கரூர் எஸ்.பி.வந்திதாவுக்கு ஒரு ராயல் சல்யூட்!

கரூர் மாவட்டம், அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் அன்புநாதனின் குடோன் மற்றும் வீட்டில், கடந்த, 22ஆம் தேதி, 4.87 கோடி ரூபாயை (அடங்கப்பா???) வருமான வரித்துறை பறிமுதல் செய்தது. ஆம்புலன்ஸ், வாகனங்கள், பணம் எண்ணும் இயந்திரங்களும்(அடடே???) பறிமுதலாயின!!!
சரி……………இந்த அன்பு(?)நாதன் யார் தெரியுமா?
யார் யாருக்கெல்லாம் பினாமி தெரியுமா?

அ.தி.மு.க வைச் சேர்ந்த மின் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவரும், அவர்களுடைய அனைத்து விவகாரங்களையும் உடனிருந்து கவனித்து வருபவர்தான் இந்த அன்புநாதன்!

தமிழகமே அதிர்ந்துபோன இந்தப் பறிமுதலை கரூரின் இளம் எஸ்.பி. வந்திதா அவர்கள் முன்னின்று நடத்தினார். தற்போது, அன்புநாதன் பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் அன்புநாதன் வீட்டில் பதுக்கப்பட்ட பணத்தை பறிமுதல் செய்த பெண் எஸ்.பி. வந்திதாவைக் கொலை செய்ய முயற்சி நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு துப்பாக்கியுடன் வந்த வெங்கடேசன் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கியுடன் வந்த வெங்கடேசன் கரூர் பரமத்தியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. பெண் எஸ்.பி.யை கொல்லுமாறு தம்மிடம் மர்மநபர்கள் துப்பாக்கி தந்ததாக வெங்கடேசன் தகவல் தெரிவித்துள்ளார்.

பணம் பதுக்கியவர்களே எஸ்.பி. வந்திதாவை கொல்ல முயற்சியா என தீவிர விசாரணை நடந்து வருகின்றது!

இது ஒருபுறம் இருக்க, வந்திதா பாண்டே தற்கொலைக்கு முயன்றதாகவும், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியது(?)  
இதையடுத்து, செய்தியாளர்கள் தனியார் மருத்துவமனையில் குவிந்தனர். ஆனால், வந்திதா பாண்டே அந்த மருத்துவ மனையில் அனுமதிக்கப்படவில்லை. அலுவலகத்தில் வழக்கமான பணியில் ஈடுபட்டு இருந்தது உறுதியானது.

இதுகுறித்து, எஸ்.பி. வந்திதா பாண்டே செய்தியாளர்களை தொடர்பு கொண்டு பேசியதோடு, ''நான் நலமுடன் உள்ளேன்; எந்த பிரச்சனையும் இல்லை. வதந்தியை பரப்பியவர்கள் யார் என்பது தெரியவில்லை, என்று தெரிவித்தார்.


இந்த பரபரப்பு அடங்குவதற்குள், வந்திதாவை கொலை செய்யும் நோக்கத்துடன் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை வதந்தி பரப்பிய நபர்களே இப்போது கொலை செய்யவும் முயற்சி செய்தார்களாக என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரி, எனது கேள்வி -
கரூரின் இளம் பெண்எஸ்.பி.வந்திதா என்ன தவறு செய்தார்?
தவறுகளைத் தட்டிக் கேட்பதும், தவறு செய்வோரை அதைச் செய்ய விடாமல் தடுப்பதும்தானே காவல்துறையின் கடமை?
அதைத்தானே அவர் சரியாகச் செய்தார்? 
இப்படி அவர் தற்கொலை செய்துகொண்டதாக வதந்தி பரப்பும் கேவலமான பிறவிகளைத் தேர்தல் ஆணையம் குற்றவாளிகள் பட்டியலில் வைத்து, தேடிப் பிடித்துத் தண்டிக்க வேண்டாமா?
அதுஒரு புறமிருக்க,

தமிழ்ச்சமூகத்தினர், இந்தக் கேவல அரசியல் நோய்த்தொற்றைத் தடுப்பதில் தன் துணிவான கடமையை ஆற்றிய வந்திதாவுக்கு வணக்கம் சொல்ல வேண்டாமா
“நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை!”

வந்திதா போல் ஒருசிலர் இருப்பதால் 
அவர்களால் தமிழகம் தலைநிமிரும்! 

நாமனைவரும் அவருக்குக்
கடமைப்பட்டிருக்கிறோம்! 
அவரை வாழ்த்துவோம்!
வாழ்க அந்தப் பெண் சிங்கம்!

எழுந்து நின்று சொல்வோம்!
கரூர் எஸ்.பி.வந்திதாவுக்கு 
ஒரு ராயல் சல்யூட்!
நீ நல்லா இருக்கணும் தாயி!

தகவலுக்கும் படத்திற்கும் நன்றி:

7 கருத்துகள்:

  1. வந்திதா பாண்டே பெண் சிங்கத்திற்குப் பாராட்டுகள், வாழ்த்துகள், சிரம் தாழ்ந்த வணக்கங்களும்!! உடனுக்குடன் செய்தி போன்று, சூடான இச்செய்தியைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  2. செய்தக்க அல்ல செயக்கெடும், செய்தக்க
    செய்யாமை யானும் கெடும் - குறள்.

    பதிலளிநீக்கு
  3. வீரமாய் செயல்பட்ட வந்திதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. மனமார்ந்த வாழ்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. கடமையை செய்ய கட்டுப்பாடுண்டோ!

    பதிலளிநீக்கு