சீமானிடம் சில கேள்விகள்


சீமானிடம் சில கேள்விகள்*நான் சீமானின் முன்னாள் ஆதரவாளன். அவரது உணர்சிகளை தூண்டும் பேச்சாலும் விடுதலைபுலிகளின் ஆதரவு நிலைப்பாட்டாலும் அவரால் கவரப்பட்டேன். பிறகு அவரை நெருக்கமாக கவனித்தபோது பல அதிர்ச்சியான உண்மைகள் தெரியவந்தன *எனது அனுபவத்தின் அடிப்படையில் அவரை பற்றி தெரிந்து கொண்ட விசயங்களை இங்கே தகுந்த ஆதாரங்களுடன் பகிர்ந்து கொண்டு உள்ளேன்.

*
இது தமிழ்நாட்டில் உள்ள பெரிய ஊடகங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் வந்த செய்திகளை ஆதாரமாக கொண்டு, வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள். இதை மறுப்பவர்களிடம் நேர்மை இருந்தால் பதிலுக்கு வேறு ஆதரங்களை கொடுக்க வேண்டும்.

*சீமான் புலிகளுக்கு செய்த துரோகங்கள்:
               
ஈழப்படுகொலைக்கு பின்னர் ஐநாவின் டப்லின் தீர்பாயத்தில் நடந்த விசாரணை மிக முக்கியமானதுஅதில் நாம்  தமிழர் கட்சியின் சார்பாக 41 பக்க அறிக்கையை சமர்பித்துள்ளனர். அதில் LTTE யினர்  போர்குற்றம் புரிந்தனர் என்று கூறியுள்ளார்  சீமான். அந்த அறிக்கையில் 40 ஆவது பக்கத்தில்,
"
விடுதலைப் புலிகள் ஆண், பெண், குழந்தைகள் என்ற பேதமின்றி அனைவரையும் புலிகள் போரில் ஈடுபடுத்தினர், குழந்தைகளை LTTE யினர் பெற்றோரிடம் இருந்து பிடிங்கி, தங்களின் படைகளில் இணைத்துக் கொண்டனர். திருமணமான பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை LTTE யினர் செய்ததனர், மேலும் போரின் இறுதிக் கட்டத்தில் LTTE யினர் அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்தியதாகவும், தப்பிக்க பார்த்த தமிழர்களை சுட்டு கொன்றனர்"  என்று சிங்கள அரசாங்கம் பிரபாகரன் மீது கூறும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் கூறியுள்ளார் சீமான். நேரடியாக LTTE யினர் தான் போர் குற்றவாளிகள் என்று .நா விசாரணை குழுவில் வாக்குமூலம்அளித்துவிட்டு, இங்கு வந்து பிரபாகரனின் புகழ் பாடி கொண்டு இருக்கிறார் சீமான்.

*
சீமானின் இந்த துரோகத்தை கண்டித்துதான் சீமான் கலந்துகொண்ட"முள்ளிவாய்க்கால் முடிவல்ல" என்ற புத்தக வெளியீட்டு விழாாவில் கலந்து கொள்ளாமல் கவிஞர் காசிஆனந்தன், .வெள்ளையன், இயக்குனர் .கெளதமன்
ஆகியோர் புறக்கணித்தனர். இவர்கள் தீவிரமான தமிழ் உணவாளர்கள் மற்றும் ஈழ ஆதரவாளர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

*சீமானின் துரோகத்துக்கு  இரண்டு ஆதாரங்கள்:
                      1.
விகடன் என்பது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பத்திரிக்கை. ஈழ இறுதிபோர் உச்சத்தில் இருந்த போது விகடன் தான் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும்  உண்மை செய்திகளை தைரியமாக வெளியிட்டது அனைவரும் அறிந்தது.
இப்போது கூட சீமானின் பேட்டிகளை அதிகமாக வெளியிட கூடிய வெகுஜென பத்திரிக்கை விகடன் தான். அப்படிப்பட்ட பத்திரிக்கையிலேயே விடுதலை புலிகளுக்கு எதிராக ஐநாவில் சீமான் சமர்பித்த அறிக்கை  பற்றி மிக கடுமையான குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இது பொய் என்றால் சீமான் இதற்கு மறுப்பு தெரிவித்து இருப்பார். ஏனெனில் விகடன் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் விற்பனையாகும் வார இதழ். ஆனால் சீமான் இதை பற்றி வாயே திறக்காமல் கள்ள மௌனம் சாதிக்கிறார். இதுவே அவரின் மீதான குற்றச்சாட்டை உறுதிபடுத்துகிறது. விகடன் வெளியிட்ட செய்திக்கான லிங்கை கீழே கொடுத்து உள்ளேன்
http://www.vikatan.com/news/tamilnadu/64271-students-forum-turn-against-seeman.art

2.
தேவர் சமூகத்து மக்களால் நடதப்படும் பேஸ்புக் பக்கத்திலும் சீமான் ஐநாவில் சமர்பித்த அறிக்கைக்கு எதிராக சீமானுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தேவர் ஜாதி மக்கள் என்ன வேற்று மொழிகாரர்களா? அவர்கள் சீமான் மேல் ஏன் அவதூறு பரப்ப வேண்டும்? அதற்கான இணைப்பு (இந்த இணைப்பு இப்போது கிடைக்கவில்லை – நா.மு.,)
https://m.facebook.com/thevarvamsamfilmsindia/posts/1614333865554009*
சீமான் இப்படி பொய் சொல்ல காரணம் தாம் தான் விடுதலை புலிகளின் பிரதிநிதி என்று கூறி வெளிநாடுவாழ் தமிழர்களிடம் பணம் பறிக்க தான். சிங்கப்பூரில் விடுதலை புலிகளின் பெயரை பயன்படுத்தி முறைகேடாக பணம் வசூல் செய்த குற்றத்துக்காக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 5 பேர் சிங்கப்பூர் போலீசால் கைது ய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். அதற்கு ஆதாரமாக பத்திரிக்கைகளில் வந்த செய்தி
https://i0.wp.com/www.pathivu.com/app/uploads/2016/08/se.jpg

*சீமானின் இலங்கை பயண பொய்கள்:
                 
சீமான் இலங்கைக்கு சென்றது #திரைப்படம் எடுப்பது தொடர்பான பயிற்சி கொடுக்க தான். *இதை நடிகர்  #ராஜ்கிரன் ஒரு பேட்டியில் பேச்சுவாக்கில் கூறிவிட்டார். சீமான் தலைவர் பிரபாகரனை சந்தித்தது 5 நிமிடங்களுக்குள் தான்.
*
பாரதிராஜா, *மகேந்திரன் போன்றோர் எற்கனவே இதேபோல் சென்று தலைவருடன் புகைப்படம் எடுத்துள்ளனர்.
*
அதேமாதிரி தான் ஒரு இயக்குனர் என்ற அடிப்படையில் சீமானோடு ஒரே ஒரு புகைப்படம் எடுத்துள்ளார் தலைவர்.
*
அதன் பிறகு #பிரபாகரன் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் சீமான்
என்ற பெயரை உச்சரிக்கவே இல்லை. ஆனால் சீமானோ அவரோடு எடுத்த ஒரே ஒரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு, என்னமோ இவர் தான் பிரபாகரனின் வலது கையாக செயல்பட்டது போலவும்,  பிரபாகரன் என்னிடம் "அதை கூறினார், இதை கூறினார்" என்று பொய் சொல்லி கொண்டு இருக்கிறார். அதுகூடபரவாயில்லை, "பிரபாகரன் எனக்கு இலையில் கடல் நண்டு பரிமாறினார்" என்று எல்லாம் பேட்டி கொடுத்துள்ளார். அப்படி உண்மையிலேயே பிரபாகரனுக்கு நெருக்கமானவராக இருந்திருந்தால், "இவர் இப்போது சொல்லும் விசயங்களில் ஒன்றை கூட ஏன் தலைவர் உயிரோடு இருக்கும் போது மேடைகளில் கூறவில்லை?" ஏனெனில் உண்மையை பிரபாகரன் வெளியிட்டு விடுவார் என்ற பயம் தான் காரணம்
ராஜ்கிரனுக்கு சீமானுடன் எந்தவித கசப்பும் கிடையாது. அவர் திரைதுரையில் ஒழுக்கமானவர் என்று  பெயர் எடுத்தவர்.

*
தமிழ் சினிமாவில் உள்ள ஒருவர் கூட ராஜ்கிரனை பற்றி சிறிய குறைகூட சொல்ல மாட்டர்கள். ராஜ்கிரன் எந்த கட்சியிலும் உறுப்பினரும் கிடையாது. நந்தா படத்தில் பிரச்சனை வரும் என்று சிவாஜிகணேசன் நடிக்க மறுத்த கதாபாத்திரத்தில் இலங்கை தமிழர்கள் மீது உள்ள பாசத்தால் தைரியமாக நடித்தவர் ராஜ்கிரண். எனவே அவர் பொய்யோ, அவதூறோ செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர் சீமானின் இலங்கை பயணம் பற்றி கொடுத்த பேட்டி கீழே உள்ளது
https://www.youtube.com/watch?v=YKAp_QIDK2o

           *
இதுமட்டும் அல்லாது புலிகளின் தளபதி மரியாதைகுறிய அண்ணன் சூசை அவர்கள் சீமானை பற்றி பேசுவது போல போலியான ஆடியோவை யுடிப்பில் வெளியிட்டு உள்ளார் சீமான் . அப்படி அவர் உண்மையாக சீமானை பற்றி  பேசி இருந்தால், அதை புலிகள் அவர்களின் அதிகாரபுர்வ வானொலியிலேயே வெளியிடுவார்கள்.இதுதான் விடுதலை புலிகளின் மரபுஅனைவரும் இறந்தபின், தான் சொல்லும் பொய்யை மறுக்க யாரும் உயிரோடு இல்லை என்ற தைரியத்தில் இப்படி ஒரு கீழ்த்தரமான செயலில் ஈடுபடுவது நியாயமா சீமானே?

*#
அரசியல் விமர்சகர்கள் உங்களை "#பிணம்திண்ணி" என்று அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது

சீமானும் சிங்களர்களும்:
சீமானுக்கு சிங்களர்களோடு பல காலமாகவே நெருங்கிய தொடர்பு
உள்ளது. அதன் காரணமாக தான் தனது தம்பி படத்தில் ...
ஒரு #சிங்களபெண் ணை(பூஜா) ஹீரோயினாக நடிக்க செய்தார் சீமான்.
#
ராஜபக்சே வின் சொந்தங்கள் தயாரித்த #கத்தி படத்தை தமிழகத்தில் திரையிட தமிழ் உணர்வாளர்கள் எதிர்த்த போது "கத்தி படத்தை எதிர்க்க முடியாது" என்று வெளிப்படையாக கூறியவர் சீமான்.

*
கடைசியாக .நாவின் டப்லின் தீர்ப்பாயத்தில் "விடுதலைபுலிகள் தான் தமிழர்களை கொன்றனர்" என்று ஒப்புதல் வாக்குமூலம்கொடுத்துள்ளார் சீமான். ஈழ போர் தோல்வியில் முடிந்ததும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசை அமைக்க முயன்றார்கள் வெளிநாடு வாழ் தமிழர்கள்.

ஒரு காலத்தில்
#
நாடு இல்லாத #யூதர்கள் இது போன்ற அரசை அமைத்து பிறகு #இஸ்ரேல் என்ற நாட்டை பெற்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிங்கள அரசு தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்க முடிவு செய்தது. சீமானுக்கு எங்கிருந்தோ #பணம் வந்து குவிந்தது.

அதனால் தான் பல வருடம் அரசியலில் இருக்கும் கட்சிகளுக்கு இணையாக புதிதாக கட்சி தொடங்கிய சீமானும் சென்ற தேர்தலில் டிவிகளில் "போட்டு பார் ஓட்டை, அப்புறம் பார் நாட்டை" என்று  பிரமாண்டமாக விளம்பரம் செய்தார்.உலகம் முழுக்க தமிழர்கள் வாழ்ந்த இடத்தில் இருந்த தமிழ் அமைப்புகளில் பிளவுகள் ஏற்பட்டது. நாம் தமிழர் கட்சியின் கிளை அமைப்புகள் அங்கு தொடங்கப்பட்டன. அதன் பிறகு இன்று வரை உண்மையான நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமையவில்லை

சீமானும் தமிழ்நாடும்:
         
சரி இப்போது தமிழ்நாட்டு அரசியலுக்கு வருவோம். சீமான்  தமிழ்நாட்டில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதாக கொந்தளிக்கிறார். ஆனால் அதை செய்யக்கூடிய மணற்கொள்ளையன் வைகுண்டராஜனும், கிராணைட் கொள்ளையன் பி.ஆர்.பியும் சீமானுக்கு நெருக்கமானவர்கள் என்று அவரின் தம்பிகள் எத்தனை பேருக்கு தெரியும்?

சீமானுக்கு திருமணம் முடிந்த உடன் வைகுண்டராஜன் தான் தடபுடலாக கறி விருந்து கொடுத்தார். பதிலுக்கு வைகுண்டராஜன் மகன் திருமணத்தை சீமான் தான் முன்னின்று நடத்தி வைத்தார். நோட்டாவை விட குறைவான வாக்குகள் வாங்கிய "நாம் தமிழர்" கட்சிக்கு வைகுண்டராஜனின் நியூஸ் 7 தொலைக்காட்சியில் அளவுக்கு அதிகமாக முக்கியதுவம் கொடுக்கப்படுகிறது.
சீமானை வைகுண்டராஜனின் பினாமி என்று கூறப்படும் குற்றச்சாட்டை இது உறுதிபடுத்துவது போல் உள்ளது.பி.ஆர்.பியில் தொழிலாளர் பிரச்சனை வந்த போது பி.ஆர்.பிக்கு ஆதரவாக "பி.ஆர்.பியிடம் வாங்கித் தின்றுவிட்டு அவரையே குற்றவாளியாக்குவது நியாயமா?" என்று பேசியதும் சீமான் தான். இவர்தான் ஆட்சிக்கு வந்து இயற்கை வளங்களை காக்க வைகுண்ட ராஜனையும், பி.ஆர்,பியையும் கைது செய்ய போவதாக கூறுகிறார்.

அடுத்து கல்வியை அரசுடைமை ஆக்கப்போவதாக சீமான் கூறுகிறார். ஆனால் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய கல்வி கொள்ளையனான சிறை சென்ற பாரிவேந்தர் பச்சமுத்து தான் 2016 தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சிக்கு 50 லட்சம் ருபாய் நன்கொடை கொடுத்துள்ளார். பச்சமுத்துவிடம் பணம் வாங்கி கொண்டே அவருக்கு எதிராக எப்படி நடவடிக்கை எடுப்பார்? இன்று அதிமுகவுக்கு எதிராக பொங்கும் சீமான் "சசிகலாவின் கணவர் நடராஜனின் காலில் விழுந்தவர்" என்பது தான் உண்மை
 
வைகுண்டராஜன் சீமானுக்கு விருந்து வைத்ததை கம்யுனிஸ்டுகளின் இணையதளமாகிய வினவில் கடுமையாக விமர்சித்தார்கள். அதற்கான இணைப்பு கீழே
http://www.vinavu.com/2013/10/25/seeman-natarajan-vaikudarajan-tamil-desiam/

சரி எந்த பதவியிலுமே இல்லாத சீமானுக்கு தொழில் அதிபர்கள் ஏன் பணம் தருகிறார்கள்? தொழில் அதிபர்கள் பதவியில்  இருப்பவர்களுக்கு மட்டும் தான் பணம் கொ டுப்பார்கள் என்று நினைக்க வேண்டாம்அவர்களுக்கு பினாமியாக இருந்தால் பணத்தை வாரி வழங்குவார்கள்.

#
சுப்பிரமணியசாமி, உத்தரபிரதேசத்தின் #அமர்சிங் மாதிரி.  மேலும் சீமானின் வெளிநாட்டு தொடர்புகள் கருப்புபணத்தை  வெள்ளையாக மாற்ற அவர்களுக்கு மிகவும் உதவும். தாது மணல் திருடன் வைகுண்டராஜன ஏன் சீமானுக்கு கறி விருந்து கொடுக்க வேண்டும். அவரின் நியூஸ் 7 தொலைக் காட்சியில் ஒரு வார்டு மெம்பராக கூட இல்லாத உங்க கட்சிக்கு ஏன் அளவுக்கு அதிகமான முக்கியதுவம் தரப்படுகிறது. கிரானைட்கொள்ளையன்  பிஆர்பி ஆலையில் தொழிலாளர் போராட்டம் நடத்தினால் சீமானுக்கு ஏன் அவர்களை திட்டுகிறார்? இந்த கேள்விகளுக்கு பதில் தேடினாலே சீமானுக்கும் கொள்ளையர்களுக்கும் உள்ள தொடர்பு புரிந்துவிடும்

