கொஞ்சம் உலக அறிவும் கொஞ்சம் கலக அறிவும்..


சுகப்பிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப் பட்டவர் ஜூலியஸ் சீசர் . அதனால்தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது. (இத இப்ப காசேறியன் அப்படின்னு சொல்றாங்க!)

தைவானில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை (நம்ம சென்னை அடையாறுக்கே அடையாளமான ஆலமரத்தை வெட்டிட்டாங்க பா! பாலச்சந்தர் படம் ஒன்னுல அந்தாதிப் பாட்டுல அது வந்துகிட்டே இருக்கும்)


காட்டுக்கே ராஜா சிங்கம், ஆனால் அதன் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் தான்,. மிகச்சிறிய இதயம் கொண்ட விலங்கும் சிங்கம்தான்! (அதனால தான் குட்டியூண்டு அழகு முயலைக் கொஞ்சம் கூட இதயமே இல்லாம அடிச்சித் தின்னுடுதா?)

இலைகள் உதிர்க்காத மரம்ஊசி இலை மரம் (இருக்கறதும் ஊசிப் போயிட்டா?)

காட்டு வாத்து கருப்பு நிறத்தில்தான் முட்டையிடும். (அட நம்ம வாத்தியாரு..?)
குளிர் காலத்தில் குயில் கூவாது. (ஆமா  வாய ரெக்கையோட பொத்திக்குமோ)

மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்ற எடிசன் தான் வாழ்நாளில் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார் ( “அப்பறம் ஏன் என்னை மட்டும் பள்ளிக்கூடம் போகச் சொல்லிப் பாடாப் படுத்துறேங்கறது  யாரு?

லியானாடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே மறுகையால் படம் வரையும் திறன் உடையவர். (நம்ம காந்திஜியும்தான்!) அவர் வரைந்த புகழ் பெற்ற ஓவியம் மோனாலிசா, இடது கையால் வரையப்பட்டது (ஆனா நம்ம காந்தி, வலது கையால ஜனநாயக அரசியலப் பேசிக்கிட்டே இடது கையால இந்துத்துவா வப் பேசிட்டார். அதான்.. இப்ப வரைக்கும் இந்தச் சிக்கல் தீரமாட்டேங்குது. ஏதாவாது ஒரு கையால ஒழுங்கா எழுதினாப் போதும் தலைவா!)

கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும். ஒன்பதாவது நாளில் அது பசியில் தான் இறந்து போகும். (ஏனோ சம்பந்தமே இல்லாம நம்ப நாட்டு சில அரசியல் வாதிகள் ஞாபகம் வருது!)

கிளியும்  முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்துவிடும். (இதுகளில் மருமகளே இல்லயா?எல்லாமே மாமியா தானா?)

யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையேயானையின் உயரம். (அட மனிதனுக்கு எண்ஜான் உடம்பு!  சரிதான்!)

கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்புஇதயம்
மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பும்இதயம்தான்!
(மல்லிகா! என் இதயத்தையே உன்கிட்ட இழந்துட்டேன் -அர்த்தம் புரியுதா?)

சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது. (அந்தக் குருவிய பெரியார் வீட்டுக்குள்ளயே விடலியாமே?)
விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டிஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
(நம்ம வெள்ளாடு கருப்பா இருக்குற மாதிரித்தானே?)
சில்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும். ( கும்பகர்ணன் வண்டுகள் இனமா?)
யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.(நம்ம கண்டக்டரும்தான்..)
நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.(நம்ம டிரைவர் மாதிரி?)
டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்.(நம்ம வீட்டம்மா மாதிரி?)
புழுக்களுக்கு தூக்கம கிடையாது. (சுய புராணம் வேண்டாமே?)
நாம் இறந்து பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.
(அதுக்குள்ள  தானம் கொடுத்து, இறந்த பிறகும் சைட் அடிக்கலாம் பா!)
-----------------------
இதெல்லாம் ஒன்னும் நம்ம “கண்டுபிடிப்பு“ இல்லிங்க, நமக்கு எங்க அந்தளவு மண்டையில மசாலா இருக்கு? நன்றி - http://thagavalthulikal.blogspot.in/
----------------------------------------
சரி வந்தது வந்துட்டீங்க
ஜாலியா ஒரு குறும்படத்தையும் பாத்துட்டுப் போங்க
அப்படியே மனிதருக்கு ஆறறிவு, விலங்குக்கு ஐந்தறிவு என்பதை 
மறுத்துட்டும் போங்க
படம் பாக்க இங்க க்ளிக்குங்க..
அது சரீ, என்ன இப்படி திடீர்னு ன்னு கேட்பவர்களுக்கு மட்டும்…
நம் தளத்தைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்குத் தெரியும், தெரியாதவர்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்றேன். நா இப்படித்தான். சீரியஸா ஏதாவது யோசிச்சிக் கிட்டே மண்டை காயும் போது இப்படி “தர லோக்கல்“ லெவலுக்கு ஒரு டப்பா படத்தை டீவியில பாப்பேன். அல்லது இப்படி ஏதாவது கடிகள்... இல்லன்னா கிறுக்குப் புடிச்சிரும்ல? “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது” கண்ணதாசனுக்கே ரொம்பப்பிடிச்ச பாட்டுங்கும்போது  நமக்குப் புடிக்காதுங்களா? “கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு... ஒன்றாகச் சே…ர்ந்தா….ல்” இந்த நா.மு.!
-------------------------------------------------------------
படத்திற்கு நன்றி - கூகுளார், குறும்படங்கள் காண்செவியில் வந்தவை.
------------------------------------------------------------------------------------- 

12 கருத்துகள்:

 1. இது..இது தான் உங்கள் பின்னால் அலைய விடுகிறது..
  எந்த விதிகளுக்கும் அடங்காத...யாராலும் கணிக்க முடியாத இலக்கணம் உங்களுக்கு..
  சந்தடிச்சாக்கில் மல்லிகா மேடத்திற்கு கொஞ்சம் ஐஸ்...
  புரிகிறது அட ரெண்டுநாளைக்குத்தான் தாங்கட்டுமே...

  கலக்குங்க அய்ய்யா.....

  பதிலளிநீக்கு
 2. ஹா... ஹா... கலக்கல் ஐயா....

  வேற பேரை பயன்படுத்தினால் பிரச்சினைகள் வரும் என்பதாலேயே அம்மா பேரை பயன்படுத்தி அப்படியே ஐஸ் வச்சிக்கிட்டீங்க...

  குறும்படங்கள் ரசிக்க வைத்தன...

  பதிலளிநீக்கு
 3. பல்துறைத் தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. ஆஹா சூப்பர் ஜி சூப்பர்.செல்வக்குமார் ஐயா கூறியதை நானும் ஒப்புக்கொள்கிறேன் ஐயா,இதுதான் உங்கள் பின்னால் அலைய விடுகிறது ஐயா.தொடர்வேன் தொடருங்கள் ஐயா.அருமை..

  பதிலளிநீக்கு
 5. இதெல்லாம் ஒன்னும் நம்ம “கண்டுபிடிப்பு“ இல்லிங்க, நமக்கு எங்க அந்தளவு மண்டையில மசாலா இருக்கு?

  இந்த வார்த்தைகளில் வைத்து விட்டீர் நண்பரே சிரிப்பை...

  பதிலளிநீக்கு
 6. கலக்கலான துணுக்குகள் [அடைப்புக்குறிக்குள் சொன்ன விஷயங்களும் தான்!]. ரசித்தேன் ஐயா.

  பதிலளிநீக்கு
 7. வெறும் தகவல்கள சொல்லி இருந்தா சுவாரசியம் இருந்திருக்காது.கூடவே ஒவ்வொரு தகவலுக்கும் ஒரு பஞ்ச் அருமை ஐயா

  பதிலளிநீக்கு
 8. 1. ஆடி வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம்...

  2. வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்...

  பதிலளிநீக்கு
 9. தகவல்துளிகள் அருமை என்றால் அதற்கான தங்கள் கருத்துத்துளிகள் வெகு அருமை. அந்த சுவாரின் பறவைத்தகவலில் மட்டுமே கொஞ்சம் நம்பகத்தன்மை இடிக்கிறது. ஏனெனில் ஆஸ்திரேலியப் பறவைகள் தொகுப்பு சார்ந்து என்னிடம் உள்ள புத்தகங்களில் எதிலும் இந்தப் பறவை பற்றிய குறிப்பே இல்லை. வேறு பெயரில் இருக்கும் பறவையாக இருக்கலாம். உறுதியாகத் தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 10. உங்களின் இந்தப் பதிவை வாசித்ததும் ”கலந்து கட்டி எதையும் வாசிக்கனும்ல” என்று என் பத்தாம் வகுப்பு வரலாற்று ஆசிரியர் சொன்னது தான் நினைவுக்கு வந்தது. சமயங்களில் இவைகள் தேவை தான். நான் சார்லி சாப்ளின், கோபுலு ஜோக்ஸ் என புரளுவதுண்டு. தகவல்கள் சுவராசியம் என்றால் அந்த தகவலுக்காக தரப்பட்ட பஞ்ச் இன்னொரு சுவராசியம். காந்தியின் மீது இருக்கும் மிகப்பெரிய மரியாதையைப் போல அவர் மீது எனக்கு மிகப்பெரிய மாற்றுக் கருத்துகளும் உண்டு. தேசத்தந்தை என்பதற்காக(இந்த பட்டத்தை யாரும் கொடுக்கவில்லை என அரசாங்கம் சொல்லி இருக்கிறது)கொண்டாடித் திரிய வேண்டியதில்லை. சில உதாரணங்கள் - நீங்கள் சொன்னதைப் போல இந்துத்துவாவும் பேசி, ஜனநாயகமும் பேசி நிகழ்த்திய குழப்பம் - பகத்சிங் விடுதலை விசயத்தில் கொண்ட இறுக்கம் - வ.உ.சி.க்கு கொடுத்தனுப்பிய பணம் கையாடல் (காந்திகணக்காவே போயிடுச்சு)- தன் மகனின் காதலை ஏற்கவில்லை என்பதை விட அதை அவர் வெளிப்படுத்த நடந்து கொண்ட முறை -தன் அடையாளத்தை நிலை நிறுத்த அவர் செய்த அரசியல் தந்திரங்கள் - பெண் சுதந்திரம் பற்றி பேசும் போதெல்லாம் காந்தியைச் சொல்லும் நாம் அவர் கஸ்தூரிபாய் அம்மையாருக்கு தந்த சுதந்திரம் -இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்

  பதிலளிநீக்கு
 11. ஆலமரத்தடியில் பாடுவது.....ஆடிவெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம்....அது மட்டுமே.

  பதிலளிநீக்கு