கடந்த
29-03-2016 அன்று மேலூர் நீதிமன்றத்தில்,
“கிரானைட் கொள்ளை” என்பதைப் பிரபலப்படுத்திய பி.ஆர்.பி.விடுதலை செய்யப்பட்ட செய்தி
தமிழக முழுவதும் அதிர்ச்சியலைகளைப் பரப்பியது.
ஒன்று
நீதிபதி தவறு செய்திருக்க வேண்டும் (குமாரசாமிகள் பெருகினா என்ன ஆகும்? என்னடா நாடு
இது?) அல்லது, சுடுகாட்டில் படுத்துறங்கி உயிரைப் பணயம் வைத்து, பலபாடு பட்டு, திரு
சகாயம் அவர்களின் குழு தொகுத்தளித்த கொள்ளைகளின் ஆதாரங்களை உரிய முறையில் காவல் துறையினர்
தராமலிருந்திருக்க வேண்டும் (இதற்குத்தான் நாடு முழுவதும் ஏராளம் சான்றுகள் உள்ளனவே!)
என்று நினைத்திருந்தேன்.
மாவட்ட ஆட்சியராக இருந்தபோது தயாரித்த அறிக்கையை, வழக்கின் போது மாவட்ட ஆட்சியராக இல்லாமல் மாறியிருந்த திரு அன்சுல் மிஸ்ரா முன்வைத்தது தவறாம்! (என்னா டெக்னிக்கு?????!!!!????)
அம்பேத்கர்
படம் நீதிமன்றங்களில் இருப்பது, சிலநேரம் பாவமாகத் தோன்றியதும் உண்டு! ஆரம்பப் பள்ளியில்
தப்புத்தப்பாக் கணக்கு வாய்பாடு படிச்சுவந்த குமாரசாமி, ஜெயலலிதா அம்மையார் “அப்பிடி
ஒன்னும் ரொம்பச் சொத்துச் சேக்கல, நீதிமன்றம் அனுமதித்த அளவுக்கே தப்புப் பண்ணியிருக்கார்,
எனவே விடுதலை செய்கிறேன்” என்று வழங்கிய தீர்ப்பின்போது இந்த நினைப்பு வந்தது உண்மை!
ஆனால், இதோ ஒரு திருத்தப்பட்ட தீர்ப்பு இன்று வந்திருக்கிறது!
உயர்நீதி மன்றம், “முற்றிலும் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம்“ என மக்களுக்குச் சொல்வதுபோல மகேந்திர பூபதிக்கு வைத்தது குட்டு!
ஆமாம், இதோ ஒரு திருத்தப்பட்ட தீர்ப்பு வருகிறது!
பிஆர்பியை
விடுதலை செய்த தவறான தீர்ப்பு திருத்தப்பட்டுள்ளது!
சகாயம்
போலவே, பலலட்சம் தமிழர்கள் எதிர்பார்த்த தீ்ர்ப்பு தவறாகிப் போனதை நீதித்துறை திருத்தியிருக்கிறது.
இரண்டு மேல்மன்ற நீதிபதிகளின் ஆய்வுமுடிவு இத்தனை விரைந்து வந்திருப்பதற்கே பாராட்டலாம்! நீதிக்கு இன்னும் உயிரிருக்கிறது!
பூபதிக்கு பதிலாக பாரதிராஜா என்னும் நீதியரசர் பொறுப்பேற்கிறார்!
இறுதித்
தீர்ப்பு தேர்தலுக்குள் வந்தால் –தமிழகத்தைக் கொள்ளையடித்த கட்சிகளை மக்கள் புரிந்துகொண்டு- மாறுதலுக்கு வழிவகுக்கும்!
தருமத்தின்
வாழ்வுதனை சூது கவ்வியிருந்தது, இப்போது தருமம் மறுபடி வெல்வதற்கான முதல்வாசல் திறந்திருக்கிறது,
பார்க்கலாம்..
அய்யா
சகாயம் அவர்களின்
உழைப்பும் நேர்மையும் நிச்சயம் வெல்லும்!
கட்டுண்டோம்
பொறுத்திருப்போம் காலம் மாறும் சந்திப்போம்!
எனக்கு நம்பிக்கை இல்லை...
பதிலளிநீக்குஇது அழும் பிள்ளைக்கு கொடுக்கப்பட்ட விரல்...கிள்ளியதும் அவர்களே..
அய்யா..அய்யா...உங்கள் உற்சாகம் என்னையும் தொற்றுகிறது...
ஆனால் சந்தேக புத்தி தடுக்கிறது...
இந்த நாட்டில் அவ்வளவு எளிதாக நீதி கிடைத்துவிடும் சூழல் வந்துவிடவில்லை..
இந்த செய்தியின் பின்..தேர்ந்த அரசியல் இருக்கலாம்...
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!
பதிலளிநீக்குஇருட்டினில் நீதி மறையட்டுமே!
தன்னாலே வெளிவரும் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது
தண்ணீருக்கடியில் பதுக்கி வைக்கும் நீர்க்குமிழி
பதிலளிநீக்குதாங்காது நெடுநேரம்.
அலுவலக வழக்குகளின் சில தீர்ப்புகள் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை குறைக்கத் தான் செய்கிறது.
பதிலளிநீக்குநீதிக்கு இன்னும் உயிரிருக்கிறது என்பதை மெய்ப்பிக்கும் நிகழ்வு! நீதி கண்டிப்பாக வெல்லும்! வெல்ல வேண்டும்!
பதிலளிநீக்குநீங்கள் எந்த உலகில் உள்ளீர்கள். இந்தியாவில் பார்ப்பானும், பணம் படைத்தவனும் என்றும் நீதிக்கு கட்டு பட்டவன் அல்ல.
பதிலளிநீக்குபணம் உள்ளவானாவது மாட்டுவான் ஆனால் என்ன செய்தாலும் பார்ப்பான் தப்பி விடுவான். நீங்கள் எவ்வளவோ எழுதினீர்கள் அனிருத் பற்றி. ஒரு சிறு துரும்பு கூட அவன் மீது படாது.மூளை விபசாரிகள் என்று முவா சொல்வார் இம்மக்களை.
எதுவுமே தெரியாம எத்தனை நாளுய்யா பதிவு போடுவீரு?
பதிலளிநீக்குமகேந்திரபூபதி தீர்ப்பளிச்சதுக்கும் சகாயம் விசாரணைக்குழுவுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. அந்த வழக்கே இல்லை இது.
என்ன ஏது என்று படித்து தெரிந்து கொண்டு சொம்பைத் தூக்கிக் கொண்டு கிளம்பவும். எப்பவும் போல உளறித்தொலைத்திருக்கிறீர்.
பெயரில்லா மூளை கெட்டவனே. மகேந்திரபூபதி பார்ப்பானாடா?
பதிலளிநீக்குஅந்தப் பின்னூட்டத்தை அப்படியே வெளியிட்டு முத்து நிலவனும் மூளை கெட்டவன் என்று மீண்டும் மீண்டும் நிருபித்துக் கொள்கிறான்.
என் கருத்தையெல்லாம் ஏண்டா வெளியிட மாட்டேங்கிற டுபாகூர்?
பதிலளிநீக்குஅண்ணா..இந்தச் செய்தி பார்த்ததும்..ஹை நம்ம ஊரா இது என்ற வியப்பு மேலிட்டது, நம்ம ஊருலயும் நீதி இருக்கே என்றும் வியந்தேன். ஆனால், உடனேயே இது நம்ம ஊரா? உடனே மறு தீர்ப்பா? எங்கேயோ இடிக்குதே...என்றும் தோன்றியது. இதுதான் அண்ணா பெரும்பான்மையான மக்கள்..
பதிலளிநீக்குஊழலில் ஊறிய நாட்டில் வாழ்ந்து அதன் தாக்கமே நம்மில் புரையோடிப் போயிருப்பதால், நல்லது நடந்தாலும் நம்ப மறுக்கிறது மனம். சரி இது ஏப்ரல் ஃபூல் இல்லையே...??? தேர்தலுக்கு முன் வெளிவந்தால் நீங்கள் சொல்லுவது போல் தேர்தலில் அது வெளிப்படும்..பார்ப்போம் பொறுமையாய் நம்பிக்கையுடன்