இணைய அரங்கம் (webinar) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இணைய அரங்கம் (webinar) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பாட்டுக் கோட்டையா? நாட்டுக் கோட்டையா? - இலக்கியப் பட்டிமன்றம் காண வருக!

        சிங்கப்பூரிலிருந்து ஓர் இலக்கிய அழைப்பு

அனைவருக்கும் அன்பான வணக்கம்.

தாரகை இலக்கிய வட்டம் -

(A*STAR CREATIONS )

பெருமையுடன் வழங்கும்

தமிழ்மொழி விழா

இலக்கியப் பட்டிமன்றம்-2023

-----------------------------------  

2023, ஏப்ரல் மாதம் 29ம் தேதி, சனிக்கிழமை

சிங்கப்பூர் நேரம் - மாலை 6.00 மணி

(இந்திய நேரம் - பிற்பகல் 3.30 மணி)

முகநூல் மற்றும் வலையொளியின் நேரலையில்....

-------------------------

சிறப்பு விருந்தினர் :

கவிஞர் பிச்சினிகாடு இளங்கோ அவர்கள்

சிங்கப்பூர்

-------------------------------

பட்டிமன்ற நடுவர்:

கவிஞர் நா.முத்து நிலவன் அவர்கள், 

புதுக்கோட்டை

---------------------------------------------------------- 

அறவியலை அழகியலோடு எழுதியவர்

பாட்டுக் கோட்டை கல்யாணசுந்தரமா?

நாட்டுக் கோட்டை கண்ணதாசனா?

---------------------------------- 

முகநூலில் இணைய -

இதன் உள்ளே நுழைந்தால் அனைத்துப் பதிவுகளும் இருக்கும் எப்போது வேண்டுமானாலும் முகநூலில் யாரும் பார்க்கலாம்.

பார்த்துவிடுங்கள் நண்பர்களே!

https://www.facebook.com/100070911677072/posts/pfbid0ockDYfG6Tu2hviZ54vEFsvJTrfZtLKfNgz33ZiCYB3Gb5ZgwSrrjKjR6RosdNQozl/?d=w&mibextid=qC1gEa


நிகழ்ச்சி விளம்பரக் காணொலிக்குச் சொடுக்குக-


                                                அனைவரும் வருக வருக 

வணக்கம்

-------------------------------------- 

பாவேந்தர் பாரதிதாசன் சிறப்பு பட்டிமன்றம்

 சிங்கப்பூர் 

தமிழ் மொழி மாத விழாவை முன்னிட்டு

TIME4ALL YouTube Channel 
பெருமையுடன் வழங்கும்...

பாவேந்தர் பாரதிதாசன் சிறப்பு பட்டிமன்றம்
நடுவர்: 
கவிஞர் நா. முத்துநிலவன் 
தமுஎகச, புதுக்கோட்டை.

தேதி: 23/04//2022, சனிக்கிழமை.
நேரம்: 4:00 PM-இந்தியா   (6:30 PM-சிங்கப்பூர்)  
 

*நிகழ்ச்சி நெறியாளுகை: 
திருமதி. எழிலி கருணாகரன்

*தலைப்பு:* 
பாரதிதாசன் பாடல்களில் விஞ்சியிருப்பது...
தமிழ் வளர்ச்சியா?  சமூக மலர்ச்சியா?

தமிழ்  வளர்ச்சியே அணி
1. திருமதி. வெண்ணிலா அசோகன்
2. திரு. தயாநிதி ராஜகோபாலன்
3. திரு. திருச்செல்வம் யதுசன்

சமுக மலர்ச்சியே அணி
1. திருமதி. ஜோதிலட்சுமி
2. செல்வி. முத்து சுவேதா
3. திருமதி. அனுராதா வெங்கடேஸ்வரன்

உங்கள் #TIME4ALL வலையொளி நேரலையில் 
காணத்தவறாதீர்கள்
*TIME4ALL YouTube Live Link:


முகநூலில் பார்க்க-

பார்த்தவர்கள்,
நிறை-குறைகளை 
பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.
நன்றியும் வணக்கமும்.

பெரியாருக்கும் கடவுளுக்கும் என்ன பிரச்சினை?

                                   இந்தக் கரோனாக் கொடுங்காலத்தில் 

நூற்றுக்கும் மேற்பட்ட இணைய நிகழ்வுகளில் 

பேசிவிட்டேன்.

அவ்வளவையும் நமது வலைப்பக்கத்தில் 

போட முடியாமல் ஓடிக்கொண்டே இருக்கிறேன்.

----------------------------

இன்று - 10-7-2021 சனி - மாலை 

 ஒரு நல்ல நிகழ்வு என்பதால் 

நண்பர்களுக்குப் பகிர விரும்புகிறேன். 

    பெரியார்-அம்பேத்கர்-மார்க்ஸ்  

சிந்தனைக் களம் 

கோவை 

நடத்தும் இணைய நிகழ்வு

எனது உரைத் தலைப்பு-

“பெரியாருக்கும் 

கடவுளுக்கும்

என்ன 

பிரச்சினை?”

-- இணைய --

ZOOM  ID  -  3108140829

PASS WORD - 123456

வருக!

நண்பர்கள்

இன்று மாலை  7மணிக்கு அவசியம் வருக!

வந்து பார்த்தவர்கள் இதே தளத்தில் 

தம் கருத்துகளைப் பகிரலாம்.

------------------------------------------------------------------------ 

உலகக் குடும்ப தினவிழா - காணொலி இணைப்பு

                                         தேனி தமிழ்ச்சங்கம் 

மற்றும்

சி.பா.ஆதித்தனார் தமிழியல் கழகம்

இணைந்து நடத்திய

உலகக் குடும்ப தினவிழா

சிறப்புரை

நா.முத்துநிலவன்

“தமிழ்ப் பண்பாட்டில்

குடும்ப மரபும் மாற்றமும்”

நன்றி

“தென்றல் தமிழ்”

வலைக்காட்சி

இணைப்புக்குச் சொடுக்குக-

https://youtu.be/4LyLLlmgvcE

தீண்டாமை பாவமா ? குற்றமா ?

 எனது முகநூல் உரை 

தலைப்பு  

தீண்டாமை 

பாவமா ? குற்றமா ? 

முகநூல் இணைப்பு



தங்கள்  கருத்தைப் 
பின்னூட்டத்தில் இட வேண்டுகிறேன்
-------------------------------------- 

எமது பன்னாட்டுக் கவியரங்கம் - தமிழ் பருக, வருக!

திருவாரூர்  திரு.வி.அரசு கலைக்கல்லூரி,
தமிழ் உயர்ஆய்வுத் துறை நடத்தும்
பன்னாட்டுக் கவியரங்கம்
நான் நடத்தும் பாடத்தை, ஏன் மறந்தாய் மனிதா?”
---------------( 12நாடுகளிலிருந்து 16கவிஞர்கள் )--------------
தலைமை - கவிஞர் நா.முத்துநிலவன், புதுக்கோட்டை
(1)      பூமி                       இந்தியா தமிழ்நாடு / மீரா.செல்வகுமார் 
(2)       வானம்         இந்தியா தமிழ்நாடு / மைதிலி கஸ்தூரிரெங்கன்
 (3)      வயல்          இந்தியா தமிழ்நாடு / மு.கீதா
(4)       பறவை         இந்தியா மும்பை / புதியமாதவி
(5)       புழு             சிங்கப்பூர் / காசாங்காடு அமிர்தலிங்கம்
(6)       ஆறு            மலேசியா / செ.குணாளன்
(7)       காடு            அமெரிக்கா / வி.கிரேஸ் பிரதிபா
(8)       ஊற்று          கனடா / இராஜ.முகுந்தன் 
(9)       நெருப்பு        இலங்கை/ யாழ்பாவாணன்
(10)     காற்று          ஜெர்மனி / சந்திரகௌரி
(11)     மழை           இங்கிலாந்து / பிரேமலதா அரவிந்தன்
(12)     கிராமம்         ஜப்பான் / சே.சதீசுகுமார்
(13)     மூலிகை               ஆஸ்திரேலியா / ஜெயராமசர்மா
(14)     தேனீ                      அமீரகம் / துபாய் / சசி S.குமார்
(15)     இயற்கைஉணவு-ஸ்விஸ் / ஜெனிவா / கௌரி
(16)     கடல்            புதுச்சேரி / பெண்ணியம் செல்வக்குமாரி
--------------------------00000000000-------------------------
தொழில் நுட்ப உதவி 
 திருவாரூர் அம்பேத்கார் பெரியார் மார்க்ஸ் வட்டம் திருமிகு.லூர்துசாமி - எண்- +91 7010461298
நேரலை இணைப்பு விவரம் கீழுள்ளது 

vtpktn 2020 is inviting you to a scheduled Zoom meeting.

Topic: THIRU.VI.KA.GOVT COLLEGE
Time: Aug 01, 2020   -  02:30 PM Indian Time

Join Zoom Meeting

Meeting ID: 845 2498 5798
Passcode: tamil
---------------------------------------------------- 



நேரலையில் சந்திப்போம் வருக!
-------------------------------------------------- 

அழியாத் தமிழின் அடையாளம் யார்? தொல்காப்பியரா? வள்ளுவரா? கம்பரா? பாரதியா? -இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம்!

