எம்.ஜி.ஆர்.படங்களில் நானறிய ஒரே ஒருபடத்தில்
ஒரே ஒரு பாடலுக்குத்தான் அவரது இயல்பை மீறி,
ஒரே இடத்தில் உட்கார்ந்தும், நின்று கொண்டும் பாடுவார்.
ஏனெனில் அந்தப் பாடல் வரிகளின் கனம்
தனது - கைகளை மேலே தூக்கி, ஓடி ஆடும் நடிப்பால்
கவனிக்கப்படாமல் போய்விடும்
என்று நினைத்திருப்பார் போல!
(என்ன கவனம்!)
அந்தப் படம் – படகோட்டி
அந்தப் பாடல் – தரைமேல் பிறக்க வைத்தான்
வாலி எழுதிய இன்றும் வாழும் வரிகளுக்கு,
இசை – விஸ்வநாதன்-ராமமூர்த்தி
அதுபோல
வழக்கமாக ஏதாவது எழுதியபின் பதிவிடும் நான்
எதுவுமே எழுதாமல் பதிவிடுவது இந்த நிகழ்வின்
கனம் குறைந்துவிடக் கூடாது என்பதால்தான்
வருக நண்பர்களே!
மாநாடு – தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் மட்டும்தான் அரங்கில் இருக்க முடியும் எனினும் நாள்முழுவதும் பார்க்க, ரசிக்க, குறிப்பெடுக்க, மாலையில் தினமும் நடக்கும் கலை-நிகழ்வுகளைக் காண நீங்கள் அனைவரும் வரலாம்.
அரங்கிலும் சில நிகழ்வுகள்
பொதுவாக அனைவரும் அரங்கில் வந்து
பார்க்குமாறும் உள்ளன
தினமும் மாலை நிகழ்ச்சிகள்
வெளி அரங்கில்தான்!
மேலே உள்ள அழைப்பிதழில்
அந்த விவரம் காண்க.
விழாவில் - மாநாட்டு சிறப்பு மலர் வெளியீடும் உண்டு!
முக்கியமாக 6-12-2025 அன்று என் தலைமையில் நீதியரசர் சந்துரு அவர்கள் பேசும் நிகழ்வும், அன்றிரவு பிரளயன் இயக்கத்தில் திரைக் கலைஞர் ரோகிணி அவர்கள் நடித்து அண்மையில் வந்த ‘வனப்பேச்சி பேரண்டச்சி’ எனும் “புதுமையான மிகச்சிறப்பான நாடகம்” என்று ஊடகங்களால் பாராட்டுப் பெற்ற நாடகம் பார்க்க -
வருக வருக என அன்போடு அழைக்கிறேன். வணக்கம்






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக