து
கலைந்த கூந்தல் சரிசெய்தாள்
கைப்பையில்
அமெரிக்க வங்கிக் கடன் அட்டை
* * * * *
கசங்காத காக்கிச் சட்டையில்
கசங்கிப்போன ஒரு போலீஸ்காரி
லத்தியால் கூட்டம் கிழித்துப்
பொத்தென்று சிறகில் குதித்தாள்
லத்தியை வீசியெறிந்தாள் - ஒரு
புல்லாங்குழல் வாங்கிக் கொண்டாள்
* * * * *
'ஒருவர்
இன்னும் ஒரே ஒருவர்'
என்றது தேவதை
கூட்டத்தில்
சிற்றாடை சிக்கிய சிறுமியருத்தி
பூவில் ரத்தஓட்டம்
புகுந்தது போன்றவள்
செல்ல நாய்க்குட்டியோடு
சிறகில் விழுந்தாள்
'நாய்க்குட்டியென்பது
பொருள் அல்ல - உயிர்
இறக்கிவிடு'
என்றது தேவதை
'நாய் இருக்கட்டும்
நானிறங்கிக் கொள்கிறேன்'
என்றனள் சிறுமி
சிறகு சிலிர்த்தது தேவதைக்கு
சிலிர்த்த வேகத்தில்
சிதறிவிழந்தனர் சிறகேறிகள்
வான் பறந்தது தேவதை
சிறுமியோடும் செல்ல நாயோடும்.
------------------------------------------------------------------------------------ -
அப்துல்
ரகுமான் கவிதை
விடிந்ததென்பாய் நீ அனுதினமும் – வான்
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை – இங்கு
முடிதல் என்பது எதற்குமில்லை
மணந்தேன் என்பாய் சடங்குகளும் – வெறும்
மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால் – உடல்
இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல.
விடிந்ததென்பாய் நீ அனுதினமும் – வான்
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை – இங்கு
முடிதல் என்பது எதற்குமில்லை
மணந்தேன் என்பாய் சடங்குகளும் – வெறும்
மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால் – உடல்
இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல.
கற்றேன்
என்பாய் கற்றாயா? – வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை
பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்? – வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல
குளித்தேன் என்பாய் யுகயுகமாய் – நீ
கொண்ட அழுக்கோ போகவில்லை
அளித்தேன் என்பாய் உண்மையிலே – நீ
அளித்த தெதுவும் உனதல்ல
காகிதம் தின்பது கல்வியில்லை
பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்? – வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல
குளித்தேன் என்பாய் யுகயுகமாய் – நீ
கொண்ட அழுக்கோ போகவில்லை
அளித்தேன் என்பாய் உண்மையிலே – நீ
அளித்த தெதுவும் உனதல்ல
உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் – வெறும்
உடலுக் கணிவது உடையல்ல
விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் – ஒரு
வினாவாய் நீயே நிற்கின்றாய்
தின்றேன் என்பாய் அணுஅணுவாய் – உனைத்
தின்னும் பசிகளுக் கிரையாவாய்
வென்றேன் என்பர் மனிதரெல்லாம் – பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார்
ஆட்டத்தில் உன்னை இழந்து விட்டாய் – உன்
அசலைச் சந்தையில் விற்றுவிட்டாய்
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய் – உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடானாய்
‘நான்’ என்பாய் அது நீயில்லை – வெறும்
நாடக வசனம் பேசுகிறாய்
‘ஏன்’? என்பாய் இது கேள்வியில்லை – அந்த
ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு ? –
------------------------------------------------------------------------------------
இன்னொரு
மனிதன் -
தங்கம்மூர்த்தி
மிருகங்களோடு
பழகினான்
மனிதன்.
மிருகங்களிடத்தில்
மனிதநேயமும்
மனிதர்களிடத்தில்
மிருகத்தனங்களும்.
இயந்திரங்களோடு
பழகினான்
மனிதன்.
இயந்திரங்களிடத்தில்
மனித
ஆற்றலும்
மனிதர்களிடத்தில்
இயந்திரத்தனங்களும்.
இயற்கையோடு
பழகினான்
மனிதன்.
இயற்கையிடத்தில
மனித
குணங்களும்
மனிதர்களிடத்தில்
செயற்கைத்தனங்களும்.
மனிதன்
பழகவேயில்லை
இன்னொரு
மனிதனிடம்.