சீமானும் விவசாயமும்:
விவசாயத்தை காப்பாற்ற போவதாக சீமான் மேடைகளில் உணர்ச்சி வசப்பட்டு முழங்குகிறார்.
ஆனால் விவசாய நிலங்களை பிளாட்களாக மாற்ற நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடைக்கு எதிராக 19.10.2016 அன்று சென்னை எலும்பூரில் ரியல் எஸ்டேட் தரகர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினார் சீமான். இந்த போராட்டத்தை தலைமேயேற்று நடத்தியர் "இந்தியதேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ், லேண்ட் டெவலப்பர்ஸ்" சங்க தலைவரான விருகை வி.என்.#கண்ணன்.

சீமான் ஏன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் என்றால்,"ரியல் எஸ்டேட் தரகர்கள் தான் கட்சிக்கு #நிதி கொடுப்பார்கள், விவசாயிகள் பெரிதாக நிதி கொடுக்க மாட்டார்கள்".  இப்போது இயற்கை விவசாயம் பற்றி பேசும் சீமான் ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டு உர கம்பெனிகளிடம் காசு வாங்கி கொண்டு அவர்களுக்கு  சாதகமாக  நடக்க மாட்டாரா?  ஏனெனில் அவர்கள் ரியல் எஸ்டேட் அதிபர்களை விட பல நூறு மடங்கு அதிகமாக உர கம்பெனிகள் பணம் தருவார்கள். சீமான் ரியல் எஸ்டேட் தரகர்களுடன் இணைந்து போரட்டம் நடத்தியதற்கான ஆதாரம்(இது சீமானின் பேஸ்புக் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது)

https://m.facebook.com/ArasiyalNaiyaandi/photos/a.618198474956133.1073741828.592382070871107/1019537271488916/?type=3&comment_id=1019598791482764&_rdr#1019598791482764
சீமானும் ஜல்லிக்கட்டும்:
         
கட்சி சார்பில்லாமல்  *மாணவர்கள் #மதுரை யில் ஜல்லிகட்டுக்காக நடத்திய போராட்டத்தில் சீமானின் ஆதரவாளர்கள் சீமானின் படத்தை வைக்க முயன்றனர். ஆனால் மாணவர்கள் இதை அனுமதிக்க வில்லை.

ஏனெனில் இதை அனுமதித்திருந்தால் என்னமோ அந்த போராட்டமே சீமானால் தான் நடத்தப்பட்டது போன்ற தோற்றத்தை சீமானின் ஆதரவாளர் உருவாக்கியிருப்பார்கள். இதனால் சீமான் போராட்ட களத்திற்குள்  வந்த போது அவருக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

#
தண்ணீர் பாட்டிலை சீமான் மீது வீசி அவரை விரட்டி அடித்தனர். இதனால் கோபம் அடைந்த சீமான் எப்படியாவது இந்த போராட்டத்தை பிசுபிசுக்க செய்ய வேண்டும் என்ற  வெறியில் மதுரையில் தனியாகபாேட்டி  போராட்டம் நடத்தினார். தமிழர்கள் அனைவரும் கட்சி சார்பின்றி ஜாதி, மத பேதங்களை கடந்து ஒரு நல்ல நோக்கத்திற்காக போராடுவதே அபூர்வம். அதிலும் அரசியல் லாபம் அடைய பார்ப்பது நியாயமா சீமான்? இதுபற்றி வந்துள்ள பத்திரிக்கை செய்தி
www.dailythanthi.com/News/Districts/2017/01/19044613/The-students-refused-to-allowIn-Madurai--Seeman-who.vpf


சீமானின் கொள்கைகள்:
*
சீமானின் தேர்தல் அறிக்கையில் இருப்பவை அனைத்தும் ஏற்கனவேமுகநூல் பகிர்வுகளாக வந்தவைதான்இதுவரை வந்த முகநூல் போஸ்ட்கள், வாட்ஸ்ஆப் பார்வேர்டு செய்திகள் எல்லாம் ஒன்று விடாமல் படிப்பவர் என்றால் இந்த அறிக்கையைப் படிக்க வேண்டியதில்லை.

*
விவசாயத்தை அரசு வேலை ஆக்குவேன். ஆடு, மாடு மேய்தலும் அரசு வேலையாக ஆக்கப்படும்" என்கிறார்.
இது எல்லாம் ஏற்கனவே கம்யூனிஸ ரஷ்யாவில் முயற்சி செய்து அந்த நாடே திவால் ஆகி ரஷ்யாவே உடைந்து சிதறிவிட்டது.
சீமானின் இன்னொரு #வாக்குறுதி என்னவென்றால்தமிழ்நாட்டுக்கு தனியாக ராணுவத்தை கட்டமைப்பேன்என்று கூறுகிறார்.

இந்தியாவில் இது சாத்தியம் இல்லையென்று கல்வி அறிவு இல்லாதவர்கள் கூட கூறிவிடுவார்கள். இவரின் அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் கிட்டதட்ட இதே மாதிரி தான்.

சீமானின் ஆதரவாளர்கள்:
சீமானை ஆதரிப்பவர்கள் உணர்ச்சிவசப்படக்கூடிய, தமிழ் மீது பற்று உடைய ஈழப் போரால் விரக்தி அடைந்த, திராவிட கட்சிகளின் ஊழலால் வெறுப்படைந்த  அப்பாவி இளைஞர்கள் தான். அவர்களிடம் பொறுமையாக சீமானை பற்றிய உண்மைகளை விளக்கி கூறினால் முதலில் அதிர்ச்சி அடைகிறார்கள்.
பிறகு சுதாரித்து அவர்கள் கேட்கும் முதல் கேள்வி "சரி தமிழர்களுக்காக போரடக்கூடிய வேறு நல்ல தலைவர்கள் யார்?" என்று கேட்கிறார்கள்.
அதாவது வேறு வழியில்லாமல் தான் அவர்கள் இவரை ஆதரிக்கிறார்கள்.

அவர்களிடம் ஒன்று கூற விரும்புகிறேன் 
"வேறு நல்ல தலைவர்கள் இல்லை என்பதற்காக, வெறும்  பேச்சை  மட்டும் பார்த்து  ஊழல் வாதிகளுக்கு பதிலாக துரோகிகளை தேர்ந்தெடுக்க கூடாது"

புலிகளின் ரகசியத்தை ராஜபக்சேவிடம் கூறிய பிரபாகரனின் முன்னாள் தளபதி கருணாவிற்கும், புலிகளுக்கு எதிராக .நாவில் வாக்குமூலம் கொடுத்த சீமானுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

கையில் அதிகாரம் வரும் முன்பே....
சீமான் மீது கற்பழிப்பு, நிதி மோசடி, நம்பிக்கை துரோகம் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது.  ஒருவேளை பதவிக்கு வந்தால்?
தொண்டர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், கட்சியின் கொள்கை எவ்வளவு உயர்ந்தது என்றாலும் தலைவர்கள் நல்லவர்கள் இல்லை என்றால் எல்லாம் வீண்தான்.

திமுக தொண்டர்கள் பலர் தமிழுக்காக மொழிப் போராட் டத்தில் உயிரையே கொடுத்தனர்.
ஆனால் கருணாநிதி அதன் தலைவர் ஆனதால் தான் திமுக இந்த நிலையை அடைந்துள்ளது.எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் இனத்துக்காக தனது உயிரை மட்டுமின்றி தனது குடும்பத்தையே இழந்த தலைவர் பிரபாகரனுக்கு துரோகம் செய்தவரை எப்படி தலைவராக ஏற்க முடியும்.

கடைசியாக……… சீமானுக்கு சில கேள்விகள்:

1.
சீமான் அவர்களே "ஒரு விதவை இலங்கை அகதி பெண்ணை நான் திருமணம் செய்யவில்லை என்றால் என்னை செருப்பால் அடியுங்கள்" என்று முழங்கிவந்தீர்கள். ஆனால் திடீரென்று நீங்களே எதிர்பாராத விதமாக முன்னாள் அமைச்சரின் வீட்டிலிருந்து நல்ல வசதியான வரன் வந்ததும்(அந்த பெண் உங்களை விட 23 வருடம் வயதில் சிறியவராக இருந்தும்) அவரை திருமணம் செய்து கொண்டீர்கள். இதுதான் ஈழ தமிழர்கள் மீது உங்களுக்கு உள்ளபாசமா?

  2.
தலைவர் பிரபாகரனை சிறையல் அடைக்க வேண்டும் என்று சொன்ன ஜெயலலிதாவுக்காக நீங்கள் பிரச்சாரம் செய்தது ஈழ தமிழர்களின் நலனுக்காகவா? இல்லை நடிகை விஜயலட்சுமி (ப்ரண்ட்ஸ் படத்தில் சூரியாவுக்கு ஜோடி, விஜய்யின் தங்கை) உங்கள் மீது கொடுத்த கற்பழிப்பு புகாரில் இருந்து தப்பிக்கவா? (தைரியமாக புகார் கொடுத்தது ஒரு பெண் தான். புகார் கொடுக்காமல் மனதுக்குள் புழுங்கி கொண்டு இருப்பது எத்தனை விஜயலட்சுமிகள் என்று சீமானுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும்)

3.
சீமானே ஈழ தமிழர்களை பற்றி பேசுவது அவர்களின் நலனுக்கா? இல்லை உங்களின் நலனுக்கா? இதை ஏன் கேட்கிறேன் என்றால் 'நீங்கள் அரணையூரில் கட்டி காெண்டு இருக்கும் பங்களா வீடு, உங்களின் ஆடம்பர திருமணம், வெளிநாட்டு சுற்று பயணங்கள் ' எல்லாம் எப்படி சாத்தியமானது? நீங்கள் எடுத்த இரண்டு, மூன்று மொக்கை படங்களில் சம்பாரித்ததா? 'இதெல்லாம் ஈழ தமிழர்களிடம் இருந்து அவர்களுக்காக
போராடுவதாக கூறி ஏமாற்றி வசூல் செய்யப்பட்ட பணம் இல்லையென்று' தலைவர் மீது ஆணையிட்டு கூற முடியுமா உங்களால்?

4.
நாம் தமிழர் நண்பர்களுக்கு கற்பழிப்பு புகாரில் சிக்கியரை, ஈழ விதவை பெண்ணை  திருமணம் செய்வேன் என்று வாக்கு கொடுத்து ஏமாற்றிவிட்டு பணத்துக்காக வேறு திருமணம் செய்தவரை, .நா விசாரணை குழுவில்விடுதலைப் புலிகள்தான் தமிழர்களை சுட்டு கொன்றனர்”  என்று வாக்குமூலம் கொடுத்தவரைபோய் கர்ம வீரர் காமராஜர் மற்றும் தலைவர் பிரபாகரனின் வாரிசாக நீங்கள் முன்  வைத்தால், அதை அவர்களின் ஆன்மாவே மன்னிக்காது. சிறிது யோசியுங்கள்

நாம் தமிழர் கட்சி  நண்பர்களே                                                                                சதுரங்கவேட்டை படத்தில் ஒரு வசனம் வரும் "பாதி உண்மையோடு பாதி பொய்யையும் கலந்து சொன்னால் யாராலும் கண்டுபிடிக்க முடியாதுஎன்று.  இந்த உத்தியை பயன்படுத்தி  மேடையில் உணர்ச்சி பொங்க பேசி
தான் சீமான் உங்களை மூளை சலவை செய்துள்ளார்.

