நான்கு ஆண்டு நானூறாவது பதிவு பார்க்க அழைக்கிறேன்

இந்தப் பதிவு -
நமது வலைப்பக்கத்தின் 
நானூறாவது பதிவு!
நாலாண்டுகள் கடந்துவிட்டன...

இது ஒன்றும் அகநானூறோ, 
புறநானூறோ இல்ல..
வெறும் நானூறுதான்!

பிப்ரவரி-2011இல் வலைப்பக்கம் தொடங்கியது...
“நான் வளர்கிறேனே மம்மி” னு..
காம்ப்ளான் குழந்தையைப் போலக் குதிப்பதா?
“கழுதை வயசு ஆகுதே தவிர.. 
உருப்படியா ஏதாவது செஞ்சியா?” என்று அங்கலாய்ப்பதா?
நான்வாழ்ந்த காலத்தில் நாட்டுக்குச் செய்ததென்ன?
ஏன்வாழ்ந்தாய் என்றே, எனைக்கேட்டு – நான்காண்டு
நாளும் கழிந்ததன்றி நன்மையென்ன? நாட்காட்டித்
தாளும் கிழிந்தது தான்!

நீங்கதான் சொல்லணும்..
நல்லதா நாலுவார்த்தை 
நல்லா உறைக்கிறமாதிரி  சொல்லி 
வாழ்த்துங்க பெரியோர்களே!
--------------------------------- 
கடந்த 01-01-2015 அன்று 
கலைஞர் தொலைக்காட்சி 
ஒளிபரப்பிய பட்டிமன்றம் 
யூ-ட்யூப் இணைப்பு 
தங்கை “தேன்மதுரத் தமிழ்” கிரேஸ் 
அனுப்பியிருந்தார். நன்றிம்மா..

இதோ அந்த இணைப்பு -
(ஏற்கெனவே பார்க்காமல்
தப்பித்தவர்கள்,
இதைப் பார்த்துவிட்டும் திட்டலாம்)

http://youtu.be/vBm4ABOlfVI

------------------------------------------------------------------ 

நம் வலைக் குடும்பத்தினர் அனைவர்க்கும்,
பொங்கல் தமிழர் திருநாள்,
திருவள்ளுவர் திருநாள்,
தமிழ்ப்புத்தாண்டுத் திருநாள்
மற்றும் நம்ம மாட்டுப்பொங்கல் திருநாள்(!?)
வாழ்த்துகளைத் தெரிவித்து வணங்குகிறேன்.

----------------------------------------------------------- 
வண்ணத் தலைப்புக்கு நன்றி - 
என் விகடன் .காம்-
http://en.vikatan.com/article.php?aid=26135
-----------------------------------------------------------

64 கருத்துகள்:

  1. 4 வது வருடத்தில் 400 வது பகிர்வு...
    வாழ்த்துக்கள் ஐயா...
    பட்டிமன்றம் வீடியோ பார்க்க ஆரம்பிச்சாச்சு...
    தொடர்ந்து எழுதுங்கள்... தொடர்கிறோம் நாங்களும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் உளமார்ந்த வாழ்த்துகள் நண்பர் குமார் அவர்களே!
      கடந்த ஆண்டு தங்களைப் போலும் “சீனியர் பதிவர்கள்“ தங்களின் தளத்தில் என் பதிவுகளைப் பாராட்டி, தளத்தின் இணைப்பையும் தந்ததுதான் என் வலைவளர்ச்சிக்குப் பேருதவியாக இருந்தது. என்றும் தங்களின் நட்பை மறவேன்.

      நீக்கு
    2. நாங்க சீனியரா?
      நல்லா இருக்குய்யா கதை....
      உங்களின் பகிர்வுகள் மூலம் நாங்கள் கற்றுக் கொள்கிறோம்..
      தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

      நீக்கு
  2. இந்த பட்டிமன்றத்தை ஒளிபரப்பானபோதே நான் இதனைப் பார்த்து ரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி. நான்காண்டுகளாக அமைதியாக பல பதிவுகளை இட்டு சிறப்பான சேவை செய்துள்ளீர்கள். உங்கள் மூலமாக நாங்கள் பல புதியனவற்றை அறிந்துகொண்டோம். தங்களின் எழுத்து நடை, உணர்வு, பகிர்ந்து கொள்ளும் பாங்கு போன்றவை எங்களை அதிகம் தங்களின்பால் ஈர்த்துள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்காத நான் தங்களது பதிவுகள் மூலமாகவே தங்களைப் பற்றி அறிந்தேன். தாங்கள் மென்மேலும் எழுத்துப்பணியைத் தொடர எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிக்கு நன்றிக்கு நன்றி அய்யா.
      தாங்கள் என்னை விக்கிப்பீடியாவில் அறிமுகப்படுத்தி எழுதியதற்குப் பெரிதும் நன்றியுடையேன் .
      தங்களின் பணிசிறக்க வாழ்த்துகளும், தங்களின் வாழ்த்துக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளும் அய்யா

      நீக்கு
  3. ஆண்டுக்கு ஆவ்ரேஜாக நூறா! நானூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்.

    புத்தாண்டுக் கவியரங்கம் தொலைக்காட்சியிலேயே பார்த்து விட்டேன். நடுவே நடுவே (உங்கள் பேச்சின் நடுவே அல்ல) அதிகம் பேசிக் கொண்டேயிருந்ததால்தான் லியோனி அவர்கள் "நடு"வரோ!

    :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா..கிண்டல் மன்னரே, தங்களின் வாழ்த்துக்கு நன்றி. (பட்டிமன்றத்தைக் கவியரங்கம் என்றதும் கிண்டல்தானே?

      நீக்கு
    2. ஓ.... அது கிண்டல் இல்லை. பிழை. கவனப்பிழை. பட்டிமன்றம்தான்!

      நீக்கு
  4. பதில்கள்
    1. வணக்கம் மதுரைத்தமிழரே!
      தங்களின் இனிய வாழத்துக்கு எனது இதய நன்றி.

      நீக்கு
  5. நீங்கள் 4 ஆண்டுகள் எழுதி வந்தாலும் கடந்த ஆண்டுதான் நீங்கள் அதிக ஆக்டிவ்வாக செயல்பட்டு இருக்கிறீர்கள்... இதே போல மேலும் ஆக்டிவாக செயல்பட புது மாப்பிள்ளை முத்து நிலவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. (1) உண்மைதான்.
      (2) இன்னொரு முறை சொல்லுங்க.. (என் வலைத்தங்கச்சிங்க கல்லை எடுத்துக்கொண்டு என்னை விரட்டும் முன் உடு ஜூட்)
      (3) புதுமாப்பிள்ளை என்றது சுறுசுறுப்பின் அடையாளம் அ்ன்றி வேறொன்றும் இல்லை தானே? அப்படின்னா சரிதான்.. மைதிலீ, கிரேஸ், ஜெயா, சுவாதி, கீதா, சசி, இனியா, மாலதி, மற்றும் என்மகள் ரேவதி எல்லாரும் கல்லைக் கீழ போடுங்கப்பா.. மதுரைத் தமிழனுக்குப் பாராட்டுவிழா எப்போ எங்க வைக்கலாம்னா கேக்குறீங்க? இருங்க அவருகிட்டயே கேப்போம்.. அங்க யாரு பூரிக்கட்டயோட.. சரி சரி அப்பறம் பாப்பம்.

      நீக்கு
  6. நா100 ஐ100 ஆகட்டும் விரைவில் .....

    பதிலளிநீக்கு
  7. ஐயா! உங்கள் வலைப்பூவிற்கு வளர்கவிதை என்ற பெயரும் பொருத்தமாக இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பெயரை எனக்குமுன்பெ யாரோ சுட்டுவிட்டார்கள் முரளி. எனவேதான் வளரும் என உம் கொட்டிக்கொண்டே..
      தாங்கள் கடந்த ஆண்டில் ஒருமுறை என்னை அறிமுகப்படுத்த. அந்தநாளில்மட்டும் எனது வலைப்பக்கங்களை சுமார் ஆயிரம்பேர் பாரத்திருந்ததைப் பார்தது வியந்தும் மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் போனேன்.. என் வளர்ச்சி(?)யில் தங்களின் பங்கை என்றும் மறவேன். கல்வியாளர், இலக்கியவாதியாகத் தங்களின் நட்பில் பெருமை கொள்கிறேன். நெஞ்சு நிறைந்த நன்றி நண்பரே! வணக்கம்

      நீக்கு
  8. இது வெறும்நானூறு அல்ல...
    நிலவன் அண்ணாவின் அரும்நானூறு
    படிக்கையில் சிந்தையில் பாய்கிறது தேனாறு
    பதிவுகள் தெறிக்கும் சாரலில் மூணாறு
    எழுத்துகளில் மிளிர்கிறது என்றும் பதினாறு!!

    ஏன் அண்ணா??? ஏன் இப்படி ரைமிங்கா பதிவுபோட்டு எனக்குள் இருக்கும் வாலி,வைரமுத்து, கலைஞர் எல்லோரையும் தட்டி எழுப்புகிறீர்கள்!!!!! ஒ! அறிதுயில் மீட்டல் அண்ணன் பணியோ:) நீங்க எங்க முன்னோடி. so! முன்னாடியே போய்ட்டே இருங்க..நாங்க follow பண்ணிக்கிறோம்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மைதிலி சொன்னா பாட்டு,
      மனசு சொல்றதக் கேட்டு,
      ஒரே போடாப் போட்டு.. - அந்த
      டிஆருக்கு வைக்கணும் வேட்டு

      நீக்கு
  9. பதில்கள்
    1. நன்றி என் இளைய இனிய நண்பா.
      தங்களின் வலைப் பிரவேசம் எனக்குள் இருந்த கருத்துகளை நம்பிக்கையோடு விதைக்க உற்சாகம் தந்தது உண்மை.
      இணைந்த நம் பயணம் என்றும் தொடர விழைகிறேன்.

      நீக்கு
    2. என் வெண்பாவை யாருமே கவனிக்கலயே?
      வெண்பா வேந்தராவது கவனித்து ஏதாவது சொல்வார்னு பார்த்தா...என்கனவும் ஊமையாகிவிட்டதா?

      நீக்கு
  10. 400!! ஆமாம் இது அகநானூறும் இல்லை, புறநானூறும் இல்லை..நிலவன் நானூறு :)
    வாழ்த்துகள் அண்ணா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உன்னைப் போலும் அன்பால் நெகிழவைக்கும் தங்கையரைத் தந்த வலைஉலகிற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். நேற்று சென்னைப் புத்தகக் காட்சியில் வந்து சந்தித்த நம் அப்பா, தனது எளிமையாலும் அடக்கத்தாலும், வயது கடந்த சுறுசுறுப்பினாலும் உண்மையான அன்பினாலும் நெகிழ வைத்துவிட்டார் பா. உன் இனிய பண்புகள் பலவற்றின் மூலம் எது என்பதை நேற்று கண்டேன்.. நன்றி டா.இந்த வார்த்தை போதாதுதான் ஆனாலும்... வேறென்ன சொல்றது ன்னு தெரியலப்பா..அப்பா இருக்கும் திசைநோக்கி சொற்களைத் தவிர்த்து, மௌனமாய்க் கைகூப்புகிறேன்.

      நீக்கு
  11. ஆசிரியர் அவர்களின் 400 – ஆவது பதிவினுக்கு எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள்!
    த.ம.7

    பதிலளிநீக்கு
  12. 400 வது பகிர்வு & தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  13. அகநானூரல்ல
    புறநானூரல்ல
    இது
    வலைநானூறு
    ஆயிரமாய் வளரட்டும்
    ஆயிரமாயிரமாய் பெருகட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆயிரமா..? அடேயப்பா... தங்களின் அன்பின் ஆழம் கண்டு அஞ்சுகிறேன். எனினும் நன்றி அய்யா

      நீக்கு
  14. மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க.. எங்க வலையுலகப் பிதாமகரே!
      உங்களுக்கு விரைவில் அழைப்பு வரும் - நன்றி.

      நீக்கு
  15. வாழ்த்துக்கள் அய்யா.
    மனதைத் தொட்டப் பதிவுகள் பல. அதிலும் குறிப்பாய் "தாலாட்டு ஏன் ஒப்பாரியானது" மற்றும் "முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம், மகளே!" போன்ற பதிவுகள் மனதில் தங்கிய நல் மருந்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே.
      (நுட்பமான ரசனை தங்களுடையது.. கவனத்தில் கொள்வேன்)

      நீக்கு
  16. நான் சொல்ல நினைத்ததை அவர்கள் உண்மைகள் சொல்லிவிட்டதால் நான் வாழ்த்துக்கள் மட்டும் சொல்லி விடைபெறுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிம்மா.
      என்றாலும், உன் “மரபு“ சார்ந்த பதில்எங்கே?
      (நாங்களும் ஒரு வெண்பா எழுதியிருக்கம்ல?)

      நீக்கு
  17. வளர்கவிதை நானுறு மேலும்மேலும்
    வண்டமிழும் வளங்காண நாளும்நாளும்
    தளர்வின்றி இளமையொடு வளரவேண்டும்
    தன்னிகரே இல்லையென திகழயாண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா வணக்கம் அய்யா.
      வாழ்த்துக்கும் நன்றி அய்யா.
      கவிதைக்கும் நன்றி அய்யா.

      நீக்கு
  18. பொழுது போக்கை கருத்தில் கொள்ளாமல் சிந்தனைக்கு விருந்து தரும் தங்கள் பதிவுகள் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “சிந்தனைக்கு விருந்தாக“ சரிதான்.
      அது பேச்சோ, எழுத்தோ -
      சுவையாகவும் இருக்க வேண்டும்.
      அப்போதுதான் அதன் நோக்கம் நிறைவேறும். நன்றி

      நீக்கு
  19. நானூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சரவணன்.
      சென்னைக்கு எதிர்பாராமல் வந்து இன்ப அதிர்ச்சி தந்துவிட்டீர்களே!
      நன்றி நண்பரே

      நீக்கு
  20. வாழ்த்துக்கள் சகோதரா,,,,,!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கை இனியாவின் வாழ்த்துக்கு நன்றி.
      இதே பதிவில் மதுரைத் தமிழனின் பின்னூட்டத்திற்கான எனது பதில்களைப் பார்க்க வேண்டுகிறேன்.

      நீக்கு
  21. அன்புள்ள அய்யா,

    நான்கு ஆண்டுகளில் நானூறாவது பதிவு கண்டு மகிழ்ச்சியடைகின்றேன். தங்களின் பணி மேலும் மேலும் சிறப்படைய எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
    கலைஞர் தொலைக்காட்சி ஒளிபரப்பிய பட்டிமன்றம் யூ-ட்யூப்பில் அன்புச் சகோதரி “தேன்மதுரத் தமிழ்” கிரேஸ் இணைப்பு கொடுத்திருந்ததை மீண்டும் கண்டு களித்தேன். அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பட்டிமன்றம் ஒளிபரப்பாகின்ற பொழுது ‘தீபாவளி சிறப்பு பட்டிமன்றம்’ என்று ஆங்கிலத்தில் போடப்பட்டுள்ளது.

    சமூக முன்னேற்றத்திற்குப் பெரிதும் தேவை.....
    “கல்வி வளர்ச்சியா?“ “தொழில் வளர்ச்சியா?” புத்தாண்டுப் பட்டிமன்றம் பார்த்தும்... கேட்டும்... மகிழ்ந்தோம்.
    கவிஞர் நா.முத்து நிலவன் அய்யா பட்டிமன்ற முதல் பேச்சாளராக ஆரம்பித்து...‘ படிப்படிப்யாக என்று தொடங்கி படிப்பு இல்லையென்றால் தொழில் வளராது. கூரையேறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போவதெப்படி? என்ற கேள்வியோடு ...நாடு கல்வி வளர்ச்சியடைந்தால்தான் சமத்துவம் வரும் நல்ல சிந்தனையை விதைத்தீர்கள். வள்ளுவரின் ஒன்றரை முக்கால் அடியை நினைவுகூர்ந்து... நாம் காலடி பதிக்க அவர் விட்டுச் சென்றததை கூறியது நன்றாக இருந்தது.
    பாரதிதாசனின் ‘படி!படி!படி! நூலைப்படி- சங்கத்தமிழ் நூழைப்படி-முறைப்படி-நுலைப்படி... காலையில் படி...கடும்பகல் படி மாலை, இரவு பொருள்படும்படி’ கல்வியின் முக்கியத்துவத்தை பாரதிதாசனின் வரிகளைப் அருமையாகப் பாடி நிறைவு செய்தீர்கள்.
    பிறகு வந்த அஞ்சலி அவர்களும் ... ‘காலை எழுந்தவுடன் படிப்பு... கல்வியில்லா பெண்கள் களர் நிலம்... அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்று ...’என்று பாரதி வரிகளைத் தொட்டுப் பேசினார்.
    பேராசிரியர் அன்பும் ‘பயிற்று பல கல்வி தந்து இந்த பாரை உயர்த்திட வேண்டும்’என்று பாரதியின் பாட்டைத் தொட்டுக் காட்டினார்.
    பெரிய அம்மை... சின்ன அம்மை நோய் இப்பொழுது நாட்டில் இல்லை என்பதை நகைச்சுவையுடன் சுட்டிக்காட்னார். தஞ்சையில் சாகுபடி செய்பவர்கள் சாகும்படி இருக்கிற அவலத்தையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. கல்வி தன்மானம்...தொழில் வருமானம் என்று தன்னுடைய அணிக்கு வலிமை சேர்த்து தன் பங்கை அருமையாக நிறைவு செய்தார்.

    ‘தொழில் வளர்ச்சி’ என்ற அணியில் பேச வந்த கோவை தனபால்...ஜி.டி.நாயுடு, அம்பானி, போன்றோர் கல்வி கற்று முன்னேறவில்லை... தொழில் முன்னேறியவர்கள் ... கல்வி என்பது பாதி கிணறு தாண்டுவது போல... என்றார். முழுக் கிணறு தாண்டுவது என்பது தொழில் வளர்ச்சிதான் என்று அவரும் தனது அணிக்கு அணி சேர்த்தார்.
    அதே அணியில் கிருஷ்ணகிரி வேதவல்லி 216 அடி உயரம் உள்ள தஞ்சை கோயிலைக் காட்டி கல்வியில்லா காலத்தே அந்த தொழில் நுட்பத்தை வியந்தார்.
    பிறகு வந்த மதுக்கூர் இராமலிங்கம் வாழ்க்கையை பூந்தோட்டமாகவும்...உழைப்பு அதில் தேனியாகவும் இருக்க வேண்டும் என்றும்... கரிகாலன் கட்டிய கல்லணை எடுத்துக்காட்டினார். நாம் படிப்பது வேலைக்காக... தொழிலுக்காக... தொழிற்சாலையால் நாடு வளரும்... வளம் பெரும் என்று நன்றாக வாதிட்டார்.

    திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் மலேசியப் பயணத்தில் தஞ்சை மண்ணுக்குச் சொந்தக்காரர்... தாய்மொழிக்காரர் விமான நிலையத்தில் கடைசிநேரத்தில் உதவியதை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். கரப்பான் பூச்சி மல்லாக்க படுத்துவிட்டால் எழுந்திருக்க இயலாது...! என்று நக்கலடித்தது நகைச்சுவையாக இருந்தது.
    பெரியாரும்... பேரறிஞரும் புகைவண்டியில் பயணிக்கும் பொழுது ஒரு பார்வையற்றவராக (நடித்து) பிச்சைகேட்டவருக்கு பிச்சைபோட்டது...அதை பெரியார் கண்டுபிடித்தது... அவனது நடிப்புக்கே காசு போட்டேன் என்று அண்ணா கூறியது இருவரையும் படம் பிடித்துக் காட்டியது நன்றாக இருந்தது.
    பிறகு அந்த அண்ணா அவர்கள் பராசக்தியில் சிவாஜி நடிக்க முன்மொழிந்தது நடிப்பினமீது அவருக்கிருந்த ஈடுபாட்டைக் காட்டியது.
    அம்பேத்கர் முதல்...அண்ணா... வரை கையில் புத்தகத்தோடுதான் சிலையாக இருக்கிறார்கள். காமராசர்கூட குழந்தைகளோடுதான் இருக்கிறார் என்று இறுதில் சமூக முன்னேற்றத்திற்குப் பெரிதும் தேவை...“ “கல்வி வளர்ச்சி” என்று தீர்ப்பளித்தது நன்றாக இருந்தது.
    நகைச்சுவை குறைந்தும் ... லியோனியின் பாடல்கள் கேட்க முடியாதது மனதுக்கு குறையாகவே இருந்தது.
    புத்தாண்டு தினப் பட்டிமன்றம் இரசிக்கும்படி அமைந்திருந்தது.
    -நன்றி.
    த.ம. 12.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடே அப்பா... மொத்த நிகழ்வுக்குமான முழு விமர்சனத்தையும் அக்கறையோடு எழுதியதற்கு நன்றி.
      இதை அப்படியே திரு லியோனி அவர்களிடமும், பேச்சாளர் குழு நண்பர்களிடமும் தெரிவிப்பேன். நன்றி வாத்யாரே!

      நீக்கு
    2. அன்புள்ள அய்யா,

      மிக்க நன்றி.

      நீக்கு
  22. இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பான பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அய்யா

      நீக்கு
  23. அகம் நானூறு
    புறம்நானூறு
    வளரும் கவிதையின்
    படைப்புகள் நானூறு
    தங்கள் தடம் பற்ற இயலுமா?
    தங்களின் நிழல்தொட்டு வர்வேன்.
    அண்ணா நூல் வெளியீட்டு விழாவிற்கு
    தாமதமாகவந்தேன் வழியிலேயே
    ஒருகம்பீரக் குரல் கேட்டது
    மாதவிபற்றியும் புதுக்கவிதை
    மரபுக்கவிதைபற்றிபேசியதையும்
    வெளியில் நின்று கேட்டுவிட்டு
    புத்தகமும் வாங்கிக்கொண்டு
    வந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிழல் தொட்டா...? வெய்யிலில்தானே நிழல் இருக்கும்?
      நிழலில் நான் இருந்தால்.. ? ஏன்..இப்புடீ? சரி நல்ல்ாருங்க.
      எந்தப் புத்தக வெளியீட்டு... ஓ..11-01-அன்று நடந்த கவிஞர் புதுகை வெற்றிவேலன் அவர்களின் “கண்ணகி காவியம்“ நூல்வெளியீட்டு விழாவா...நன்றிம்மா

      நீக்கு
  24. நேற்று புத்தக கண்காட்சியில் தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி! நேரமில்லாத காரணத்தால் அதிக நேரம் உரையாட முடியவில்லை! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அய்யா.. உங்களைப பார்த்ததும் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.. நீங்கள் எல்ல்ாம் போனபின்னர் முரளி வந்தார். அது பற்றித் தனியே எழுதலாம் என்றிருக்கிறேன். நன்றி அய்யா

      நீக்கு
  25. வாழ்த்துக்கள் முத்து நிலவன் ஐயா.

    பதிலளிநீக்கு
  26. உங்களிடம் சரக்கு இருக்கிறதே ,நானூறு என்ன நாலாயிரம் பதிவுகள் கூட வருமென்று நினைக்கிறேன் :)
    வாழ்த்துக்கள் !
    த ம 13

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா... மிகக்குறுகிய காலத்தில் மிகஅதிகப் புள்ளிகளைப் பெற்று தமிழ்மணத்தின் நம்பர் ஒன் நாயகராம் பகவானே! நன்றி
      (அது பாருங்க நம்மகிட்ட “சரக்கு“ இருக்குஙகறது உங்களுக்குத் தெரியிது... நம்ம “குடி“ மக்களுக்குத் தெர்லயே.)

      நீக்கு
    2. அந்த சரக்குதான் முட்டு சந்தில் கூட கிடைக்குதே ...அது போதை தரும் சரக்கு ,உங்க சரக்கு பாதை காட்டும் சரக்காச்சே :)

      நீக்கு
  27. சென்னையில் உங்களை சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி. நானூறுக்கு வாழ்த்துக்கள் சார்..

    பதிலளிநீக்கு