புதுக்கோட்டை புத்தகத் திருவிழா, தேதிகள் மற்றும் விருதுகள்

புதுக்கோட்டை புத்தகத்திருவிழா விருதுகள்-2017
கடந்த ஆண்டு 
புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 
வெகு சிறப்பாக நடந்தது.
இந்த ஆண்டு இரண்டாவது புத்தகத்திருவிழாவைச் சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் மிகுந்த உற்சாகத்துடன் பல்வேறு அமைப்புகள், இலக்கியவாதிகள், கல்வியாளருடன் நடந்தன.
அதில், இந்த 2017இல்,
நவம்பர்-24 (சனிக்கிழமை) முதல்
டிசம்பர்-3 (ஞாயிறு) முடிய
பத்துநாள்கள் என  
புதுக்கோட்டை புத்தகவிழாவுக்கான தேதிகளாக
முடிவு செய்யப்பட்டுள்ளது!


(இப்போதே தேதிகளைக் குறித்துவைத்துக்கொள்க!)
கடந்த டிசம்பர்-4ஆம்தேதி தமிழர்களுக்கு மறக்காது!

இந்த ஆண்டு விழாவுக்கான புதிய முடிவு
கலை-இலக்கிய நூல்களுக்கான 12 விருதுகள்

கடந்த -2016 ஆம் ஆண்டு, வெளிவந்த சிறந்த நூல்களுக்கான விருதுகள் பன்னிரண்டு வகைகளில் தருவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது 

கவிதை –  
மரபுக்கவிதை நூல் ஒன்றிற்கும்,  புதுக்கவிதை நூல் ஒன்றிற்கும் அய்க்கூக்கவிதை நூல் ஒன்றிற்கும் என                     
கவிதை நூல்களுக்கான மூன்று விருதுகள்

கட்டுரை
அரசியல்-சமூகம் சார்ந்த கட்டுரை நூல் ஒன்றிற்கும், 
அறிவியல்-கல்வி சார்ந்த கட்டுரை நூல் ஒன்றிற்கும், 
கலை-இலக்கியம்- வரலாறு சார்ந்த கட்டுரை நூல் ஒன்றிற்கும், 
மற்றும் எப்பொருளிலேனும் அமைந்த மொழிபெயர்ப்புக் கட்டுரை நூல் என கட்டுரை நூல்களுக்கான நான்கு விருதுகள்

சிறுகதை- 
அசல் சிறுகதை நூல் ஒன்றிற்கும், மொழிபெயர்ப்புச் சிறுகதை நூல் ஒன்றிற்குமாக சிறுகதை நூல்களுக்கான இரண்டு விருதுகள்

நாவல் - 
அசல் நாவல் ஒன்றிற்கும், மொழிபெயர்ப்பு நாவல் ஒன்றிற்குமாக நாவல் நூல்களுக்கான இரண்டு விருதுகள்

குழந்தை இலக்கியம் – 
சிறந்த குழந்தை இலக்கியத்திற்கான ஒரு விருது

ஆக மொத்தம் பன்னிரண்டு விருதுகள்,
ஒவ்வொரு விருதும், விருதுப் பட்டயம் மற்றும் ரூ.5000 ரொக்கப்பரிசு கொண்டதாக அமையும்.
மேற்காணும் விருதுகளில் எந்தவிருதுக்கான நூல் எனத் தெரிவித்து, இரண்டு படிகளை, வரும் 07-11-2017 தேதிக்குள் பின் வரும் முகவரிக்கு நூலாசிரியரோ, வாசகரோ, பதிப்பகத்தாரோ அனுப்பிவைக்கலாம்.
நூல், கடந்த -2016ஆம் ஆண்டு, வெளிவந்த நூலாக இருக்கவேண்டும்
அனுப்ப வேண்டிய முகவரி –
ராசி.பன்னீர்செல்வன்,
தலைவர், விருதுக்குழு,
புதுக்கோட்டை புத்தகத்திருவிழா-2017
ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
திருக்கோகர்ணம், புதுக்கோட்டை-622 002
-----------------------------------------------------------------------------------------------
எழுத்தாளர்கள், பதிப்பகத்தார், வாசகர்கள் யாராயினும் நூலின் இரண்டு படிகளை (எந்த விருதுக்கானது என்று குறிப்பிட்டு) அனுப்பிவைக்கலாம்
இதனை,  
கவிஞர் தங்கம் மூர்த்தி,
விழாக்குழுத் தலைவர், புதுக்கோட்டை புத்தகத் திருவிழா-2017
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்
---------------------------------------------------------------------------------------------- 
(ஒரு மகிழ்ச்சியான கண்-குறிப்பு -
எனது 'பார்வைக் கோளாறு' பற்றிப் பலரும் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்... இப்போது மருத்துவரும் சொல்லிவிட்டார்!
எனவே 23-09-17அன்று கண் அறுவை மருத்துவம் செய்து கொள்ள இருப்பதால், இனி ஒரு பத்து நாளைக்காவது என் தொந்தரவு நமது வலைநண்பர்களுக்கு இருக்காது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் நான் விடுவேனா? எனக்குச் சொல்லவேண்டிய தகவல் ஏதுமிருந்தால் என் துணைவியாரிடம் சொல்லலாம், அலைபேசி எண் - 94431 93293 அவரும் பாவம்தான் இல்ல????!)  

7 கருத்துகள்:

  1. புத்தகத் திருவிழா செய்தி யறிந்து மகிழ்ந்தேன் ஐயா
    கண் அறுவைசிகிச்சை முடிந்து. நலமும் வலைக்கு வர வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  2. அடுத்த, மற்றொரு சிறப்பான பணியினை முன்னெடுத்துள்ளீர்கள். மனம் நிறைந்த வாழ்த்துகள், தங்களுக்கும் குழுவினருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகள். நானும் கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை நிலையில் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் ஐயா,

    புதுக்கோட்டை புத்தகத் திருவிழா சிறப்புடன் நடைபெற வாழ்த்துகள்.

    நறியுடன்
    சாமானியன்

    எனது புதிய பதிவு " ஒரு ஜிமிக்கி கம்மலும் பல தமிழ் பாடல்களும் ! "
    https://saamaaniyan.blogspot.fr/2017/09/blog-post_29.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும். நன்றி.

    பதிலளிநீக்கு

  5. கண் அறுவைச் சிகிச்சை முடிந்ததா ஐயா...
    நலம்தானே...
    புத்தகத் திருவிழா குறித்த செய்திக்கு மகிழ்ச்சி.
    விழா சிறக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. புதுக்கோட்டை எப்போதும் களைகட்டிக் கொண்டிருக்கும் இலக்கியக் கோட்டை. தங்கள் கண்களுக்கு மட்டுமே சற்று ஒய்வு. தங்கள் சிந்தனைக்கு ஏது ஒய்வு?

    பதிலளிநீக்கு
  7. நன்றி

    கன்னிக்கோவில் ராஜா
    சென்னை

    பதிலளிநீக்கு