தந்தை பெரியார்
(17-9- 1879 --- 24-12-1973)
மானம் கெடுப்பாரை
வேரோடு பெயர்க்க வந்த
கடப்பாரை” என்று கவிஞர் காசிஆனந்தன் அவர்களும்,
“தொண்டு செய்து பழுத்த பழம்,
தூய தாடி மார்பில் விழும்,
மண்டைச் சுரப்பை
உலகு தொழும்
மனக்குகையில்
சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்,
யார்? அவர்தாம் பெரியார்” என்று பாரதிதாசன் அவர்களும், ஏற்றிப் போற்றிய தந்தை பெரியார், உலகின் மிகச்சிறந்த சிந்தனையாளர் வரிசையில் என்றும் இருப்பவர்.
என்னைப் போலும் பலகோடிப் பேருக்கு உலக அளவில் கார்ல்மார்க்சும், இந்திய அளவில் அண்ணல் அம்பேத்கரும், தமிழக அளவில் தந்தை பெரியாரும்தான் மிகப் பெரிய வழிகாட்டிகள் என்பதே உண்மை!
அவரை வெறும் பார்ப்பன எதிர்ப்பாளராகவும்,
கடவுள் மறுப்பாளராகவும் மட்டுமே பார்த்துப் பழகிவிட்டார்கள் பலர்! அவர்கள் யானையைப் பார்த்த குருடர்கள்!
உண்மையில்,
அவர் சுடர்மிகுந்த சுயசிந்தனையாளர்.
“அவன் சொன்னான், இவன் சொன்னான்னு நம்பாதே! உனக்கு எது சரின்னு படுதோ அதன் படி யோசி! நட!” என்று சொன்ன உண்மையான சிந்தனையாளர்!
இன்றைய சமூகத்தில்தான் பெரியார் பெரிதும் தேவைப்படுகிறார்.
எங்கள் ஊர்க்கவிஞர் சுவாதி எழுதியது போல,
“ தடுக்கி விழுந்தால்
எத்தனை கோவில்கள்!
தந்தை பெரியார் நகர்” தந்தை பெரியார் நகரில் கோவில்கள் மட்டுமல்ல, அவரது பெயர் தாங்கிய பாடநூல்களிலும் மூடநம்பிக்கைகள்!
(முதல் செய்யுள் கடவுள்வாழ்த்தாகவும், முதல் பாடம் பெரியார் வரலாறாகவும் எத்தனை பாடநூல்கள்! - ஒருபக்கம் பெரியாரைப்பற்றிய தகவல்களைப் பற்றி மட்டும் பாடம் வைத்துவிட்டு, இன்னொரு பக்கம் அவர் வாழ்நாள் முழுவதும் எதிர்த்துப்போராடிய பல மூடநம்பிக்கைகளை அதேநூலின் வேறு பக்கங்களில் பாடம் வைப்பதுபற்றி என்ன சொல்ல? ” - பார்க்க எனது வலைப்பக்கக் கட்டுரை https://valarumkavithai.blogspot.com/2016/02/blog-post_11.html
“சாமி கும்பிடுவதற்கு“ எதிரானவரல்ல தந்தை பெரியார்!
“கும்பிடுறேன் சாமி“ என்பதற்கு எதிரானவர் என்பதே சரி
------------------------------------------------------------
கடவுளுக்கும் அவருக்கும் கணக்குவழக்குத் தகராறு ஏதுமில்ல. பங்காளிச் சண்டையும் கிடையாது. அவர் ஏன் கடவுள் இல்லையென்று சொன்னார் எனில், இன்றும் தீராத நோயாக கிராமத்தில் வெளிப்படையாகவும் நகரத்தில் மறைந்தும் கிடக்கின்ற மூடநம்பிக்கைகளும் அதுசார்ந்த ஜாதி உணர்வுகளும் தான் முதல் காரணம்!
நம்நாட்டு சடங்குகள் ஜாதிகளோடு தொடர்புடையவை!
அந்தந்த ஜாதிகளும் மதத்தோடு பிணைக்கப்பட்டிருப்பன!
மதமோ அந்தந்த மதத்தின் கடவுளோடு தொடர்புடையது!
எனவேதான்- பெரியார் சொன்னார்.
“கடவுள் ஒழிக!”
(இதற்குள் சாதி ஒழிக என்பதும் மதம் ஒழிக என்பதும், முடநம்பிக்கை ஒழிக என்பதுமான பல பொருள்கள் உண்டு!)
இவற்றைக் காப்பாற்றும் “பார்ப்பான் ஒழிக, காங்கிரஸ் ஒழிக, காந்தி ஒழிக“ என்றுதான் தான் தலைமை வகித்த காங்கிரஸ் கட்சியிலிருந்து நிரந்தரமாக வெளியேறினார் பெரியார்
இதைப் பற்றிய விக்கிப்பீடியாவின் கட்டுரை தெளிவாக உள்ளது
“பெரியார் எனப் பரவலாக அறியப்படும் ஈரோடு வெங்கடசாமி இராமசாமி நாயக்கர்( செப்டம்பர் 17, 1879 - டிசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவ தற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ் பெற்றது. இவர் வசதியான, உயர்சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இம்மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதை கருத்தில் கொண்டு ஈ.வெ.ரா, தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார்”
மதம் மாறலாம், ஜாதி மாறமுடியாது!
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், நம் நாட்டில் மதம் மாறமுடியும். ஆனால், ஜாதி மாறமுடியாது. இந்து மதத்தில் இருக்கிறவன், இசுலாம் மதத்திற்குப் போனாலோ, கிறித்து மதத்திற்குப் போனாலோ அந்தந்த மதங்களின் உலக நாடுகளில் இல்லாதபடிக்கு, புதிய ஏற்பாடாக அந்த மதங்களில் இல்லாத ஜாதி ஏற்பாடாக- இருந்து தொலைக்க வேண்டியிருக்கிறது. (வெகு சில இடங்களில் இந்த நடைமுறை மாற்றப்பட்டதால்தான் சிலர் மதம் மாறுவது இன்றும் தொடர்கிறது) உலகில் வேறெங்கும் இல்லாதபடிக்கு நம் நாட்டைப் பிடித்த சிறப்பு நோய் இது! இதற்கு மருந்து கண்டவர் தந்தை பெரியார்.
“எனக்குக் கீழானவன் யாரும் இல்லை, எனக்கு மேலானவனும் யாருமிலலை” இதைவிட சமத்துவத்தை விளக்குவது எப்படி?
கல்வியைப் பரப்புவதிலும், பெண்ணுரிமையைப் பெரிய இயக்கமாக மாற்றியதிலும் தந்தை பெரியாருக்குப் பெரும் பங்கு உண்டு. கல்வி- வேலைவாய்ப்புக்காக இடஒதுக்கீடு பெறப் பெரும் போராட்டம் நடத்தி முதன்முதலாக இந்திய அரசியல் சட்டத்தையே திருத்திய பெருமை பெரியாருக்கே உண்டு
தந்தைபெரியாரும் காமராசரும் தமிழக அரசியலில் இல்லாமல் போயிருந்தால், இந்த முத்துநிலவன் போலும் பலலட்சம் பேர், எழுத்தறிவற்ற முட்டாள்களாக ஆடுமாடு மேய்த்துக் கொண்டுதான் திரிந்திருப்போம் என்பதால் எனது பட்டங்களை மட்டுமல்ல, எனது சிந்தனைகளையும் தந்தை பெரியாரும் தலைவர் காமராசரும் போட்ட பிச்சை என்று பல மேடைகளில் நான் சொல்லியிருக்கிறேன்.
மார்க்ஸ் ஏங்கெல்சின் “கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை” நூலை மட்டுமல்ல, இளம்வயதில் நாட்டுக்காகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட பகத்சிங்கின் “நான் ஏன் நாத்திகன் ஆனேன்?” நூலையும் தமிழில் முதலில் தந்தவர் தந்தை பெரியார்தான்.
-------------------பின் பகுதி இணையத் தொகுப்பு------------------------

பலலட்சம் மைல் தூரம் பயணம் செய்து தமிழர்
முன்னேற்றத்திற்காகத் 95 வயதிலும் மூத்திரச் சட்டியை அருகில் வைத்துக்கொண்டே பேசி, எழுதிப் போராடியவர்!
இப்படி ஏராளமாக எழுதலாம், தாராளமாகச் சொல்லலாம்
ஆனால் பெரியாரை வாழ்வில் கடைப்பிடிப்பது கடினம்.
கடைப்பிடிக்கிறேன் என்பதால் நான் உரிமையோடு சொல்வேன்!
(என் வாழ்வில் எந்த மூடநம்பிக்கைக்கும்-செயல்பாடுகளுக்கும் நான் இடம் தந்ததில்லை, சாதி மறுப்பாளனாகவே இன்றுவரை வாழ்ந்தும் பேசி எழுதிக்கொண்டும் இருக்கிறேன். இதை நான் மறைத்ததும் இல்லை தேவையானபோது சொல்லியும் வருகிறேன்)
தந்தை பெரியாரின் சிந்தனைகள் வளர்க!
பெண-உரிமைக்கான இயக்கங்களைப் பெரியார் நடத்தியபோது, யாரோ ஒருவன், “பெண்களைப் பொதுவுடமையாக்குவதாகச் சொல்கிறீர்களே! உங்கள் மனைவியை நான் அழைத்துச் செல்லலாமா?” என்று துடுக்காகக் கேடடானாம்! நாமாக இருந்தால் கோபத்தில் எதையாவது உளறி, திட்டிக் கொட்டியிருப்போம்! தந்தை பெரியார் பதறாமல் சொன்னாராம் -
“ஓ! தாராளமாக அழைத்துப்போகலாம்- அவள் விரும்பி வந்தால். ஒருவேளை அவள் செருப்பால் அடிப்பதாக இருந்தால் வாங்கிக் கொள்ளலாம்” எப்படி?

இதே போலத்தான் கடவுள் மறுப்புப் பிரச்சாரத்தின் போது, ஒருவன்,“கடவுள் இல்லை என்கிறீர்களே? ஒருவேளை கடவுள் உங்கள் முன் வந்து நின்றால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டானாம். “அப்படியா? வரச்சொல்! நம்புகிறேன். வரவில்லை என்றால் நான் சொல்வதை நீ நம்பவேண்டும்”
சமூகச் சீர்திருத்தப் பொது அரசியலுக்கு வந்ததாலேயே அவரது சொத்துகளை எல்லாம் இழந்தவர் பெரியார். இன்று சம்பாதிப்பதற்காகவே அரசியலுக்கு வருவோரை நினைத்தால் பெரியாரின் தேவை புரியும்.
இன்று எனக்கென்ன மகிழ்ச்சி என்றால், தந்தை பெரியாரால் பயனடைந்த பலரும் நினைக்காத பொழுதில், மூன்று சகோதரிகள் தனது வலைப்பக்க எழுத்தில் பெரியாரை நினைவு கூர்ந்திருப்பதுதான். படித்துப் பாருங்கள்...
ஒருவர் எனக்கு முன்பின் அறிமுகமில்லாத சகோதரி -
http://nigalkalam.blogspot.com/2014/09/blog-post_17.html

மற்றொருவர் எங்களோடு புதுக்கோட்டையிலேயே வசிக்கும் சகோதரி-
http://velunatchiyar.blogspot.com/2014/09/blog-post_16.html

இன்னொருவர் என் அன்புத் தங்கை மைதிலி-
http://makizhnirai.blogspot.com/
பெண்ணுரிமையைப் பற்றிப் பலரும் பக்கம் பக்கமாகச் சொல்லிக் கொண்டிருக்க, பெரியார் ஒருவர்தான் எளிமையாகச் சொன்னார் -
“பெண்கள் முன்னேறணும்னா... பெரிசா ஒன்னும் பண்ண வேணாம், அவுங்க கையில இருக்குற கரண்டியப் புடுங்கிட்டு, புத்தகத்தைக் குடுத்தாப் போதும்”
எப்படி? இதுதான் பெரியார்! இதற்குள்தான் எத்தனை சிந்தனைத் தெளிவு!
பெரியாரின் கொள்கைகள் வாழ்க!
பெரியார் நினைத்த சமூக மாற்றங்கள் நிகழ நம்மால் ஆனதைச் செய்வதே அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.
தோழர் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் வாழ்க!
----------இதுவரை நான் எழுதியது -நா.மு. -----------
இனிமேல் வருவன இணையத் தகவல்தொகுப்பு -----------------------
பெரியாரை பற்றி தெரியாத
தமிழ்நாட்டு மக்களுக்கு சில செய்திகள்.
தந்தை பெரியார் - வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாய்தா வாங்காத வக்கீல். ஆயிரமாண்டு ஆதிக்க மலையை அடித்து நொறுக்கியது அவரது கைத்தடி.
அடங்கியிருந்தவர்கள் எழுந்து நிற்க ஊன்றுகோலாக இருந்ததும் அதுவே. 95 வயதிலும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு சளைக்காமல் போராடிய

தந்தை பெரியாரின் சரித்திரத் துளிகள் சில...
* ராமசாமி என்பது அவரது பெற்றோர் வைத்த பெயர்.பெண்ணடிமைத்தனம் குறித்துப் பெரும் பிரசாரம் செய்ததற்காக, மாநாடு கூட்டிய பெண்கள் அமைப்பினர் சூட்டிய பட்டம்தான் பெரியார். அதுவே அவரது பெயராக மாறிப் போனது!
* பெரியார் - நாகம்மை இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து 5-வது மாதமே இறந்து போனது. அதன்பிறகு குழந்தைகள் இல்லை. ஆனால் 20-க்கும் மேற்பட்ட அநாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். படிக்கவைத்துத் திருமணம் செய்தது வரை இவரது செலவுதான்.
* தான் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போது யாராவது மாற்றுக் கருத்து இருந்தால் உடனே எழுந்து சொல்லலாம் என அறிவித்திருந்தார். ''நான் இல்லாத இடத்தில் என்னைப்பற்றிப் பேசாதே, காணாத இடத்தில் குரைக்காதே'' என்பார்!
* வால்மீகி ராமாயணம், அபிதான சிந்தாமணி, தமிழ்ப் பேரகராதி ஆகிய மூன்று புத்தகங்களையும் எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார். சர்ச்சைக்குரிய புத்தகங்களின் அடுத்தடுத்த பதிப்புகளையும் விடாமல் வாங்குவார்!
* தான் செய்யும் சிறு செலவுக்குக்கூட கணக்கு வழக்கு வைத்திருந்தார். அதைச் சின்ன டைரியில் குறித்து வைத்திருந்தார். வருமானவரி பிரச்னை ஒன்று வந்தபோது, இந்த டைரிகளைப் பார்த்து நீதிபதிகளே ஆச்சர்யப்பட்டார்கள்!
* தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தவர் பெரியார்தான். ணா, லை என்றெல்லாம் 75 ஆண்டுகளுக்கு முன்னால் முதன்முதலாக எழுத ஆரம்பித்தவர் அவர்தான்!
* இளமைக் காலத்தில் தான் செய்த சேஷ்டைகளைப் பகிரங்கமாகச் சொன்னவர். ''மைனர் வாழ்க்கை நடத்தியவன்தான். ஆனால், இதுநாள் வரை மது அருந்தியதே இல்லை. ஆனால், பலருக்கும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். நான் வியாபாரியாக இருந்தபோது பொய் பேசி இருப்பேன். பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு ஒரு பொய்கூடச் சொன்னதில்லை. ஒழுக்கக் கேடான காரியத்தையும் செய்ததில்லை'' என்று அறிவித்தவர்!
* உங்களுடைய அரசியல் வாரிசு யார் என்று கேட்டபோது, ''எனக்கு அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது. என்னுடைய கொள்கைகளும் கருத்தும்தான் வாரிசு'' என்றார்!
* இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் செல்போன், கம்ப்யூட்டர், வாக்மேன், வெப்கேமரா, டெஸ்ட்டியூப் பேபி, உணவு கேப்சூல்கள், குடும்பக் கட்டுப்பாடு... அனைத்தைப் பற்றியும் 65 ஆண்டுகளுக்கு முன்னால் 'இனிவரும் உலகம்' என்ற கட்டுரையில் எழுதி தன்னுடைய விஞ்ஞான அறிவை வெளிப்படுத் தியவர் பெரியார்!
* இரண்டு கவர்னர் ஜெனரல்கள் நேரில் வந்து சந்தித்து 1940, 42 ஆண்டுகளின் சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொன்னபோது மறுத்தார். ''நெருப்புகூடக் குளிர்ச்சி ஆகலாம், வேப்பெண்ணெய் தேன்ஆகலாம். ஆனால், பதவியேற்றவன் யோக்கியனாக இருக்கவே முடியாது'' என்றார்!
* தனது மனதில் பட்டதைத் தயவு தாட்சண்யம் பார்க்காமல் சொல்லிவிடுவார். வெற்றிலை பாக்கு கடை வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவுக்கு பேசப் போனவர், ''உங்களால் இந்த நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை, எனவே, கடைகளைக் மூடி விட்டு, மக்களுக்குப் பயன்படக்கூடிய வேலையைப் பாருங்கள்'' என்று சொல்லி விட்டு வந்தார்!
* தன்னுடைய குடும்பச் சொத்தை எடுத்து வந்து பொதுவாழ்க்கையில் செலவு செய்தார். பொதுவாழ்க்கையில் கிடைத் ததை அனைவருக்கும் பயன்படுவது மாதிரி டிரஸ்ட் ஆக்கினார். அவரது சேகரிப்பில் நயாபைசாகூடத் தனது குடும்பத்தினர் யாருக்கும் தரப்படவில்லை!
* முக்கியமானவர்கள் யார் வந்தாலும் தள்ளாத வயதிலும் எழுந்து நிற்பார். இளைஞராக இருந்தாலும் 'வாங்க, போங்க' என்பார். பொது நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்து பாடினாலும் எழுந்து நிற்பார். யாராவது திருநீறு கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்!
* நான் சொன்னதை அப்படியே நம்பாதீர்கள். உங்களுக்குச் சரி என்றுபட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார்.
* தோழர்' என்று கூப்பிடுங்கள் என்று முதன் முதலாக தமிழ்நாட்டில் அறிவித்தவர் இவர்தான்!
* புத்துலக தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ நிறுவனம் பாராட்டுப் பத்திரம் கொடுத்தபோது, ''இந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள வெட்கப்படுகிறேன்'' என்றார்!
* நேரடி விவாதங்களின்போது, ''சொல்றதுக்காக என்னை மன்னிக்கணும்'' என்று சொல்லிவிட்டுத்தான் பதில் சொல்வார்! அந்த பெரிய மனிதருக்கு இருந்த நேர்மை பணிவு கூட இங்கே விசத்தை கக்க வரும் நபர்களுக்கு ஒரு சதவீதம் கூட கிடையாது
* 95 வது வயதில் மொத்தம் 98 நாட்கள் வாழ்ந்தார். அதில் 35 நாட்கள் வெளியூர் பயணம் சென்று 42 கூட்டம் பேசினார். கடைசியாக அவர் பேசிய இடம் சென்னை தியாகராயர் நகர். அந்த இடத்தில்தான் பெரியார் சிலை கம்பீரமாக நிற்கிறது!
_______
பெரியார் என்ன செய்து கிழித்துவிட்டார் என்று கேட்கும் நன்றி மறந்த ஜாதீய தமிழ் அடிமையே..
நன்றாகக் கேள் கல்வி மறுக்கப்பட்ட நாங்கள் இன்று கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் உயர்ந்த நிலையை அடைந்திருப்பதற்கு காரணம் இடஒதுக்கீடு! அதை பெற்றுத்தந்தது பெரியாரின் இடைவிடாத போராட்டம்.
அவரவர் சாதித் தொழிலையே பள்ளிகளில் கற்க வேண்டுமென குலக்கல்வித் திட்டத்தை ராஜாஜி கொண்டுவந்த போது, மக்களைத் திரட்டி பெரும் போராட்டம் செய்தவர் பெரியார் அதனாலேயே குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டது. அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் அவரவர் சாதித் தொழிலையே அனைவரும் செய்ய வேண்டியதிருந்திருக்கும். மருத்துவராகவோ பொறியாளராகவோ உயரயதிகாரியாகவோ வாய்ப்பு இருந்திருக்காது. பெரியாரின் உழைப்பை மறந்த நன்றிகெட்ட பார்ப்பனீய அடிமைத் தமிழர்களே இனியாவது உணர்ந்துகொள்...
அனைவரும் கோவிலுக்குள் செல்வதற்காகவும் அர்சகராக ஆவதற்கும் போராடியவர் பெரியார். எங்கள் சுயமரியாதைக்காகவும், இழிவு நீங்கவும், தீண்டாமை நீங்கவும், சாதி மதம் ஒழியவும் தன் இறுதி மூச்சுவரை பாடுபட்டவர் பெரியார். அந்த பெரும் பணியை மறந்த சிறியார்கள் இல்லை நாங்கள்!
ஏ நன்றி கெட்ட பார்ப்பனீய அடிமை தமிழனே அவரால் உயர்வடைந்துவிட்டு இன்று கேட்பாய் பெரியார் என்ன செய்து கிழித்தார் என்று!
நால்வர்ணத்தைக் கடைபிடித்த, சனாதன தர்மத்தை நிலைநாட்டிய மனுநீதியின்படி ஆட்சி செய்த பார்பன அடிமைத் தமிழ் அரசர்கள், திருக்குறளை - வள்ளுவரைப் போற்றவில்லை, திருக்குறள் மாநாடு நடத்தி தமிழ்நாடெங்கும் திருக்குறளைக் கொண்டாட வைத்தவர் பெரியார்!
அந்த பெரியாரை மறந்த பார்ப்பனீய அடிமைத் தமிழர்களே! இன்று தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறினார் என்று வஞ்சமாக கூக்குரலிடும் அயோக்கியர்களே, உன் கையிலிருக்கும் வேதம் காட்டுமிராண்டித் தனமானது
அதை தவிர தமிழில் வேறு என்ன இலக்கியம் உள்ளது? #தமிழை_காட்டுமிராண்டி_மொழியாக் கியதே உன் வேதங்கள் தானே இதை என்று உணர போகிறாய்?
பதில் கிடைக்குமா... ஜாதீய அடிமைகளே...?
___
"மருத்துவமனையில், 'கையை வெட்டினாலொழிய பிழைக்கமாட்டாய்' என்று டாக்டர் சொன்னால் வெட்டிவிடச் சம்மதிக்கிறோம். 'காலை வெட்டினால் ஒழிய பிழைக்கமாட்டாய்' என்றால், காலை வெட்டிவிடச் சம்மதிக்கிறோம்.
மலஜலம் கழிக்க வேறு ஓட்டை போடவேண்டமென்றால், போட்டுக் கொண்டு அதில் மலஜலம் கழிக்கிறோம். எடுத்துவிட வேண்டுமென்றால், கருப்பையை எடுத்துவிடச் சம்மதிக்கிறோம். இன்னும் முக்கிய உறுப்புகளை, முக்கிய பண்டங்களை இழந்தாவது உயிர் வாழச் சம்மதிக்கிறோம்.
அப்படியிருக்க, ஒரு அயோக்கியக் கூட்டம் நம்மை ஜெயித்து அடிமையாக்கி, தங்களுக்கு அடிமை என்கிற தத்துவம் கொண்ட ஒரு கொள்கையை நம்மீது பலாத்காரத்தாலும், தந்திரத்தாலும் புகுத்தி, இழிவபடுத்தி வைத்திருப்பதை ஒழிக்க வேண்டும் என்றால்..
இதற்கு... இவ்வளவு யோசனை, எதிர்ப்பு, தயக்கம், வெட்கம்? என்றால், இந்த இழிவு (சூத்திரத்தன்மை) எப்பொழுதுதான் எந்த வகையில்தான் மறைவது - என்று கேட்கிறேன். என் மீது கோபிப்பவர்கள் இதற்குப் பரிகாரம் சொல்லாமல் கோபித்தால், அவர்களை வெறும் வெறியர்கள் என்றுதானே அறிவாளிகள் சொல்லுவார்கள்?" - பெரியார்!!
____
பெரியார் என்னும் சகாப்தம்
90-ஆவது வயதில் _ 180 கூட்டம்.
91-ஆவது வயதில் _ 150 கூட்டம்.
93-ஆவது வயதில் _ 249 கூட்டம்.
94-ஆவது வயதில் _ 229 கூட்டம்.
வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில்
(95-ஆவது வயதில்) 42 கூட்டம்.
இத்தனையும், கடும் நோயின் வலிகளுடன்.
ஹெர்னியா பிரச்னையினால் சரிந்துவிழும் குடலை பெல்ட் வைத்துக் கட்டிக்கொண்டு கூட்டம் பேசச் சென்றார்.....
சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டைப்போட்டு குழாய் செருகப்பட்டிருக்கும்.....
இதையெல்லாம் எந்த ஆட்சியை பிடிக்க செய்தார்?
எத்தனை தலைமுறைக்கு சொத்து சேர்க்க செய்தார் ?
அவருக்கும் கடவுளுக்கும் வாய்க்கால் தகராறா?
மதங்களுக்கும் அவருக்கும் முன் விரோதமா ?
நான் சொல்வதை கேட்டால் தான்
உனக்கு சொர்கம்;
என்னை வணங்காவிட்டால் நரகம்
என்று கூறும் கடவுள்கள், சாமியார்களுக்கிடையில்...
நான் தலைவன் நான் தவறே செய்தாலும் எனக்கு நீ முட்டு கொடுத்தே ஆக வேண்டுமென்று கட்டளையிடும் தலைவர்கள் மத்தியில்...
யார் சொன்னாலும், நானே சொன்னாலும் உன் அறிவைக்கொண்டு, அனுபவத்தைக்கொண்டு, படிப்பினையைக்கொண்டு ஆராய்ந்து - உன் அறிவு ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொள் இல்லையென்றால் விட்டுவிடு னு சொன்ன ஒரே தலைவர் பெரியார் மட்டுமே!
பெரியாருக்கு நிகராக எவானவது உண்டா?
பெரியார் என்ன செய்து கிழித்தார் என்று கேட்கும் தற்குறிகளுக்கு
தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடத் தொடங்கிய காலத்தில் தமிழ்நாடு இருந்த நிலை...
1. ஆதிதிராவிடர்கள், பார்ப்பன தெருக்கள், கோயில்களை சுற்றியுள்ள தெருக்கள் ஆகிய எதிலும் நடந்து கூடச் செல்லக் கூடாது.
2. ஆதி திராவிடர்கள் முழங்காலுக்குக் கீழ் வேட்டிக்கட்டக் கூடாது.
3. தங்க நகைகள் அணியக் கூடாது.
4. மண் குடத்தை தான் தண்ணீர் பிடிக்க பயன்படுத்த வேண்டும்.
5. ஆதிதிராவிடர் விட்டுக் குழந்தைகள் படிக்கக் கூடாது.
6. சொந்த நிலம் வைத்திருக்கக் கூடாது.
7. திருமணக் காலங்களில் மேளம் வாசிக்கக் கூடாது.
8. பூமி குத்தகைக்கு வாங்கி சாகுபடி செய்யக் கூடாது.
9. குதிரை மீது ஊர்வலம் செல்லக் கூடாது.
10. பொதுக் கிணற்றில் நீர் எடுக்கக் கூடாது.
11. மேல் அங்கியோ, துண்டுடோ அணிந்து கொண்டு செல்லக் கூடாது.
12. உயர்ந்தோர் குடியிருப்பின் வழியாக தாழ்ந்தோர் சுடுகாட்டிற்கு செல்லக் கூடாது.
13. பெண்கள் ரவிக்கைகள் அணியக் கூடாது என்பதோடு மேல் சாதியினர் வரும்போது மேலே அணிந்திருக்கும் வேறு துணிகளையும் எடுத்து அக்குலில் வைத்துக் கொள்ள வேண்டும்.
14. நீதி மன்றங்களில் சாட்சி சொல்ல நேரிட்டால் குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் நின்றுதான் சாட்சி சொல்ல வேண்டும்.
இதை எல்லாம் மாற்றியது யார்?
நீ அடிமையாக இருக்கும் உயர்ஜாதி பார்பனீயத் தலைமையா?
பதில் சொல்லுங்கள்!

அதை தவிர தமிழில் வேறு என்ன இலக்கியம் உள்ளது? #தமிழை_காட்டுமிராண்டி_மொழியாக்