அன்பினியீர் வணக்கம்.
நான், 1980ஆம் ஆண்டிலிருந்து 1997வரை
திருமிகு குன்றக்குடி அடிகளார்
திருமிகு மதுரை நன்மாறன்
திருமிகு சாலமன் பாப்பையா
திருமிகு பாரதி கிருஷ்ணகுமார்
1997 முதல் 2017வரை
திருமிகு திண்டுக்கல் .லியோனி
2017ஆம் ஆண்டுக்குப் பிறகு
திருமிகு நந்தலாலா,
திருமிகு மதுக்கூர் இராமலிங்கம்
திருமிகு பழ.கருப்பையா,
திருமிகு அப்துல் காதர் 
முதலான சான்றோர்ளை நடுவராகக் கொண்ட இலக்கிய, சமூக, கல்வி, அரசியல் பட்டிமன்றங்களில் சிலஆயிரம் மேடைகளில் பேசியிருக்கிறேன்.
அதிலும்,
நகைச்சுவைத் தென்றல் திரு.திண்டுக்கல் .லியோனி அவர்கள் என்னை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் தலைநகர்கள், மற்றும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத், கத்தார், சிசெல்ஸ், ஜாம்பியா என  உலகின் பல நாடுகளுக்கும் அழைத்துச் சென்றிருக்கிறார். லியோனி அவர்களோடு மட்டுமே (1997முதல்- 2017 வரையான) இருபதாண்டுகளில் குறைந்த பட்சம் 2,000 பட்டிமன்ற நிகழ்வுகளில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பேசியிருக்கிறேன். (இது இன்னும் அதிகமாக இருக்கும்! எண்ணவில்லை என்பதாலேயே சுமாராக என்கிறேன்)
அதோடு,
பொதிகை, சன், கலைஞர், விஜய், ராஜ், பாலிமர், மெகா, நியூஸ்18, என பற்பல தொலைக்காட்சிகளில் பலநூறு முறை பேசியிருக்கிறேன். (இந்தக் கரோனாக் காலத்தில் சில  மறு ஒளிபரப்பாகவும் வந்ததன! வந்தன! வந்துகொண்டே இருக்கின்றன!) 

பேசிய பட்டிமன்றம் அனைத்திலும் அணித் தலைவராக  மட்டுமே பேசியிருக்கிறேன் என்பது என் பெருமையல்ல, நடுவர்களின் பெருந்தன்மை!

1990களில் நான் நடுவராக, என் தலைமையில் அப்போது பேசிய மதுக்கூர் ராமலிங்கம், நந்தலாலா ஆகியோர் என்னை விடவும் சிறப்பாகப் பேசி வருவதை உணர்ந்து, நாளடைவில் அவர்களின் தலைமையில் பேசவும் நான் தயங்கியதில்லை. திண்டுக்கல் திரு.லியோனி அவர்களே இதை ஆலங்குடிக் கவிஞர் வெள்ளைச்சாமி அவர்களின் கவிதைநூல் வெளியீட்டு விழாவில் (15-3-2020) புதுக்கோட்டையில் சொன்னார். திறமைக்கு வயது தடையல்லவே!

ஆயினும், பல்லாயிரம் மேடை கண்ட நான், நடுவர் பொறுப்பை விரும்பிச் செய்வதில்லை! அது தொழில் போல ஆகிவிட்டதை நான்விரும்பவில்லை. தமிழகத்தின் பிரபலமான சில நடுவர்கள் விரும்பி அழைத்த போதும் கூட, நான் நாகரிகமாக மறுத்திருக்கிறேன். (எனக்கு நெருக்கமான பேச்சாளர் நண்பர்களுக்கும் இது தெரியும்) நான் எனக்கென்று சில கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டு தான் மேடையேறுவேன். எனக்கு உடன்பாடற்ற தலைப்பில் பேசமாட்டேன் என என் நண்பர்கள் அறிவர். குறிப்பாக திரு .லியோனி அவர்கள் மற்றவரிடமும் இதைச் சொல்வார்!

பல ஆண்டுகளுக்குப் பிறகு
நான் நடுவராக
ஒரு பட்டிமன்றம் வருகிறது!
அதுவும் நான் விரும்பியது போல 
முழுக்க முழுக்க இலக்கியம்  
பேசுவதாக அமைந்திருப்பது 
எனக்குப் பெருமகிழ்ச்சியளிக்கிறது.

இதுவரையான தமிழ்ப் பட்டிமன்ற உலகில்
இந்தத் தலைப்பில் யாரும் பேசியதில்லை என்று
உறுதியாகச் சொல்வேன் – 
பட்டிமன்ற நண்பர்கள் இதை அறிவார்கள்

எமது இலக்கியப் பட்டிமன்றத்தின் தலைப்பு -
அழியாத் தமிழின் அடையாளம் யார்?
தொல்காப்பியரா? வள்ளுவரா? கம்பரா? பாரதியா?

அவரவர் வீடுகளில் இருந்தே
ஐவரும் பேசப் போகிறோம்.
நீங்களும்
வீடுகளில் இருந்தே 
நட்பும் உறவுமாய்ப் பார்த்து கேட்டு மகிழலாம்.

தமிழ்சார்ந்த பல அரிய தகவல்களை நாங்கள் ஐவரும் தருவோம் எனும் உறுதியை மட்டும் உங்களுக்கு வழங்கி, நிகழ்வை நேரலையாகக் காண வருக வருக என அன்புடன் அழைக்கிறேன்

நன்றி, வணக்கம்.
தோழமையுடன்,
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை-622 004
செல்பேசி எண்- 94431 93293
-------------------------------------------------------- 

 நிகழ்வின் பதிவை வலையொளியில் காண்பதற்கான  இணைப்பு - 

https://youtu.be/nMtJWVt3A7Q 

----------------------------------