நன்னூல் வகுப்பு - வலையொளி (YouTube) இணைப்பு


நன்னூல் வகுப்பு
வலையொளி (YouTube) இணைப்பு
-------------------------
புதுக்கோட்டை ஜெ.ஜெ.கல்லூரியில்
இன்று 18-6-2020 தொடங்கிய ஒளிபரப்பு
இணைப்பு கீழுள்ளது.
எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்
(ஆனால்
இணையச் சான்றிதழ் பெற விரும்புவோர்
இன்று இரவுக்குள் படிவம் நிரப்பி அனுப்ப வேண்டுமாம்)
----------------------------------
இப்போதே பார்த்துவிடுங்களேன்!
இதோ இணைப்பு -
நன்றி வணக்கம்
பத்துநாள் வகுப்புகளையும்
பட்டியலில் காணும் இணைப்புக்கு 
கீழுள்ள வரியைச் சொடுக்குக!
http://jjc.kvet.in/newsevents.php?id=12-06-2020-10-38-02
-------------------------------------------- 
நன்றி - ஜெ.ஜெ.கல்லூரி புதுக்கோட்டை

நன்றி - தினமணி 18-6-2020


5 கருத்துகள்:

  1. முழுமையாக கேட்டேன் பலருக்கும் பயனுள்ள சொற்பொழிவு நன்றி கவிஞரே

    பதிலளிநீக்கு
  2. நன்னூல்-எழுத்தியல் பயிலரங்க வகுப்புப் பொழிவை முழுமையாகக் கேட்டேன். தற்காலப் பொருத்தப்பாட்டோடு யார் கேட்டாலும் புரிந்துகொள்ளும் வண்ணம் சிறப்பாக இருந்தது...

    ரசனையாக நடத்தியுள்ளீர்கள்.

    இனிய பெருமிதச் செவ்வாழ்த்துக்களும் நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அன்பும் பாசமும் மதிப்பும் உரித்தாகுக...!

    பவர்பாயிண்ட் ப்ரசன்டேசன் நன்றாகத் தயாரித்துள்ளீர்கள்...
    வண்ணத்தேர்வில் கவனம் செலுத்தியிருந்தால் காட்சியாக்கமும் தெளிவாக இருந்திருக்கும்...

    பதிலளிநீக்கு
  3. *அன்பிற்கும் மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு*
    நன்னூல் வகுப்பு வலையொளி வாயிலாக முழுதும் கேட்டு மகிழ்ந்தேன். அனைத்துத் தரப்பினருக்கும் விளங்கும்வண்ணம் சிறந்தொரு வகுப்பு. இடையினம் - நடுத்தர வர்க்கம், ஆரோக்கியசாமி என்று பெயர் வைத்து இருப்பார்கள் ஆனால் பிறந்ததிலிருந்து மருத்துவமனையில் இருப்பார் என்பது போன்ற தங்களுக்குரிய நகைச்சுவையும் பாணியும் கலந்து அமைந்தது பெருமகிழ்வு. எழுத்துகளின் வரிசைமுறை பற்றிய விளக்கம், சுட்டு- உவன் என்பதை விளக்கி அதற்குத் திருக்குறளோடு ஒப்பிட்டமை, இரண்டு சுழி, மூணு சுழி என்பதை எவ்வாறு சொல்ல வேண்டும் என்பதற்கான விளக்கம் ஆகியவைகள் என் விழிகளை அகல விரித்து அறிவை ஆழப்படுத்தியது. நன்னூலைப் புரிந்துக் கொள்ள படிக்க வேண்டிய நூல்களின் வரிசையில் நம் ஐயா முனைவர். நா.அருள்முருகன் ஐயா அவர்களின் நூலையும் காணும் போது அகம் மகிழ்ந்தேன். பின்புலத்தில் பட நழுவக் காட்சியுடன் தொழில்நுட்பம் சேர்த்து அனைவருக்குமான ஒரு வகுப்பினைத் தந்தமைக்கு அன்பின் நன்றிகள் ஐயா. தமிழாசிரியர்களுக்கு உச்சரிப்பு அவசியம் என்பதைத் தோழமை சுட்டலாக இல்லாமல் நெற்றிபொட்டில் அடித்ததுபோல் வலியுறுத்தியது தமிழின் வளர்ச்சிக்கு வித்திடும். நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பா!
      தங்கள் விரிவான கருத்துரைக்கு மிக்க நன்றி பாண்டியன்.

      நீக்கு