இதை வாங்காதீர்கள்..

பசங்க-2, பாடம் நடத்தும் படம்!
ஃபைட் இல்ல, டுயட் இல்ல... ஹீரோவுக்கு என்ட்ரி சாங் இல்ல.. பஞ்ச் டயலாக் இல்ல ஆனாலும் சில வசனங்கள் சூப்பர்
நாயகர்களின் “பஞ்ச் டயலாக்கு”களை விடவும் பார்ப்போரின் கைத்தட்டலை அள்ளுகின்றன!
“பசங்க பேசுறது
கெட்ட வார்த்தை இல்லிங்க,
கேட்ட வார்த்தை”
“பள்ளிக்கூடத்துல பாடமா நடத்துறாங்க?
பரிட்சை மட்டும்தானே நடத்துறாங்க”
“மதிப்பெண்ணைத் தாண்டிய
குழந்தைகளுக்கான மதிப்பு ஒன்னு இருக்கு..
அதைப் பத்திக் கவலைப் படணுமே தவிர
மதிப்பெண்ணைப் பத்தியே
கவலைப்பட்டுப் பசங்களப்
பாடாப் படுத்தக் கூடாது” என்பவை அவற்றில் சில!

அவர்கள் கருத்தும் என் கருத்தும் வேறுபடலாம்...
“திருநின்றவூரில் மழைநீர் தேங்க, தி.மு.க.வே காரணம் – ஓ.பி.எஸ்”
இல்லியா பின்ன? மற்ற இடங்களில்
நீர் தேங்கியதற்குத்தான் அதிமுக காரணம்!

ஆமா! இப்படி
ஆளுக்காளு கூப்பிட்டாத்தானே
ஆளுக்காளு கூப்பிட்டாத்தானே
அவரு மத்த “பெரிய“கட்சிகள்ட்ட ரேட்ட
ஏத்திக் கேக்க முடியும்...
“ஜல்லிக்கட்டுப்
போட்டி நடத்த மாற்றுவழி ஆராயப்படும் – பொன்னார்”
என்ன..முஸ்லீம் மனுசங்கள
பாகிஸ்தானுக்கு விரட்டுற விளையாட்ட நடத்தப் போறீங்களா? 
பெண் கடத்தலில் தமிழ்நாடு முதலிடம் - அதிர்ச்சிச் செய்தி!

2015ஆம் ஆண்டு அஜால் குஜால் விருதுகள்
2015ஆம் ஆண்டு அஜால் குஜால் விருதுகள் அறிவிப்பு..
சிறந்த டிரைவர்- சல்மான்கான்
சிறந்த
நீதிபதி- குமாரசாமி
சிறந்த
பேச்சாளர்- நாஞ்சில் சம்பத
சிறந்த
பாடகர்-சிம்பு
சிறந்த
இசையமைப்பாளர்- அனிரூத
சிறந்த
நடிகர்- மு.க.ஸ்டாலின் (நமக்கு நாமே)
சிறந்த
வாட்ஸப் செய்தி- செல்வி.ஜெ.ஜெ (எனக்கென யாரும் இல்லையே)
சிறந்த துணை
நடிகர்- ஒ.பன்னீர் செல்வம
சிறந்த
ஸ்டண்ட் மாஸ்டர்- கேப்டன் (தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்கோ)

நடிகர் சங்கத் தலைவர் நாசர் அவர்களுக்கு ஒரு கடிதம்
நடிகர்
சங்கத் தலைவர்
நாசர் அவர்களின் கவனத்திற்கு,
தோழரே
வணக்கம்.
தங்களை
தோழரே என விளித்தமைக்கு, தங்களின்
சமூகம் சார்ந்த கடந்தகால வெளிப்பாடுகளே காரணம்.
தாங்கள்
பொறுப்பேற்றவுடன் பொதுப்பிரச்சனைகளில் சங்கம் தலையிடாது.இது நடிகர்களின்
பிரச்சனைகளை பேசுவதற்கான இடம் மட்டுமே..என்று நீங்கள் பேட்டியளித்தபோது,எல்லாரும் உங்களை திட்டித்தீர்த்தபோதும் இதை ஒரு முதிர்ச்சியான
நிர்வாகியின் சரியான பதிலாகத்தான் நான் உணர்ந்தேன்.

ஆபாசப் பாடலை எதிர்த்து, புதுமையான போராட்டம்!
அனைத்துக் கலை-இலக்கிய-சமூக
அமைப்புகளின் சார்பாக,
புதுக்கோட்டையில் நடந்தது!
![]() |
தங்கம்.மூர்த்தி தலைமையில் நா.முத்துநிலவன் கண்டனப் பாடல் |
ஆபாசப்
பாடலை வெளியிட்ட சிம்பு-அனிருத்தைக் கைது செய்யக் கோரியும், அவர்களிருவரும் நிபந்தனையற்ற
மன்னிப்புக் கேட்க வேண்டும், தவறினால், திரைப்பட-தொலைக்காட்சி - பத்திரிகை - இணைய
ஊடகங்கள் வாழ்நாள் முழுவதும் இருவருக்கும் தடைவிதிக்கக் கோரியும் புதுமையான முறையில் கண்டன ஆர்ப்பாட்டம்
நடந்தது.

அனிருத் கனடாவிலேயே கைதாக ஒரு வாய்ப்புள்ளது.
தற்போது கனடாவின் டொரண்டோ நகரில் பதுங்கி(?)யிருக்கும் “பீப்பாடல் புகழ்“ அனிருத் கனடாவிலேயே
கைதாக வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டுக் காவல் துறை கொஞ்சம் முயற்சி எடுத்தால் போதும். இன்று வந்த செய்திதான் எனக்கு இந்தக்
கருத்தைத் தந்தது - காவல் துறை செய்யுமா?
கனடாவில் முதன்முறையாக நேற்றுத்தான் ஒரு தமிழ்ப்பெண்
நீதிபதியாகியுள்ளாராம். அவர் பெயர் வள்ளியம்மை. (நமது உச்சநீதி மன்றத்தின் முன்னாள்
நிதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் அவர்களின் உறவினராம்)
தொடர்புடைய செய்தி படிக்க –
'தமிழருக்கு பெருமை: கனடா நாட்டில் ஐகோர்ட்டு நீதிபதியாக தமிழ் பெண் நியமனம்'
எனவே, “பீப் புகழ்“ அனிருத்,
தமிழ்நாட்டுக்கு வந்தால் எங்கே கைதாகி விடுவோமோ என்று கனடாவிலேயே பதுங்கி
இருப்பதைக் கைவிட்டு, உடன் தமிழ்நாடு
திரும்புவது நல்லது. நல்லதோ கெட்டதோ இங்கேயே நடக்கட்டும்! நாஞ்சொல்றது? சரிதானுங்களே?
-------------------------------------------

அனிருத்-சிம்புவுக்கு 1000 நோட்டீஸ்!

உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்ன சொல்கிறது?!
“அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக முடியாது” என்று இன்றைய உச்சநீதி மன்றம் தீர்ப்புச்
சொல்லிவிட்டதாகச் செய்திகள் வருகின்றன. ஆகம விதிகளின்படியே அர்ச்சகர் நியமனம் இருக்க முடியுமாம்! ஆகமவிதிகள் என்றைக்கு சாதியில் சமத்துவம் பேசின?
சாதி-வேறுபாடுகளை, உயர்சாதி ஆதிக்கத்தை உறுதிப் படுத்தத்தானே ஆகம விதிகளே எழுதப்பட்டன?
சாதி-வேறுபாடுகளை, உயர்சாதி ஆதிக்கத்தை உறுதிப் படுத்தத்தானே ஆகம விதிகளே எழுதப்பட்டன?
இது எதிர்பார்த்தது தான்.
மனுவின் ஆழ-அகலம் அப்படி!

‘பீப்’ பாடலை வெளியிட்டதற்கு, வாழ்நாள் தடைவிதிக்க வேண்டும்’
‘பீப்’ பாடலை வெளியிட்டதற்கு,
வாழ்நாள் தடைவிதிக்க வேண்டும்’
புதுக்கோட்டை
கலை-இலக்கியவாதிகள்
குடும்பத்தோடு போராட்ட அறிவிப்பு!
மலிவான விளம்பர
நோக்கத்தில், பெண்களை இழிவுபடுத்தி, ‘பீப்’ பாடலை வெளியிட்ட சிம்பு-அனிருத் இருவருக்கும் திரைப்பட- தொலைக்காட்சி- செய்தி ஊடகங்கள் வாழ்நாள் முழுவதும்
தடைவிதிக்க, வேண்டுமென
புதுக்கோட்டைக் கலை-இலக்கிய வாதிகள் குடும்பத்தோடு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

நீர் நிலை அறிவு தமிழர்க்கு இல்லையா?

‘BEEP SONG’ தடைகோரி வழக்குப் பதிவுசெய்யப்பட்டது!
நமது முந்திய பதிவின் பின்னர்,
இப்போது வந்த செய்தியிது!
Case Registered against ‘BEEP SONG’
இரவு 10.30க்கு வந்த வாட்ஸப் செய்தி -
‘கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில், 3பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர்.
‘கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில், 3பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர்.
க்ரைம் வழக்கு எண் -
103/2015 நாள்-12-12-2015
நல்லது தோழியரே!
உங்கள் போராட்டம் வெல்ல
எங்கள் வாழ்த்துகள்.
உங்கள் போராட்டம் வெல்ல
எங்கள் வாழ்த்துகள்.
Case
registered against Simbu & Anirudh under section 4 read with 6 of Indecent
representation of Women Act 509 IPC and 67 of Information Technology Act by
Race Course Police Coimbatore!
ஆனால் இது போதாது!
Race Course Police Coimbatore!
ஆனால் இது போதாது!
வழக்கு மன்றங்களில்
வாய்மை “சிலநேரமே“ வெல்லும்!
எனவே,

தடைசெய்ய வேண்டிய சிம்பு-அனிருத் பாடல்
“பீப் சாங்” என நேற்று முன்தினம் வெளியாகியிருக்கும்
சிம்பு-அனிருத் கூட்டணிப் பாடல் ஆபாசத்தின் உச்சம்!
அது மட்டுமல்ல, தொடர்ந்து சிம்புவே(?) எழுதிய வரிகள் பெண்களை மிகக் கேவலமாக இழிவுபடுத்துகின்றன...
ஆண் பெண் உறுப்புகளின் பெயர்கள் ஒரு சிறு இசைவெட்டில் பாதிச்சொல் மறைந்து வருகின்றன!
அந்தச் சிறு வெட்டுத்தான் பீப் இசையாம்!
அதனாலயே இது “பீப் சாங்”னு பேராச்சாம்!
வௌக்கமாத்துக்கு விளக்கம் வேறயா,
விளக்கெண்ணெய்களா!?
வெட்டுப்பட்டாலும் அந்தச் சொற்கள்
பாதிக்குமேல் கேட்பதாகவே படுகிறது.

சென்னை வெள்ளம் - யார் காரணம்?
இந்தக் குழந்தையைப் பாருங்கள்!
தவறுசெய்யாத மக்களும்
தண்டிக்கப்பட்டது ஏன்?
-------------------------
சென்னையில்
பெய்த பெருமழையை வெள்ளமாக மாற்றியது தமிழக அரசின் மெத்தனப்போக்குதான் என
ஃப்ரண்ட்லைன்,
டைம்ஸ் ஆஃப்
இந்தியா மற்றும் வயர்ட் போன்ற இதழ்கள் குற்றம் சாட்டியுள்ளன. அக்கட்டுரைகள் தரும்
ஆதாரங்களை எளிதில் புரியும் வண்ணம் விளக்குவதே இப்பதிவு -

மனுஷ்ய புத்திரனுக்கு என்ன ஆனது?
“A“கவிஞராகிறாரா மனுஷ்ய புத்திரன்?
டிசம்பர் மாத “உயிர்மை“ இதழ் வந்தது. படித்தால்... அதிர்ச்சியாகி விட்டது! மனுஷ்ய புத்திரன் ஆசிரியராக இருக்கும் ஓர் இலக்கிய இதழிலா இப்படி...?
பக்கம் -24 –
கட்டுரைத் தலைப்பு -
“கவர்ச்சியற்ற
நாயகிகளும், செக்ஸியான நாயகர்களும்“
சரி இது வேறொருவர் எழுதியது, மனுஷ்ய புத்திரன் இப்படி
எழுத மாட்டார் என்று அவரது கவிதைகள் வந்த பக்கத்தைப் புரட்டினால்...
பக்கம்-78 - கவிதைத் தலைப்பு -
“செக்ஸ் ரோபோக்கள் சந்தைக்கு வந்துவிட்டன“
“செக்ஸ் ரோபோக்கள் சந்தைக்கு வந்துவிட்டன“
(இதுல கேவலமான இந்தப் படம்
வேற?! நமது தளத்தில் இப் படத்தை வெளியிடுவதற்காக சகோதரிகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.)

“புத்தகம் பேசுது“ - இதழில் நா.முத்துநிலவன் நேர்காணல்
தமிழ்த்
தொலைக்காட்சிகளில் அடிக்கடி தென்படும் பேச்சாளர், 34ஆண்டு அரசுப் பள்ளித்
தமிழாசிரியராயிருந்த கல்வியாளர், அறிவொளி இயக்கத்தின் மாவட்டத் தலைவர்களில்
ஒருவர், அதற்கான நாடகங்களுக்காக 500 கலைஞர்களுக்குப் பயிற்சியளித்த நாடகர், இனிய பாடலாசிரியர்,
எடுப்பான பாடகர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா சங்கத்தை மாவட்டத்தில் விதைத்து
வளர்த்த இயக்கத்தலைவர், தேர்ந்தஓவியர், “கம்பன்தமிழும் கணினித் தமிழும்” “முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே”
முதலிய 6 நூல்களின் ஆசிரியர், இணையத் தமிழுலகில் புகழ்பெற்ற எழுத்தாளராகி,
அண்மையில் மாநில அளவிலான “வலைப்பதிவர் திருவிழா“வைச் சிறப்பாக நடத்திய “கணினித்
தமிழ்ச்சங்க ஒருங்கிணைப்பாளர்“ என, பன்முக அனுபவத் தழும்புகளைக் கொண்டவர்,
புதுக்கோட்டையைச் சேர்ந்த கவிஞர் நா.முத்துநிலவன்.
இணையத்தில் எழுத்தாளர்கள்
செய்ய வேண்டியவற்றை வலைப்பதிவர் திருவிழா நடத்திய முத்துநிலவனிடம், “புதிய
புத்தகம் பேசுது” இதழுக்காக நேர்காணல்
செய்தோம்.
இதோ
நேர்காணல்:-

இதுதான் டா இந்தியா!
![]() |
-------------டிசம்பர் 6, 2015 - சென்னை (தமிழ்நாடு)------------ |
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட “ஐயப்ப“ சாமிகளுக்கு
உணவு பரிமாறும் இஸ்லாமியச் சகோதரர்கள்
-மேலே-
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட
பிள்ளையார் கோவிலைச் சுத்தம் செய்யும்
இஸ்லாமியச் சகோதரர்கள்
--------------------------------------------------
படங்கள் - நன்றி “தீக்கதிர்” மின்னிதழ் -09-12-2015
----------------------------------------
-----------------------------------
இது அல்லடா எமது இந்தியா!
நீ...
இந்துவாக இரு!
இஸ்லாமியராக இரு!
கிறிஸ்துவராக இரு!
ஆனால்,
எப்போதும்
இந்தியனாக இரு!
மறக்காமல்
மனிதனாக இரு!
---தமுஎகச---
(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்)
-----------------------------
----------------------------------------
--------------டிசம்பர்-6,1992 அயோத்தி (உ.பி.) -------------
செய்தி பார்க்க- https://ta.wikipedia.org/s/7rt
இது அல்லடா எமது இந்தியா!
நீ...
இந்துவாக இரு!
இஸ்லாமியராக இரு!
கிறிஸ்துவராக இரு!
ஆனால்,
எப்போதும்
இந்தியனாக இரு!
மறக்காமல்
மனிதனாக இரு!
---தமுஎகச---
(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்)
-----------------------------

மழையில் கரைந்து போன மாமனிதர் ஸ்ரீநிவாஸ்

நிலவேம்பு – மருத்துவப் பயன்கள்
மழைவிட்டாலும் தூவானம் விடாது, அதுபோலவே
வெள்ளம் வடிந்தாலும், நோய்கள் விடாது!
எச்சரிக்கை அவசியம்.. எனவே தான் இந்த நம் வீட்டு வைத்தியம்
(இதை, வெள்ளத்தில் சிக்கியவர் மட்டுமின்றி, தமிழ்நாட்டு மழையில் சிக்கிய யாரும் பயன்படுத்தலாம். இந்தப் பதிவே வெட்டி ஒட்டியதுதான் என்பதால் என் வைத்தியமோ என்ற அச்சம் ஏதுமின்றி
இதில் சொன்ன முறையில் அருந்தலாம் -நா.மு.

ரசிகர் மன்றங்கள் வெள்ள நிவாரணப் பணியில் இறங்கலாமே?

பால்கார ராதாம்மாக்கள் வாழ்க! வளர்க!
கார்கில் போரின்
போது உயிர்நீத்த மேஜர் சரவணனின் உடல் திருச்சிக்கு வந்தபோது, அவர் உடலின்மீது,
தனது அன்றாடப் பிழைப்பு என்றும் பாராமல் கூடையிலிருந்த பூவையெல்லாம் ஒரு
பூக்காரம்மா கொட்டியதாக வந்த செய்தி நினைவுக்கு வருகிறது!
இந்தவாரம், சென்னை,
கடலூர் மக்கள் வெள்ளத்தில் தவிக்கும் தவிப்பை அறிந்து தமிழ்நாடு தாண்டியும் அன்பு
வெள்ளம் பெருக் கெடுப்பதைப் பார்க்கும் போது, நம் மக்கள் நல்லவர்கள்தான்..
அவ்வப்போது இந்த அரசியல் வா(ந்)திகளை மட்டும் அடையாளம் கண்டுகொள்ளத் தெரிந்து
கொண்டால்... என்று நான் பலநேரம் நினைப்பதுண்டு.
இப்போது கிடைத்த
செய்திகளை நண்பர்களோடு –கண்ணீரோடு- பகிர்ந்து கொள்கிறேன். இந்தச் செய்திகளைப் பகிர்ந்து
கெண்ட நண்பர் ளுக்கு நன்றி மட்டுமல்ல.. அன்பு வெள்ளம் பெருக உதவிய அந்த உள்ளங்களுக்கு
என் தலைதாழ்ந்த வணக்கத்தையும் தெரிவிக்கிறேன்-
--------------------------------------------
பால்கார
ராதாம்மாக்கள் வளர்க!

வெள்ள நிவாரணப் பணிகளில் உதவியது யார்?

ஓடுகிற பாம்பை மிதிக்கிற வயசு எது?

பாம்பு வந்திருச்சு!....
![]() |
தமிழில் நாகரெத்தினம் (ஆங்கிலத்தில் - Ruby!) |
ஒன்றும் பயப்பட வேண்டாம். உண்மை
சுடத்தான் செய்யும்.
நம்ம ஊர்லதான், “பாம்பு னு சொன்னாலே
அது காதுல விழுந்து, நெசமாவே வந்துரும்“ என்று நம்புகிறவர்கள் நம்முடன் இருக்கிறார்கள்!
இதனால்..“வசம்பு“ எனும் மருந்தைக் கூட மாலை, இரவு நேரங்களில் சொல்ல முடியாமல்
“பேர்சொல்லான்“ என்று சொல்கிற பழக்கம் இருப்பதைக் கேள்விப்பட்டபோது எனக்குச்
சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் விழித்திருக்கிறேன்.
“பாம்புக்குப் பாம்பு னு நாமதான் பேர்
வச்சிருக்கிறமோ தவிர, பாம்புக்குப் பாம்பு னு பேர் வச்சிருக்கிறது அந்தப் பாம்புக்கே
தெரியாது“ என்று என் நண்பன் மதுக்கூர் இராமலிங்கம் மேடையில் சொல்ல! கூட்டமே விழுந்து புரண்டு சிரிக்கும்!

சமயச் சார்பற்ற தமிழ் மரபு தழைக்கட்டும்.
இன்றைய புதுமை எல்லாவற்றுக்கும் சிறிதளவேனும்
ஒரு மூலம் இருக்கும். சிந்தனையோ செயலோ, பொருளோ அடுத்தடுத்துத் தொடர்வதுதான்
பரிணாமம்! இன்றைய பழமை நேற்றைய புதுமை, இன்றைய புதுமை நாளை பழசாகிவிடும்! முந்திய பழமையின்
நல்லனவற்றை நாடி எடுத்துக் கொள்வதும் சொல்வதும்
அடுத்து வரும் புதுமையை
வளர்ப்போரின் அரிய கடமையாகும்.
ஆய்வுகள், நாட்டு வரலாற்றை அறிவதில் மட்டுமல்ல,
நம் வீட்டு வரலாற்றை அறிவதிலும் கொண்டுபோய் விட்டால் நல்லதுதான்! இந்த
முன்கதைகளில் –நம் தாத்தாக்களின் கதைகளில்- நம் பாசத்திற்குரிய “பாட்டிகள்“
தாமாய்ச் சேர்த்தது என்ன? தெரிந்தோ தெரியாமலேர் நீக்கியது என்ன? என்று, தெரிந்து
பயன்கொள்ள, நமக்கும் சாமர்த்தியம் வேண்டும் அப்போதுதான் நாளைய வெற்றி நம்
வசமாகும்.
நீண்ட
நெடிய பாரம்பரியமுள்ள நம் தமிழ்ச் சமூகத்தின் தொடர்ச்சி, சங்கிலியாகக் கோக்க
முடியாமல் கிடக்கிறது. அறுபட்ட கண்ணிகளின் அழகே நம்மை மட்டுமின்றி உலகையும்
ஈர்க்கிறதெனில் நம் கடமை பெரிதாகிறது! அதன் சிறு முயற்சியாக, கிடைத்த கண்ணிகளை
வரிசைப்படுத்திப் பார்க்கும் முயற்சியே இன்றைய வரலாற்றுத் தேவை! தவறுகள் நிகழலாம்.
முயல்வதில் தவறில்லையே!

“தாள்கள் இல்லா நாடாளுமன்றம்“ போல, தாள்கள் இல்லாத் தேர்வுகள் எப்போது வரும்?
“2011-இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், நாடாளுமன்றம்
நடைபெறும் நாளில் ஓர் உறுப்பினருக்கு சராசரியாக 200 தாள்கள்
கொண்ட பல்வேறு அறிவிக்கை, ஆண்டறிக்கை வழங்கப்படுவது தெரியவந்தது. மக்களவையில் 525 உறுப்பினர் க்கும்
ஒரு நாளைக்கு 1,05,000 தாள்கள் தினமும் தரப்பட்டன. இவற்றை பல உறுப்பினர்கள்
திருப்பிக்கூட பார்ப்பதில்லை. இதே நிலைமைதான் மாநிலங்களவையிலும். இந்த அறிவிக்கை
மற்றும் மசோதாக்களை அச்சிடுதல், கம்பி அணைத்தல், கட்டுதல் போன்றவற்றுக்கு ஆகும் செலவுகளோ பல கோடி ரூபாய்.“
என்று போகிறது தலையங்கம்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)