நான் உங்களுக்கு சவால் விடுகிறேன்.  இந்த கட்டுரையை உங்களுக்கு தெரிந்த "#நாம்தமிழர்" கட்சி நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.                                                                                     
அதில் ஒருவராவது திருந்தட்டும்...நன்றி

4 கருத்துகள்:

 1. இதில் சில குற்றச்சாட்டுகள் எனக்கு ஏற்கெனவே தெரியும் என்றாலும், மொத்தமாகப் படிக்கையில் இவரும் இவ்வளவுதானா என்றுதான் தோன்றுகிறது. நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 2. சீமானை நான் ஆதரிக்காத காரணம், இலங்கையில் முன்பு இருந்த எல்டிடிஈ பயங்கரவாத அமைப்பை தனது தலைமையாக ஏற்று கொண்டு செயல்படுவது, இந்தியாவில் அவரது இனவாத கொள்கை, தமிழகத்தை தமிழர்கள் மட்டுமே ஆளவேண்டும் என்பது. லண்டன் மேயர் பாகிஸ்தானிய வம்சாவளி சாதிக் கான் இங்கிலாந்தில் தொழில்கட்சியில் தேர்தலில் நின்று லண்டன் மேயராகும் காலத்தில் இவரது இனவாத கொள்கை. தமிழர்கள் இரட்டையர் ஒபிஎஸ்+இபிஎஸ் ஆட்சிதானே தமிழகத்தில் தந்போது நடைபெறுகிறது.
  எல்டிடிஈயினர் போர் குற்றம் புரிந்தனர் என்று சீமான் சொன்னாலும்,அல்லது சொல்லாவிட்டாலும்,பெரும்பாலும் தமிழகம் தவிர உலகறிந்த பகிரங்க உண்மை அது.
  //தேவர் ஜாதி மக்கள் என்ன வேற்று மொழிக்காரர்களா? //
  அது என்ன தேவர் ஜாதி? பெருமைமிக்க எனது தேவர் ஜாதி என்று சொல்வதானால் அவர்களுக்கு என்று ஒரு தனியாக ஒரு பாஷை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களும் தமிழர்களில் ஒருவர் தான்.
  //சீமானுக்கு சிங்களர்களோடு பல காலமாகவே நெருங்கிய தொடர்பு உள்ளது அதன் காணரமாக தான் தனது தம்பி படத்தில் ... ஒரு சிங்கள பெண்ணை பூஜா ஹீரோயினாக நடிக்க செய்தார் சீமான்//
  வெள்ளைகார இனத்தவர் ஏமி சாக்சனை தமிழ் படத்தில் நடிக்க வைக்கலாம். ஆனால் அயல்நாட்டு பூஜாவை நடிக்க வைப்பது தவறாம்!!!
  வெள்ளைகார இனத்தவர் தான் வேண்டும் தனது படத்தில் நடிக்க என்று இருக்காம அயல்நாட்டு நிறம் குறைந்த பெண்ணை இனவாதம் பார்க்காமல் நடிக்க வைத்த சீமானை பாராட்டுகிறேன்.
  சீமான் சொல்வது,விவசாயத்தை அரசுடமை அரசு வேலை ஆக்குவேன், ஆடு மாடு மேய்த்தலும் அரசு வேலை வேலையாக ஆக்கபடும் என்றார். இது எல்லாம் ஏற்கனவே கம்யூனிசிய ரஷ்யாவில் முயற்ச்சி செய்து அந்த நாடே திவால் ஆகி உடைந்து சிதறிவிட்டது என்கிறார் ஐயா தந்த பதிவாளர். ஐயா அவர்கள் இதுபற்றி விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 3. நல்ல பதிவு. சீமான் ஆபாசமாகத் திட்டும் ஒலிப் பதிவைக் கேட்க நேர்ந்தது. கேவலமானவர்கள். ஏன் நல்லவர் வேடம் போட்டு ஏமாற்ற வேண்டும்.

  பதிலளிநீக்கு
 4. கந்துவட்டி அன்புச்செழியனுக்கு ஆதரவாக சீமான் குரல் கொடுத்துத்தது சீமான் எப்படியானவர்?
  அவரின் தலைமை என்ற எல்டிடிஈ அமைப்பு கனடா நாட்டில் கூட இலங்கை தமிழர்களை மிரட்டி பயமுறுத்தி கப்ப கணம் பெற்று கொள்ள முயற்ச்சித்திருக்கிறது.விரும்பாத இலங்கை தமிழர்கள் கனடா போலீஸ் உதவியை நாடி தங்களை பாதுகாத்து கொண்ட நிகழ்வுகளும் உண்டு.

  பதிலளிநீக்கு