கவிதை என்பது யாது? - முன்னுரை(2)


கவிதை என்பது யாது?
கவிதைக்கு இலக்கணம் 
தேவைதானா?.

இந்தக் கேள்விகள் 
பள்ளிப் பருவத்திலிருந்தே என்னைக் குடைந்ததில் 
இந்த நூல் கருக்கொண்டது.

வெங்கட் அவர்களுக்கு “வீதி“ யில் வரவேற்புப் பூங்கொத்து!

திருமிகு வெங்கட் அவர்களுக்கு
“வீதி” நண்பர்கள் சார்பாக
பூங்கொத்து தந்து வரவேற்கிறார்
கவிஞர் மீரா.செல்வக்குமார்.
அருகில் நா.முத்துநிலவன், கூட்டத் தலைவர் குருநாதசுந்தரம்,
கூட்ட அமைப்பாளர்கள் கவிஞர் கீதா, கவிஞர் வைகறை.
வீதிகலை-இலக்கியக் களம் தான் புதுக்கோட்டை கணினித் தமிழ்ச் சங்கத்தின் தாய் அமைப்பு என்று சொல்லலாம். 
கலை-இலக்கியமாய் இணைந்தவர்கள் பின்னர் கணினியோடு கொண்ட காதலில் பிறந்ததே கணினித் தமிழ்ச்சங்கம்.
இதன் 23ஆவது சிறப்புக் கூட்டத்திற்கு வந்து கலந்துகொண்ட முன்னோடி வலைப்பதிவர்,

சில தொலைக்காட்சியில் சில நல்ல நிகழ்ச்சிகள்!


பசங்களா! நான் உங்கள் ரசிகன் டா!
  பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். இவர்தான் நான் உட்பட தமிழ்நாட்டில் பலரும் செல்பேசியில் “ரிங்டோனாக“ வைத்திருக்கும் – “தமிழுக்கும் அமுதென்று பேர்“ எனும் பாரதிதாசன் பாடலை இசைக்கருவிகள் எதுவும் இல்லாமலே சென்னைப் பல்கலை மாணவர்களை அற்புதமாகப் பாடவைத்த திரை இசைக்கலைஞர்!  
   “ஒருவார்த்தை ஒருலட்சம்எனும் வார்த்தை விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியை வழக்கம் போல் சுவையாக மட்டுமின்றி நல்ல தமிழில் அழகாக வழங்குகிறார். தமிழ்நாடு முழுவதிலிமிருந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 36 அணிகள் தங்களது திறமையைக் காட்டி வருகின்றனர். 8 முதல் 11வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஒரு அணிக்கு இருவராக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். இதற்காக, சிறந்த பள்ளிகளிலிருந்து சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 12 அணிகள் மொத்தம் ஐந்து கட்டப் போட்டிகள் சுவாரசியமாக நடைபெற்று இறுதிக்கட்டப் போட்டி நடக்கும்.

வலைப்பதிவர் வெங்கட் அவர்களே! வருக!வருக!


2009முதல் எழுதிவரும்
மூத்த தமிழ் வலைப்பதிவர் மட்டுமல்ல,
போகிற இடங்களைப் பற்றியெல்லாம்
சுவாரசியமாக எழுதும்
முன்னணித் தமிழ்ப்பதிவரும்கூட!
நீண்ட நாள்களாகத் தொடர்ந்து
தமிழ்மணத்தின் முன்னணிப் பதிவர்களில்
முதல் பத்துக்குள் இருப்பவர்!
புதுதில்லியில் பணியில் இருந்தாலும்
நமது அன்னைத் தமிழை மறவாமல் தொடர்ந்து எழுதுபவர்
திருமிகு வெங்கட் நாகராஜ் அவர்கள்
புதுக்கோட்டைக்கு வருகிறார்!
நமது கணினித் தமிழ்ச்சங்க நண்பர்களை
சந்திக்க ஆவலுடன் வருகிறார்!
புதுக்கோட்டை நண்பர்கள் மட்டுமின்றி,
தஞ்சை, திருச்சி முதலான அருகிலுள்ள 
பிறமாவட்ட  நண்பர்களையும் வருக வருக என
அன்புடன் அழைக்கிறோம்!
நண்பரின் துணைவியாரும்
தமிழ்வலைப்பதிவர் என்றே அறிகிறோம்!
எனவே,
வலைத் தம்பதியினரை
புதுக்கோட்டை வலைநண்பர்கள் குடும்பத்தினரின் சார்பாக
வருக வருக என அன்புடன் அழைக்கிறோம்!

ஆல்ஃபியின் புதுக்கோட்டை வருகை!

நண்பர் ஆல்ஃபி அவர்களுக்கான எளிய வரவேற்பு நிகழ்ச்சியில்
புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்க நண்பர்கள் -13-01-2016
மதுரை பேரா.இசையமைப்பாளர் திரு பிரபாகரன் உடன் உள்ளார்
------------------------------------------------------------------ 
ஏதோ ஒரு அமெரிக்கத் தமிழ்ப்பதிவர்
என்றுதான் நினைத்திருந்தோம்
அவர் வந்து பேசத்தொடங்கும்வரை

எனது இரண்டு நூல்கள் பற்றிய மதிப்புரைகள்

அண்மையில் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றுள்ள
எனது “கம்பன் தமிழும் கணினித் தமிழும்“
நூல் பற்றிய மதிப்புரை -
எழுதிய கவிஞர் மீரா.செல்வக்குமார் அவர்களுக்கு நன்றி
பார்க்கவும் அங்கேயே சென்று உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் – தொடர
“இதயத்தால் படியுங்கள்...“
http://naanselva.blogspot.com/2016/01/blog-post_31.html
(திருப்பூர் தமிழ்ச்சங்க விருது வழங்கும் விழா,
வரும் 04-02-2016 வியாழன் மாலை, திருப்பூரில் நடைபெற்றுவரும் பின்னலாடைப் புத்தகக்கண்காட்சியில் நடைபெறவுள்ளது.
வாய்ப்புள்ள நண்பர்கள் வரவேண்டுமென அழைக்கிறேன்)
--------------------------------------------------------------------------------- 

பொங்கல் புத்தகத் திருவிழா-2016

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்ததா நடக்கவில்லையா?
எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கின்றதா நடக்கவில்லையா?
எது நடக்குமோ அது நன்றாகவே நடக்குமா நடக்காதா?

என்று பொத்தாம் பொதுவாக்க் கேட்டால் என்ன சொல்வது?
சமீபத்தில் தமிழகத்தில்
     பெருவெள்ளம், பேரழிவு நடந்தது,
           ஜல்லிக்கட்டு நடக்கவில்லை,
ஆண்டுதோறும் பொங்கலின்போது நடக்கும் புத்தக விழா நடக்குமா நடக்காதா? என்று குழம்பியபோது,
இதோ நன்றாகவே நடக்கிறது என்கிறார் “பாரதிபுத்தகாலயம்“ பதிப்பக நிர்வாகியும் “புத்தகம் பேசுது“ மாதஇதழின் ஆசிரியருமான திரு க.நாகராஜன்.
இந்த விழா நிகழ்வுகளைப் பாருங்கள்...
       தொடக்கவிழா – வரவேற்புரை -

சிறப்புரை – நீதியரசர் சந்துரு உரை -
(பிற நிகழ்வுகளை இந்த இணைப்புகளின் தொடர்பில் காணலாம்)

ஆமா...
புத்தகத் திருவிழாவில் வலைப்பதிவர் மினி-சந்திப்பு கிடையாதா? விழா விவரங்களைப் பார்த்து, சென்னை நண்பர்கள் விழாநாள்களில் ஒருநாள் குறிப்பிட்டுச் சொன்னால்.. வாய்ப்புள்ள பதிவர்கள் சந்திக்கலாமே?
சும்மா ஒரு நாள் மாலை ஒருமணிநேரம்...?

“கவிதையின் கதை“ – முன்னுரைக்கான என்னுரை

எனது வாழ்நாள் பணியாக நான் எழுதிவரும் நூல்.
25ஆண்டுக்கும் மேலாக சுமார் 10,000 நூல்களைச் சேர்த்து நான் வைத்துள்ள நூலகத்தின் நோக்கமும் இதுவே!
கடந்த 15ஆண்டுகளாக எடுத்த குறிப்புகளில் எனக்கு நிறைவில்லை!
கடந்த 2001இல் கணினி வாங்கியதும் கற்றுக்கொண்டதும் எழுதிவருவதும் இதற்காகவே!

இதற்காக எடுத்த சில குறிப்புகளைக் கொண்டு அவ்வப்போது நான் எழுதிய கட்டுரைகளில் சிலவற்றையே சிறுநூலாக வெளியிட்டேன் -
“கம்பன் தமிழும் கணினித் தமிழும்“நூல் இதன் முன்னோட்டமே!

இந்நூலிற்கு உதவியாகவே “வளரும் கவிதை“ எனும் இந்த வலைப்பக்கத்தைத் தொடங்கினேன்.

அன்புடன் வரவேற்கிறோம்!




நமது வலை நண்பர் –தற்போது நியூயார்க்கில் பணியாற்றி வரும் – மதுரையைச் சேர்ந்த திரு ஆல்ஃபிரட் தியாகராஜன் (எ) ஆல்ஃபி அவர்கள், வரும் 13-01-2016 அன்று புதன் (மாலை5 –7மணி) புதுக்கோட்டை வருகிறார்.  

நாம் வழக்கமாக “வீதி“ கலை-இலக்கிய நிகழ்வில் மாதந்தோறும் சந்திக்கக் கூடிய –பேருந்துநிலைய மாடி– “ஆக்ஸ்ஃபோர்டு சமையற்கலைக் கல்லூரி” 

புதுக்கோட்டை நண்பர்கள் மட்டுமின்றி, திருச்சி, தஞ்சை, காரைக்குடி நண்பர்கள் அனைவரும் வருக வருக என அன்புடன் அழைக்கிறோம்.

அவரைப் பற்றிய கூடுதல் விவரம் – 
நமது வலைப்பதிவர் திருவிழா மிக நன்றாக நடக்க முதற்காரணமாய் விளங்கிய திரு விசுஆசம் அவர்களின் இனிய நண்பர், வலைப்பதிவர் விழாவுக்கு அங்கிருந்தே கையேட்டு விளம்பர நிதி வழங்கியவர்.

 இனியவரைப் பற்றிய முழுவிவரம்
 அவரது வலைப்பக்கத்திலிருந்து....

ஆல்ஃபிரட் தியாகராஜன் என்கிற ஆல்ஃபி.
திண்டுக்கல்லில் பிறந்து,  ஆரம்பக்கல்வியை தேவதானப்பட்டியில் பயின்றுமேல்நிலைக்கல்வியை காந்திகிராமத்தில் முயன்றுமதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து மரை கழன்றுஅப்படியும் பசிதீராமல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஸியல் சயின்ஸ்-ல் எம்.ஏ. சமூகவியல் படித்தவன்.  
 
சொந்த பூமியை சோகத்தில் ஆழ்த்திவிட்டு, 2000 த்திலிருந்து நியூயார்க் வாசி. அதாவது கோட் அணிந்த பரதேசி’. நியூயார்க் வந்த பிறகும் ஆன்மீகப்ப்பசி ஆட்டிப்படைத்ததால் 2006-ல் நியூயார்க் தியாலஜிக்கல் செமினரியில் இறையியல் மேற்படிப்பு முடித்தேன்.மான்ஹாட்டனில் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராக பணியாற்றிவருகிறேன்.
 
இருப்பது அமெரிக்காவில் என்றாலும் இறைவனின் நல்லாசியுடன் ரூத் எலிஸபெத் என்கிற ஒரே ஒரு மனைவியுடனும்,[ வேற ஒண்ணும் அமையலங்க] அனிஷா [19] அபிஷா[17] என்கிற இரு அழகிய ராட்சஸ மகள்களுடனும் வாழ்ந்து வருகிறேன்.
என் இளம் வயதில் குட்வில் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பைத்துவங்கிwww.goodwillcdp.org)  சமூகப்பணியில் எப்போதும் தீராத ஆர்வத்தோடு பணியாற்றி வருகிறேன்.
 
