தமிழைப் பிழையில்லாமல் எழுதுவதும் பேசுவதும் எப்படி? (பாரதியின் 139ஆம் பிறந்த நாளில்)

 நியூயார்க் தமிழ்ச்சங்க நிகழ்வு

    (எனது உரை இணைப்பு)

https://youtu.be/jrbQGGv4axY

நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் பொன்விழா நிகழ்வுகள் கடந்த மாதம் சிறப்பாக நடந்தேறின. சங்கத்தின் இலக்கியக் குழுவின் தலைவராக நம் நண்பர் ஆல்ஃபி (எ) ஆல்பிரட் தியாகராஜன் பொறுப்பேற்றுள்ளார். அதில் என்னையும் பேச அழைத்ததோடு, வாழ்த்துரை ஒன்றும் சிறுகட்டுரை ஒன்றும் அனுப்பக் கேட்டிருந்தார். பிடிஎஃப்ஆக வெளிவந்திருக்கும் மலரில் “தமிழின் ர,ழ இரண்டு எழுத்துகளைக் காப்பாற்றுங்கள்” எனும் எனது சிறு கட்டுரை ஒன்றும் வந்திருக்கிறது. அதை வலையில் ஏற்றக் கேட்டிருக்கிறேன். வந்ததும் ஏற்றுவேன்.

வாராவாரம் (வெள்ளிக்கிழமை அமெரிக்க இரவு) இலக்கிய நிகழ்வு நடத்த ஆலோசனைகள் கேட்டார். கேட்டுக் கொண்டு, என்னையும் அதில் பேசும்படி அழைத்தார். இதோ இந்த வாரம் (அவர்களுக்கு வெள்ளி இரவு,  நமக்கு சனி காலை நேர நிகழ்வு!)

அமெரிக்கா வாழ் தமிழ்க் குழந்தைகளைத் தமிழ் உணர்வுடன், தமிழில் பேச வைக்க வேண்டும் எனும் ஆர்வமே முதலில் மிகுந்த  பாராட்டுக்குரியது. 

தமிழ்நாட்டிலிருக்கும் குழந்தைகள் இந்தி, ஃபிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பான், என்று பிற நாட்டு மொழிகளைப் படிப்பதில் காட்டும் ஆர்வத்தை, தமிழ்மொழியைப் பேசுவதிலோ, எழுதுவதிலோ காட்டுவதில்லை. அதன் காரணம் அவர்களல்ல! தமிழ்நாடு வாழ் பெற்றோர்கள்தான்!

“என் சன்-னுக்கு தமில் தான் வீக்” என்று சொல்லும் ஏராளமான “தமில்க்குடிமகன்”களைப் பார்த்திருக்கிறேன். (அந்த மாணவனே ஆங்கிலப் பாடத்திலும் பலவீனமாகத்தான் இருப்பான் என்பது வேறு!) “விதியே விதியே தமிழச் சாதியை என்செய நினைத்தாய்  எனக்குரையா யடா” என்று கவலைப் பட்ட பாரதி நாளில் 11-12-2020அன்று- அமெரிக்க நேரம் இரவு 9மணிக்கும்,  அதற்கிணையான இந்திய நேரம் 12-12-2020(சனிக்கிழமை) காலை 7.30மணிக்கும் நிகழும்   (இது பாரதியாரின் நூற்றாண்டு நினைவு ஆண்டு     39ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த பாரதியின் 139ஆம் ஆண்டுப் பிறந்தநாள்  -11-12-1882----12-9-1921)  

நேற்று நம் தம்பி ஒருவர் சென்னையிலிருந்து குறுஞ்செய்தி அனுப்பி யிருந்தார். செய்தி இதுதான் 

- அதிபதி இராமசந்திரன் (திங்கள், டிசம்பர் 07, 2020)

மதிப்பிற்குரிய அய்யா
நான் உங்கள் மாணவன். நேற்றைய தினம் சென்னையில் உள்ள பிரபலமான குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தில், இணைய வகுப்பில் இணைந்திருந்தேன். அந்தப் பயிற்சி மையத்தில் உங்களது “மூனுசுழி ண, ரெண்டு சுழி ன” கட்டுரையைத் தங்களது பெயருடன் பதிவு செய்தனர். நான் உங்கள் மாணவன் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன் அய்யா.

உண்மையைச் சொன்னால், அதிபதி என்னிடம் படித்தவரல்லர்! புதுக்கோட்டையில் “சங்கத் தமிழ் அகாடெமி” வைத்திருக்கும் தம்பி உதயகுமாருடன் அவ்வப்போது வீட்டுக்கு வந்து பேசுவார் அவ்வளவே! என்னிடம் கற்றுக் கொண்டதாகச் சொல்வது அவரது நற்பண்பின் வெளிப்பாடன்றி வேறில்லை, இல்லை!

நம் கடன் தமிழ் செய்து கிடப்பதே!

நண்பர் ஆல்ஃபியுடன் பேசி, முடிந்தவரை நழுவுப் படக் காட்சியுடன் நிகழ்வில் பேசவும், இக் காலக் குழந்தைகள் அறிந்திருக்க வேண்டிய, தமிழ்சார்ந்த செய்திகளை இணைத்து எளிமையாக எடுத்துச் சொல்லவும் நினைத்திருக்கிறேன்.

நான் ஒன்றும் பெரிய தமிழறிஞனல்லன்! எனக்குத் தெரியாதவற்றைத் தெரிந்து கொள்ளும் முயற்சியாகவும்தான் இதைச் செய்கிறேன்

பார்க்கலாம்.

வாய்ப்பிருக்கும் நண்பர்கள் 

தமிழ் மாணவர்களுடன் வருக!


தொடர்புடைய மற்றொரு பதிவு-
எனது நன்னூல் வகுப்பு
-- காணொலி இணைப்பு --

https://valarumkavithai.blogspot.com/2020/06/blog-post_12.html

------------------------------------------------------- 

4 கருத்துகள்:

  1. தமிழகத்திலும் நிறைய மாணவர்கள் தமிழ் படிக்க எழுத தெரியாமல் இருப்பது வருத்தமாக உள்ளது

    பதிலளிநீக்கு
  2. உங்களிடம் கற்றுக் கொண்டு தெளிவு பெற வேண்டிய பலவற்றும் உள்ளது... அதை நேரில் தான் சொல்ல (முடியும்) வேண்டும்...

    நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு