அழியாத் தமிழின் அடையாளம் யார்? தொல்காப்பியரா? வள்ளுவரா? கம்பரா? பாரதியா? -இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம்!

அன்பினியீர் வணக்கம்.
நான், 1980ஆம் ஆண்டிலிருந்து 1997வரை
திருமிகு குன்றக்குடி அடிகளார்
திருமிகு மதுரை நன்மாறன்
திருமிகு சாலமன் பாப்பையா
திருமிகு பாரதி கிருஷ்ணகுமார்
1997 முதல் 2017வரை
திருமிகு திண்டுக்கல் .லியோனி
2017ஆம் ஆண்டுக்குப் பிறகு
திருமிகு நந்தலாலா,
திருமிகு மதுக்கூர் இராமலிங்கம்
திருமிகு பழ.கருப்பையா,
திருமிகு அப்துல் காதர் 
முதலான சான்றோர்ளை நடுவராகக் கொண்ட இலக்கிய, சமூக, கல்வி, அரசியல் பட்டிமன்றங்களில் சிலஆயிரம் மேடைகளில் பேசியிருக்கிறேன்.
அதிலும்,
நகைச்சுவைத் தென்றல் திரு.திண்டுக்கல் .லியோனி அவர்கள் என்னை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் தலைநகர்கள், மற்றும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத், கத்தார், சிசெல்ஸ், ஜாம்பியா என  உலகின் பல நாடுகளுக்கும் அழைத்துச் சென்றிருக்கிறார். லியோனி அவர்களோடு மட்டுமே (1997முதல்- 2017 வரையான) இருபதாண்டுகளில் குறைந்த பட்சம் 2,000 பட்டிமன்ற நிகழ்வுகளில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பேசியிருக்கிறேன். (இது இன்னும் அதிகமாக இருக்கும்! எண்ணவில்லை என்பதாலேயே சுமாராக என்கிறேன்)
அதோடு,
பொதிகை, சன், கலைஞர், விஜய், ராஜ், பாலிமர், மெகா, நியூஸ்18, என பற்பல தொலைக்காட்சிகளில் பலநூறு முறை பேசியிருக்கிறேன். (இந்தக் கரோனாக் காலத்தில் சில  மறு ஒளிபரப்பாகவும் வந்ததன! வந்தன! வந்துகொண்டே இருக்கின்றன!) 

பேசிய பட்டிமன்றம் அனைத்திலும் அணித் தலைவராக  மட்டுமே பேசியிருக்கிறேன் என்பது என் பெருமையல்ல, நடுவர்களின் பெருந்தன்மை!

1990களில் நான் நடுவராக, என் தலைமையில் அப்போது பேசிய மதுக்கூர் ராமலிங்கம், நந்தலாலா ஆகியோர் என்னை விடவும் சிறப்பாகப் பேசி வருவதை உணர்ந்து, நாளடைவில் அவர்களின் தலைமையில் பேசவும் நான் தயங்கியதில்லை. திண்டுக்கல் திரு.லியோனி அவர்களே இதை ஆலங்குடிக் கவிஞர் வெள்ளைச்சாமி அவர்களின் கவிதைநூல் வெளியீட்டு விழாவில் (15-3-2020) புதுக்கோட்டையில் சொன்னார். திறமைக்கு வயது தடையல்லவே!

ஆயினும், பல்லாயிரம் மேடை கண்ட நான், நடுவர் பொறுப்பை விரும்பிச் செய்வதில்லை! அது தொழில் போல ஆகிவிட்டதை நான்விரும்பவில்லை. தமிழகத்தின் பிரபலமான சில நடுவர்கள் விரும்பி அழைத்த போதும் கூட, நான் நாகரிகமாக மறுத்திருக்கிறேன். (எனக்கு நெருக்கமான பேச்சாளர் நண்பர்களுக்கும் இது தெரியும்) நான் எனக்கென்று சில கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டு தான் மேடையேறுவேன். எனக்கு உடன்பாடற்ற தலைப்பில் பேசமாட்டேன் என என் நண்பர்கள் அறிவர். குறிப்பாக திரு .லியோனி அவர்கள் மற்றவரிடமும் இதைச் சொல்வார்!

பல ஆண்டுகளுக்குப் பிறகு
நான் நடுவராக
ஒரு பட்டிமன்றம் வருகிறது!
அதுவும் நான் விரும்பியது போல 
முழுக்க முழுக்க இலக்கியம்  
பேசுவதாக அமைந்திருப்பது 
எனக்குப் பெருமகிழ்ச்சியளிக்கிறது.

இதுவரையான தமிழ்ப் பட்டிமன்ற உலகில்
இந்தத் தலைப்பில் யாரும் பேசியதில்லை என்று
உறுதியாகச் சொல்வேன் – 
பட்டிமன்ற நண்பர்கள் இதை அறிவார்கள்

எமது இலக்கியப் பட்டிமன்றத்தின் தலைப்பு -
அழியாத் தமிழின் அடையாளம் யார்?
தொல்காப்பியரா? வள்ளுவரா? கம்பரா? பாரதியா?

அவரவர் வீடுகளில் இருந்தே
ஐவரும் பேசப் போகிறோம்.
நீங்களும்
வீடுகளில் இருந்தே 
நட்பும் உறவுமாய்ப் பார்த்து கேட்டு மகிழலாம்.

தமிழ்சார்ந்த பல அரிய தகவல்களை நாங்கள் ஐவரும் தருவோம் எனும் உறுதியை மட்டும் உங்களுக்கு வழங்கி, நிகழ்வை நேரலையாகக் காண வருக வருக என அன்புடன் அழைக்கிறேன்

நன்றி, வணக்கம்.
தோழமையுடன்,
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை-622 004
செல்பேசி எண்- 94431 93293
-------------------------------------------------------- 

 நிகழ்வின் பதிவை வலையொளியில் காண்பதற்கான  இணைப்பு - 

https://youtu.be/nMtJWVt3A7Q 

---------------------------------- 

20 கருத்துகள்:

 1. மகிழ்ச்சி இத்தனை மேடைகள் கண்டும் உங்கள் எளிமை தான் வியக்க வைக்கிறது அண்ணா....நாளை பார்க்கிறேன்.. வாழ்த்துக்கள் அண்ணா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எளிமை? இதை எளிமை என்று நான் நினைப்பதில்லை! நம் இயல்பே இதுதானேம்மா? நீங்களும் நானும் நம் நண்பர்களும் இதைத்தானே நம் இளைய நண்பர்களுக்குச் சொல்லியும் வருகிறோம்?

   நீக்கு
 2. நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துகள்.
  கண்டும் கேட்டும் களிக்கத் தயாராக இருக்கிறோம் அண்ணா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி தங்கையே! நண்பர்களுக்கும் சொல்லிவையுங்கள்.
   (இதில் ஒரு சின்ன சிக்கல் என்னவெனில், முதல் 100பேருக்குத்தான் சூம் செயலி இடம்தரும். மற்றவர்கள் பின்னர் வலையொளியில் தான் பார்க்க வேண்டியிருக்கும்)

   செவ்வாய், ஜூன் 30, 2020

   நீக்கு
 3. சீரார்ந்த செம்மணி சிறக்க இனிய பெருமிதச் செவ்வாழ்த்துக்களும் நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அன்பும் பாசமும் மதிப்பும் உரித்தாகுக தோழர்களே...!

  பதிலளிநீக்கு
 4. இணையவழி உங்களோடு இணைந்தே இருக்கிறேன்..மிக்க மகிழ்ச்சி அய்யா

  பதிலளிநீக்கு
 5. தோழா...! எத்தனை “ஒருபொருட் பன்மொழிச் சொற்கள்”?!?!?!
  உங்கள் அன்பின் சொற்கள் மிகையெனினும் நன்றி. பார்த்துவிட்டுக் கருத்துரையிட வேண்டுகிறேன். குறள்-649ஐயும் பார்த்துவிடுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த பதில் செம்மொழித் தமிழறம் நண்பருக்கானது
   அடுத்து,
   என் தோழா செல்வா!
   “ஆசை முகம் மறந்து போச்சே இதை
   ஆரிடம் சொல்வேனடா தோழா!”??????

   நீக்கு
 6. நிகழ்ச்சியை கண்டுகளிக்க மிகுந்த ஆவலாக இருக்கிறோம்... வாழ்த்துக்கள் மாமா👍🙏

  பதிலளிநீக்கு
 7. ஆகா...! மிகவும் மகிழ்ச்சி ஐயா... வாழ்த்துகள் பல...

  பதிலளிநீக்கு
 8. எத்தனை எத்தனை மேடைகள்.... பாராட்டுகளும் வாழ்த்துகளும் ஐயா.

  நிகழ்வினை யூவில் காணவே விருப்பம். யூவில் பதிவேற்றியதும் பதிவு வழி சொல்லுங்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சூம் செயலியில் சரியான நேரத்திற்கு இணையும் 100பேர் தான் நேரலையில் பார்க்க முடியும். எனவேதான் முகநூலிலும் பகிர்கிறார்கள். அன்று இரவுதான் வலையொளியில் ஏற்றுவார்கள். அடுத்த நாள் இணைப்பைப் பெற்றுத் தருவேன். நன்றி

   நீக்கு
 9. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற சமூகத்தில். இப்படித்தான் வாழவேண்டும் என்று நினைத்து அவ்வாறே வாழ்பவர்கள் மிக அரிது உங்கள் பயணம் தொடர எல்லாம் வல்ல இறைவன் துணை புரியட்டும்

  மிக அருமையான வியக்க வைக்கிற தலைப்பு
  சுவாரசியமாக இருக்க போகிறது என்று நினைக்கிறேன்.

  இறுதித் தீர்ப்பு அனைத்து தலைப்புகளுக்கும் சாதகமாக இருக்கும் என்று தோன்றுகிறது

  பதிலளிநீக்கு
 10. தங்கள் கருத்திற்கு நன்றி.
  வியக்க வைப்பது மட்டுமல்ல, எதிர்பார்ப்பை எகிர வைப்பதாகவும் பேசும் எங்களையும் படிக்க வைப்பதாகவும் உள்ளது! எனினும் கம்பன் சொல்வது போல, “ஆசைபற்றி அறையலுற்றோம்!” அனைவருக்கும் சாதகமாக இருந்தால் அது சரியான தீர்ப்பாக இருக்க முடியாதே! பார்க்கலாம் நண்பா.

  பதிலளிநீக்கு
 11. பல மேடைகள் கண்டு தமிழுக்கு, அறத்திற்கு, மனிதத்திற்கு நீங்கள் செய்யும் சேவைக்குச் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் அண்ணா. அனைவரையும் அரவணைத்து ஊக்குவிப்பதும் உங்கள் சிறப்பு.
  பதிவைத் தான் பார்க்கவேண்டும் பணிநேரம் அப்படி! காத்திருக்கிறேன் அண்ணா.

  பதிலளிநீக்கு
 12. மிகச்சிறப்பு தோழர் 😊👏👏 வாழ்த்துகள் 💐

  - நவின் சீதாராமன், அமெரிக்கா

  பதிலளிநீக்கு
 13. அருமை ஐயா....வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு