கோவன் பாடல் – காணொளிப் பதிவு

 பாடகர் கோவன் அவர்கள்
மக்கள் கலை இலக்கிய கழகம், திருச்சி
பாடல் காணொளிப் பதிவைத் தனது தளத்தில் வெளியிட்ட விடுதலை வில்வம் அவர்களுக்கு நன்றி. அவரது தளத்திலேயே சென்று பார்த்துப் பின்னூட்டமிட நண்பர்களை அன்புடன் வேண்டுகிறேன்
தொடர்புடைய செய்திகள் - 

சென்னை:  தமிழகத்தில் மதுஒழிப்பை வலியுறுத்தி "மூடு  டாஸ்மாக்கை மூடு" என்ற பாடலை இயற்றி வீதி நாடகம் மூலம் பிரச்சாரம் செய்துவந்தார்.
மேலும் அவர், மது ஒழிப்புப் பிரச்சார பாடல்களை சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றம் செய்துள்ளார். இந்தப் பாடல்கள் அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டு பொது அமைதியைக் குலைக்கும் வகையிலும், தமிழக அரசின் மதுவிலக்குக் கொள்கையைக் கொச்சைப்படுத்தும் வகையிலும் இருப்பதாக போலீசார், கோவன் மீது பதிவு செய்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 
 
திருச்சியில் கைது செய்யப்பட்ட கோவனை மத்திய குற்றப் பிரிவு போலீசார் சென்னைக்கு அழைத்துவந்தனர். பின்னர் ரகசிய இடத்தில் கோவனிடம் விசாரணை நடத்திய போலீசார்,எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நவம்பர் 6 -ம் தேதி வரை அவரை காவலில் அடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து கோவன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், மதுஒழிப்புக்காக குரல்கொடுத்த கோவனின் கைது தமிழகத்தின் அரசியல் வட்டாரத்திலும் இலக்கியவாதிகள் மற்றும் திரைப்பட இயக்குனர்கள் வட்டாரத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஜனநாயகத்தின் குரல்வளை  எப்படியெல்லாம் நெரிக்கப்படுகிறது என்பதற்கு இதைவிட உதாரணம் தேவையில்லை.அதிமுக அரசின் இந்த ஜனநாயக  விரோதச் செயலை திமுக சார்பில் வன்மையாகக் கண்டிப்பதோடு,கைது செய்யப்பட்ட பாடகர் கோவனை உடனடியாக விடுதலை  செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
நன்றி விகடன் - http://www.vikatan.com/news/article.php?aid=54468

பாடகர் கோவனை உடனே விடுதலை செய்க : சிபிஎம்
சென்னை, அக். 31 -பாடகர் கோவனை உடனே விடுதலை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மக்கள் கலை இலக்கிய கழகத்தை சார்ந்த பாடகர் கோவன் தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது தேசியப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கைது நடவடிக்கையை, கடுமையான பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. கோவனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும், அவர் மீது புனையப்பட்டுள்ள வழக்குகளை கைவிட வேண்டுமென் றும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. ஜனநாயகத்தில் மாற்றுக் கருத்து சொல்வதற்கான உரிமை இருப்பதை அதிமுக அரசு ஏற்க மறுக்கிறது.
அரசின் மீதான விமர்சனங்களை முன்வைக்கும் அரசியல் தலைவர்கள், பத்திரிகைகள் மீது அதிமுக அரசாங்கம் தொடர்ச்சியாக அவதூறு வழக்குகளை தொடுத்து வந்துள்ளது. இதேபோன்று ஜனநாயக இயக்கங்களுக்கு அனுமதி மறுப்பது, சட்டமன்றத்திற்குள் மாற்றுக்கருத்துக்களை சொல்ல விடாமல் தடுப்பது, அரசை விமர்சிக்கும் பத்திரிகைகளுக்கு விளம்பரங்களை மறுப்பது என்று எவ்வித ஜனநாயக நெறிமுறைகளுக்கும் உட்படாத அரசாக அதிமுக அரசு செயல்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே பாடகர் கோவன் கைது செய்யப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து ஜனநாயக இயக்கங்களும் தமிழக அரசின் இந்த அடாவடிக்கெதிராக குரல் எழுப்ப வேண்டுமென மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.அதிமுக அரசின் இந்த நடவடிக்கை ஜனநாயகத் தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். அதிமுக அரசின் இந்த நடவடிக்கையை கண்டிப்பதோடு கோவனை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்வதோடு, அவர் மீது புனையப்பட்ட வழக்குகளை கைவிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. 
----- நன்றி - தீக்கதிர் நாளிதழ் -01-11-2015

----------------------------

2 கருத்துகள்: