வருக நண்பர்களே!
மாநாடு – தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் மட்டும்தான் அரங்கில் இருக்க முடியும் எனினும் நாள்முழுவதும் பார்க்க, ரசிக்க, குறிப்பெடுக்க, மாலையில் தினமும் நடக்கும் கலை-நிகழ்வுகளைக் காண
நீங்கள் அனைவரும்
பொது நிகழ்வுகளுக்கு நேரில் வரலாம்.
அரங்கிலும் சில காலை, மாலை நிகழ்வுகள் உள்ளன.
தினமும் மாலை நிகழ்ச்சிகள்
தஞ்சை திலகர் திடலில்தான்!
மேலே உள்ள அழைப்பிதழில்
அந்த விவரம் காண்க.
விழாவில்
நானும் மலர்க்குழுவினரும்
ஒரு மாதமாகத் தொகுத்த
மாநாட்டு சிறப்பு மலர் வெளியீடும் உண்டு!
முக்கியமாக 6-12-2025 அன்று என் தலைமையில்
நீதியரசர் சந்துரு அவர்கள் பேசும் நிகழ்வும்,
அன்றிரவு பிரளயன் இயக்கத்தில்
திரைக் கலைஞர் ரோகிணி அவர்கள் நடித்து
அண்மையில் வந்த ‘வனப்பேச்சி பேரண்டச்சி’ எனும்
“புதுமையான மிகச்சிறப்பான நாடகம்” என்று
ஊடகங்களால் பாராட்டுப் பெற்ற நாடகம் பார்க்க -
வருக வருக என அன்போடு அழைக்கிறேன். வணக்கம்







வணக்கம் ஐயா
பதிலளிநீக்குமாநாட்டு அழைப்பிதழ் பார்த்தேன். அத்தனை மகிழ்ச்சி. மாநாடு சிறந்து விளங்கவும் தங்களின் எழுத்துப்பணியும் தமிழ்ப்பணியும் தமிழர்களின் உயர்வுக்கு வலிமை சேர்க்கவும் வணங்கி வாழ்த்துகிறது செம்மொழி தமிழ்க்கூடம சீர்காழி
வாழ்த்துதலுடன்
மகா.இராஜராஜசோழன்
குழந்தைகளுக்கான தமிழ் பயிற்றுநர், இயக்குநர்,
செம்மொழி தமிழ்க்கூடம், சீர்காழி.
+918940874940
cholan1981@gmail.com