தினமணியில் வி. கிரேஸ் பிரதிபா எழுதிய "துளிர் விடும் விதைகள்' - நூல் அறிமுகம்

DINAMANI EDITOR K.VAITHIYA NATHAN
'KALA RASIGAN'
நூல் மதிப்புரைக்கு வி. கிரேஸ் பிரதிபா எழுதிய "துளிர் விடும் விதைகள்' என்கிற கவிதைத் தொகுப்பு வந்திருந்தது. அதற்கு முன்னுரை எழுதியிருக்கும் புதுக்கோட்டை நா. முத்துநிலவன், 1965-ஆம் ஆண்டிலிருந்து இந்திய அளவில் இலக்கியத்திற்காகத் தரப்படும் உயர்ந்த விருதான "ஞான பீடம்' விருதை, 1965, 1980, 1984, 1995, 2007 என 5 முறை மலையாளமும், 1970, 1988, 2012 என மூன்று முறை தெலுங்கும், 1967, 1973, 1977, 1983, 1990, 1994, 1998, 2010 என எட்டு முறை கன்னடமும் பெற்றிருக்க, தமிழ் இதுவரை இரண்டு தடவைதான் பெற்றிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தது மனதை வருத்தியது.
அவர் குறிப்பிடுவதுபோல, தமிழில் பெயர்கள் வைத்துக் கொள்வதிலும், தமிழினம் பற்றி வாய் கிழியப் பேசுவதிலும் காட்டும் ஆர்வத்தை, நாம் மொழி வளர்ச்சியில் காட்டுவதில்லை. தமிழில் இருக்கும் அளவுக்கு மொழிக் கலப்பும், ஆங்கில மோகமும் பிற மொழியினரிடம் இல்லை. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இருக்கும் மொழிப்பற்று நமக்கு இருக்கிறதா என்பதுகூட சந்தேகம்தான்.
2009-இல் வலைப் பக்கத்தைத் தொடங்கி ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கி, 2012 முதல் தமிழில் தொடர்ந்து எழுதி வரும் கிரேஸ் பிரதிபாவின் மொழிப்பற்றும், சமுதாய நோக்கும் பாராட்டுக்குரியவை. புத்தகத்தின் அட்டையை வடிவமைத்திருப்பது அவருடைய கணவர் ஆல்பர்ட் வினோத் என்று குறிப்பிடுகிறார். முகப்பே கவித்துவமாக இருக்கிறது.
"கையெழுத்தை...' என்றொரு நாலுவரிக் கவிதை. பகிர்ந்து கொள்கிறேன், படியுங்கள்.
அஞ்சல் ஆவணம்
அனைத்தும் கணினியில்
தொலைத்து விட்டேனே
கையெழுத்தை! 
நன்றி  -
தினமணி “கலாரசிகன்” (09-11-2014 அனைத்துப் பதிப்புகள்)
மற்றும் திரு வின்சென்ட் அவர்கள், மதுரை.
இணைப்புக்கு - http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/2014/11/09/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/article2514962.ece

36 கருத்துகள்:

  1. கிரேஸ் பிரதீபா அவர்களுக்கு வாழ்த்துக்கள். நிச்சயம் தினமணி வாங்கிப் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் தங்கையின் பின்னூட்டத்தை நானும் வழிமொழிகிறேன்.
      நன்றி முரளி (தங்கை கீதாவின் நூல் அறிமுகக் கூட்டம் புதுகையில் முடிந்து இப்பத்தான் வந்தேன்.நிறைவாக நடந்தது, அதுபற்றி அவர் தளத்தில் நாளை படிக்கலாம்)

      நீக்கு
  2. தேன் தமிழ் கிரேசுக்கு வாழ்த்துக்கள் .....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரி. இன்று மாலை புதுக்கோட்டையில் தங்கை மு.கீதாவின் நூல் அறிமுகக் கூட்டம். உங்கள் அணிந்துரையை எல்லாரும் பாராட்டிப் பேசினார்கள்... அங்குக் கேட்டதா? நன்றி

      நீக்கு
  3. Vanakkam ayya
    Romba santhosama irukurathu. Sagothariku en manamarntha vaalthukal. Oru noolin munnurai pirarin kavanathai eerkum enpatharku thangalin eluthu eduthukattu.. Oru paanai sotruku oru soru patham enpatharku sagothariyin kaiyeluthu enkira kavithai eduthukkaatu.. Nantringa ayya..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ,..ஆமாம் அண்ணாவின் முன்னுரை என் நூலிற்கு சிறப்பு சேர்க்கிறது..
      நன்றி சகோ

      நீக்கு
    2. அடேயப்பா... பாண்டியன் எப்படி இருக்கீங்க... தமிங்கிலப் பின்னூட்டம் உங்கள் சிக்கலைக் காட்டுகிறது. வென்று வாருங்கள்... “இதுவும் கடந்து போகும்“ தொடரட்டும் உங்கள் வலைத்தமிழ்ப் பதிவுகள்.. உங்களை நினைக்காத நாளில்லை. சும்மா சொல்லல நீங்க நம்ம புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச் சங்கச் செல்லமல்ல்வா? என் மகள் எப்படி இருக்கிறார்களா? கேட்டதாகச் சொல்லவும். தொடர்க.நன்றி.

      நீக்கு
  4. இந்த சிறப்புக்கு என் அண்ணாவின் முன்னுரையும், என் தோழியின் எழுத்தும் என இரு காரணங்கள் இருப்பது டபுள் ட்ரீட்:))) மைதிலி ஹாப்பி அண்ணாச்சி:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் தங்கையரின் பெருமையை நான் ஏற்கெனவே அறிவேன். இப்போது தமிழ்கூறும் உலகமெல்லாம் பாராட்டும்போது.....
      “படித்த பொழுதில் பெரிதுவக்கும் தங்கையைச் சான்றோர் பாராட்டக் கேட்ட அண்ணன்“ -வள்ளுவர் மன்னிப்பார்.

      நீக்கு
    2. நெகிழ்ந்து மகிழும் மனதுடன் நன்றி அண்ணா..

      நீக்கு
  5. தங்களின் முன்னுரைக்கும் ,கிரேசுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரி. என் தங்கையின் பெருமை இனிமேல்தான் உலகம் அறியப்போகிறது. (எனக்கு ஏற்கெனவே தெரியும்) உங்களைப் போலும் அன்பினரின் வாழ்த்து மகிழ்வளிக்கிறது.

      நீக்கு
  6. மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரைப் பதிவர் திருவிழாவில் வெளியிடப்பட்ட நூல் என்பதால் இந்தப்பெருமை நம் வலைப்பதிவர் குடும்பத்தினர் அனைவர்க்கும் சமர்ப்பணம். இ்ன்றும் அப்படித்தான் மு.கீதாவின் நூலறிமுகம் சிறப்பாக நடந்தது. மதுரை விழா நினைவுகூர்ந்து... நன்றி டிடி.

      நீக்கு
    2. நன்றி டிடி அண்ணா. ஆமாம் வலைப்பதிவர் குடும்பத்திற்கு மகிழ்ச்சியுடன் சமர்ப்பணம்..நீங்கள் எல்லோரும் இல்லாவிட்டால் இது நடந்திருக்காது..

      நீக்கு
  7. அப்பாவும் சொன்னார்கள் அண்ணா, பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
    மகிழ்ச்சி அண்ணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது, நீ தொடர்ந்து எழுத வேண்டும் என்பதற்கான சான்றிதழ். அப்பா, உன் துணைவர் இருவரின் பலம் உன்னை மென்மேலும் உயர்த்த வாழ்த்துகள். நம் வலைப்பதிவர் உறவினரும் வேறு உன் வளர்ச்சிக்காகத் துணைவருவோம். அடுத்த உனது சங்க இலக்கியப் பெயர்ப்புப் பதிவுக்காகக் காத்திருக்கிறோம். ஆனால் வீடு, பிள்ளைகளின் பள்ளி அமையட்டும். அதில் எந்த அவசரமும் வேண்டாம்பா. எல்லாம் சிறப்பாக அமையும்.

      நீக்கு
    2. கண்டிப்பாக அண்ணா, இலக்கியப் பெயர்ப்பு கண்டிப்பாக விரைவில் தொடர்வேன். உங்கள் வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி அண்ணா.

      நீக்கு
  8. தேன் மதுரத் தமிழுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  9. முன்னுரை அளித்த உங்களுக்கும் மற்றும் சகோதரி அவர்களுக்கும்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை சிறப்பாக இருந்ததால் முன்னுரை சரியாக வந்தது. எனவே முதற்பெருமை கிரேசுக்கு, வாய்ப்பினால் வந்த பெருமை எனக்கு. மகிழ்ச்சியும நன்றியும் சகோதரரே.

      நீக்கு
    2. ஹைய்..உங்கள் முன்னுரை என் கவிதைத் தொகுப்பிற்கு சிறப்பு சேர்க்கிறது என்பதே உண்மை அண்ணா..

      நன்றி கிங் ராஜ் சகோதரரே

      நீக்கு
  10. தினமணி இணைப்பைப் படித்தேன், மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே, இந்த வாழ்தைக் கவிதைத் தொகுப்பை வெளியிட்ட தங்கை வி.கிரேஸ்பிரதிபாவுக்கும் அதனை அழகுற அறிமுகப்படுத்தி உலகறியச் செய்த தினமணி ஆசிரியர் அய்யா வைத்தியநாதன் (கலாரசிகன்) அவர்களுக்கும் மனத்தால் அனுப்பி மகிழ்கிறேன். சுடர்விளக்காயினும் தூண்டுகோல் வேண்டுமே! எனது நன்றியை, பகிர்ந்துகொண்ட தங்களுக்கும் தெரிவித்து மகிழ்கிறேன்.நன்றி வணக்கம்.

      நீக்கு
    2. நன்றி சரவணன் சகோ..
      தினமணி ஆசிரியருக்கும் உங்களுக்கும் நன்றி அண்ணா

      நீக்கு
  11. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு