எது தமிழ்ப்புத்தாண்டு? ஓர் அலசல்!

சித்திரை முதல்நாளா? தை முதல்நாளா?
எது தமிழ்ப்புத்தாண்டு என்பது பற்றிய அலசல்

தி.மு.க. தை முதல்நாள் என்கிறது,
அ.தி.மு.க. சித்திரை முதல்நாள் என்கிறது.
இரண்டையும் தவிர வேறொன்றும் இருக்கிறதா?
இவற்றில் எது சரி? 

தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர்களில் ஒருவரும், புதுதில்லியின் அறிவியல் அறிஞருமான 
த.வி.வெங்கடேஸ்வரன் எழுதிய 
“எது தமிழ்ப்புத்தாண்டு” எனும் அரிய கட்டுரை ஒன்றை “விழுது” மாத இதழில் படித்தேன்.

இதனை அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்காக அந்த இதழின் கோப்பு முழுவதையுமே இங்குத் தருகிறேன்.
படித்துவிட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள்-

இணைப்பில் செல்லுங்கள்..
விழுது- ஜன.பிப்.2016

படித்துவிட்டுச் சொல்லுங்கள்...
நன்றி த.வி.வி., “விழுது” இருமாதக் கல்வி இதழ்.

ரஜினிக்கு பத்மவிபூஷண் விருது! சரிதான்!


ஒருதுளி வியர்வைக்கு ஒருபவுன் தங்கக் காசு பெற்றுவரும், 
தமிழ்நடிகர் ரஜினிகாந்த் இன்று பத்ம பூஷண் விருது பெற்றார்
சிகரெட்டை எப்படித் தூக்கிப்போட்டு வாயில் சரியாக விழவைப்பது, நெருப்புக்குச்சியை நெருப்பெட்டி இல்லாமலே, கால் சட்டை அல்லது கைச்சட்டைத் துணியில் சரக்குன்னு தேய்த்தே பற்றவைப்பது என்பது போலும் அதிசயங்களை தமிழ் இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்திய தமிழ் நடிகர் ரஜினிகாந்த் இன்று விருதுபெற்றுள்ளார்.
இனி செய்தி வருமாறு -

தமிழில் மாணவர் தோல்வியடையக் காரணமென்ன?



கடந்த கல்வியாண்டில் பத்தாம்வகுப்புத் தேர்வில் நம் பிள்ளைகள் மதிப்பெண்களை வாரிக்குவித்து “தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி” என்பதை நிலை நாட்டியிருக்கிறார்கள். 
மாநில முதல்மதிப்பெண் 500க்கு 499 என்பதும், அதையும் 19பேர் பகிர்ந்திருப்பதும், அடுத்த 498ஐ 125பேரும், 497ஐ 321பேரும் பெற்றிருக்கிறார்கள் என்பதும் மகிழ்வான செய்திதான்
இதுவரை இல்லாத அளவில்கடந்த கல்வியாண்டில் மாணவ-மாணவியர் மதிப்பெண்களை வாரிக் குவித்திருந்தாலும், பல்லாயிரம்பேர் கணித-அறிவியல் பாடங்களில் 100 விழுக்காடு பெற்றிருந்தாலும், தமிழ்ப்பாடத்தில் மதிப்பெண்கள் குறைவாகவே இருப்பதும், 10முதல் 15விழுக்காட்டினர் தோல்வியடைவதும் தொடர்கிறதே ஏன்? அதிலும் தேர்வெழுதிய சுமார் 11லட்சம் மாணவர்களில் 63,000பேர் தமிழில் தோல்வியடைந்திருக்கிறார்களே ஏன்? என்பது ஒரு முக்கியமான கேள்வி.

சில “நல்ல” பள்ளிகளில் கோடை விடுமுறை விடுவதில்லையே இது சரிதானா?!



ஆங்கிலேயர் ஆரம்பித்ததுதான், ஆனாலும் நமது “பள்ளிகளுக்கான கோடை விடுமுறை“ என்பது நமது மண்சார்ந்த வகையில் -பள்ளிமாணவர் உளவியலும் உடல்நிலையும் சார்ந்த வகையில்- சரியானது தானே? 
அப்புறம் ஏன் தமிழகத்தின் ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான நம் பிள்ளைகளுக்கு மட்டும் கோடை விடுமுறை மறுக்கப்படுகிறது? அவைதாம் “நல்ல பள்ளிகள்” என்ற நினைவுவேறு!

புதிய தலைமுறையில் வந்த எனது தேர்தல் பாடல்

புதுக்கோட்டை அறிவொளி இயக்கத்தில் நான் மாவட்ட ஒருங்கிணைப் பாளர்களில் ஒருவனாகப்  பணியாற்றிய போது(1989-91) எங்கள் மாவட்ட ஆட்சியராக இருந்த திருமதி ஷீலா ராணி சுங்கத் அவர்களின் வழிகாட்டுதலில் நான் எழுதிய ‘சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சி’ எனும் பாடல் மாவட்ட ஆட்சியரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அதன் வழி இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் மொழி-இசை பெயர்க்கப்பட்டு வலம் வந்தது. 

அந்த நினைவுகளோடு 2011இல் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த திருமதி சுகந்தி அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க தேர்தல் ஆணையத்தின் ‘வாக்களிப்பது நம் கடமை அது இந்தியர் ஒவ்வொருவரின் உரிமை’ எனும் கருத்தமைய நான் எழுதிக்கொடுத்த பாடல் இது. 

‘ஈசன்’திரைப்படத்தில் ‘ஜில்லா விட்டு ஜில்லா வந்து’ பாடலைப் பாடிப் புகழ்பெற்றிருக்கும் –உண்மையில் புதுக்கோட்டையிலிருந்து தஞ்சையில் திருமணமாகிப் போயிருக்கும்- ‘தஞ்சை செல்வி’ பாட புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள கம்பிவட (கேபிள்) தொலைக்காட்சிகளில் ஒளி-ஒலிக் காட்சியாகத் தற்போது வலம் வந்த எனது பாடல்கள்..

 -------------------------------------------------------------------------------  
தும்பைவிட்டு வாலைப் பிடிக்கலாமா?
தேர்தல் பாடல் –: நா.முத்து நிலவன்

தும்பைவிட்டு வாலைப் பிடிக்கலாமா? -ஏ மாமா…
ஓட்டுப்போட நீங்க மறக்கலாமா?

நாம ஓட்டுப் போட்டுத் தானா
‘நாடு திருந்தப் போகுது?’ன்னு
அலட்சியமா நீங்க இருக்கக் கூடாது மாமா! – ஆட்சி
அமைவதிலே உரிமையத்தான் விட்டுக் குடுக்க லாமா?
                                        (தும்பை விட்டு)
‘யாரோ வந்து செய்வாங்க’ன்னு
‘யாரோ வந்து தருவாங்க’ன்னு
எதுலயுமே கலந்துக்காம இருந்தாஎன்ன ஆகும்?–அப்புறம்
‘குத்துது’‘குடையுது’னு கத்தும் நிலைமை ஆகும்!
                                        (தும்பை விட்டு)
மக்களாட்சி நம்ம நாடு
ஜனநாயகத் தாய் வீடு
இந்தப் பெருமை உன்னால கெட்டுப்போகணுமா?-உனது
ஓட்டாலே நாட்டுக்கே பெருமைஆகணுமா?
                                        (தும்பை விட்டு)
------------------------------------------------------------------------------------------------------------------------------------ 
சரியாக ஓட்டுப் போடுங்க!
– பாடல்;: -நா.முத்து நிலவன்

சத்தியமா ஓட்டுப் போடுங்க – அண்ணே
சரியாக ஓட்டுப் போடுங்க
நிச்சியமா ஓட்டுப் போடுங்க – அக்கா
நேர்மையாக ஓட்டுப் போடுங்க ஆ…ஆ…ஆ…

‘ஓட்டுப் போட மாட்டேன் – அது

உதவாத வேலை’ யின்னு
உக்காந்து கதைபேசும் உருப்படாத மனுசரால
ஒருத்தருக்கும் பயனில்லீங்க… ஆமாங்க…
           (சத்தியமா ஓட்டுப் போட வேணுங்க

ஓட்டுப் போட காசு வாங்கி

நாட்ட அடகு வைக்காதீங்க
உரிமைகள விட்டுத்தந்து கடமைகளை மறக்காதீங்க
உங்கஓட்டு உங்கஉரிமை.. ஆமாங்க… 
           (சத்தியமா ஓட்டுப் போட வேணுங்க

நம்மை ஆளும் தலைவர்களை

நாமதான தேர்ந்தெடுக்கணும?; - இந்த 
ஜனநாயக வரலாற்றின் நாயகரே நீங்கதானே?
உங்கள் கடமை உங்கள் வாழ்க்கை --அட ஆமாங்க
           (சத்தியமா ஓட்டுப் போட வேணுங்க 
--------------------------------------------------------------------------------------------------------------------------- 
வெளியிட்டமைக்கு நன்றி:
“புதிய தலைமுறை”வாரஇதழ் ஏப்-14, 2011.

பிரேமலதா அடுத்த ஜெயலலிதாவா?

அண்மைக்காலமாக ஊடகங்கள் இவருக்குத் தரும் முக்கியத்துவம் எனக்கு வேறொரு கலக்கத்தைத் தருகிறது... தமிழ்நாட்டில் எல்லாரும் சேர்ந்து இன்னொரு ஜெயலலிதாவை உருவாக்கி வருகிறோமோ என்று!
பேச்சில் அன்பான விளக்கங்களை விட ஆரவாரமே அதிகம் தெரிகிறது.  கட்சியினர்(?) சேகரித்துத் தரும் விவரம் இருக்கும் அளவுக்குக் கேட்போரைத் தனது நியாயத்தால் கவரவேண்டும் எனும் விவேகம் இருப்பதாகத் தெரியவில்லை. 
இவரது குரல் உயரும்போதோ ஜெயலலிதாவை விடவும் கூடுதல் அச்சம் தருகிறார் ! இந்த அளவிற்கே இது என்றால் அந்த அளவிற்கு அது என்பதுதானே எதார்த்தம்?

கொஞ்சம் உலக அறிவும் கொஞ்சம் கலக அறிவும்..


சுகப்பிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப் பட்டவர் ஜூலியஸ் சீசர் . அதனால்தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது. (இத இப்ப காசேறியன் அப்படின்னு சொல்றாங்க!)

தைவானில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை (நம்ம சென்னை அடையாறுக்கே அடையாளமான ஆலமரத்தை வெட்டிட்டாங்க பா! பாலச்சந்தர் படம் ஒன்னுல அந்தாதிப் பாட்டுல அது வந்துகிட்டே இருக்கும்)

“தமிழ்மணம்” கவனத்திற்கு

வலைப் பதிவர்களை இணைய உலகத்திற்கு அறிமுகம் செய்வதிலும், வலைப்பதிவர்களுக்கு இணையத்தை அறிமுகப்படுத்துவதிலும் இன்றும் பெரும்பங்கு வகிப்பது தமிழ்மணம் திரட்டியே என்பதில் சந்தேகமில்லை. எனது நெஞ்சார்ந்த நன்றியை அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்
அந்த வகையில் என்னை உள்ளிட்ட தமிழ்ப்பதிவர் சுமார் 12,000பேர் என்று தமிழ்மணம் சொல்கிறது. ஆனால் 829 பதிவர்கள்தான் தமிழ்மணத்தில் உள்ளார்கள். வேறு திரட்டிகளில் இவ்வளவு பதிவர்கள் இல்லை!
இருந்தும் தமிழ்மணம் சில சிக்கல்களைத் தீர்க்கமாட்டேன் என்கிறதே!
முக்கியமாக பின்வரும் தேவைகளுக்கு யாரிடம் கேட்பது?

திருத்தி எழுதப்பட்ட தீர்ப்பு! சகாயம் வென்றார்! நீதி வெல்லும்!




கடந்த 29-03-2016 அன்று மேலூர் நீதிமன்றத்தில், “கிரானைட் கொள்ளை” என்பதைப் பிரபலப்படுத்திய பி.ஆர்.பி.விடுதலை செய்யப்பட்ட செய்தி தமிழக முழுவதும் அதிர்ச்சியலைகளைப் பரப்பியது.

ஒன்று நீதிபதி தவறு செய்திருக்க வேண்டும் (குமாரசாமிகள் பெருகினா என்ன ஆகும்? என்னடா நாடு இது?) அல்லது, சுடுகாட்டில் படுத்துறங்கி உயிரைப் பணயம் வைத்து, பலபாடு பட்டு, திரு சகாயம் அவர்களின் குழு தொகுத்தளித்த கொள்ளைகளின் ஆதாரங்களை உரிய முறையில் காவல் துறையினர் தராமலிருந்திருக்க வேண்டும் (இதற்குத்தான் நாடு முழுவதும் ஏராளம் சான்றுகள் உள்ளனவே!) என்று நினைத்திருந்தேன்.

மாவட்ட ஆட்சியராக இருந்தபோது தயாரித்த அறிக்கையை, வழக்கின் போது மாவட்ட ஆட்சியராக இல்லாமல் மாறியிருந்த திரு அன்சுல் மிஸ்ரா முன்வைத்தது தவறாம்! (என்னா டெக்னிக்கு?????!!!!????)

பெண்களைக் கேவலப்படுத்தும் இந்த விளம்பரத்தைத் தடைசெய்ய வேண்டாமா?

“இந்த வண்டி உங்களிடமிருந்தால் எந்தப் பெண்ணும் ஓடிவருவாள்” 
என்றொரு விளம்பரம் அண்மைக்காலமாக அனைத்துத் தொலைக்காட்சி களிலும் தொடர்கிறது! எந்தத் தனிப்பட்ட நபரோ, பெண்ணிய, ஊடக அமைப்புகளோ எதிர்ப்புத் தெரிவித்து இதை நிறுத்த முயன்றதாகக் கூடத் தெரியவில்லையே! ஏன்?

ஒருவேளை நாமே இதை ஒப்புக்கொண்டிருக்கிறோமோ? என்றே எனக்குச் சந்தேகம் வந்துவிடுகிறது சிலநேரம்!

'பெண்ணுக்கு சொந்த புத்தி கிடையாது, அதனால் அவள் ஆணாகப் பிறந்து பிறகுதான் இறைவனை அடையமுடியும்' என்றது இந்து மதம். மற்ற மதங்களும் பெண்ணை இரண்டாம் பட்சமாகவே வைத்திருக்கின்றன (இந்தவகைளில் -பெண்ணை இழிவுபடுத்துவதில்- எம்மதமும் சம்மதம்!)