எதை எழுத?

                 “கற்பும் கற்பழிப்பும்“ எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுத உட்கார்ந்தேன். தகவல்களுக்கான தரவுகளைப் புரட்டியபோது, மனம் கனத்துப் போனது. இந்தியாவில், தமிழகத்தில் உலகளவில் பெண்களுக்கு நாம் (ஆண்கள்) இழைத்து வரும் கொடுமைக்கு அளவோ வகைதொகையோ இல்லை. “மங்கையாராகப் பிறப்பதற்கே மாது-அவம்(பாவம்) செய்ய வேண்டுமம்மா” என்று இதைத்தான் பாடினாரோ கவிஞர்?
                   10ஆண்டுகளுக்கு முன், பொதிகைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாசுகி எடுத்த குறும்படம்தான் நினைவிலாடுகிறது. அதில் மனைவியின் அன்றாட வேலைப்பளுவைத் தெரியாத கணவன் ஒருவன் எலியாக மாறி அவன் வீட்டிலேயே கிடந்து தன் மனைவி படும் ஒருநாள் வேலைப்பளுவைப் பார்த்து மனம் நொந்து போவான்.... இதைப் பின்னர் நாங்கள் அறிவொளி இயக்கத்திற்காகத் தயாரித்த “கண்ணுக்குத் தெரியாத உழைப்பு” (Un Seen Toil) எனும் நாடகத்தில் பிரதிபலித்தோம். அப்போது நான் எழுதிய பாடல்தான் -
                   மனித ஜாதியில் பாதியானவள் மகாசக்தி பெண்ணே
                   விடியும் காலமிது அடிமையாக இனி வீழ்ந்து கிடப்பதென்னே” எனும் பாடல் இதில் வரும் இரண்டு வரிகள் எனக்கே மிகவும் பிடிக்கும் -
                    “புயல்காற்றினை மணல் வீட்டிலே பு’ட்டிவைத்ததாரு?
                     வானம் பெண்ணே பு’மி பெண்ணே வலிமையானவள் பெண்ணே”
                   இந்தப் பாவிகள் - அடுத்த பிறவியில்- (கட்டாயமாக) அந்தப் பெண்களாகப் பிறந்து அந்தக் கொடுமைகளை அனுபவிப்பதுதான் அதற்கான தண்டனை என்று எந்தக் கடவுளாவது, நீதிபதியாவது தண்டித்தால் அவர்களை நான் -கடவுளைக் கும்பிடாத நான்- கும்பிடுவேன்
                    சரி, கட்டுரை எழுதிய பாடுமில்லை. நாளை -29-12-2012-காலை அரசுஊழியர் சங்கப் பெண்கள் மாநாட்டில் “நீங்கள் யார்?” என்று தலைப்பில் கருத்தரங்கச் சிறப்புரை, மாலையில் தங்கம் மூர்த்தி கவிதைத் தொகுப்பு விழாவில் தொடக்கவுரை... பார்க்கலாம் ஏற்கெனவே எழுத வேண்டிய சில கட்டுரைக் குறிப்புகள் என்னை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, முன்னுரை கேட்டுவந்த இரண்டு நூல்கள் வெறித்துப் பார்க்கின்றன...
                    பார்க்கலாம் எதை எழுதுவதென்று அந்தந்தச் செய்திகள் தானே முக்கியத்துவம் தந்து நமக்கு உணர்த்துகின்றன... நாம் என்ன செய்ய?
                    ---------------------------------------- 

2 கருத்துகள்:

  1. அவ்வப்போதய செய்திகளே மனதில் முந்தி இடம் பிடித்துக்கொள்ள முந்தைய செய்திகளும்,நிகழ்வுகளும் காலாவதி ஆகிப்போகின்றன.அதில் நல்ல சில நிகழ்வுகளும் அடக்கம்.

    பதிலளிநீக்கு
  2. நான் அந்த பாட்லை கேட்டிருகிறேன், அது நீங்கள் இயற்றியுள்ளீர்கள் என்பதை அறியேன், அந்த் பாடல் அருமையானது அதோடு சில பெண்ணிய பாடல்களும் தமுஎச கீற்று இணையதள்த்தில் இருந்து த்ரவிறக்கம்செய்து கேட்டென்.

    பதிலளிநீக்கு