“தமிழ்மணம்” கவனத்திற்கு

வலைப் பதிவர்களை இணைய உலகத்திற்கு அறிமுகம் செய்வதிலும், வலைப்பதிவர்களுக்கு இணையத்தை அறிமுகப்படுத்துவதிலும் இன்றும் பெரும்பங்கு வகிப்பது தமிழ்மணம் திரட்டியே என்பதில் சந்தேகமில்லை. எனது நெஞ்சார்ந்த நன்றியை அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்
அந்த வகையில் என்னை உள்ளிட்ட தமிழ்ப்பதிவர் சுமார் 12,000பேர் என்று தமிழ்மணம் சொல்கிறது. ஆனால் 829 பதிவர்கள்தான் தமிழ்மணத்தில் உள்ளார்கள். வேறு திரட்டிகளில் இவ்வளவு பதிவர்கள் இல்லை!
இருந்தும் தமிழ்மணம் சில சிக்கல்களைத் தீர்க்கமாட்டேன் என்கிறதே!
முக்கியமாக பின்வரும் தேவைகளுக்கு யாரிடம் கேட்பது?
   
(1)  த.ம.வாக்களிக்க அவ்வளவு நேரமாவது பெரிய கொடுமை! (இதற்கு அஞ்சியே பலரும் வாக்களிப்பதை மறந்தே விட்டார்கள் போல!)

புதுப்பிக்கப்பட்ட நேரம் : April 1, 2016, 12:52 am
(2)  இதை ஏப்ரல்-1 இரவு 11மணிக்கு எழுதுகிறேன். அதாவது கி்ட்டத்தட்ட 22மணி நேரமாகப் புதுப்பிக்கப்படாமல் இருக்கிறது.
(3)  முகப்பின் இடப்பக்கம் அதிகம்பேர் படித்த வரிசை பத்து மட்டுமல்ல வலப்பக்கம் பின்னூட்ட வரிசையும் புதுப்பிக்கப்படாமலே உள்ளது! இதனால் புதிதாகப் பதிவிடுவோர் நம்பிக்கை இழக்க நேரிடுமல்லவா?
(4)  அப்புறம் சில பதிவுகள் கட்டணம் என்று சொன்னாலும் அதற்கான விவரம் எங்கும் தரப்படவில்லையே ஏன்? இது தொடரவில்லையோ?
(5)  எந்த அடிப்படையில் தமிழ்மணம் தரவரிசை (Traffic Rank) நிர்ணயிக்கப் படுகிறது என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கலாமல்லவா?
(6)  சில பதிவர்களின் ஒரேபதிவு இரண்டு, மூன்று முறை பட்டியலில் இடம்பெறுகின்றன. இதைத் தடுக்கவோ முறைப்படுத்தவோ முடியாதா?
(7)  இன்னும் சில கேள்விகள் அவர்களிடம் மட்டுமே கேட்க வேண்டும். ஆனால் அவர்கள் இதற்கெல்லாம் செவி கொடுப்பார்களா? என்ற சந்தேகம் உள்ளதால்தான் வாசகர்களிடமே முன் வைக்கிறேன்.
என்னை 2012இல் தமிழ்மணத்தில் இணைக்க சிபாரிசு செய்த மூங்கில்காற்று திரு தி.ந.முரளிதரன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தேவைகளையும் அவராவது உரிய வழியில் அவர்களுக்குத் தெரிவித்து உதவ வேண்டுகிறேன். 

இவையல்லாமல் நமது வலைநண்பர் திரு “பசி“ பரமசிவம் அவர்கள் சில கேள்விகளை முன்வைத்திருக்கிறார்கள். அவை பதிவுலகுக்கும் முக்கியமாகவே எனக்குத் தோன்றுகின்றன. பார்க்காதவர்கள் பார்க்க – http://kadavulinkadavul.blogspot.com/2016/04/blog-post_1.html
------------------------------------------------------------------------------------------------------------------------------------- இனி, எனது தனிப்பட்ட கணினிப் பிரச்சினைகள் இவை –
எனது மேசைக் கணினித் திரையை அண்மையில் விண்டோஸ் 8.1க்கு மாற்றினேன். இதில் பல புதிய நல்ல அம்சங்கள் இருக்கின்றன. ஆனால் என்ன சிக்கலென்று தெரியவில்லை, பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்கள் எதற்கும் பதில் தர முடியவில்லை. இது என் கணினிச் சிக்கலா? இல்லை விண்டோஸ் சிக்கலா என்று யாரிடம் கேட்பதென்றும் தெரியவில்லை.(நம்ம வலைச்சித்தர் பயணத்தில் இருப்பதால் பிடிக்க முடியவில்லை)

நண்பர்கள் பலரும் பின்னூட்டமிட்டதற்குப் பதில்கூடப் போடாமல் இருக்கிறானே? என்று நினைக்கக் கூடும் என்பதாலேயே இத்தகவலை அவர்கள் அனைவரிடமும் தெரிவித்து,  மன்னிப்பைக் கோருகிறேன்.

எனது கணினிப் பிரச்சினைக்கு விரைவில் ஒரு தீர்வு காணலாம்.
சரி, இந்தத் தமிழ்மணப் பிரச்சினைக்கு எப்போது தீர்வு கிடைக்கும்?

--------------------------------------------------------------------------- 

9 கருத்துகள்:

 1. இந்த வினாடிவரை தங்களின் இப்பதிவு புதுப்பிக்கப்படவில்லை. காத்துக்கிடப்பதைத் தவிர வேறு வழியில்லை!

  என்னுடைய புலம்பல் பதிவைக் குறிப்பிட்டமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. தமிழ்மணம் குறித்து எனக்கு
  எதுவும் தெரியாது நண்பரே
  அதுவும் நான் ஒரு மொக்கை
  கைப்பேசியில்தான் ப்ளாக்
  உபயோகிக்கிறேன் அதனால்
  கைப்பேசியின் சக்திக்கு மீறின
  தளங்களுக்கு செல்லமாட்டேன்...
  காரணம் கணினி குறித்து
  ஏதும் தெரியாது என்பதால்...


  நண்பரே தாங்கள் பின்னூட்டத்திற்கு
  பதில்கள் வரவில்லை என்பது கவலைகள்
  இல்லை நண்பரே....
  விரைவில் கணினியின் பிரச்சனை தீருங்கள்....

  பதிலளிநீக்கு
 3. தமிழ்மணம் கைவிடப்பட்டு Auto mode இல் தானாக ஓடிக்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. தமிழ் மணம் ஒரு புதிர்.... அதைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை.

  பதிலளிநீக்கு
 5. 'பசி 'பரமசிவம் மற்றும் உங்களின் கோரிக்கைக்கு தமிழ் மணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் !
  பதிவர்கள் பலருக்கும் உள்ள மன உளைச்சலை ,உங்கள் பதிவு மூலம் கொட்டித் தீர்த்ததற்கு நன்றி !

  பதிலளிநீக்கு
 6. நல்ல தீர்வு வரும் நாளை எதிர்பார்க்கிறேன், உங்களுடன் நானும்.

  பதிலளிநீக்கு
 7. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். தமிழ்மணம் பற்றி, வலைப்பதிவர்கள் அனைவரது மனதிலும் இதே கேள்விகள்தான். பதிவாக்கி வெளியிட்டமைக்கு நன்றி.
  உங்கள் கணினியில் உள்ள பிரச்சினை எனக்குத் தெரியாமல், நானும் சகோதரி ஞா.கலையரசி அவர்களது ”என்னைக் கவர்ந்த பதிவுகள் – 2” என்ற பதிவினில் கருத்துரை எழுதும் போது, “ அய்யா முத்துநிலவன் அவர்கள் இப்போதெல்லாம் ஏனோ, பின்னூட்டம் தருவதில் வலைப்பதிவுகளை விட, வாட்ஸ்அப்பிற்கே ஆர்வம் காட்டுகிறார் என்று நினைக்கிறேன்.” என்று எழுதி விட்டேன். மன்னிக்கவும்.

  உங்கள் கணினியில் ஏற்பட்ட அதே பிரச்சினை எனது கம்ப்யூட்டரிலும் ஒருமுறை ஏற்பட்டது. ஆரம்பகால Blogger அமைப்பினில் (settings) பதிலளி (Reply) என்ற தேர்வு ( option ) கிடையாது. ( இப்போது புதிதாக வரும் Blogger அமைப்பினில் இந்த வசதி உண்டு) எனவே வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் மூலமாக , இந்த பதிலளி (Reply) என்ற வசதியை எனது வலைத்தளத்தில் அமைத்துக் கொண்டேன். Google இல் அடிக்கடி செய்து வரும் மாற்றங்கள் blogger – இலும் எதிரொலிக்கத் தொடங்கின. எனவே புதிதாக சேர்த்த ” பதிலளி (Reply) என்ற தேர்வு ( option )” வேலை செய்யவில்லை. Java script என்று ஏதோ காட்டியது. அப்புறம் நான் கணினியில் Disk Cleanup, Systom Restore செய்துவிட்டு கணினியை மூடிவிட்டு சென்று விட்டேன். அப்புறம் தானாகவே எல்லாம் சரியாகி விட்டன. அப்புறம் வழக்கம் போல இன்று வரை, எனது கருத்துரைப் பெட்டியில் வரும் கருத்துரைகளுக்கு பதில் அளித்து வருகிறேன். எனவே உங்களுடைய கணினிப் பிரச்சினைக்கு தீர்வு தானாகவே ஏற்பட்டு விடும்.
  திண்டுக்கல் தனபாலன் அவர்கள் என்னை விட சிறப்பாக தொழில் நுட்பத்துடன் விளக்கம் அளிப்பார் என்று எதிர் பார்க்கிறேன். ( எனது பின்னூட்டம் சற்று நீட்டமாகி விட்டது. பொறுத்துக் கொள்ளவும்)

  பதிலளிநீக்கு
 8. ஒரு முறை Disk Cleanup போடுங்க ஐயா...
  அப்புறம் cookies கிளியர் பண்ணுங்க...
  இல்லைன்னா Ccleaner அப்படின்னு ஒரு சாப்ட்வேர் இருக்கு... இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்...
  வாரம் ஒரு முறையோ அல்லது இரண்டு வாரத்துக்கு ஒருமுறையோ இதை ரன் செய்தால் போதும் குக்கீஸ் உள்பட தேவையில்லாதவற்றை சுத்தம் செய்து விடும்....

  தமிழ்மணம்... அது ஒரு புதிர். நானெல்லாம் அதைப் பற்றி கவலைப்படுவதேயில்லை...

  பதிலளிநீக்கு
 9. பெயரில்லாசனி, ஏப்ரல் 02, 2016

  தமிழ்மணம் ஒரு இலவச சேவை, எனவே கொடுப்பதை வாங்கிக் கொண்டு போகவேண்டும் என்பதே தமிழ்மணத்தின் நிலைப்பாடு. தமிழ்மணத்தில் இப்போது இருப்பவர்களை விட வெளியேறிய பதிவர்களே அதிகம்

  பதிலளிநீக்கு