நவம்பர்
23ஆம் நாள் பாரதிதாசனின் இலக்கிய வாரிசான உவமைக் கவிஞர் -சுப்பு ரத்தின தாசன் எனும்- சுரதா அவர்களின் நூற்றாண்டை ஒட்டி, நாகப்பட்டினம் தமிழ்வளர்ச்சித் துறை, அ.து.ம.மகளிர்
கல்லூரித் தமிழ்த்துறை, நாகை சாசிப் ஜாதா தமிழ்ச்சங்கம் மற்றும் உலகத் தமிழ்க் கவிஞர்
பேரவை இணைந்து நடத்தும் “மகா கவியரங்கம்” இணையத்தில் நடக்கிறது! ஒரே இடத்தில் 100கவிஞர்கள்
கலந்துகொள்கிறோம்! முதல் அமர்வில் நமது கவிஞர்கள்!
Zoom
செயலிவழியே
நடக்கவுள்ள இந்நிகழ்வை, “கடலோரம் தமிழலைகள்” வலைக்காட்சியும் நேரலையாக ஒளிபரப்பவுள்ளது.
(உண்மையில், இந்தக் “கரோனா” ஊரடங்குக் காலத்தில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட இணைய நிகழ்வுகளில் கலந்து கொண்ட நான், வரும் 01-02-2021 அன்று என் மகளின் திருமணம் நடைபெற உள்ளதை அடுத்து, இதுபோலும் இணைய நிகழ்வுகளைச் சில வாரங்களாகத் தவிர்த்து வந்தேன்.. ஆனால், நாம் முன்னர் நடத்திய பன்னாட்டுக் கவியரங்கினால் சகோதரியாகிவிட்ட, திருவாரூர் திரு.வி.க. கல்லூரி தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் செ.அஜிதாவின் பலமான சிபாரிசும், நாகை அ.து.ம.மகளிர் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வாசுகியின் வற்புறுத்தலுமே இந்த நிகழ்வை நான் ஒப்புக் கொள்ளக் காரணம். சரி... பார்ப்போம்)
நமது தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர், கல்லூரி முதல்வர் கலந்துகொள்ளும் தொடக்கவிழா நிகழ்வை அடுத்துத் தொடங்கவுள்ள கவியரங்கின் முதல் அமர்வுக்கு நான் தலைமையேற்கிறேன். நமது அன்பின் கவித் தங்கையர் மு.கீதா, கிரேஸ் பிரதிபா, மைதிலியுடன், அண்மையில் நமது இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றத்தில் சிறப்பாகப் பேசிய கவிஞர்கள் முனைவர் மகா.சுந்தர், கோவை உமாமகேஸ்வரி, கடலூர் வெற்றிச் செல்வி நமது வீதியில் விளைந்த தம்பி சூர்யா மற்றும் மணப்பாறை மகள் பாரதி கண்ணம்மாவுடன் புதிய இலக்கிய நண்பர்கள் பலரும் கலந்துகொள்ள, நிகழ்ச்சி சிறப்பாகவே அமையுமென நம்புகிறேன். இந்த நிகழ்வை ஒருங்கிணைப்பவர் எனது நெடுநாள் நண்பரும் தமிழ்,ஆங்கில மொழியாசிரியராக இருந்து (ஆமாம்..அரிதான இருமொழி ஆசிரியர்!) தற்போது திருப்பூண்டி அரசு உ.நி.பள்ளித் தலைமை ஆசிரியராகவுள்ள திரு ஆறு.துரைக் கண்ணன் அவர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி!
வந்து பார்த்து, கருத்துத் தெரிவிக்க உங்களை அழைக்கிறேன்.
ஒரு முக்கியமான
தகவல் –
அமர்வில் முதலாவதாக உள்ள கவிஞர் இராசேசுவரி அவர்கள், உவமைக் கவிஞர் சுரதாவின்
அன்பு மருமகள்! இவரோடு, இவரது கணவரும் சுரதாவின் மகனுமான கல்லாடன்
அவர்களும் இணைந்துதான் சுரதாவின் புகழ்பெற்ற கவிதைத் தொகுப்பான “தேன்மழை”யின் நூறாவது பதிப்பை அண்மையில் கொண்டுவந்தார்கள்
என்பது மகிழ்ச்சியான செய்தி அல்லவா? அவரது கவிதையைக் கேட்க நானும் ஆவலாக இருக்கிறேன்!
தேதியைக் குறிச்சு வச்சிக்கங்கங்க..
23-11-2020 திங்கள் கிழமை
முற்பகல் 10 மணிக்குத் தொடக்கவிழா
முற்பகல் 11 மணிக்கு நமது முதலமர்வு
நிகழ்ச்சி நிரல் இதோ
பாராட்டத்தக்கவேண்டிய முயற்சி.
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி அய்யா ...❤🙏🙏🙏
பதிலளிநீக்குமகிழ்ச்சி ஐயா... தொடர்கிறேன்...
பதிலளிநீக்குஆகா! சிறப்பான நிகழ்வில் கலந்துகொள்வது மகழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி அண்ணா. சுரதா அவர்களின் மருமகள் நம் அமர்வில் இருப்பது மகிழ்வு! 💐 உங்கள் தமிழ்ப்பணிக்கு ஓய்வோ இடைவெளியோ கிடையாது அண்ணா :-) வணங்குகிறேன்.
பதிலளிநீக்குஆகா! 100 கவிஞர்கள் கொண்ட கவியரங்கா!!! அமர்க்களம் ஐயா! இந்தத் தொழில்நுட்பத்தை இந்த அளவுக்கு யாராவது மொழி வளர்ச்சிக்குப் பயன்படுத்தி இருப்பார்களா என்பது ஐயமே! நீங்கள் வரலாறு படைக்கிறீர்கள்! மிக்க நன்றி ஐயா!
பதிலளிநீக்குவரலாறு படைப்பது நானல்ல நண்பரே!
நீக்குநாகை தமிழ்வளர்ச்சித் துறையும், அ.து.மா.மகளிர் கல்லூரியும் இணைந்திருக்கும் சாகித் ஜாதா தமிழ்ச்சங்கம் மற்றும் உலகத் தமிழ்க்கவிஞர் பேரவையும்தான் சாதனைக்கு உரியவர்கள்.
நான் அவர்களோடு இணைந்து ஓர் அமர்வுக்குத் தலைமை ஏற்கிறேன் அவ்வளவே! பார்த்தபின் தங்கள் கருத்தறிய ஆவல். நன்றி
மிகுந்த மகிழ்ச்சி அய்யா. விழா சிறக்க வாழ்த்துகள். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு