கனவில் வந்த காந்தி (7)

KARANTHAI
JAYAKKUMAAR
நண்பர்களே இதற்கு நான் பொறுப்பல்ல...

இந்த தேவகோட்டைக் கொலைகாரர் (அதாங்க கில்லர்ஜி) 
ஒரு பந்தை உதைத்து தள்ளிவிட, 
அது நேரா கரந்தையில வந்து விழுந்துச்சா..
அய்யா கரந்தையார் அதை உட்ட ஒதையில 
பந்து நேரா புதுக்கோட்டைக்குப் பறந்து வந்திருச்சா... அத இப்ப நா உங்க கிட்ட தள்ளிவிடுறனுங்கோ...

KILLERGEE
இது ரெண்டையும் பார்த்திட்டு 
அப்பறம் என்னுத படிக்க வாங்க.

(அய்யோ அய்யோ.. பாவம்ங்க நீங்க)



வேதாளம் விக்கிரமாதித்தன் கிட்ட கேட்ட கேள்விகள் பழசுதான்.
அதையே மாத்தி , “விஞ்ஞான விக்கிரமாதித்தன் கேள்வி-பதில்கள்“ எழுதின நம்ம ஆயிஷா நடராஜன் பாலசாகித்ய அகாதமி விருது வாங்குனார்.
நா என்னா வாங்கப் போறனோ... 
அந்த வேதாளத்துக்குத்தான் தெரியும்‘!
------------------------------------ 
கனவில் வந்த காந்தி (7)


1.நீ மறுபிறவியில் எங்குப் பிறக்கவேண்டும் என்று நினைக்கிறாய்?

மறு பிறவியெல்லாம் கிடையாதுங்க. (இந்தப் பிறவியே வேஸ்ட் இதுல அடுத்த பிறவி வேறயானு இல்லிங்க நமக்கு நம்பிக்கையில்ல அவ்ளோதான்) சரி, அப்படியே பிறந்துதான் ஆகணும்னு கட்டாயம் பதில் சொல்லணும்னா.. அமெரிக்காவுல தான் பிறக்க விரும்புவேன். (அங்க பிறந்தாத் தான, தமிழ்நாடு எவ்ளோ நல்ல நாடுன்னு புரியும்)

2.ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால்?

அப்படி ஒரு ஆபத்து இந்தியாவுக்கு வந்தால் என் உயிரைக் கொடுத்தாவது தடுக்க முயல்வேனுங்க...  
(அட என்னையவேயா சொல்றிங்க? என்னங்க நீங்க...சரி..அப்ப ஒரு கை பாத்துட வேண்டியதுதான்..  இந்த “வெளிநாட்டுல் இருக்குற பணத்தையெல்லாம் இந்தியாவுக்குக் கொண்டுவந்துட்டுத்தான் மறுவேலை“ ன்னு அப்ப அந்த மன்மோகன் சொன்ன மாதிரி, இப்ப நம்ம மோடிஜியும் சொல்றமாதிரி நாமளும் சொல்லிக்கிட்டே காலத்த ஓட்டிட வேண்டியதுதான்..

3.ஒருவேளை வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால்?

அதான் எந்த வெளிநாட்டுப் பணத்தையும் கொண்டுவரப் போறதில்லயே அப்பறம் ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கப் போறாங்க... அப்டியே நாடுநாடாப் போயி விருந்து சாப்பிட்டு, வைத்தியத்தையும் பாத்துக்கிட்டு இங்கவந்து நா அந்த நாடுமாதிரி ஆக்கப்போறன்.. இந்தநாடு மாதிரி ஆக்கப்போறன் அப்படின்னு சொல்லிக் காலத்தை ஓட்ட வேண்டியதுதான்..

4.முதியோர்களுக்கு என்று ஏதும் திட்டம் வைத்திருக்கிறாயா?
    
60வயதுக்கு மேற்பட்டவர்க்கெல்லாம் மடிக்கணினி இலவசம். கட்டாயம் ஆளுக்கொரு வலைப்பக்கம் ஆரம்பித்தே ஆகவேண்டும் அதற்கு நம்ம டிடி, தமிழ்வாசி, கஸ்தூரி மூவரும் “வலைவீசும்“ அமைச்சர்களாக்கப் படுவர். (பெரிசுக அப்பறம் மத்த விஷயத்த எல்லாம் மறந்து போயி மண்ட காய்ஞ்சிட மாட்டாங்க?)

சரி இனி சீரியஸாவே யோசிப்போமா?------

5.அரசியல்வாதிகளுக்கென்று திட்டம் ஏதாவது?
அவங்க எல்லாருமே தகுதித் தேர்வு எழுதித்தான் அரசியலுக்கே வரணும். (இது நா இப்ப சொல்றதில்லிங்க.. ஏற்கெனவே எழுதியது இங்கபாருங்க- http://valarumkavithai.blogspot.com/2013/10/blog-post_24.html )

6.மதிப்பெண் தவறென்று மேல்நீதிமன்றங்களுக்குப் போனால்..?
     நீதிபதிகள் துறைத்தேர்வுகள் எழுதுற மாதிரி இதுக்கும் தகுதித் தேர்வு எழுதித்தானே நீதிபதியாவே வரப்போறாங்க.. அப்பறம் இத எப்படித் தப்புன்னு அவங்க தீர்ப்புச் சொல்லுவாங்க? சமாளிச்சுடுவம்ல?

7.விஞ்ஞானிகளுக்கென்று ஏதாவது திட்டம்?
     மத்த ஆராய்ச்சிகள எல்லாத்தையும் நிறுத்து. உலகத்துல இல்லாத இந்தச் சாதி எழவ நம்ம நாட்டுலர்ந்து ஒழிக்க –மாரியம்மன ஒழிச்ச மாதிரி... சாரி அம்மைநோயை நாட்டை விட்டே விரட்டுன மாதிரி- விஞ்ஞானிக எதையாவது கண்டுபிடிக்கலன்னா எல்லாரையும் மங்கள்யான்ல ஏத்தி –அங்கிருந்தாவது சாதி ஒழிப்புக்கு ஏதாவது “செய்வாய்“னு சொல்லி - செவ்வாய்க்கு அனுப்பிடுவேன்.

8.இதை உங்களுக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் தொடர்வார்களா?
     வேற வழி? தொடரலன்னா வேற யாராவது வந்து அவங்கவுங்க வழியில தொடர்வாங்க.. (எப்படியோ நம்ம ஆட்சியில கலகம் நடக்குறது உறுதி! கலகம் பிறந்தா தானுங்களே நியாயம் பொறக்கும்?)

9.மற்ற நாடுகளில் இல்லாத புதுமையாக ஏதாவது திட்டம்?
     (1) பெத்த குழந்தைகளை முறையா வளக்காத பெற்றோரும், பெற்றோரின் முதுமைக் காலத்தில் சரியாக் கவனிக்காத பிள்ளைகளும் கழுவில் ஏற்றப் படுவார்கள். (கழு அப்படின்னா என்னான்னு தெரியாதவுங்க “ஊமைக்கனவுகள்“ விஜூவைக் கேட்கவும்.)
(2) உயர்-தொழிற்கல்வி வரை அனைத்துக் கல்வியும், மருத்துவமும் இலவசம். அரசு செலவில் படித்துவிட்டு, வெளிநாடு போகணும்னா படிச்ச செலவையெல்லாம் திரும்பக் குடுத்தாத்தான் விசா தரப்படும். மருந்துகளைத் தனியார் விற்றால் மரணதண்டனை.
(3) பள்ளி-நூலகம்-சுற்றுலா-திரைப்படம்-தொலைக்காட்சி-உயர் தொழில் நுட்பம் அனைத்தும் பள்ளிக் கல்வித்துறையில் இணைக்கப் படும். குழந்தைகளிடம் என்ஓசி வாஙகித்தான் சினிமா வெளிவரும்.
(4) படிக்கும்போதே பிடித்த வேலையில் பயிற்சி. தொடர்நது வேலை. சம்பளம் கிடையாது. அனைத்து வசதிகளையும் அரசே தரும்.
(5) இராணுவம் கலைக்கப்படும், பொதுமக்கள் அனைவரும் இராணுவப் பயிற்சியோடு, அவரவர் வேலைகளைச் செய்யவேண்டும்.
(தேவைன்னா வீட்டுக்கு ஒரு ஆள் வந்தா எதிரிநாடு கலங்கிடும்ல..?)
(6) லஞ்சம், சாதி, வறுமை, கல்லாமை, ஆண்-பெண் ஏற்றத் தாழ்வு அனைத்தும் களையப்படும் வரை ஒருவருக்கு ஒருகோடி ரூபாய்க்கு மேல் உள்ள சொத்துகள் அனைத்தும் பறிமுதலாகும்.
(7) வாகனங்களில் இருக்கைகள் நிரப்ப்ப் பட்ட பின்னரே இலவச பெட்ரோல் நிரப்பப்படும். காரில்போனால் 4பேர் போகவேண்டும் .இல்லையெனினல் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
அப்பறம் அப்பப்ப விகிதாச்சாரத் தேர்தல் முறையில் மக்களின் கருத்துக்கணிப்புடன் ஆண்டுதோறும் ஆட்சிமாற்றம். (நீ என்ன பழைய மந்திரியா? சரிவுடு நா பழைய முதல்மந்திரி.. அந்தா சைக்கிள்ல போறவரத் தெரியிதா, முன்னாள் பிரதமரு..) இன்னும் நிறைய இருக்கு.
தேர்தலில் ஓட்டுப் போடாதவர்க்கு அரசின் இலவச மருத்துவம் ஓராண்டுக்கு நிறுத்தப்படும். கணினி வழியே ஒவ்வொரு தெருவிற்கும் ஒரு வாக்குச்சாவடி.
    
10.மானிடப் பிறவி தவிர வேறென்ன பிறவி எடுக்க விரும்புகிறாய்?
வேறென்ன கேட்கப் போறேன்.? இறைவனாகப் பிறக்கத்தான் (அப்பாடா இறைவன் என்றொரு பிறவி இல்லாததால் “அடுத்த பிறவி இல்லை“ எனும் எனது முதல் பதில் சரிதான் என்கிற முடிவுக்கு எல்லாரும் வந்துடுவாங்கல்ல..? அதான நமக்கு வேணும்! எப்புடீ?)
-------------------------------------------------- 
(மைதிலீ... நீ சூப்பரா பதில் சொல்லித் தப்பிச்சிட்ட...!
  தம்பி மதுவை மாட்டிவிட்டுட்டம்ல..? )

-------------------------------------------------------------------
சரி இப்ப நம்ப பந்த அடுத்த 10 பேருக்கு உதைச்சு (பந்தைத் தானுங்க) அனுப்பணும்.... யாருங்க அங்க ?

(1)   மூங்கில் காற்று தி.ந.முரளிதரன் - http://www.tnmurali.com/
(2) ஆங்கில விஞ்ஞானி-கஸ்தூரி-http://www.malartharu.org/  
(3)   ஊமைக்கனவுகள் விஜூ - http://oomaikkanavugal.blogspot.in/
(4)   கவிஞர் சிவக்குமாரன்http://sivakumarankavithaikal.blogspot.com/ 
(5)   எண்ணப்பறவை - http://mahaasundar.blogspot.in/
(6)   அன்புத் தங்கை கிரேஸ் - http://thaenmaduratamil.blogspot.in/
(7)   அய்யா கவியாழியார் - http://kaviyazhi.blogspot.com/
(8)   சென்னைத் தங்கை சசிகலா - http://veesuthendral.blogspot.in/
(9) ஏ.இ.ஓ.சகோதரி ஜெயா-http://jayalakshmiaeo.blogspot.in/
(10)தம்பி அ.பாண்டியன் -http://pandianpandi.blogspot.com/

இதில் ஒரு சிலர் பெயர்கள் மற்றவர்களின் பட்டியலிலும் இருப்பதால், அவர்களின் பெயர்களை எடுக்காமலே வேறு சிலரையும் சேர்த்துவிடுகிறேன்... (இது ஒன்னும் “வாச்சாங்கோலி” இல்ல..பட்டியலில் எனது பதிவின் எண் மாற்றம் கண்டு செய்த மாற்றம் தான் ...மன்னிக்கவும்)

(1) மதுரைத் தமிழன் - http://avargal-unmaigal.blogspot.com/
(2) முனைவர் வா.நேரு - http://vaanehru.blogspot.in/
(3) யாழ்பாவாணன் - http://eluththugal.blogspot.in/
(4) கவிஞர் இளமதி - http://ilayanila16.blogspot.in/
ஆகியோரை இத்துடன் இணைக்கிறேன்.

அப்பாடா... இனி அவுங்க பாடு...!
எங்க பாப்பமே?
என்னதான் பண்றாங்கன்னு...

---------------------------------------------------

49 கருத்துகள்:

  1. ஐயா தங்களுக்கே உரித்தான குசும்பு பதில்களில் தெரிகிறது அருமையான பதில்கள். ஸூப்பர்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க அனுப்பின பந்து, நானும் பத்திரமா அனுப்பணும்னு ரொம்பப் பொறுப்பா யோசிச்சுல்ல போட்டிருக்கோம்...? இருக்காதா பின்ன?

      நீக்கு
  2. பந்தை லாவகமா கொண்டு போய் கோல்அடிச்சிட்டீங்க ,பாராட்டுக்கள்!
    த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிங்களா... “வசிஷ்டர் வாயால் பிரும்மரிஷி!“
      ஜோக்லயே கோல் அடிக்கிற நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் நன்றி பகவான்ஜீ!
      (ஆமா இந்த கில்லர்ஜி, பகவான்ஜீ, மோடிஜீ எல்லாம் சேர்ந்து கிட்டு ஒரே ஜோக்தான் போங்க..)

      நீக்கு
  3. குறிப்பு – நண்பரே தயவு செய்து தலைப்பின் இலக்கம் 7 போட்டு விடவும்
    1. கில்லர்ஜி
    2. கரந்தை ஜெயக்குமார்
    3. Dr. B. ஜம்புலிங்கம்
    4. மைதிலி கஸ்தூரி ரெங்கன்
    5. துரை செல்வராஜூ
    6. பகவான்ஜி
    7. நா.முத்து நிலவன்

    நன்றி
    அன்புடன்
    கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாத்திட்டம்யா.. மாத்திட்டம் பாத்துக்கோங்க சாமி.
      (ஏழு இலக்க சம்பளத்துக்காக அவனவன் அலையிறான்...
      நாம எதுக்கு அலையிறம் பாருங்க.. ) சரி.. சரீ...

      நீக்கு
  4. நகைச்சுவையையாயும் இரசிக்கும்படியாயும் கலகலப்பாயும் இருந்தன உங்கள் பதில்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானுங்களே வேணும்...
      அப்ப நா நினைச்சமாதிரி எழுதிட்டனா?
      நன்றி நண்பரே!

      நீக்கு
  5. ஐயா எனது பெயரில் எழுத்துப்பிழை இருக்கிறது தெய்வகுற்றம் ஏற்பட்டு விடுமென அஞ்சுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடனே மாத்திட்டேன்ல..?
      ( நம்ம குத்தம்னாலே 18வருசமாகுது..
      தெய்வக் குததம்னா எத்தன வருசமாகுமோ?ன்னாலும்... )

      நீக்கு
  6. வணக்கம்
    ஐயா.

    பதில்கள் ஒவ்வொன்றும் மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ரூபன், வரும் திசம்பர் 1ஆம் தேதி உங்களை நேரில் சந்திக்க வருகிறேன்... மற்றவை நேரில..

      நீக்கு
  7. ஆஹா சூப்பர் ..அண்ணா ..நான் என்ன பண்ண போறேன்னு தெரியல..யே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படித்தான் சொ்ல்லிட்டு, அண்ணனை அம்போன்னு விட்டுட்டு தங்கச்சிங்க எலலாம் வெளுத்து வாங்குறீங்க...
      நல்லாத்தான் எழுதுவீங்க..நல்ல்தையே எழுதுறீங்க..வாழ்க!

      நீக்கு
    2. ஆஹா..'வாஷிங் பவுடர் நிர்மா..' வாங்கிட்டு இரண்டு மூன்று நாட்களில் வருகிறேன் அண்ணா :)

      நீக்கு
  8. நமக்கு கேள்வி கேட்டுதான் பழக்கம். பதில் சொல்றது எவ்வளவு கஷ்டம்னு இப்பதான் தோணுது. சாய்ஸ் வேற இல்ல. மண்டபத்தில யாருக்கிட்டயாச்சும் எழுதி வாங்கி நாளைக்கு சொல்லிப்புடுறேன் அண்ணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மண்டபத்தில்... யாரும் இல்லயே! நீங்கதான் மண்டபத்துல போய் எழுதிக் கொண்டுவருவீங்க இல்ல... காத்திருக்கேன் சகோதரீ

      நீக்கு
  9. பதில்கள்
    1. இஇஇல்லன்னா காணாமப் போயிருவேன் போல இருக்கே! (கரண்ட்டா இருக்கிறனா சகோதரி?)

      நீக்கு
  10. வணக்கம் ஐயா!

    என்னதான் நடக்குதுன்னு பார்க்க வந்தேன்,, அசத்தலா பதில் சொல்லியிருக்கீங்க.. அத்தனையும் அரசியல்.. ரசிச்சேனே தவிர
    இந்த அரசியல் ஞானம் எனக்கு பூச்சியம்.யா..:)

    சரீ... என்னையும் ஏனய்யா இங்கை கோர்த்து இல்ல இல்ல சேர்த்துவிட்டீங்க... என்ன பண்ணுவேன் சொக்கான்னு.. புலம்ப வைச்சிட்டீங்களே கடைசியில..:)

    வாழ்த்துக்கள் ஐயா! அருமை!
    நான் எழுதுவனா... பார்க்கலாம்.. :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படித்தான் சொல்வீங்க... கடைசியில முதல்பரிச தட்டீட்டுப் போய்ருவீங்க.. தெரியாதா தங்கையே! (முதல் பட்டியலிலேயே சேர்த்தேன்..அப்பறம் உங்க வேலைப்பளு நினைவுக்கு வந்து எடுத்தேன்.. அப்பறம் இதுல சிலபேர் பேரு மத்தவங்க பட்டியலில் வந்தபிறகு ஒன்னும் பண்ணமுடியலம்மா..)

      நீக்கு
  11. ***அங்க பிறந்தாத் தான, தமிழ்நாடு எவ்ளோ நல்ல நாடுன்னு புரியும்***

    நல்ல நாடா? அப்படினா?

    ஓ!!! தீண்டாமைக் கொடுமை, சாதிக்கொடுமை எல்லாத்துக்கு பேர்போனது உங்க நாடுதானே? அதெல்லாம் இல்லாமல் நிம்மதியா வாழப்பிடிக்காது போல இருக்கு உங்களுக்கு! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்ல கழிவறை இருப்பது இயல்பு (அதை சுத்தமாக வச்சிக்கக் கத்துத்தரணும்) உள்ள நுழைஞ்சதுமே கழிவறைக்குள்ள பூந்துகிட்டு அ்யயே வீடே நாறுதேனு சொன்னானாம் ஒருத்தன்.
      “எங்கள் நாட்டுக்கு எந்த நாடு ஈடு, பல கோடிமக்கள் வீடு“

      நீக்கு
  12. what இஸ் தட் வாச்சான்கோலி!!!! இம்புட்டு ஹுமரா எழுத முடியுமா !! மரண மாஸ்!!! (இப்படி trendy ஆ எழுதின trendy ஆ தானே பாராட்டனும் அண்ணா:))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாச்சாங்கோலி தெரியாம நீயெல்லாம் எப்படி விளையாடுனே (சின்னப்புள்ளையில தான்). கோல்மால் பண்றது, பாதியில எஸ்ஸாயிர்ரது.. டிமிக்கி குடுக்குறது.. மொத்தத்துல கள்ள ஆட்டம். இது எங்க கேங்கோடது இல்லமா..தமிழ்நாட்டின் விளையாட்டுச் சிறார்களின் குத்தகைச் சொத்தாக்கும்! உன் பாராட்டுக்கு நன்றி. (தங்கச்சி மாதிரி நக்கல் நையாண்டியா அண்ணனும், அண்ணனை மாதிரி சீரியஸா தங்கச்சியும் எழுதிடடாங்கப்பா னு யார்அங்க..முணுமுணுக்கிறது..ஓ..!)

      நீக்கு
  13. பதில் 4. இப்போதே ஆரம்பித்து விடுவோம்...

    பதில் 9. சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகை புதுக்கோடடைக்குத்தான். இங்கே ஓர் இணை அமைச்சர் ஏற்கெனவே இருக்காருல்ல.. 9இல் பாதிதான் வந்தது. அண்மைப்பள்ளி, மானிய -இலவசங்கள்-ரேஷன் கடைகள் ஒழிப்பு பத்தியெல்லாம் சொன்னது மின்னம்மன் சாபததில் பூடுச்சி பா!
      (நாடே இப்பவிக்கிற ரேஷன் விலையில் மாறுனா அப்பறம் தனியா எதுக்கு ரேஷன் கடை? (நியாய விலைக்கடைன்னு ஊருக்கு ஒருகடை வைப்பாங்களாம், மற்ற நூறு கடைகளும் அநியாயவிலைக் கடைதான் என்பதை அவுங்களே ஒத்துப்பாங்களாம்.. இது என்னங்கய்யா நியாயம்???? )

      நீக்கு
  14. பதில்கள் ஒவ்பொன்றும் அருமை ஐயா
    இவ்வாறு பதில் சொல்ல தங்களால் மட்டும்தான் முடியும்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அ்ய்யா... வேணாம்யா... மாட்டிவிட்டுட்டு.. இப்ப பாராட்டா?
      (சுமமா சொன்னேன் அய்யா.. எப்பவும சீரியஸாவே இருக்கறது எனக்கே பிடிக்காது.. இதுபோல ஒரு ஜாலி ட்ரிப்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்... அதுதான்... வேறொன்னும் இல்லய்யா..) நன்றி

      நீக்கு
  15. பதில்கள்
    1. நன்றி அ்யயா. (புத்தகப் பிரதிகளை மதிப்புரைகளை வேண்டி இலக்கிய வாதிகள், இதழ்களுக்கு அனுப்பினீர்களா அய்யா? அது மிகவும் முக்கியம். நூல் வெளியிடுவது பெரிதலல.. அதைப் பலரின் பார்வைக்குக் கொண்டுசெலுத்தும் வேலையும ரொம்ப முக்கியம்தான் உடனே செய்யுங்கள் அய்யா..) நன்றி

      நீக்கு
  16. இயல்பாகவே உங்களுக்குள் இருக்கும் நகைச்சுவையை இந்த பதிவினில் நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.
    த.ம.6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அய்யா. இந்தமாதிரி நேரங்களில்தான் இயல்பாக எழுத வருகிறது. ஆனால் சில குறிப்புகளை நகைச்சுவையாக எழுத முடியாதிலலிங்களா?. ரெட்டை நன்றி அய்யா.

      நீக்கு
  17. சுவையாகவும் சூப்பராகவும் இருந்தன பதில்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே. தங்களின் பதில்களை இன்னும் பார்க்கவிலலை. இதோ வருகி்றேன்.

      நீக்கு
  18. சூப்பர் பதில்கள் ஐயா.
    நீங்க அறுபது வயதை கடந்து விட்டீர்கள்னு தெரியுது ஐயா. எப்படியும் இலவசமா ஒரு மடிக்கணினியையாவது அரசாங்கத்திடமிருந்து வாங்க வேண்டும்னு நினைக்கிறீங்க. சொல்ல முடியாது, இப்பொழுது இருக்கும் முதல் அமைச்சர், அந்த திட்டத்தை அறிவித்தாலும் அறிவிப்பார்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா நீங்கள் என்னை என்ன கிழவன் என்று நினைத்து விட்டீர்களா. எனக்கு இன்னும் 60வயது ஆகவில்லை அதற்குள் அவசரப்படுகிறீர்களே அய்யா...















      அதற்கு இன்னும் சுமார் 300நாள்கள் இருக்கின்றன.

      நீக்கு
  19. வணக்கம் ஐயா
    பந்தை மிக நேர்த்தியாக கோல் அடித்து விட்டீர்கள். சக வீரர்களுக்கும் இப்பந்தைக் கடத்தியும் விட்டிருக்கிறீர்கள். அவர்களும் கோல் அடிக்காமல் விட மாட்டார்கள். என் பாடு தான் கொஞ்சம் திண்டாட்டம் ஆகிடும் ஆனாலும் விடாம அடிப்போம்ல. ஜாம்பவான்களுக்கு மத்தியில் என்னையும் களம் இறக்கி விட்டமைக்கு நன்றிகள் ஐயா. தங்களின் பதில்கள் அனைத்தும் யோசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறது. எண்ணங்களை விரிவடையச் செய்யும் சிறப்பான பகிர்வுக்கு நன்றிகள் ஐயா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கய்யா வாங்க...
      மின்னலை வென்றுவந்த மேன்மைக் கவியே வருக!
      கணினியை மீட்டு வந்த கவியே வருக!
      விரைவில் உங்கள் பதிலைப் போடுங்கள்..காந்தி காத்திருக்கிறார்.

      நீக்கு
  20. கரந்தையாரின் பதிவைப் பார்த்ததும் உங்கள் குறுஞ்செய்தி வந்ததும் நான் புரிந்து கொண்டேன். உங்கள் பதிலின் சாயல் வந்து விடக் கூடாது என்பதற்காக முதல் பத்தியையும் 10 பேர் பட்டியலையும் தவிர மற்றவற்றை படிக்கவில்லை அப்படி இருந்தும். 5;ம் கேள்விக்கான பதில் ஒரே எண்ண வெளிப்பாடாக உள்ளது . எனினும் மகிழ்ச்சியே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் சில பதில்களும் ஒன்னாவே இருக்கு முரளி!
      (கிரேட் மென் மட்டும்தானா ஒன்னுமாதிரி சிந்திப்பாங்க, அதுல ஒருத்தர் கிரேட்டா இருந்தாலே போதும்ல..? நீங்கதான்முரளி)
      மாடடிவிட்டதுக்கு மதிப்பெண்ணை வாரிக்குவிச்சுட்டீங்க போங்க

      நீக்கு
  21. ஒவ்வொரு பதிலும் தங்கள் பாணியில் நச்சென்று இருந்தது. கில்லர்ஜி ஆரம்பித்துவிட்டார். வெகு வேகமாக தொடர் பதிவுகள் செல்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாங்கய்யா.. ஓ நம்ம பாணின்னு ஒன்னு இருக்கா? (நிலவா.. அந்த அளவுக்கு வந்துட்டியா நீயி?) அப்பன்னா நன்றிங்க அய்யா.

      நீக்கு
  22. ஐயா...
    உங்களது பதில்கள் மிகவும் சிறப்பானவை...
    அனைத்தும் அருமையான நச் பதில்கள்...
    அதான் நானும் என்னோட பதிவில் சொல்லிட்டேன்... பெரும் அறிஞர்கள் எழுதிய தொடரில் நாங்களுமான்னு...
    கரந்தை ஐயா, செல்வராஜூ ஐயா, மதுரைத் தமிழன், ஜோக்காளி, பாண்டியன் சகோதரிகள் கீதா மைதிலி அப்படின்னு இன்னும் நிறையப் பேருடன் தாங்களும் கலக்கிய பதிவில் நாங்களும் கல்லெறிந்திருக்கிறோம்... தெளிந்த நீரா அல்லது கலங்கிய நீரான்னு யோசிக்கவே தேவையில்லை... அது கலங்கிய நீருதான்... இது கலக்கல் இளநீரு... அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பர் குமார் அவர்களே! வாங்க..
      இப்பத்தான் உங்க பதிவை ப்ளாக்கரைத் திறந்ததும் பார்த்தேன். (ஃபாலோயர்ல வந்திடும்ல) உடனடியாகப் பின்னூட்டமிட்டு வந்தால் இங்க உங்க பின்னூட்டம் என்ன ஒத்துமைய்யா..? (ஆமா யாரோ பெருமு்அறிஞர் னு சொல்லியிருக்கீகளே? அதுஆரு? ஓ... என்னைத் தவிரனு சொல்லியிருந்தா நம்பியிருப்பேன் என் பெயரையும் அந்த லிஸ்ட்ல போட்டதுக்கு மதுரைத் தமிழன் மட்டுமில்ல நானே ஐ அப்ஜெக்ட் யுவர் ஆனர்..) அட ஏங்க நீங்க? நாமபாட்டுக்கு எல்லாத்துலயும பூந்து வர்ரவன் நானு. நீங்க அறிஞர் கிறிஞர்னு பட்டையக் கட்டி விடப் பாத்தீங்க... அப்பறம் சொல்லிப்புட்டேன்

      நீக்கு
    2. ஹா... ஹா... நீங்க புகுந்து விளையாடுவீங்கன்னு தெரியும் ஐயா... ஆனா இங்க அப்ஜெக்ஷன் ஓவர் ரூல்தான்... அருமையான பதில்கள்... மிகத் தெளிவான பதில்கள்...

      நீக்கு
  23. பதில்கள் அனைத்தும் நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் சிந்திக்கக் கூடியதாகவும் இருந்தது.

    பதிலளிநீக்கு
  24. அட நல்லா இருக்கேனு விளையாட்டை ரசிச்சுட்டு வந்தா என் பக்கம் அடித்து விட்டுருக்கீங்களே அண்ணா..காந்திய ஒரு இரண்டு நாள் கழிச்சு வரச் சொல்லியிருக்கேன் அண்ணா.. :)
    செவ்வாய்க்கு அனுப்பும் முன் சாதி சம்பந்தப்பட்ட நினைவுகளை அழித்துவிட்டு அனுப்ப வேண்டும் , (selective memory destruction SMD) எப்டி அண்ணா? :)

    பதிலளிநீக்கு