கடந்த பல்லாண்டுகளாக, கல்லூரிகளில் வகுப்புத் தொடக்க விழா, தமிழ்மன்றத் தொடக்கவிழா, மாணவர்- ஆசிரியர்- பெற்றோர் மன்றத் தொடக்க விழா, இலக்கியவிழா மற்றும் ஆண்டு விழாக்களில் பங்கேற்றுப் பேசி வருவது வழக்கமாயிருந்தது.
இந்த ஆண்டு கரோனாவால் உலகம் முழுவதும் எவ்வளவோ இழப்பு. பொதுக்கவலையோடு, என் தனிப்பட்ட கவலையும் இணைந்து, இந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று நினைத்திருந்தேன்.
இதோ இணைய வழியே
பேச முதல் அழைப்பு!
(இந்தக் கரோனாக் காலத்தில் 10, 12 இணைய அரங்க நிகழ்வுகள் பேசி விட்டாலும், இதுதான் முதல் கல்லூரி வகுப்புத் தொடக்க விழா! கடந்த வாரம் புதுக்கோட்டை ஜெஜெ கல்லூரியில் இலக்கண வகுப்பைத் தொடங்கி வைத்ததைத்தான் நண்பர்கள் பார்த்திருப்பீர்களே!)
இன்று (26-6-2020 வெள்ளி) காலை 10.30 – 11.45மணி இது நடந்தது.
ஒரு கல்லூரியின்
தமிழ்மன்றத் தொடக்கவிழாவில்
பங்கேற்றுப் பேசுவது
புதிய அனுபவமாகத்தான்
இருந்தது!
(நாம் நினைத்துக் கொண்டிருப்பதற்கு மாறாகப் பெண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரிகளில்தான் சீழ்க்கை அதிகம் பறப்பதை நேரில் பார்த்து வியந்து மகிழ்ந்திருக்கிறேன். பாவம் அந்தப் பிள்ளைகளை வீடுகளில் வாயைத் திறக்க விடாமல் “பொத்திப் பொத்தி” வளர்த்து வந்தால் இப்படித்தான் சிலநேரம் இடம்பார்த்துப் பொங்குவார்கள்!)
இதோ இந்த
ஆண்டின் முதல் இணைய வழி எனது உரை-
கேட்டுப்
பார்த்துச் சொல்ல வேண்டி நண்பர்களை அழைக்கிறேன்
வலையொளி
இணைப்புக்குச் சொடுக்குக –
மகிழ்ச்சி. பார்ப்பேன்.
பதிலளிநீக்கு