இணையத்தில் வந்த புதிர் என்று
நண்பர் அக்ரி.ஷாஜகான் அவர்கள்
பின்வரும் ஒரு புதிரை காண்செவிக்குழுவில்
அனுப்பியிருந்தார்.
நான் உட்பட பலரும் கலந்துகொண்டோம்.
நீங்களும் கலந்துகொண்டு விடை சொல்ல
வரலாம்…
சரியான விடை சொல்வோர் அனைவர்க்கும்,
வெளிவரவிருக்கும் எனது புதிய நூல்கள்
இரண்டில் அவர்கள் விரும்பும் ஒரு நூலை என் செலவில் (இந்தியாவுக்குள்) அனுப்பி வைப்பேன்
என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓரிரு நாள் வரை விடைதருவோரின்
கருத்துகளை உடனடியாக வெளியிட்டு, சரியான விடையை நான் வெளியிடாமல் காத்திருப்பேன் என்பதையும் தெரிவித்துக்
கொள்கிறேன்!
பி.கு.-
வரவிருக்கும் எனது புதிய நூல்கள்
(1) ஏழு கடல்
தாண்டி ஏழு மலை தாண்டி…
(2) புதிய
கல்வி, நீட் தேர்வு யாருக்காக?
இவை முறையே எனது 7,8ஆம் நூல்கள்!
வலை நண்பர்களுக்கு, மற்றுமோர் இனிய செய்தி-
இந்த நூல் இரண்டும் எனது வலைப்பக்கக்
கட்டுரைகளின் தொகுப்பே என்பதோடு, இவை இரண்டிற்கும் எனது முன்னுரை ஏதுமில்லை, அந்தந்தக்
கட்டுரைகளுக்கு எனது வலைப்பக்கத்தில் நண்பர்கள் இட்ட பின்னூட்டங்களில் ஒன்றே முன்னுரையாகத்
தொகுத்து கட்டுரைகளுக்கு முன்னதாகத் தரப்பட்டுள்ளது என்பதை முன்னோட்டமாகத் தெரிவிப்பதில்
மகிழ்ச்சியடைகிறேன்....
சரி இப்ப போட்டிக்குப் போவோமா?
இதோ அந்தப் புதிர்…
உங்கள் விடைகளுக்காகக் காத்திருக்கிறேன்,
அப்படியே நமது வலைப்பக்கத்தின் புதிய வடிவம் பற்றிய நண்பர்கள் கருத்தறியவும் காத்திருக்கிறேன்... நன்றி வணக்கம்.
(ஒரே ஒரு நிபந்தனை-
ஏற்கெனவே கணினித் தமிழ்ச்சங்க காண்செவிக்குழுவில் இருப்போர் தாமறிந்த விடையை எழுத வேண்டாம்)
அப்படியே நமது வலைப்பக்கத்தின் புதிய வடிவம் பற்றிய நண்பர்கள் கருத்தறியவும் காத்திருக்கிறேன்... நன்றி வணக்கம்.
(ஒரே ஒரு நிபந்தனை-
ஏற்கெனவே கணினித் தமிழ்ச்சங்க காண்செவிக்குழுவில் இருப்போர் தாமறிந்த விடையை எழுத வேண்டாம்)