இவ்வளவையும் படிச்சிட்டு என்னை ரொம்ப சீரியஸான ஆள்ன்னு நெனச்சீராதீங்க. நமக்கும் வடிவேலு மாதிரியே பில்ட்-அப் மட்டும் தான் ஸ்ட்ராங்க். மத்தபடி பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்தான்.
அவரது வலைப்பக்கம் -


அன்புடன் இரண்டு அழைப்புகள்

(1)            இலக்கியச் சந்திப்புக்கு முதல் அழைப்பு
நமது வலை நண்பர் –தற்போது நியூயார்க்கில் பணியாற்றி வரும் – மதுரையைச் சேர்ந்த திரு ஆல்ஃபிரட் தியாகராஜன் (எ) ஆல்ஃபி அவர்கள், வரும் 13-01-2016 அன்று புதன் (மாலை5 –7மணி) புதுக்கோட்டை வருகிறார்.  

நாம் வழக்கமாக “வீதி“ கலை-இலக்கிய நிகழ்வில் மாதந்தோறும் சந்திக்கக் கூடிய –பேருந்துநிலைய மாடி– “ஆக்ஸ்ஃபோர்டு சமையற்கலைக் கல்லூரி” 

புதுக்கோட்டை நண்பர்கள் மட்டுமின்றி, திருச்சி, தஞ்சை, காரைக்குடி நண்பர்கள் அனைவரும் வருக வருக என அன்புடன் அழைக்கிறோம்.

அவரைப் பற்றிய கூடுதல் விவரம் – 
நமது வலைப்பதிவர் திருவிழா மிக நன்றாக நடக்க முதற்காரணமாய் விளங்கிய திரு விசுஆசம் அவர்களின் இனிய நண்பர், வலைப்பதிவர் விழாவுக்கு அங்கிருந்தே கையேட்டு விளம்பர நிதி வழங்கியவர்.

 இனியவரைப் பற்றிய முழுவிவரம்
 அவரது வலைப்பக்கத்திலிருந்து....

முன்னுரையும் என்னுரையும்

கவிஞர் புதியமாதவி
நமது பழந்தமிழ் இலக்கியக் கருவூலமாம் சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற பெண்புலவர்கள் 30 பேர். அவர்களிலும் அதிகமான 
பாடல்களை-59-எழுதியவர் ஔவையார்தான் என்பதில்
ஆச்சரியம் இருக்கமுடியாது. ஔவையார் எழுதியவற்றிலும் அதிகமாக இடம்பெற்றது புறப்பொருளே என்பதுதான் ஆச்சரியமானது மட்டுமல்லமகிழ்ச்சியானதும்கூட.

தமிழகத்திலும் போலிகளின் “வியாபம்“ ஊழல் நடக்கிறதா?


தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் போலி ஆசிரியர்கள் இருக்கிறார்கள் எனும் அதிர்ச்சித் தகவல் வருகிறது! 
அதாவது வட மாநிலங்களில் போலி மருத்துவர்கள் பல்லாயிரக் கணக்கில் இருக்கக் காரணமான “வியாபம் “ ஊழல் போல,  இது தமிழகத்தின் “வியாபம்“ போலுள்ளது!

கடத்தல் நாடகமாடிய பத்துவயதுச் சிறுவன்!

கட்டுரைப் போட்டி - பரிசு ரூ.30,000




தலைப்பு : "இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?" - பதில் காண முயல்வோம்.

கட்டுரைகள் 1500 வார்த்தைகளுக்கு மேலும், 2500 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

2016 -ஆங்கிலப் புத்தாண்டுக் கனவுகள்...

(1)    தினமும் முக்கால்வாசி நேரம் இணையம் என்பதை மாற்றி, இணையம் அல்லாதவற்றிலும்-படிப்பு-எழுத்து-இயங்குதல் ஆகிய நான்கும் சரிசமமாக ஒவ்வொருநாளும் பயனுறச் செய்வோம்.
(2)    வீட்டினரோடு தினமும் நேரம் ஒதுக்கிப் பேசுவோம்.
(3)    அனாவசியமான -தேவைக்கு அதிகமான- பொருள்களை ஒதுக்குவது போலவே, வலைப்பக்கம், வாட்சாப், முகநூல், இவற்றில் இருக்கும் நண்பர்களை அளவோடு வைப்போம். எண்ணிக்கை பெரிதல்ல.