நானும் நீயும் - ஜெயபாஸ்கரன்
நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்
நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்
அடக்கமாக எனக்குப் பின்னால்
நின்று கொண்டிருப்பாய் நீ
நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்
அடக்கமாக எனக்குப் பின்னால்
நின்று கொண்டிருப்பாய் நீ
உன் இனத்துக் கற்புக்கரசிகளைச் சொல்லி
உன்னை மிரட்டுவேன் நான்
என் இனத்து அயோக்கியர்களின் பட்டியல் தெரிந்தும்
அமைதியாய் இருப்பாய் நீ
உன்னை மிரட்டுவேன் நான்
என் இனத்து அயோக்கியர்களின் பட்டியல் தெரிந்தும்
அமைதியாய் இருப்பாய் நீ
நீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலொழிய
சொல்லிக் கொள்வதில்லை நான்
நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து
பறைசாற்றியாக வேண்டும் நீ
சொல்லிக் கொள்வதில்லை நான்
நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து
பறைசாற்றியாக வேண்டும் நீ
எனக்குப் பிறகு என் நினைவுகளோடு
வாழவைக்கிறார்கள் உன்னை
உனக்குப் பிறகு உன் தங்கையோடு
வாழவைக்கிறார்கள் என்னை.
வாழவைக்கிறார்கள் உன்னை
உனக்குப் பிறகு உன் தங்கையோடு
வாழவைக்கிறார்கள் என்னை.
ஜெயபாஸ்கரன்.
பிதாவே எங்களை மன்னியும்! - புதியமாதவி
பரமப்பிதாவே.. எங்களை மன்னியும்
பிழைத்திருப்பதற்க்காக
நன்றி சொல்ல
எங்களால் முடியாது.
பிழைத்திருப்பதே
பிழையாகிப்போனதால்
அச்சுப்பிழையில்
அர்த்தமிழந்துவிட்டது உன் வாசகம்.
பரமப்பிதாவே எங்களை மன்னியும்
கோழிமிதித்து குஞ்சுகள் மாண்டன
கருவறையே கல்லறையானது
முலைப்பாலில் உயிர்க்கொல்லி
ஒப்பாரியில் உன் சங்கீதம்.
பரமப்பிதாவே...
எங்களை மன்னியும்..!
பரமப்பிதாவே.. எங்களை மன்னியும்
இப்போதாவது-
உயிர்த்தெழுவது எப்படி என்பதை
எங்கள் துடுப்புகளுக்கு
சொல்லிக்கொடும்..
உடைந்தப் படகுகளிலிருந்து
விரியவேண்டும் எங்கள் வலைகள்.
புதியமாதவி, - http://www.vaarppu.com/view/327/
பரமப்பிதாவே.. எங்களை மன்னியும்
பிழைத்திருப்பதற்க்காக
நன்றி சொல்ல
எங்களால் முடியாது.
பிழைத்திருப்பதே
பிழையாகிப்போனதால்
அச்சுப்பிழையில்
அர்த்தமிழந்துவிட்டது உன் வாசகம்.
பரமப்பிதாவே எங்களை மன்னியும்
கோழிமிதித்து குஞ்சுகள் மாண்டன
கருவறையே கல்லறையானது
முலைப்பாலில் உயிர்க்கொல்லி
ஒப்பாரியில் உன் சங்கீதம்.
பரமப்பிதாவே...
எங்களை மன்னியும்..!
பரமப்பிதாவே.. எங்களை மன்னியும்
இப்போதாவது-
உயிர்த்தெழுவது எப்படி என்பதை
எங்கள் துடுப்புகளுக்கு
சொல்லிக்கொடும்..
உடைந்தப் படகுகளிலிருந்து
விரியவேண்டும் எங்கள் வலைகள்.
புதியமாதவி, - http://www.vaarppu.com/view/327/
------------------------------------------------------------------------------------
கல்பனா சாவ்லா – ஆர்.நீலா
உயரங்களின் காதலி நீ!
எல்லோரும் கைகளோடு பிறந்தார்கள்,
நீ சிறகுகளோடு பிறந்தாய்!
உடம்போடும் விண்ணுலகம் சென்ற
திரிசங்கு நீதான்!
போராடினால் ஜெயிக்கலாம் என
பூவுலகிற்கே புரியவைத்தவளே!
அதோ!
உன் அஸ்தியிலிருந்து
ஆயிரம் கல்பனாக்கள்!
------------------------------------------------------------------------------------
தோழிமார்
கதை – வைரமுத்து
ஆத்தோரம்
பூத்த மரம் ஆனைகட்டும் புங்கமரம்
புங்க மரத்தடியில் பூவிழுந்த மணல்வெளியில்
பேன்பார்த்த சிறுவயசு பெண்ணே நெனவிருக்கா?
சிறுக்கிமக பாவாடை சீக்கிரமா அவுறுதுன்னு
இறுக்கி முடிபோட்டு எங்காத்தா கட்டிவிட
பட்டுச் சிறுகயிறு பட்டஇடம் புண்ணாக
இடுப்புத் தடத்தில் நீ எண்ணைவெச்சே நெனப்பிருக்கா?
கருவாட்டுப்பானையில சிருவாட்டுக்காசெடுத்து
கோனார்கடைதேடிக் குச்சிஐசு ஒன்னுவாங்கி
நாந்திங்க நீகொடுக்க நீதிங்க நாங்கொடுக்க
கலங்கிய ஐஸ்குச்சி கலர்கலராக் கண்ணீர்விட
பல்லால்கடிச்சுப் பங்குபோட்ட வேளையில
வீதிமண்ணில் ரெண்டுதுண்டு விழுந்திருச்சே நெனப்பிருக்கா?
கண்ணாமூச்சி ஆடையில கால்கொலுச நீதொலைக்க
சூடுவைப்பா கெழவின்னு சொல்லிசொல்லி நீஅழுக
எங்காலுக் கொலுசெடுத்து உனக்குப் போட்டனுப்பிவிட்டு
என்வீட்டில் நொக்குப்பெத்தேன் ஏண்டீ நெனப்பிருக்கா?
வெள்ளாறு சலசலக்க வெயில்போல நிலவடிக்க
பல்லாங்குழி ஆடையில பருவம் திறந்துவிட
என்னமோ ஏதோன்னு பதறிப்போய் நானழுக
விறுவிறுன்னு கொண்டாந்து வீடுசேர்த்தே நெனப்பிருக்கா?
ஒன்னா வளந்தோம் ஒருதட்டில் சோறுதின்னோம்
பிரியா திருக்கஒரு பெரியவழி யோசிச்சோம்
ஒருபுருஷன் கட்டி ஒருவீட்டில் குடியிருந்து
சக்களத்தியா வாழச் சம்மதிச்சோம் நெனப்பிருக்கா?
ஆடு கனவுகண்டா அருவா அறியாது
புழுவெல்லாம் கனவுகண்டா கொழுவுக்குப் புரியாது
எப்படியோ பிரிவானோம் இடிவிழுந்த ஓடானோம்
வறட்டூரு தாண்டி வாக்கப்பட்டு நாம்போக
தண்ணியில்லாக் காட்டுக்குத் தாலிகட்டி நீபோக
எம்புள்ள எம்புருசன் எம்பொழப்பு என்னோட
உம்புள்ள உம்புருசன் உம்பொழப்பு உன்னோட
நாளும்கடந்திருச்சு நரைகூடவிழுந்திருச்சு
வயித்துல வளந்தகொடி வயசுக்கு வந்திருச்சு
ஆத்தோரம் பூத்தமரம் ஆனைகட்டும் புங்கமரம்
போனவருசத்துப் புயல்காத்தில் சாஞ்சிருச்சு!!
புங்க மரத்தடியில் பூவிழுந்த மணல்வெளியில்
பேன்பார்த்த சிறுவயசு பெண்ணே நெனவிருக்கா?
சிறுக்கிமக பாவாடை சீக்கிரமா அவுறுதுன்னு
இறுக்கி முடிபோட்டு எங்காத்தா கட்டிவிட
பட்டுச் சிறுகயிறு பட்டஇடம் புண்ணாக
இடுப்புத் தடத்தில் நீ எண்ணைவெச்சே நெனப்பிருக்கா?
கருவாட்டுப்பானையில சிருவாட்டுக்காசெடுத்து
கோனார்கடைதேடிக் குச்சிஐசு ஒன்னுவாங்கி
நாந்திங்க நீகொடுக்க நீதிங்க நாங்கொடுக்க
கலங்கிய ஐஸ்குச்சி கலர்கலராக் கண்ணீர்விட
பல்லால்கடிச்சுப் பங்குபோட்ட வேளையில
வீதிமண்ணில் ரெண்டுதுண்டு விழுந்திருச்சே நெனப்பிருக்கா?
கண்ணாமூச்சி ஆடையில கால்கொலுச நீதொலைக்க
சூடுவைப்பா கெழவின்னு சொல்லிசொல்லி நீஅழுக
எங்காலுக் கொலுசெடுத்து உனக்குப் போட்டனுப்பிவிட்டு
என்வீட்டில் நொக்குப்பெத்தேன் ஏண்டீ நெனப்பிருக்கா?
வெள்ளாறு சலசலக்க வெயில்போல நிலவடிக்க
பல்லாங்குழி ஆடையில பருவம் திறந்துவிட
என்னமோ ஏதோன்னு பதறிப்போய் நானழுக
விறுவிறுன்னு கொண்டாந்து வீடுசேர்த்தே நெனப்பிருக்கா?
ஒன்னா வளந்தோம் ஒருதட்டில் சோறுதின்னோம்
பிரியா திருக்கஒரு பெரியவழி யோசிச்சோம்
ஒருபுருஷன் கட்டி ஒருவீட்டில் குடியிருந்து
சக்களத்தியா வாழச் சம்மதிச்சோம் நெனப்பிருக்கா?
ஆடு கனவுகண்டா அருவா அறியாது
புழுவெல்லாம் கனவுகண்டா கொழுவுக்குப் புரியாது
எப்படியோ பிரிவானோம் இடிவிழுந்த ஓடானோம்
வறட்டூரு தாண்டி வாக்கப்பட்டு நாம்போக
தண்ணியில்லாக் காட்டுக்குத் தாலிகட்டி நீபோக
எம்புள்ள எம்புருசன் எம்பொழப்பு என்னோட
உம்புள்ள உம்புருசன் உம்பொழப்பு உன்னோட
நாளும்கடந்திருச்சு நரைகூடவிழுந்திருச்சு
வயித்துல வளந்தகொடி வயசுக்கு வந்திருச்சு
ஆத்தோரம் பூத்தமரம் ஆனைகட்டும் புங்கமரம்
போனவருசத்துப் புயல்காத்தில் சாஞ்சிருச்சு!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழில்
எழுதிவரும் எழுத்தாளர் பற்பலரின் படைப்புகள் படிக்க – இதில்
நம்கவிஞர்கள், எழுத்தாளர்கள் தம் விவரத்தையும் ஏற்றி உலகம்
முழுவதும் பார்க்கத் தரலாம். அகரவரிசையில் சென்று பார்க்க எனது விவரம்இதில்
ஏற்றப்பட்டுள்ளது.
-----------------------------------------
தமிழ்க்கவிஞர்கள்
தம் கவிதைகளைப் படைக்கவும், படிக்கவும் –
-----------------------------------------
கவிஞர்களின்
பற்பல தொகுப்புகளைப் பார்க்க –
-----------------------------------------
பழந்தமிழ்
இலக்கியங்கள் , பாரதி பாரதிதாசன்,பட்டுக்கோட்டை, பொன்னியின்
செல்வன்,
புதுமைப்பித்தன் என சுமார் 500நூல்கள் மின்னூலாகப்
படிக்க -http://www.projectmadurai.org/pmworks.html
-----------------------------------------
இலங்கைத்
தமிழ்பேசும் மக்களுக்கான நூலகம்
-----------------------------------------
இவை
தவிர இணைய நூலகங்களிலும் அவ்வப்போது நுழைந்து வரலாம் –
தமிழ்இணையக்
கல்விக் கழக நூலகம் –
-----------------------------------------
புதிய
படைப்புகளைப்படிக்கவும், நமது படைப்புகளைப் படைக்கவும் -
-----------------------------------------
ஏராளமான
சிற்றிதழ்கள், புதிய நூல் வரவுகளைப்பார்க்க
-----------------------------------------
இந்த்த்
தகவல் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
வேணும்னா
ஏராளம் இருக்கிறது...
ஆர்வமுள்ளவர்கள் தேடித்தேடிப் பார்க்கலாம்..
யூனிகோடு
தமிழ் அடிக்கப் பழகி கூகுள் தேடுபொறியில் கவிஞர்களின் பெயர்களை அல்லது கவிதை
வரிகளை இட்டால் முழுக்கவிதைகள் பல கிடைக்கலாம். படிக்கலாம்,
படிக்கலாம்,
படிக்கலாம்...படைக்கலாம்.
-----------------------------------------
பி.கு.
இவன் என்ன? வெண்பா எழுதச் சொல்லி ஊமைக்கனவுகள் விஜூவின் தளத்திற்கு
வழிகாட்டி விட்டு இப்போது வெறும் புதுக்கவிதையாகவே உதாரணம் காட்டுகிறானே?
என்பீராகில், எனது பதில் – வெண்பாவைத்தான் எழுதவேண்டும் என்று கட்டாயமில்லை. வெண்பா
எழுதும் பயிற்சியோடு, மற்ற பாவகைகளையும் புதுக்கவிதையும் எழுதவந்தால்
சொல்-சிக்கனம், சொற்செட்டு எப்படி அமையும் என்பதற்கான நல்லகவிதை உதாரணங்கள்.
-----------------------------------









